Skip to main content

Zeal Study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.04.2026

 Zeal Study official school morning prayer activities

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.04.2026



உடன்பிறப்புகள் நாள்



திருக்குறள்:

குறள் 777:

சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
கழல்யாப்புக் காரிகை நீர்த்து.

விளக்க உரை:

பரந்து நிற்க்கும் புகழை விரும்பி, உயிர்வாழ்வையும் விரும்பாத வீரர், வீரக் கழலை காலில் கட்டிக்கொள்ளுதல் அழகு செய்யும் தன்மையுடையதாகும்.

பழமொழி :
work is worship.

செய்யும் தொழிலே தெய்வம்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. முயற்சி மற்றும் பயிற்சி ஆகிய இரண்டும் தான் வெற்றியை தரும்.

2. எனவே தேர்வுகள் நெருங்கும் இந்த நேரத்தில் முயற்சி எடுத்து கூடுதல் நேரம் படிப்பேன்

பொன்மொழி :

படைப்பாற்றலின் கதவை திறக்கக் கூடிய சாவி கல்வி -அகதா கிறிஸ்டி

பொது அறிவு :

01.மிகக் குறைந்த வயது அமெரிக்க அதிபர் யார்?

தியோடர் ரூஸ்வெல்ட்
Theodore Roosevelt

02. ஒலிம்பிக் கொடியை உருவாக்கியவர் யார்?

பியர் டி கூபர்டின் -1913
Pierre de Coubertin -1913
English words :

meticulous -

giving or showing great attention to details

நுணுக்க விவரங்களில் ஆழ்ந்த கவனம் செலுத்துகிற.

jostle -

to push hard against somebody in a crowd.

கூட்டத்தில் ஒருவர் மீது வலுவுடன் இடித்தல்

தமிழ் இலக்கணம்:

இன்று நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் அந்நிய மொழி அவற்றின் மொழி ஆதாரங்கள் குறித்து பார்ப்போம்

1. குல்லா - பார்சி

2. ரிக்க்ஷா - ஜப்பானிய

3. பஜார் - பார்சி

4. அலமாரி - போர்ச்சுகீசியம்

5. இனாம் - உருது

அறிவியல் களஞ்சியம் :

ஒளியின் வேகம் பொதுவாக வினாடிக்கு 186,000 மைல்கள் எனக் குறைத்துக் கூறப்படுகிறது. துல்லியமாகச் சொன்னால், அது 299,792,458 மீ/வி (மீட்டர்/விநாடி – அதாவது வினாடிக்கு 186,287.49 மைல்களுக்குச் சமம்).

ஏப்ரல் 10

உடன்பிறப்புகள் நாள் (Siblings Day) (சில வேளைகளில் தேசிய உடன்பிறப்புகள் நாள் என்றும், தேசிய உடன்பிறப்பு நாள் என்றும்) அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 10ஆம் நாள் கடைப்பிடிக்கப்படும் இந்நாள், உடன் பிறந்த உறவுகளை கௌரவிக்கும் வகையில் உள்ளது. அமெரிக்காவின் சில மாகாணங்களில் விடுமுறை அளிக்கப்படும் இந்நாள், அன்னையர் நாள், தந்தையர் நாள் போலல்லாது, மத்திய கூட்டரசால் அடையாளம் காணப்படாமல் உள்ளது.1998 முதல், 49 மாகாணங்களின் ஆளுநர்கள் அதிகாரபூர்வமாக தங்களது மாநிலத்தில் உடன்பிறந்தோர் நாளை அங்கீகரிக்கும் பிரகடனத்தை வெளியிட்டனர்.அமெரிக்காவைத் தொடர்ந்து, பன்னாட்டளவில் இந்தியா, ஆத்திரேலியா வரை இந்நாள் அனுசரிக்கப்படுவது பரவியுள்ளது.
நீதிக்கதை

கெட்டிக்கார சேவல்

ஒரு நாள் காலையில் ஒரு மரத்தின் மீது சேவல் உட்கார்ந்து இருந்தது. காலை நேரம் ரம்மியமாக இருந்தபடியால் உற்சாகமாய் சேவல் கூவியது. பலதடவை கூவியது.

இதைக் கேட்ட நரி அங்கே வந்தது. நரிக்கு சரியான பசி இருந்தது. அந்த சேவலை பிடித்து சாப்பிட ஆசைப்பட்டது, ஆனால் சேவல் மரத்தின் மீது இருந்தபடியால் அதைப் பிடிக்க முடியவில்லை. இதற்காக ஒரு தந்திரம் செய்ய நினைத்தது. உடனே சேவலைப்பார்த்து,

" சகோதரனே!, வணக்கம். ஒரு நல்ல செய்தியை நீ கேள்விபட்டாயா? பறவைகளுக்கும், மிருகங்களுக்கும் ஒரு சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டு விட்டது. இனி ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்ளக் கூடாது. அன்பாய் நடந்துக் கொள்ள வேண்டும், சகோதர மனப்பான்மையை வளர்க்க வேண்டும். நீ கொஞ்சம் கீழே வாயேன். இந்த நல்ல செய்தியைப் பற்றி பேசுவோம்" என்றது.

நரியின் தந்திரப் பேச்சைச் சேவல் புரிந்து கொண்டது. அதை வெளியே காட்டவில்லை. தூரத்தில் எதையோ பார்ப்பதைப் போல் தலையைத் தூக்கிப் பார்த்தது.

இதைக் கண்ட நரி, "என்ன சகோதரா!, ரொம்ப அக்கறையாக எதையோ அடிக்கடி பார்க்கிறாயே. அங்கே என்ன இருக்கிறது?" என்று கேட்டது.

அதற்கு சேவல்,

" அங்கே சில வேட்டை நாய்கள் வருவது மாதிரி தெரிகிறது. வேட்டை நாய்கள் தானா? என்பதைக் கவனிக்கிறேன்" என்றது.

அவ்வளவு தான் நரிக்கு உடல் நடுங்கி விட்டது, வேகவேகமாக "சரி, சரி நான் அப்புறமாக வந்து உன்னிடம் பேசுகிறேன்" என்று கூறி கிளம்பியது.

சேவல், "அருமை சகோதரா, போகாதே, நான் இதோ கீழே வருகிறேன். நாய்களைக் கண்டு ஏன் பயப்படுகிறாய்? இப்பொழுது தானே நீ சொன்னாய், எல்லோருக்கும் இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது"

நரி "அந்த ஒப்பந்தைத்தைப் பற்றி அநேக பேர் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள், அந்த நாய்களுக்கு தெரியாமல் இருந்தால், நான் என்ன கதி ஆவது? நான் போகிறேன்" என்றது

இதை சொல்லி விட்டு நரி ஒரே ஓட்டமாக ஓடி காட்டுக்குள் மறைந்தது.

சேவல் 'யாரிடம் ஏமாற்றப் பார்க்கிறாய், உன்னுடைய கெட்டிக்கார பொய்கள் என்னிடம் பலிக்காது" என்று கூறி சிரித்தது.

கெட்டிக்காரன் பொய் சொன்னாலும் அது புத்திச்சாலியிடம் வெளிபட்டு விடும்.

இன்றைய செய்திகள்

10.04.2026

⭐கேரளா, அசாம் மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கும் நேற்று  சட்டமன்ற தேர்தல் ஓட்டுப்பதிவு நடைபெற்றுள்ளது.

⭐வந்தே பாரத்தை விட மணிக்கு 220 கி.மீ வேகத்தில் செல்லும் 2 புதிய ரயில்களை தயாரிக்கிறது இந்திய ரயில்வே

⭐அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போர் நிறுத்தத்திற்குப் பதிலாக இரண்டு வார காலத்திற்கு ஹோர்மூஸ் நீரிணை வழியாகப் பாதுகாப்பான போக்குவரத்து அனுமதிக்கப்படும் என எஸ்என்எஸ்சி அறிவித்தது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀 மகளிர் பிரிவு 9-வது சுற்று செஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீராங்கனை வைஷாலி, சக நாட்டு வீராங்கனையான திவ்யா தேஷ்முக் உடன் மோதினார். இதில் சிறப்பாக ஆடிய வைஷாலி சாமர்த்தியமாக காய்களை நகர்த்தி அபார வெற்றி பெற்றார்.

🏀மான்டேகார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோல் நடைபெறுகிறது.
இதில் சிறப்பாக ஆடிய ஸ்வரேவ் 6-2, 7-5 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

Today's Headlines

⭐ Voting for the legislative assembly elections was held yesterday in Kerala, Assam, and the Union Territory of Puducherry.

⭐ Indian Railways is preparing two new trains that can run at a speed of 220 km/h, faster than the Vande Bharat trains.

⭐ Instead of a ceasefire between the United States and Israel, the SNSC announced that safe transportation through the Strait of Hormuz will be allowed for a period of two weeks.

SPORTS NEWS

🏀 In the women’s section of the 9th round chess tournament, Tamil Nadu’s Indian player Vaishali faced fellow Indian player Divya Deshmukh. Vaishali played brilliantly and secured an impressive victory with smart moves.

🏀 The Monte Carlo Masters international tennis tournament is being held in Monaco. In this, Zverev performed well and advanced to the quarterfinals by winning 6–2, 7–5.

Covai women ICT_போதிமரம்

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

KALVI TV | TRB_TET | EDUCATONAL PSYCHOLOGY - PART - 01 கல்வி உளவியல் - பகுதி 1

 வணக்கம் நமது கல்வி குழுவின் சார்பாக கல்வி தொலைக்காட்சி பாடங்களில் வாயிலாக நமது அரசு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதும்

TNTET 2026: தமிழ் முழுமையான மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) online full test - 1

TNTET 2025 - தமிழ் முழு மாதிரித் தேர்வு - Zeal Study TNTET 2025: தமிழ் மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) இயல் 3: அறிவியல் ஆத்திச்சூடி | எந்திர மனிதன் | ஒளி பிறந்தது | இலக்கணம் 1. புதிய ஆத்திச்சூடி எழுதியவர் யார்? ஔவையார் பாரதியார் கவிமணி நெல்லை சு. முத்து விடை விடை: B. பாரதியார் 2. 'தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்' என அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப்பெற்றவர்? விக்ரம் சாராபாய் மயில்சாமி அண்ணாதுரை நெல்லை சு. முத்து சிவன் விடை விடை: C. நெல்லை சு. முத்து 3. 'ஔடதம்' என்பதன் பொருள் யாது? உணவு நீர் காற்று மருந்து விடை விடை: D. மருந்து 4. 'இயன்றவரை' என்ற சொல்லின் பொருள்? ...

Zeal study TNTET 2026: Tamil Quiz - Model Test 16 தமிழ் மாதிரித் தேர்வு - 16 (பழமொழி, திருநெல்வேலி & இலக்கணம்)

 இதில் பழமொழி நானூறு, திருநெல்வேலி வரலாறு, சிற்றிலக்கியங்கள் மற்றும் இலக்கணப் பகுதியான அணிகள் தொடர்பான அனைத்து வினாக்களும் இடம்பெற்றுள்ளன.தேர்வு முடித்த பின் விடைகளை மேலே scroll பண்ணி பார்க்கவும்.நன்றி 

Zeal study TNTET 2026: குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - மாதிரி தேர்வு -1

TNTET 2026 உளவியல் மாதிரித் தேர்வு Zeal study TET 2026: குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - 1 மீண்டும் தேர்வு எழுதவும்

Zeal study TET / TRB Psychology உளவியல் (அறிவுப்புல வளர்ச்சி) online test

TET 2025 - உளவியல் அலகு 3 ஆன்லைன் தேர்வு - Zeal Study உளவியல் அலகு 3: அறிவுப்புல வளர்ச்சி TET / TRB / TNPSC - முக்கிய வினாக்கள் (15 Questions) 1. கவனித்தலின் முதல் அடிப்படை நிலை எது? புலன் காட்சியறிதல் சிந்தித்தல் கற்பனை செய்தல் விடையைக் காட்டு விடை: புலன் காட்சியறிதல். 2. கவனித்தலை தீர்மானிக்கும் அகக்காரணி எது? நாட்டங்கள் புதுமை அளவு விடையைக் காட்டு விடை: நாட்டங்கள். 3. கவன வீச்சை அளவிடப் பயன்படும் கருவி எது? டச்சிடாஸ்கோப் எர்கோகிராப் ஆடியோமீட்டர் விடையைக் காட்டு விடை: டச்சிடாஸ்கோப் (Tachistoscope). ...

Followers