Skip to main content

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 08.06.2026

 Zeal study official school morning prayer activities

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 08.06.2026



உலகப் பெருங்கடல்கள் நாள்



திருக்குறள்:

அதிகாரம்:43.அறிவுடைமை

குறள் எண்:423

குறள்:

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

பொருள்:
எப்பொருளை யார்‌ யாரிடம்‌ கேட்டாலும்‌,கேட்டவாறே கொள்ளாமல்‌,அப்பொருளின்‌ மெய்யான பொருளைக்‌ காண்பதே அறிவாகும்‌.

பழமொழி :
நம்பிக்கையே வாழ்க்கையின் உந்து சக்தி.

Faith is the force of life.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. செல்லும் இடமெல்லாம் ஒழுக்கம், நேர்மை, அன்பு என்னும் விதைகளை விதைத்து செல்வேன்.


2. அதன் மூலம் இவ்வுலகை நாம் நன்கு வாழக்கூடிய இடமாக மாற்ற முயற்சி செய்வேன்.

பொன்மொழி :

"வெற்றி என்பது நிரந்தரமல்ல; தோல்வி என்பது இறுதியுமல்ல."

Thought for the Day :

"Responsibility is not a burden. It is an opportunity to prove your character."

பொது அறிவு :

1. தமிழ்நாடு தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

ஜுலை 18.

2. தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் யார்?

உயர்திரு. ராஜ்மோகன் அவர்கள்.

English words :

Avenue - a road bordered by houses or trees, அழகான தெரு.

Believe - regard as true, நம்பு

NMMS :

அடுத்த உறுப்பைக் கண்டுபிடி:- 4,9,19,39,___

(1)59         (2)69         (3) 79         (4) 74

விடை :    (3) 79

புவியியலும் சுற்றுசூழலும் :

பூமி சூரியக் குடும்பத்தில் சூரியனிலிருந்து மூன்றாவது கோளாகும்.
உயிரினங்கள் வாழத் தகுந்த ஒரே கோள் பூமி ஆகும்.
பூமியின் மேற்பரப்பில் சுமார் 71% நீரும் 29% நிலமும் உள்ளன.

ஜூன் 08

உலகப் பெருங்கடல்கள் நாள்

உலகப் பெருங்கடல்கள் நாள் (World Oceans Day) எனும் இந்நாளை ஆண்டுதோறும் உலக நாடுகள் முழுவதும் சூன் 8 ஆம் நாளன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிகழ்வை, 1992 ஆம் ஆண்டில் பிரேசிலின், இரியோ டி செனீரோ நகரில் இடம்பெற்ற பூமி உச்சி மாநாட்டில், முதன் முறையாக கனடா இந்நிகழ்வுக்கான கோரிக்கையை முன்வைத்ததை அடுத்து, இது அதிகாரபூர்வமற்ற வகையில் உலகெங்கும் அனுசரிக்கப்பட்டு வந்தது. பின்னாளில், ஐக்கிய நாடுகள் அவை 2008 ஆம் ஆண்டில் இந்நிகழ்வை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து அறிக்கை வெளியிட்டது. அன்று முதல் உலகளாவிய அளவில் பெருங்கடல் திட்டம் என்ற அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.
நீதிக்கதை

  “சிறிய துளி, பெரிய பலன்”

ஒரு கிராமத்தில் அருண், மீனா என்ற இரண்டு பள்ளி மாணவர்கள் இருந்தார்கள். ஒரு நாள் அவர்களுடைய ஆசிரியர், “தண்ணீர் இல்லாமல் உலகில் எந்த உயிரும் வாழ முடியாது. அதனால் மழைநீரை சேமிக்க வேண்டும்” என்று கூறினார்.

அருண் அந்தப் பாடத்தை கவனமாகக் கேட்டான். வீட்டிற்குச் சென்று, அப்பாவுடன் சேர்ந்து வீட்டின் கூரையிலிருந்து வரும் மழைநீரை ஒரு தொட்டியில் சேமிக்கும் ஏற்பாடு செய்தான்.

ஆனால் மீனா, “மழை வந்தால் தண்ணீர் தானே கிடைக்கும்! இதற்கெல்லாம் என்ன அவசியம்?” என்று நினைத்தாள்.

சில மாதங்கள் கழித்து கோடைக்காலம் வந்தது. கிராமத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. பலர் குடிநீருக்காக கஷ்டப்பட்டனர். ஆனால் அருணின் வீட்டில் சேமித்திருந்த மழைநீர் இருந்ததால் அவர்களுக்கு சிரமம் இல்லை.

அதைப் பார்த்த மீனா, “நானும் மழைநீரை சேமித்திருக்க வேண்டும்!” என்று உணர்ந்தாள். அடுத்த மழைக்காலத்தில் அவளும் மழைநீர் சேமிப்பு முறையை அமைத்தாள்.

அதன் பிறகு அந்த கிராமத்தில் உள்ள அனைவரும் மழைநீரை சேமிக்கத் தொடங்கினர். கிராமத்தில் தண்ணீர் பற்றாக்குறை குறைந்தது.

நீதி:

💧 “மழைநீரை சேமிப்போம்; நாளைய தண்ணீர் தேவையை பாதுகாப்போம்.”

💧 “சிறு துளி சேர்ந்து பெரிய செல்வமாகும்.”

இன்றைய செய்திகள்

08.06.2026

🗒️ தமிழக சிங்கப் பெண் படை. ஜூன் 9 ல் தொடங்கி வைக்கப்படும் என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

🗒️உலகளவில் இந்தியாவில்  தான்  சமையல் எரிவாயு விலை குறைவு மத்திய அரசு அறிவிப்பு .

🗒️ஏவுகணைகளின் உற்பத்தியை 2.5 மடங்கு அதிகரிக்கப்படும் என  வடகொரியா உறுதி.

விளையாட்டு செய்திகள்

🏀தெற்காசிய பெண்கள் கால்பந்து: கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் அணி.

🏀ஆசிய செஸ் போட்டியில் தங்கம் வென்ற  தமிழக வீராங்கனை சவிதா ஸ்ரீக்கு முதல் அமைச்சர் விஜய் வாழ்த்து.

Today's Headlines

🗒️ The Tamil Nadu government has announced that the Tamil Nadu Singa Penn Force will be launched on June 9.

🗒️ The Central Government has stated that India has the lowest cooking gas (LPG) prices in the world.

🗒️ North Korea has pledged to increase its missile production by 2.5 times.

Sports News

🏀 South Asian Women's Football Championship: The Indian team won the trophy.

🏀 Tamil Nadu chess player Savitha Shri, who won a gold medal at the Asian Chess Championship, was congratulated by Chief Minister Vijay.

Covai women ICT_போதிமரம்

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

TNTET paper 2 Maths and science tentative answer key

TNTET paper 2Maths and science answer key  STET paper 2 answer key _2026 வணக்கம் நமது குருவின் சார்பாக  STET paper 2 answer key _2026  வழங்கியுள்ளோம் இது ஆசிரியர் தகுதி தேர்வு   எழுதியவர்களுக்கு உதவியாக இருக்கும் எனவே இதனை பயன்படுத்தி பெயருக்கு நல்ல முறையில் தயாராக வாழ்த்துக்கள் நன்றி Topic_ STET paper 2 answer key _2026 File type -PDF STET paper key  

Zeal study Whatsapp groups links

CLiCK The below groups name to join the group Zeal study Class wise groups links  kindly join in any one groups in these groups class suitable messages will be shared  Join our Zeal study Official Telegram channel for all latest updates https://t.me/zealstudyofficial Follow our Whatsapp channel  https://whatsapp.com/channel/0029Va9B0NY5q08hCHKk8A19 for classes 1-5 materials Zeal study primary WhatsApp  groups links   Zeal study primary group 6 https://chat.whatsapp.com/JsUkig72NCbEfK0GtsoNg3 Zeal study primary group 1 https://chat.whatsapp.com/I5zmYprrqzh0hQHrRkqO6R Zeal study primary group 2 https://chat.whatsapp.com/Gs5xFU3kgzdIaQ8xExUrp4 Zeal study primary group 3 https://chat.whatsapp.com/KPoGHVgwlmkKCoUcX8J5yY Zeal study primary group 4 https://chat.whatsapp.com/KughukPr6yN4prnKWWNgB3 Zeal study primary group 5 https://chat.whatsapp.com/LYKowdSHZnT7vTM797PmLu For classes 6-8 Zeal study 6-8   WhatsApp  groups links For 6 ,7&8 handling...

6th English - Trees LO Based Lesson Plan By Zeal Study

Zeal study is an educational where you can find study materials, lesson plan, Individual class wise- unit wise- lesson wise Solutions, book back answer keys, Unit wise Fa (a) activities collections, FA(b) question bank collections .

7th English - The Wind On Haunted Hill LO Based Lesson Plan By Zeal Study

 Zeal study is an educational where you can find study materials, lesson plan, Individual class wise- unit wise- lesson wise Solutions, book back answer keys, Unit wise Fa (a) activities collections, FA(b)  question bank collections .

Followers