Skip to main content

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 16.06.2026

 Zeal study official school morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 16.06.2026






  




திருக்குறள்: 


"அதிகாரம்:43.அறிவுடைமை


குறள் எண்:429


குறள்:


எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை

அதிர வருவதோர் நோய். 



பொருள்:


  நாளை வர இருப்பதை முன்னதாக அறிந்து காக்கும் அறிவை உடையோர்க்கு, அவர் நடுங்க வரும் துன்பமே இல்லை.  "


பழமொழி :

Covert all, lose all.


பேராசை பெரு நட்டம்.


இரண்டொழுக்க பண்புகள் :.


1. கோபப்படாமல் அமைதியாக பொறுமையோடு இருப்பேன்.


2. பிறரின் துன்பத்தை உணர்ந்து உதவுவேன். இதன் மூலம் இரக்க குணத்தை பிரதிபலிப்பேன்.


பொன்மொழி : 


"கல்வி என்பது எதிர்காலத்திற்கான சிறந்த முதலீடு."


Thought for the Day :


Education is the most powerful tool you can use to shape your future.


பொது அறிவு : 


1. மனித உடலில் தன்னைத் தானே  பழுதுபடுத்திக் கொள்கிற உறுப்பு எது?


கல்லீரல்.    


2. உலகிலேயே  மிகச்சிறிய அரசு எது?


 வத்திக்கான் நகரம் (Vatican City)


English words :


Influence – Affect, தாக்கம் ஏற்படுத்து.


Maintain – Preserve, பராமரி.


NMMS :


ஒரு வட்ட வடிவ புல்வெளியைச் சுற்றி அலங்கரிக்க ஒரு மீட்டருக்கு ₹50/- வீதம் ₹11,000/- செலவாகிறது எனில் அதன் விட்டம்  என்ன??        


1. ரூ. 50 செலவு = 1 மீ


      ரூ 11,000 செலவு = 50/11000 = 220 மீ


2. வட்டத்தின் சுற்றளவு = 2πr = 220 மீ


                                                   πr = 220/2 = 110 


                          ( π=22/7) 22/7  r  = 110


                                                     r = 110 * 7 / 22   


                                                       r = 770/22 = 35 மீ


     வட்டத்தின் ஆரம்.           r = 35 மீ 


எனில்  வட்டத்தின் விட்டம் d = 2 * r 


                                                      = 2 * 35 = 70 மீ




  விடை = 70மீ 


புவியியலும் சுற்றுசூழலும் :


"பூமியின் இயற்கை துணைக்கோள் சந்திரன் ஆகும்.


பூமியில் மட்டுமே நீர் நிலைகள் பெரும் கடல்கள் உள்ளன. இந்த பெருங்கடல்கள் சூரிய ஒளியில் உள்ள நீல நிறத்தை பிரதிபலிக்கின்றன. எனவே  ""நீலக் கோள்"" (Blue Planet) என்று அழைக்கப்படுகிறது"


ஜூன் 16


சித்தரஞ்சன் தாஸ் அவர்களின் நினைவுநாள்




தேசபந்து சித்தரஞ்சன் தாஸ் (வங்காள மொழி:চিত্তরঞ্জন দাস) (நவம்பர் 5, 1870 - ஜூன் 16, 1925) இந்திய விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பங்கை ஆற்றியவர்.


தேசபந்து சித்தரஞ்சன் தாஸ் என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர். 1917- ஆம் ஆண்டிலிருந்து 1925- ஆம் ஆண்டு வரை தீவிர அரசியலில் ஈடுபட்டவர். இவர் பூபன் மோகன் தாஸ் என்பவருக்குப் பிறந்தார். இங்கிலாந்தில் சட்டக் கல்வி கல்வி கற்றவர், 1909இல் அலிப்பூர் குண்டுவெடிப்பு வழக்கில் அரவிந்தருக்கு ஆதரவாக வெற்றிகரமாக வாதாடினார்.


இவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் அரசியல் குரு.


அவரது அரசியல் ஞானத்தாலும் பேச்சுத் திறமையாலும் அவர் இந்திய தேசிய காங்கிரஸில் முக்கியமான நபராக உயர்ந்தார்.அவர் கிராமங்களை முன்னேற்றி கைத்தொழில்களை வளர்க்க விரும்பினார். சுய ராஜ்ஜியக் கட்சித் தலைவர். சாதி வேற்றுமையையும் தீண்டாமையையும் வெறுத்தவர். பெண்கள் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டவர். புகழ் பெற்ற வழக்கறிஞராக இருந்தபோதும் சுதந்திரப் போராட்டத்திற்காக தனது தொழிலைத் தியாகம் செய்தவர்.



பிரபுல்லா சந்திர ராய் அவர்களின் நினைவுநாள்


பிரபுல்லா சந்திர ராய் (Acharya Prafulla Chandra Ray - வங்கமொழியில் - প্রফুল্ল চন্দ্র রায়, ஆகத்து 2, 1861 - சூன் 16, 1944) ஒரு வங்கக் கல்வியாளர், வேதியியலாளர், வணிகர். சமூக சேவையாளர், ஆயுர்வேத மருத்துவம் பற்றி ஆய்வுகள் செய்தவர். லண்டனில் அறிவியல் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியர். இந்திய வேதியியல் கழகத்தைத் தொடங்கியவர். இந்திய விடுதலைப் போரில் பங்கு கொண்டவர். பாதரச நைட்ரைட்டு என்ற அதிக நிலைத்தன்மை கொண்ட சேர்மத்தைக் கண்டு பிடித்தவர்.

நீதிக்கதை


 நீதிக்கதை: "தூய்மையான வகுப்பறை"


ஒரு பள்ளியில் குறிப்பிட்ட வகுப்பு மாணவர்கள்  படிப்பில் நன்றாக இருந்தாலும், வகுப்பறையைச் சுத்தமாக வைத்துக்கொள்வதில் கவனம் செலுத்தவில்லை. பென்சில் சீவல்கள், காகிதத் துண்டுகள் போன்றவற்றை தரையில் போட்டுவிடுவார்கள் ‌


ஒருநாள் ஆசிரியர் வகுப்பறைக்குள் வந்தார். வகுப்பறை மிகவும் அசுத்தமாக இருந்தது. அதை பார்த்த ஆசிரியர், "இந்த அறை நம் இரண்டாவது வீடு. வீட்டை எப்படி சுத்தமாக வைத்துக்கொள்வோமோ, அதுபோல வகுப்பறையையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்" என்றார்.


அடுத்த நாள் ஆசிரியர் இரண்டு செடிகளை கொண்டு வந்தார். ஒரு செடியை சுத்தமான இடத்திலும், மற்றொரு செடியை குப்பைகள் நிறைந்த இடத்திலும் வைத்தார். சில நாட்களில் சுத்தமான இடத்தில் இருந்த செடி பசுமையாக வளர்ந்தது. குப்பைகள் அருகில் இருந்த செடி வாடத் தொடங்கியது.


இதைக் கண்ட  மாணவர்கள் தூய்மையின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டனர். அதன்பிறகு அனைவரும் குப்பைகளை குப்பைத்தொட்டியில் போட்டு, தினமும் வகுப்பறையைச் சுத்தமாக வைத்தனர்.


சில மாதங்களில் அவர்களின் வகுப்பறை பள்ளியிலேயே மிகவும் தூய்மையான வகுப்பறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆசிரியர் அனைவரையும் பாராட்டினார்.


நீதி: தூய்மை நம் ஆரோக்கியத்தையும், கற்றல் சூழலையும் மேம்படுத்தும். வகுப்பறையை எப்போதும் தூய்மையாக வைத்துக்கொள்வோம். 🌷📚


இன்றைய செய்திகள்


16.06.2026



🗒️தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17-ந் தேதி முதல்  8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவரகளுக்கு  காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப் படும் என முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு.


🗒️பெட்ரோல், டீசல் விலை உயர்வு மறு ஆய்வு செய்யப்படும் - மத்திய இணை மந்திரி சுரேஷ் கோபி.


🗒️அமெரிக்கா-ஈரான் இடையேயான போர் நிறுத்தம் மற்றும்  அமைதி ஒப்பந்தம் இறுதியானதன்  பொருட்டு , உலக நாடுகள் வரவேற்பு


 *விளையாட்டுச் செய்திகள்*


🏀உலகக் கோப்பை வில்வித்தை - இரட்டை தங்கம் வென்று வரலாறு படைத்த தீரஜ்.


🏀நேஷன்ஸ் கோப்பை ஆக்கி: அமெரிக்காவை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கிய இந்திய மகளிர் அணி.


Today's Headlines


🗒️ Chief Minister Vijay announced that the Breakfast Scheme will be expanded to cover students studying up to Class 8 from September 17, the birth anniversary of Periyar E. V. Ramasamy.


🗒️ The increase in petrol and diesel prices will be reviewed again, said Union Minister Suresh Gopi.


🗒️ Countries around the world have welcomed the finalization of the ceasefire and peace agreement between United States and Iran.


Sports News


🏀 In the Archery World Cup, Dhiraj Bommadevara created history by winning two gold medals.


🏀 Nations Cup Hockey: The India Women's National Field Hockey Team started their campaign with a victory over the United States Women's National Field Hockey Team.


Covai women ICT_போதிமரம்

Comments

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. Need professional MATLAB Assignment Help for your engineering or programming coursework? Our experts provide assistance with numerical computing, simulations, signal processing, control systems, machine learning, mathematical modeling, and algorithm development. We help students complete coding assignments, technical reports, and research projects with accuracy and efficiency. Students working on scientific calculations and engineering applications can also benefit from Physics Assignment Help for deeper understanding of analytical concepts. Our customized support helps improve programming skills and academic performance

    ReplyDelete

Post a Comment

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

TNTET paper 2 Maths and science tentative answer key

TNTET paper 2Maths and science answer key  STET paper 2 answer key _2026 வணக்கம் நமது குருவின் சார்பாக  STET paper 2 answer key _2026  வழங்கியுள்ளோம் இது ஆசிரியர் தகுதி தேர்வு   எழுதியவர்களுக்கு உதவியாக இருக்கும் எனவே இதனை பயன்படுத்தி பெயருக்கு நல்ல முறையில் தயாராக வாழ்த்துக்கள் நன்றி Topic_ STET paper 2 answer key _2026 File type -PDF STET paper key  

Zeal study Whatsapp groups links

CLiCK The below groups name to join the group Zeal study Class wise groups links  kindly join in any one groups in these groups class suitable messages will be shared  Join our Zeal study Official Telegram channel for all latest updates https://t.me/zealstudyofficial Follow our Whatsapp channel  https://whatsapp.com/channel/0029Va9B0NY5q08hCHKk8A19 for classes 1-5 materials Zeal study primary WhatsApp  groups links   Zeal study primary group 6 https://chat.whatsapp.com/JsUkig72NCbEfK0GtsoNg3 Zeal study primary group 1 https://chat.whatsapp.com/I5zmYprrqzh0hQHrRkqO6R Zeal study primary group 2 https://chat.whatsapp.com/Gs5xFU3kgzdIaQ8xExUrp4 Zeal study primary group 3 https://chat.whatsapp.com/KPoGHVgwlmkKCoUcX8J5yY Zeal study primary group 4 https://chat.whatsapp.com/KughukPr6yN4prnKWWNgB3 Zeal study primary group 5 https://chat.whatsapp.com/LYKowdSHZnT7vTM797PmLu For classes 6-8 Zeal study 6-8   WhatsApp  groups links For 6 ,7&8 handling...

6th English - Trees LO Based Lesson Plan By Zeal Study

Zeal study is an educational where you can find study materials, lesson plan, Individual class wise- unit wise- lesson wise Solutions, book back answer keys, Unit wise Fa (a) activities collections, FA(b) question bank collections .

7th English - The Wind On Haunted Hill LO Based Lesson Plan By Zeal Study

 Zeal study is an educational where you can find study materials, lesson plan, Individual class wise- unit wise- lesson wise Solutions, book back answer keys, Unit wise Fa (a) activities collections, FA(b)  question bank collections .

Followers