Skip to main content

Zeal study TNTET 2025 - குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும்

ஒருங்கிணைந்த ஆளுமை என்பது ஒருவரின் உடல், உள்ளம், செயல் ஆகியவற்றைச் சார்ந்திருக்கிறது என்று கூறியவர்: ஆல்பர்ட் (Allport).
ஒருவன் மனநிலையிலும், நடத்தையிலும், மாறுபட்ட ஆளுமைப் பண்புகள் வெளிப்படுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது: இரட்டை ஆளுமை (Double personality).
மனிதர்களை அகமுகன், புறமுகன் என வகைபடுத்திய உளவியல் அறிஞர்: யூங் (Jung).
புற உலக நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கு பெறாது தனது நினைவுகள், சிந்தனைகள் ஆகியவற்றாலேயே ஒன்றியிருக்கும் மனிதனுக்குப் பெயர்: அகமுகன் (Introvert).
இயல்பிழப்பு நோயின் மறுபதம்: ஆளுமை ஒருமைச் சிதைவு (Dissociation of personality).
ஆளுமையை நிர்ணயிக்கும் உயிரியல் காரணி: நாளமில்லாச் சுரப்பிகள் (Endocrine glands).
ஒருவர் தனது தேவைகள், விருப்பங்கள், எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை சமூகம் ஏற்றுக்கொள்ளும் வகையில் நிறைவு செய்துகொள்ளும் திறமைக்குப் பெயர்: ஒருங்கிணைந்த ஆளுமை (Integrated personality).
உடல்சார்ந்த பண்புகள், நாளமில்லாச் சுரப்பிகள், நரம்பு மண்டலம் போன்றவை ஆளுமையைத் தோற்றுவிக்கும்: உயிரியல் காரணிகள் (Biological factors).
“ஒருவரது பண்புகளின் தனித்தன்மை வாய்ந்த அமைப்பு” ஆளுமை என்று கூறியவர்: கில்போர்டு (Guilford).
சுயசரிதை ஆளுமையை அளவிட உதவும்: அகவய முறை (Subjective method).
ஆளுமையும் ஒழுக்கமும்: ஒன்றல்ல (Not the same).
தோழமை உணர்வோடு மாணவர்கள், ஒருவருக்கொருவர் பழகி மகிழும் வாய்ப்புகளை உருவாக்கித் தராதது: உண்மையான மதிப்பீடு (True Evaluation).
ஒழுக்கத்தின் முக்கியமான கூறாக விளங்குவது: மனசாட்சி (Conscience).
ஒருவர் தனது தேவைகள், விருப்பங்கள், எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை சமூகம் ஏற்றுக்கொள்ளும் வகையில் நிறைவு செய்து கொள்ளும் திறமையே ஒருங்கிணைந்த ஆளுமை எனக் குறிப்பிட்டவர்: ஹர்லாக் (Hurlock).
ஆளுமையைத் தோற்றுவிக்கும் உளவியல் காரணியின் உட்பிரிவுக்கு ஓர் எடுத்துக்காட்டு: ஊக்கம் (Motivation).
“ஒருவரிடம் அவருக்கே உரிய சூழ்நிலைக்கேற்ற பொருத்தப்பாட்டினைத் தீர்மானிக்கின்ற அவருடைய உடல், உள்ளம் சார்ந்த அமைப்புகளின் செயல்படும் ஒருங்கிணைப்பு தான் ஆளுமை” எனக் குறிப்பிட்டவர்: ஆல்போர்டு (Allport).
கவர்ச்சியை நிர்ணயிக்கும் காரணிகள்: வலுவூட்டல் செயல்கள் (Reinforcement activities).

ஹிஸ்டாரியா என அழைக்கப்படுவது: ஆளுமை ஒருமைச்சிதைவு (Dissociation of personality).
குறிப்பிட்ட தொழிற்பயிற்சி அல்லது பாடத்துறைக்கான மாணவர்களையும், ஆசிரியர்களையும் தேர்ந்தெடுக்கப் பயன்படுவது: நாட்டச் சோதனைகள் (Aptitude tests).
“ஆளுமை என்பது மனிதர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட சூழ்நிலையில் என்ன செய்வார்கள் என்பதை முன்கூட்டியே அறிய உதவுவது” என்று கூறியவர்: கேட்டல் (Cattell).
நமது கவர்ச்சிகளை நிர்ணயிப்பவை: வலுமிக்க ஊக்கிகள் (Strong motives).
செயற்கைத்தனமாக நடந்துகொள்வதில் விருப்பமுள்ளவர்களிடம் காணப்படும் ஆளுமைக் கோளாறு: நாடகத் தன்மையுள்ள ஆளுமைக்கோளாறு (Histrionic personality disorder).
ஒரு பொருளுடனோ அல்லது ஒரு செயலிலோ முழுமையாக ஒருவன் ஒன்றிப்போதல் அதில் அவனது ___ குறிக்கும்: கவர்ச்சியை (Interest).
குறிப்பிட்ட ஒரு தொழிலை அல்லது செய்திறனைக் கற்பதற்கு ஒருவனிடமுள்ள இயற்கைத்திறனை அளவிட்டு கூற முற்படுவது: நாட்டச் சோதனைகள் (Aptitude tests).

பல்நாட்டச் சோதனையில் எத்தனை வகை துணைச்சோதனைகள் உள்ளன: 8.
ஆளுமையைத் தீர்மானிக்கும் உயிரியல் காரணி எது: நரம்பு மண்டலம் (Nervous system).
ஒல்லியாக ஒட்டிய மார்பும், குறுகிய தோள்களும் உடையவர் கொண்டிருக்கும் ஆளுமை: ஷிஸோனதம் (Schizothyme).
தர்க்கரீதியான சிந்தனையுடன் தொடர்புடையது: விரி சிந்தனை (Divergent thinking).
செந்தரச் சோதனை மூலம் மாணவனின் ___ அளவிடலாம்: மேற்கண்ட அனைத்தும் (ஆளுமை, மனப்பான்மை, ஆர்வம்).
எது சரியான வரிசை: ஒன்றுதல், பதற்றம், தற்காப்பு நடத்தை (Identification, Anxiety, Defense behavior).
ரோர்ஷாக் என்பவரின் மைத்தடச் சோதனை எதனை அளவிட உதவுகிறது: ஆளுமை (Personality).
கீழ்கண்டவற்றில் எது ஆளுமையின் பண்பு: மேற்கண்ட அனைத்தும் (தனித்தன்மை, அளவிடக்கூடியது, மரபு/சூழல் விளைவு).
சுக விருப்பமுள்ள ஆளுமை எனும் ஆளுமையைப் பற்றிக் குறிப்பிடும் அறிஞர்: ஷெல்டன் (Sheldon).
சமூகக் கற்றல் கொள்கைகளுக்கு அடிப்படையாக அமைந்த கருத்துகளைக் கூறியவர்: ஸ்கின்னர் (Skinner).
ஆளுமையைக் குறிக்கும் பர்சனாலிட்டி என்று சொல் ___ மொழியிலிருந்து வந்தது: இலத்தீன் (Latin).
ரோர்ஷாக் என்பவரின் மைத்தடச் சோதனை எதற்கு மிகவும் பிரசித்தமானது: ஆளுமை (Personality).
ஆக்கத்திறன் கீழ்கண்ட எந்த ஒன்றுடன் தொடர்புடையது: முடிவெடுத்தல் (Decision making).
மைத்தடம் சோதனையைப் பயன்படுத்தி அறிவது: ஆளுமையை (Personality).
தடையில்லா இணைத்தற் சோதனையை உருவாக்கியவர்: யூங் (Jung).
ஆளுமை என்னும் சொல்லில் Persona என்பது: நடிகரால் அணியப்பட்ட முகமூடி (Mask worn by the actor

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

TNTET 2026: தமிழ் முழுமையான மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) online full test - 1

TNTET 2025 - தமிழ் முழு மாதிரித் தேர்வு - Zeal Study TNTET 2025: தமிழ் மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) இயல் 3: அறிவியல் ஆத்திச்சூடி | எந்திர மனிதன் | ஒளி பிறந்தது | இலக்கணம் 1. புதிய ஆத்திச்சூடி எழுதியவர் யார்? ஔவையார் பாரதியார் கவிமணி நெல்லை சு. முத்து விடை விடை: B. பாரதியார் 2. 'தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்' என அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப்பெற்றவர்? விக்ரம் சாராபாய் மயில்சாமி அண்ணாதுரை நெல்லை சு. முத்து சிவன் விடை விடை: C. நெல்லை சு. முத்து 3. 'ஔடதம்' என்பதன் பொருள் யாது? உணவு நீர் காற்று மருந்து விடை விடை: D. மருந்து 4. 'இயன்றவரை' என்ற சொல்லின் பொருள்? ...

KALVI TV | TRB_TET | EDUCATONAL PSYCHOLOGY - PART - 01 கல்வி உளவியல் - பகுதி 1

 வணக்கம் நமது கல்வி குழுவின் சார்பாக கல்வி தொலைக்காட்சி பாடங்களில் வாயிலாக நமது அரசு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதும்

Zeal study TNTET 2026: குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - மாதிரி தேர்வு -1

TNTET 2026 உளவியல் மாதிரித் தேர்வு Zeal study TET 2026: குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - 1 மீண்டும் தேர்வு எழுதவும்

Zeal study TNTET 2026: Tamil Quiz - Model Test 16 தமிழ் மாதிரித் தேர்வு - 16 (பழமொழி, திருநெல்வேலி & இலக்கணம்)

 இதில் பழமொழி நானூறு, திருநெல்வேலி வரலாறு, சிற்றிலக்கியங்கள் மற்றும் இலக்கணப் பகுதியான அணிகள் தொடர்பான அனைத்து வினாக்களும் இடம்பெற்றுள்ளன.தேர்வு முடித்த பின் விடைகளை மேலே scroll பண்ணி பார்க்கவும்.நன்றி 

Zeal study TET / TRB Psychology உளவியல் (அறிவுப்புல வளர்ச்சி) online test

TET 2025 - உளவியல் அலகு 3 ஆன்லைன் தேர்வு - Zeal Study உளவியல் அலகு 3: அறிவுப்புல வளர்ச்சி TET / TRB / TNPSC - முக்கிய வினாக்கள் (15 Questions) 1. கவனித்தலின் முதல் அடிப்படை நிலை எது? புலன் காட்சியறிதல் சிந்தித்தல் கற்பனை செய்தல் விடையைக் காட்டு விடை: புலன் காட்சியறிதல். 2. கவனித்தலை தீர்மானிக்கும் அகக்காரணி எது? நாட்டங்கள் புதுமை அளவு விடையைக் காட்டு விடை: நாட்டங்கள். 3. கவன வீச்சை அளவிடப் பயன்படும் கருவி எது? டச்சிடாஸ்கோப் எர்கோகிராப் ஆடியோமீட்டர் விடையைக் காட்டு விடை: டச்சிடாஸ்கோப் (Tachistoscope). ...

Followers