Skip to main content

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.06.2026



Zeal study official school morning prayer activities
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.06.2026





குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள்


திருக்குறள்:


அதிகாரம்:43.அறிவுடைமை


குறள் எண்:427


குறள்:


அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்.


பொருள்:


அறிவுடையார் நாளை வர இருப்பதை முன் அறிய வல்லவர்; அறிவு இல்லாதவரோ அதனை அறிய இயலாதவர்.


பழமொழி :
Coming events cast their shadow before


ஆணை வரும் பின்னே; மணியோசை வரும் முன்னே




இரண்டொழுக்க பண்புகள் :.


1. செல்லும் இடமெல்லாம் ஒழுக்கம், நேர்மை, அன்பு என்னும் விதைகளை விதைத்து செல்வேன்.


2. அதன் மூலம் இவ்வுலகை நாம் நன்கு வாழக்கூடிய இடமாக மாற்ற முயற்சி செய்வேன்.


பொன்மொழி :


தோல்வி வெற்றியின் தாய்.


Thought for the Day :


Today's responsibility creates opportunities tomorrow.


பொது அறிவு :


1. 23-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் 2026 எங்கு நடைபெற உள்ளது?


கிளாஸ்கோ, ஸ்காட்லாந்து.


2. தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?


ஏப்ரல் 24.


English words :


Essential – Necessary, அத்தியாவசியமான.




Frequent – Regular, அடிக்கடி நிகழும்


NMMS :


XYW, UVT, RSQ, OPN, _______


(1) KLM. (2) LMK. (3) LKM. (4) KML.


Pattern : 2nd, 3rd, 1st


1) correct order is WXY, according to the pattern XYW


2) correct order is TUV, according to the pattern UVT


3) correct order is QRS, according to the pattern RSQ


4) correct order is NOP, according to the pattern OPN


5) correct order is KLM, according to the pattern LMK


விடை: (2) LMK


புவியியலும் சுற்றுசூழலும் :


குடிமையியல்


ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நாட்டை ஆளுகின்றனர். இந்தியா ஒரு ஜனநாயக நாடு.


ஜூன் 12


குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் (World Day Against Child Labour) உலகம் முழுவதும் ஆண்டுதோறும் சூன் 12 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் ஓர் அங்கமான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பினால் (ஐ.எல்.ஓ) அங்கீகரிக்கப்பட்ட இந்த நாள் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 2002ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படுகிறது. ஐ.எல்.ஓ வின் 138 மற்றும் 182வது உடன்படிக்கைகளின் ஏற்பினால் தூண்டப்பட்டு இந்த நாள் உருவாக்கப்பட்டது.


இதன் அடிப்படையில் குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலுமாக அகற்றப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்த இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. 2006 அக்டோபர் 10 ம் தேதி முதல் வீடு, சாலையோரக் கடைகள், ஓட்டல்கள் போன்ற இடங்களில் 16 வயதிற்கு உட்பட்ட சிறுவர், சிறுமியரை வேலைக்கு அமர்த்த மத்திய அரசு தடைவிதித்துள்ளது.
நீதிக்கதை


திருட்டு முட்டையும் திருந்திய ஓணானும்


ஒரு விவசாயியின் கோழிகள் இடும் முட்டைகளை ஒரு ஓணான் தினமும் திருடி தின்று வந்தது.


அதன் மனைவியும் பிள்ளைகளும்,


"திருட்டு தவறு, ஒருநாள் அதற்கான விலையை கொடுக்க வேண்டி வரும்"


என்று எச்சரித்தும் அது கேட்கவில்லை.


ஒருநாள் விவசாயி ஒரு அவித்த முட்டையை கோழி அருகில் வைத்து விட்டார். வழக்கம்போல் வந்த ஓணான் அதை விழுங்கியது.


அவித்த முட்டை வயிற்றில் சிக்கியதால் வேகமாக நகர முடியவில்லை.


விவசாயி துரத்த, ஓணான் தன் பொந்திற்குள் ஓடியது. தலை மட்டும் உள்ளே சென்றது, ஆனால் உடல் வெளியே சிக்கிக் கொண்டது. விவசாயியிடம் அடியும் வாங்கியது.


அப்போது தான் தன் தவறை உணர்ந்த ஓணான், கடவுளிடம் மன்னிப்பு கேட்டு இனி திருட மாட்டேன் என்று மனந்திரும்பியது.


சிறிது நேரத்தில் முட்டை ஜீரணமாகி, அது பாதுகாப்பாக பொந்திற்குள் சென்றது. அதன்பின் திருட்டை விட்டுவிட்டு நேர்மையாக வாழ்ந்ததாம்.


💎 நீதி :


🔹 திருட்டின் சுகம் சில நாள்; அதன் துன்பம் பல நாள்.


🔹 தவறை உணர்ந்து திருந்துகிறவர்களுக்கு எப்போதும் ஒரு புதிய வாய்ப்பு உண்டு.


🔹 அறிவுரையை கேட்காதவன் அனுபவத்தின் மூலம் பாடம் கற்றுக்கொள்வான்.


இன்றைய செய்திகள்


12.06.2026


🗒️ நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு வேண்டும் என நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் விஜய் வலியுறுத்தல்.


🗒️நாட்டின் வளர்ச்சிக்கு ஒன்று சேர்ந்து உழைப்போம்” என்று நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு .


🗒️ஹார்முஸ் நீரிணை முழுமையாக மூடப்படுவதாக ஈரான் ராணுவம் அறிவிப்பு.


விளையாட்டுச் செய்திகள்


🏀 நேற்று தொடங்கிய உலகக் கோப்பை கால்பந்து FIFA போட்டித் தொடரில் புதிய விதிமுறைகள் அறிமுகம்.


Today's Headlines


🗒️ Chief Minister Vijay emphasized at the NITI Aayog meeting that Tamil Nadu should be exempted from the NEET examination.


🗒️ Prime Minister Narendra Modi said at the NITI Aayog meeting, “Let us all work together for the development of the nation.”


🗒️ The Iranian military announced that the Strait of Hormuz will be completely closed.


Sports News


🏀 New rules were introduced in the FIFA World Cup football tournament that began yesterday. ⚽


Covai women ICT_போதிமரம்

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

TNTET paper 2 Maths and science tentative answer key

TNTET paper 2Maths and science answer key  STET paper 2 answer key _2026 வணக்கம் நமது குருவின் சார்பாக  STET paper 2 answer key _2026  வழங்கியுள்ளோம் இது ஆசிரியர் தகுதி தேர்வு   எழுதியவர்களுக்கு உதவியாக இருக்கும் எனவே இதனை பயன்படுத்தி பெயருக்கு நல்ல முறையில் தயாராக வாழ்த்துக்கள் நன்றி Topic_ STET paper 2 answer key _2026 File type -PDF STET paper key  

6ஆம் வகுப்பு கணிதம் எண்கள் கற்றல் விளைவு அடிப்படையிலான பாடத்திட்டம்Tamil Medium By Zeal Study

 Zeal study is an educational where you can find study materials, lesson plan, Individual class wise- unit wise- lesson wise Solutions, book back answer keys, Unit wise Fa (a) activities collections, FA(b)  question bank collections .

7ஆம் வகுப்பு கணிதம் எண்ணியல் கற்றல் விளைவு அடிப்படையிலான பாடத்திட்டம் Tamil Medium By Zeal Study

 Zeal study is an educational where you can find study materials, lesson plan, Individual class wise- unit wise- lesson wise Solutions, book back answer keys, Unit wise Fa (a) activities collections, FA(b)  question bank collections .

Zeal study Whatsapp groups links

CLiCK The below groups name to join the group Zeal study Class wise groups links  kindly join in any one groups in these groups class suitable messages will be shared  Join our Zeal study Official Telegram channel for all latest updates https://t.me/zealstudyofficial Follow our Whatsapp channel  https://whatsapp.com/channel/0029Va9B0NY5q08hCHKk8A19 for classes 1-5 materials Zeal study primary WhatsApp  groups links   Zeal study primary group 6 https://chat.whatsapp.com/JsUkig72NCbEfK0GtsoNg3 Zeal study primary group 1 https://chat.whatsapp.com/I5zmYprrqzh0hQHrRkqO6R Zeal study primary group 2 https://chat.whatsapp.com/Gs5xFU3kgzdIaQ8xExUrp4 Zeal study primary group 3 https://chat.whatsapp.com/KPoGHVgwlmkKCoUcX8J5yY Zeal study primary group 4 https://chat.whatsapp.com/KughukPr6yN4prnKWWNgB3 Zeal study primary group 5 https://chat.whatsapp.com/LYKowdSHZnT7vTM797PmLu For classes 6-8 Zeal study 6-8   WhatsApp  groups links For 6 ,7&8 handling...

Followers