டெட் பேப்பர் 2. பத்தாம் வகுப்பு தமிழ்.. நேரடி வினாக்களாக இவை மட்டுமே உள்ளன. கடைசி நேர திருப்புதலுக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
1. சாகும்போது தமிழ் படித்து சாக வேண்டும் என்றன் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும் - க சச்சிதானந்தம்
2. நாடும் மொழியும் நமது இரு கண்கள் - மகாகவி பாரதியார்
3. திருச்சிக்கு அருகே திருவள்ளுவர் தவசாலை அமைத்தவர் - தமிழ்திரு இளங்குமரனார்
4. உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு மலேசியாவே. மாநாட்டுக்குரிய முதல் மொழியும் தமிழே என்று கூறியவர் - பன்மொழிப் புலவர் க அப்பாதுரையார்
5. மொழி ஞாயிறு - தேவநேயப் பாவாணர்
6. முதல் நூற்றாண்டில் *ஹிப்பாலஸ்* எனும் பெயர் கொண்ட கிரேக்க ஆளுமை பருவக்காற்றின் உதவியினால் நடுக்கடல் வழியாக முசிறி துறைமுகத்திற்கு நேரே விரைவில் பயணம் செய்யும் புதிய வழியை கண்டுபிடித்தார்
7. தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு விழாவில் திருவெம்பாவை திருப்பாவை பாடல்களை தாய் மொழியில் எழுதி வைத்து பாடுகின்றனர் - தனிநாயக அடிகள்
8. பண்டைத் தமிழர்கள் வீட்டிற்கு வந்த விருந்தினர் திரும்பிச் செல்லும்போது அவர்களை பிரிய மனமின்றி மேலும் வழியனுப்பும்போது அவர்கள் செல்லவிருக்க நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட தேர்வு வரை ஏழு அடி நடந்து சென்று வழி அனுப்பினர் என்பதை விளக்கும் நூல்- காலின் 7 அடி பின் சென்று.. பொருநராற்றுப்படை 166
9. கோவில்பட்டியை சுற்றி வட்டார பகுதிகளில் தோன்றிய இலக்கியம் - கரிசல் இலக்கியம்
10. பெயரெச்சங்களை வினையெச்சங்களுடன் சேர்ப்பதன் மூலம் கிடைப்பவை - கூட்டுநிலை பெயரெச்சங்கள்
11. இலக்கண முறைப்படி பிழை உடையது எனினும் இலக்கண ஆசிரியர்களால் ஏதேனும் ஒரு காரணம் கருதி பிழையன்று என ஏற்றுக்கொள்ளப்படுவது - வழுவமைதி
12. தெருக்கூத்தை தமிழ் கலையின் முக்கிய அடையாளமாகிய - நா முத்துசாமி
13. சிலம்பு செல்வர் - மா பொ சி
14. ஆஸ்ரிய நாட்டு தலைநகரமான வியன்னாவில் அமைந்துள்ள அருங்காட்சியகத்தில் எதனால் எழுதப்பட்ட அரிய கையெழுத்து சுவடி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது - பேப்பரஸ் தாள்
15. கோப்பர கேசரி திருபுவன சக்கரவர்த்தி என அழைக்கப்படுபவர் - இரண்டாம் இராஜராஜ சோழன்
16. சிந்தாமணியாம் சிலப்பதிகாரம் கந்தா மணிமேகலை உனைத்தான் வரிகள் - திருத்தணிகை உலா
17. உறைப்பாட்டு மடை - தமிழ் நடை
18. காஞ்சி மாநகருக்கு சிற்றரசர். - போதிதர்மர்
19. செப்பல் ஓசை - இருவர் உரையாடுதல்
20. அகவல் ஓசை - ஒருவர் பேசுதல்
21. துள்ளலோசை - துள்ளிவரும் ஓசை
22. தூங்கலோசை - சீர்தோரம் துள்ளாது தூங்கிவரும் ஓசை
23. தேம்பாவணி - வீரமாமுனிவர்
ம. சித்ரா
இடைநிலை ஆசிரியர்
நீலகிரி மாவட்டம்.
Comments
Post a Comment