Skip to main content

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.06.2026

 

Zeal study official school morning prayer activities
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.06.2026


     

திருக்குறள்:

"அதிகாரம்:43.அறிவுடைமை

குறள் எண்:425

குறள்:

உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்ல தறிவு

பொருள்:

உயர்ந்தோரே உலகோர் எனப்படுவதால் அவர்களுடன் நட்பு கொண்டு இன்பம் துன்பம் ஆகிய இரண்டையும் ஒரே நிலையாகக் கருதுவதே அறிவுடைமையாகும்"

பழமொழி :
பேராசை பெரு நட்டம்.

Covert all, lose all.      

இரண்டொழுக்க பண்புகள் :.

1. செல்லும் இடமெல்லாம் ஒழுக்கம், நேர்மை, அன்பு என்னும் விதைகளை விதைத்து செல்வேன்.

2. அதன் மூலம் இவ்வுலகை நாம் நன்கு வாழக்கூடிய இடமாக மாற்ற முயற்சி செய்வேன்.

பொன்மொழி :

நம்பிக்கை உள்ள மனம், முடியாததையும் முடித்து காட்டும்

Thought for the Day :

Success begins when excuses end and responsibility begins.

பொது அறிவு :

1. உலக புகையிலை எதிர்ப்பு தினம் எப்போது கடைப்பிடிக்கப்படுகிறது?

மே 31.    

2. தேசிய தொழில்நுட்ப தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

மே 11

( மே 11,1998 அன்று பொக்ரான் அணுகுண்டு சோதனை வெற்றி பெற்றதையும், இந்தியாவின் முதல் பல்லுககு  விமானமான Hansa 3 வெற்றி பெற்றதையும்,  டி.ஆர்.டி.ஓ-வால் உருவாக்கப்பட்ட, குறுகிய தூரம் சென்று தரையிலிருந்து வான் குறியை தாக்கும் ஏவுகணையான திரிசூலின் சோதனை ஏவுதல் வெற்றிகரமாக நடந்ததையும் தகொண்டாடும் விதத்தில் தேசிய தொழில்நுட்ப தினம் கொண்டாடப்படுகிறது)

English words :

Ancient – Old, பண்டைய.

Attempt – Try, முயற்சி செய்

NMMS :

3, 6, 9, 15,24, 39, _______                   

(1) 65.          (2) 63.           (3)53.          (4) 55.                                                                      

3+3= X

X +previous number

6 + 3 = 9

9 + 6 = 15

15 + 9 = 24

24 + 15 = 39

39 + 24 = 63

  விடை:(2)  63

புவியியலும் சுற்றுசூழலும் :

பூமியின் வயது சுமார் 4.54 பில்லியன் ஆண்டுகள்.

ஜூன் 10

சுந்தர் பிச்சை அவர்களின் பிறந்தநாள்

சுந்தர் பிச்சை என்று அறியப்படும் பிச்சை சுந்தரராசன்(பிறப்பு: சூன் 10, 1972), இந்திய அமெரிக்க வாழ் கணினி தொழில் நுட்ப மேலாளர் ஆவார். இவர் அல்பபெட் (Alphabet Inc.) மற்றும் அதன் துணை நிறுவனமான கூகுள் முதன்மை செயல் அலுவலர் ஆவார்.
சுந்தர் பிச்சை 2004 ஆம் ஆண்டு கூகுள்இல் இணைந்தார். இவர் கூகிள் வாடிக்கையாளர் மென்பொருள் தயாரிப்புகள் தொகுப்பில் முக்கிய பங்கு வகித்தார். தற்போது கூகிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றுகிறார். 2013 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் நாள் ஆன்டி ரூபின் பதவி விலகிய பிறகு ஆண்ட்ராய்டு பிரிவிற்கும் சேர்த்து தலைவரானார். கூகுள் வரைபடம், ஆய்வு, வணிகம், விளம்பரம், ஆண்ட்ராய்டு, குரோம், உள்கட்டமைப்பு, கூகுள் ஆப்ஸ் ஆகியவற்றின் தலைவராக இருந்த இவர், கூகுள் உறவு நிறுவனங்களின் புதிய கூட்டு நிறுவனமான ஆல்பாபெட்டு உருவாக்கம் நிறைவுற்ற பிறகு, கூகுளின் முதன்மைச் செயல் அலுவலராகப் பொறுப்பேற்க உள்ளார். 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் திகதி முதல் ஆல்பாபெட்டு என்ற நிறுவனத்தின் தலைவர்களாக இருந்த லாரி பேஜ் மற்றும் சேர்ஜி பிரின் ஆகியோர் விலகி இவரை இரண்டு நிறுவனங்களுக்கும் ஒரே தலைமை செயல் அதிகாரியாக நியமித்துள்ளார்கள்
நீதிக்கதை

பழைய நிலைமையை மறந்து விடாதே!

முன்னொரு காலத்தில், ஒரு நாட்டை ஆண்ட அரசரிடம் விவேகமிக்க மந்திரி ஒருவர் இருந்தார். அவர் பெயர் தனயன். அரசர், எங்கு சென்றாலும், தனயனை அழைத்துச் செல்வார். தனயனின் ஆலோசனைப்படியே அனைத்தையும் செய்வார்.

இதனால், மந்திரி தனயனின் புகழ், நாடு முழுவதும் பரவியது. இதைக்கண்ட சிலர், மந்திரி மீது பொறாமை கொண்டனர். தனயன் எங்கு சென்றாலும், தன்னுடன் ஒரு பெட்டியை எடுத்துச் செல்வது வழக்கம். பொறாமைக்காரர்கள் இதை வைத்தே அரசனிடம் கோள் மூட்ட எண்ணினர்.

அரசே, மந்திரி நல்லவர் போல் நடித்து, நம்மை ஏமாற்றுகிறார். அரண்மனையில் உள்ள விலை உயர்ந்த பொருட்களை எல்லாம் அபகரித்து தன் பெட்டியில் வைத்துள்ளார். வேண்டுமானால் அதைச் சோதனை செய்து பாருங்கள் என்றனர்.

அரசனுக்கும், சிறிது சந்தேகம் ஏற்பட்டது. ஒருநாள் வேட்டைக்குப் போகும்போது, மந்திரி வழக்கம் போல் பெட்டியை தன்னோடு எடுத்து வந்தார். பெட்டியில் என்ன? என்று கேட்டார் அரசர். உடனே மந்திரி, பெட்டியைத் திறந்து காட்டினார், ஆடு மாடு மேய்ப்பவன் உடுத்தும் கந்தல் துணி இருந்தது.

இதெல்லாம் என்ன? என்று ஆச்சர்யத்துடன் கேட்டார் அரசர். அரசே! ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது, என் புத்திக்கூர்மையை பார்த்து, என்னை மந்திரி ஆக்கினீர்கள். இவ்வளவு உயர் பதவி கிடைத்தால், சிலர் பழைய நிலைமையை மறந்து விடுவர். எனக்கு அப்படியிருக்க மனம் வரவில்லை. பழைய நிலைமையை சுமந்தபடியே, மந்திரி பதவியில் இருக்க விரும்புகிறேன். அதனால் தான், இப்பெட்டியை எந்நேரமும் என்னுடன் வைத்திருக்கிறேன் என்றார் மந்திரி.

மந்திரியை பெரிதும் பாராட்டியதோடு, பொறாமைக்காரர்களுக்கு தக்க தண்டனையும் கொடுத்தார் அரசர். மந்திரிக்கு பல பரிசுகள் கொடுத்து கௌரவித்தார். பொறாமைக்காரர்கள், தாங்கள் செய்த சூழ்ச்சியே, தங்களது வீழ்ச்சிக்கு காரணமானதை எண்ணி வருந்தினர்.

இன்றைய செய்திகள்

10.06.2026

🗒️பெண்களின் கண்ணியமே அரசின் முக்கிய குறிக்கோள் - சிங்கப்பெண் அதிரடிப்படை தொடக்க விழாவில் முதல்-அமைச்சர் விஜய் பேச்சு.

🗒️தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுக்கான கலந்தாய்வு - அமைச்சர் முகமது பர்வேஸ் தொடங்கி வைத்தார்.

🗒️அந்தமான் கடலில் பிரமாண்ட எரிவாயு புதையல் கண்டுபிடிப்பு
இதுவரை தோண்டப்பட்ட 3 கிணறுகளில் 2 கிணற்றில் எரிவாயு இருப்பது கண்டுப்பிடிக்கப் பட்டுள்ளது.

🗒️லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் தேர்தலில் தமிழ் பெண்ணுக்கு 2-ம் இடம் கிடைக்கப் பெற்றுள்ளது.

*விளையாட்டுச் செய்திகள்*

🏀உலக யோகாசனம்  சாம்பியன்ஷிப் - 102 தங்கம் உட்பட 114 பதக்கங்கள் வென்று
இந்திய அணி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

Today's Headlines

🗒️ “Protecting the dignity of women is the government's primary objective,” said Chief Minister Vijay at the inauguration ceremony of the Singappen Athiradippadai (Women’s Special Force).

🗒️ A counseling session for Industrial Training Institute (ITI) students was inaugurated by Minister Mohammed Parvez.

🗒️ A massive natural gas reserve has been discovered in the Andaman Sea. Natural gas has been found in 2 out of the 3 wells drilled so far.

🗒️ A Tamil woman has secured second place in the Los Angeles mayoral election.

Sports News

🏀 At the World Yogasana Championship, the Indian team secured first place, creating a record by winning 114 medals, including 102 gold medals.

Covai women ICT_போதிமரம்

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

TNTET paper 2 Maths and science tentative answer key

TNTET paper 2Maths and science answer key  STET paper 2 answer key _2026 வணக்கம் நமது குருவின் சார்பாக  STET paper 2 answer key _2026  வழங்கியுள்ளோம் இது ஆசிரியர் தகுதி தேர்வு   எழுதியவர்களுக்கு உதவியாக இருக்கும் எனவே இதனை பயன்படுத்தி பெயருக்கு நல்ல முறையில் தயாராக வாழ்த்துக்கள் நன்றி Topic_ STET paper 2 answer key _2026 File type -PDF STET paper key  

Zeal study Whatsapp groups links

CLiCK The below groups name to join the group Zeal study Class wise groups links  kindly join in any one groups in these groups class suitable messages will be shared  Join our Zeal study Official Telegram channel for all latest updates https://t.me/zealstudyofficial Follow our Whatsapp channel  https://whatsapp.com/channel/0029Va9B0NY5q08hCHKk8A19 for classes 1-5 materials Zeal study primary WhatsApp  groups links   Zeal study primary group 6 https://chat.whatsapp.com/JsUkig72NCbEfK0GtsoNg3 Zeal study primary group 1 https://chat.whatsapp.com/I5zmYprrqzh0hQHrRkqO6R Zeal study primary group 2 https://chat.whatsapp.com/Gs5xFU3kgzdIaQ8xExUrp4 Zeal study primary group 3 https://chat.whatsapp.com/KPoGHVgwlmkKCoUcX8J5yY Zeal study primary group 4 https://chat.whatsapp.com/KughukPr6yN4prnKWWNgB3 Zeal study primary group 5 https://chat.whatsapp.com/LYKowdSHZnT7vTM797PmLu For classes 6-8 Zeal study 6-8   WhatsApp  groups links For 6 ,7&8 handling...

6ஆம் வகுப்பு அறிவியல் விசையும் இயக்கமும் கற்றல் விளைவு அடிப்படையிலான பாடத்திட்டம் Tamil Medium By Zeal Study

 Zeal study is an educational where you can find study materials, lesson plan, Individual class wise- unit wise- lesson wise Solutions, book back answer keys, Unit wise Fa (a) activities collections, FA(b)  question bank collections .

6ஆம் வகுப்பு சமூக அறிவியல் பண்முகத் தன்மையை அறிவோம் கற்றல் விளைவு அடிப்படையிலான பாடத்திட்டம் Tamil Medium By Zeal Study

 Zeal study is an educational where you can find study materials, lesson plan, Individual class wise- unit wise- lesson wise Solutions, book back answer keys, Unit wise Fa (a) activities collections, FA(b)  question bank collections .

Followers