Zeal study official school morning prayer activities
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 22.06.26
திருக்குறள்:
பால் : பொருட்பால்
இயல் : அரசியல்
அதிகாரம்:44 குற்றங்கூறாமை
குறள் எண்:434
குறள்:
குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றந் த்ரூஉம் பகை.
பொருள்:
குற்றம் புரிவது அழிவை உண்டாக்கக் கூடிய பகையாக மாறுவதால் குற்றம் புரியாமல் இருப்பது என்பதையே நோக்கமாகக் கொள்ள வேண்டும்
பழமொழி :
A cat may look at a king.
யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்.
இரண்டொழுக்க பண்புகள் :.
1. என் தாய் தந்தை சொல்படி கேட்டு நடப்பேன். அவர்கள் தான் என் மீது முதலில் அக்கறை கொண்டவர்கள் என்பதை நான் நன்கு அறிவேன் .
2. பிறர் என்னிடம் நட்பு பாராட்டுவதைப் பற்றி என் பெற்றோரிடம் பகிர்ந்து கொள்வேன்.
பொன்மொழி :
யோகா செய்வோம்; நலமான வாழ்வை உருவாக்குவோம்.
Thought for the Day :
Yoga is not about touching your toes; it is about what you learn on the way down."
பொது அறிவு :
1. பிளாஸ்டிக்கை எரிப்பதால் வெளியேறும் நச்சு வாயு எது?
டையாக்சின்.
2. கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் முற்றிலும் தடை செய்யப்பட்ட பூச்சிகொல்லி எது?
எண்டோசல்பான்.
English words :
Generate – Produce, உருவாக்கு.
Choose - select,தேர்ந்தெடு
புவியியலும் சுற்றுசூழலும் :
பூமியின் வயது சுமார் 4.54 பில்லியன் ஆண்டுகள்.
பூமி ஒரு முறை சுழல 24 மணி நேரம் ஆகிறது.
பூமி சூரியனை ஒரு முறை சுற்றி வர 365¼ நாட்கள் ஆகின்றன.
உலகின் மிகப்பெரிய பெருங்கடல் Pacific Ocean ஆகும்.
NMMS :
SAT - SCIENCE
1. பொருந்தாததைக் கண்டுபிடி
(1) மின் விளக்கு
(2)மின்சார மணி
(3) வெந்நீர் கொதிகலன்
(4) மின் சலவைப் பெட்டி
விடை: (2) மின்சார மணி
நீதிக்கதை
“பொறுமையே வெற்றியின் வழி”
ஒரு பள்ளியில் கார்த்திக் என்ற மாணவன் படித்தான். அவன் எதையும் உடனே கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைப்பான். ஒரு நாள் ஓவியப் போட்டியில் கலந்து கொண்டான். முதல் முறையிலேயே அவன் ஓவியம் சிறப்பாக வரவில்லை.
“என்னால் முடியாது!” என்று சோர்ந்து போனான். அப்போது அவனுடைய ஆசிரியர், “பொறுமையுடன் தொடர்ந்து பயிற்சி செய். வெற்றி கண்டிப்பாக வரும்” என்றார்.
அதன்பிறகு கார்த்திக் தினமும் சிறிது நேரம் ஒதுக்கி ஓவியம் வரையப் பயிற்சி செய்தான். சில மாதங்களுக்குப் பிறகு நடந்த போட்டியில் முதல் பரிசை வென்றான்.
அப்போது அவன், “வெற்றி உடனே கிடைக்காது; பொறுமையும் முயற்சியும் இருந்தால் நிச்சயம் கிடைக்கும்” என்பதை உணர்ந்தான்.
நீதி:
🌱 “பொறுமையே வெற்றியின் வழி.”
🌱 “தொடர்ந்த முயற்சியும் பொறுமையும் வெற்றியைத் தரும்.”
இன்றைய செய்திகள்
22.06.2026
🗒️யோகா தினம் ஜூன் 21., அனைத்து மக்கள் வாழ்விலும் யோகா அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
🗒️திருவள்ளூரில் நிகழ்ந்த அம்மோனியா வாயு கசிவு விபத்தில் பாதிக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
🗒️உலகின் மிகப்பெரிய நிலத்தடி வெப்ப ஏரியை தெற்கு அல்பேனியாவில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
*விளையாட்டுச் செய்திகள்*
🏀நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது
🏀டைமண்ட் லீக் தடகளம்: நீரஜ் சோப்ரா ஏமாற்றம்
இலங்கையின் ருமேஷ் தரங்கா முதலிடம் பிடித்தார்.
Today's Headlines
🗒️ International Yoga Day – June 21: Prime Minister Narendra Modi emphasized that yoga should become a part of the daily lives of all people.
🗒️ In the ammonia gas leak accident in Tiruvallur, financial assistance of ₹2 lakh each has been announced for the affected families.
🗒️ Scientists have discovered the world’s largest underground thermal lake in southern Albania.
Sports News
🏑 In the Nations Cup Hockey Tournament, India defeated New Zealand and created history by winning the championship title.
🏃 Diamond League Athletics: Neeraj Chopra had a disappointing performance, while Rumesh Tharanga of Sri Lanka secured the first position
Covai women ICT_போதிமரம்

Comments
Post a Comment