Skip to main content

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 15.06.2026

 Zeal study official school morning prayer activities

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 15.06.2026

உலகக் காற்று நாள்



திருக்குறள்:

அதிகாரம்:43.அறிவுடைமை

குறள் எண்:428

குறள்:

அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்.

பொருள்:

அஞ்ச வேண்டியவைகளுக்கு அஞ்சாமல் நடப்பது அறிவில்லாத தன்மை ஆகும்; அஞ்ச வேண்டியதற்கு அஞ்சி விலகி நடப்பதே அறிவுடையவர் செயலாகும்

பழமொழி :
Contentment is more than a kingdom

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து

இரண்டொழுக்க பண்புகள் :.

1. கோபப்படாமல் அமைதியாக பொறுமையோடு இருப்பேன்.

2. பிறரின் துன்பத்தை உணர்ந்து உதவுவேன். இதன் மூலம் இரக்க குணத்தை பிரதிபலிப்பேன்.

பொன்மொழி :

பொறுமை கசப்பானது; அதன் கனி இனிமையானது.

Thought for the Day :

Learning is a treasure; you can take it with you wherever you go.

பொது அறிவு :

1 . தமிழ்நாட்டில் நீலகிரி வரையாடின் தற்போதைய எண்ணிக்கை எவ்வளவு?

1364.

2. உலக பூச்சி தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

ஜுன் 6.

English words :

Generous – Liberal, தாராளமான.

Hesitate – Doubt, தயங்கு.

NMMS :

36 மீ பக்க அளவுள்ள ஒரு சதுரத்தின் பரப்பும், 24 மீ உயரமுள்ள ஒரு இணைகரத்தின் பரப்பும் சமம் எனில், இணைகரத்தின் அடிப்பக்க அளவு என்ன?

1. சதுரத்தின் பக்கம் = 36 மீ

சதுரத்தின் பரப்பளவு = a2

                                           = 36 * 36 = 1296 மீ2

2. சதுரத்தின் பரப்பளவு = இணைக்கரத்தின் பரப்பளவு = 1296 மீ2

    இணைக்கரத்தின் பரப்பளவு = அடிப்பக்கம் * உயரம் = 1296

                                                            அடிப்பக்கம் * 24 = 1296

                                                            அடிப்பக்கம்  =  1296 / 24 = 54 மீ

விடை : 54மீ

புவியியலும் சுற்றுசூழலும் :

பூமி தனது அச்சில் சுழல்வதால் பகலும் இரவும் ஏற்படுகின்றன.
பூமி சூரியனைச் சுற்றி வருவதால் பருவ காலங்கள் உருவாகின்றன.

ஜூன் 15

உலகக் காற்று நாள் (World Wind Day) ஆண்டுதோறும் சூன் 15 ஆம் நாள் நடைபெறும் உலகளாவிய நிகழ்ச்சியாகும். இதை ஐரோப்பிய காற்று ஆற்றல் ஆணையமும், உலகளாவிய காற்று ஆற்றல் மன்றமும் ஒழுங்குப்படுத்தி வருகின்றது.. இது காற்றாற்றலைக் கொண்டாடும் தினமாகும். மேலும் இந்நாளில் காற்றாற்றலைப் பற்றிய விழிப்புணர்வையும், முக்கியத்துவத்தையும், அதன் வாய்ப்புகளையும், குழந்தைகள் மற்றும் வயதானோர் அறியும் படி செய்யப்படுகிறது.
நீதிக்கதை

"நேர்மையான மாணவி "

ஒரு பள்ளியில் கவிநயா என்ற மாணவி படித்து வந்தாள். அவள் எப்போதும் உண்மையே பேசுவாள்.

ஒருநாள் பள்ளி முடிந்து வீட்டிற்குச் செல்லும்போது, பள்ளி மைதானத்தில் ஒரு அழகான பேனா கிடந்தது. அது மிகவும் விலையுயர்ந்த பேனாவாக இருந்தது. கவிநயாவின் நண்பர்கள் சிலர், "இதைக் கண்டுபிடித்தது நீதானே! நீயே வைத்துக்கொள்" என்றார்கள்.

ஆனால் கவிநயா, "இல்லை. இது யாரோ ஒருவருடைய பொருள். அவரிடம் சேர வேண்டும்" என்றாள். உடனே அந்தப் பேனாவை ஆசிரியரிடம் கொடுத்தாள்.

மறுநாள் ஒரு மாணவன் அழுதுகொண்டே ஆசிரியரிடம் வந்தான். "என் அப்பா வாங்கிக் கொடுத்த பேனா தொலைந்து விட்டது" என்றான். ஆசிரியர் கவிநயா கொடுத்த பேனாவை அவனிடம் கொடுத்தார்.

அந்த மாணவன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான். ஆசிரியரும் கவிநயாவைப் பாராட்டி, "நேர்மை என்பது மனிதனின் மிகப் பெரிய செல்வம்" என்றார்.

அன்று முதல் பள்ளியில் உள்ள மாணவர்கள் அனைவரும் கவிநயாவைப் போல நேர்மையாக இருக்க முயன்றனர்.

நீதி:

**"நேர்மையே சிறந்த செல்வம்.

இன்றைய செய்திகள்

15.06.2026

🗒️பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்
பள்ளிகளில் மாணவர்கள் சாதி கயிறு அணிவதை அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாக அறிவுறித்தியுள்ளார்.

🗒️கேரளத்தை அச்சுறுத்தும் நிபா வைரஸ், கோழிக்கோடு மாவட்டத்தில் 'நிபா' வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.கேரளாவிற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக குழு விரைந்ததுள்ளது.

🗒️இந்தியாவில் மலிவு விலையில் மருத்துவ வசதிகள். பிரதமர் மோடி பெருமிதம் .

விளையாட்டுச் செய்திகள்

🏀 ஆசிய விளையாட்டு போட்டி: இந்திய பேட்மிண்டன் அணி அறிவிப்பு. இந்திய பெண்கள் அணியில் முன்னணி நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து. இடம் பெறுகிறார்.

Today's Headlines

🗒️ School Education Minister Rajmohan has firmly announced that students will not be allowed to wear caste-identifying threads in schools.

🗒️ The Nipah virus is posing a threat to Kerala. A Nipah virus infection has been detected in Kozhikode district, and a team from the Indian Council of Medical Research (ICMR) has rushed to Kerala.

🗒️ Prime Minister Modi expressed pride in India's affordable healthcare facilities.

Sports News

🏀 Asian Games: The Indian badminton team has been announced. Star shuttler P. V. Sindhu has been included in the Indian women's team.

Covai women ICT_போதிமரம்

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

6ஆம் வகுப்பு தமிழ் கற்றல் விளைவு அடிப்படையிலான பாடத்திட்டம் - இன்பத்தமிழ்

 Zeal study is an educational where you can find study materials, lesson plan, Individual class wise- unit wise- lesson wise Solutions, book back answer keys, Unit wise Fa (a) activities collections, FA(b)  question bank collections .

6ஆம் வகுப்பு சமூக அறிவியல் கற்றல் விளைவு அடிப்படையிலான பாடத்திட்டம் - வரலாறு என்றால் என்ன?

 Zeal study is an educational where you can find study materials, lesson plan, Individual class wise- unit wise- lesson wise Solutions, book back answer keys, Unit wise Fa (a) activities collections, FA(b)  question bank collections .

Zeal study Whatsapp groups links

CLiCK The below groups name to join the group Zeal study Class wise groups links  kindly join in any one groups in these groups class suitable messages will be shared  Join our Zeal study Official Telegram channel for all latest updates https://t.me/zealstudyofficial Follow our Whatsapp channel  https://whatsapp.com/channel/0029Va9B0NY5q08hCHKk8A19 for classes 1-5 materials Zeal study primary WhatsApp  groups links   Zeal study primary group 6 https://chat.whatsapp.com/JsUkig72NCbEfK0GtsoNg3 Zeal study primary group 1 https://chat.whatsapp.com/I5zmYprrqzh0hQHrRkqO6R Zeal study primary group 2 https://chat.whatsapp.com/Gs5xFU3kgzdIaQ8xExUrp4 Zeal study primary group 3 https://chat.whatsapp.com/KPoGHVgwlmkKCoUcX8J5yY Zeal study primary group 4 https://chat.whatsapp.com/KughukPr6yN4prnKWWNgB3 Zeal study primary group 5 https://chat.whatsapp.com/LYKowdSHZnT7vTM797PmLu For classes 6-8 Zeal study 6-8   WhatsApp  groups links For 6 ,7&8 handling...

Followers