Skip to main content

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.04.2026

 Zeal study official school morning prayer activities

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.04.2026



     







திருக்குறள்:

குறள் 775:

விழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின்
ஓட்டன்றோ வன்க ணவர்க்கு.

விளக்க உரை:

பகைவரை சினந்து நோக்கியக் கண், அவர் வேலைக் கொண்டு எறிந்த போது மூடி இமைக்குமானால், அது வீரமுடையவர்க்குத் தோல்வி அன்றோ.

பழமொழி :
எல்லா மதங்களும் அன்பை போதிக்கின்றன.

All roads lead to rome.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. முயற்சி மற்றும் பயிற்சி ஆகிய இரண்டும் தான் வெற்றியை தரும்.

2. எனவே தேர்வுகள் நெருங்கும் இந்த நேரத்தில் முயற்சி எடுத்து கூடுதல் நேரம் படிப்பேன்

பொன்மொழி :

இளமையில் கல்வியை புறக்கணித்தவன் , தனது இறந்த காலத்தை மட்டும் இழந்தவன் அல்ல எதிர்காலத்தையும் இழந்தவன் ஆவான்- யூரி பிடிஷ்

பொது அறிவு :

01.முதல் உலகப்போரை முடித்து வைத்த உடன்படிக்கை எது?

வெர்சாய் உடன்படிக்கை,
The Treaty of Versailles

02.அமெரிக்காவிற்கு சுதந்திர தேவி சிலையை பரிசளித்த நாடு எது?

பிரான்ஸ் -1886
France-1886
English words :

developer -

a person or company that builds houses, shops etc

உருவாக்குபவர்

Random - anything that is without a pattern

ஒன்றுக்கொன்று தொடர்பின்றி, குறிப்பின்றி

தமிழ் இலக்கணம்:

இளம் பயிர் வகைகளின் பெயர்

நெல், சோளம், கத்திரி - நாற்று

மா, புளி, வாழை - கன்று

தென்னை - பிள்ளை

பனை - மடலி/ வடலி

அறிவியல் களஞ்சியம் :

அறிவியலில் உள்ள மிகவும் வியக்கத்தக்க உண்மைகளில் ஒன்று , நாம் உண்ணும் உணவைச் சுவைக்க உமிழ்நீர் தேவைப்படுகிறது என்பதுதான். ஒரு உணவு சுவைப்பதற்கு, அதிலுள்ள வேதிப்பொருட்கள் உமிழ்நீரில் கரைய வேண்டும். உணவில் உள்ள வேதிப்பொருட்கள் கரைந்தவுடன், அவற்றை நமது சுவை மொட்டுகளில் உள்ள ஏற்பிகளால் கண்டறிய முடியும்.

நீதிக்கதை

குரங்கின் காற்றாடி

அன்று ஞாயிற்றுக்கிழமை. பள்ளி விடுமுறை என்றாலே குட்டிக் குரங்கு முத்துவிற்கும், பாலுவிற்கும் கொண்டாட்டம்தான். அப்பா எவ்வளவு சொல்லியும், துணிப்பையைக் கொண்டு செல்லாமல், நெகிழி உறைகளில் காய்கறிகளை வாங்கி வருவார் முத்துவின் அம்மா.

அந்த நெகிழி உறைகள்தான் முத்துவிற்கும் பாலுவிற்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொழுதைப் போக்கும். ஆம், அந்த நெகிழிப் பைகளை வயதான கரடி மாமாவிடம் கொடுத்து காற்றாடி செய்து வானில் பறக்கவிடுவதில் இருவருக்கும் பெரு மகிழ்ச்சி.

அப்பா குரங்கு நெகிழியால் (பிளாஸ்டிக்) எவ்வளவு தீமை என்று கூறியும், அதைக் காதில் வாங்காது, நாள்தோறும் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வரும் உறைகளை அப்படியே குப்பைத் தொட்டியில் எறிவதையே வழக்கமாகக் கொண்டிருந்தார் முத்துவின் அம்மா. வாங்கி வருகிற பெரிய உறைகளை எடுத்து காற்றாடி விட்டுக் கொண்டிருந்தான் முத்து.

எவ்வளவு சொல்லியும் மனைவியும், மகனும் மனம் திருந்தாதது கண்டு மிகவும் வருந்தினார் முத்துவின் அப்பா.

எப்பப் பார்த்தாலும் அப்பாவுக்குக் குறை சொல்றதே வேலையாகப் போய்விட்டது என முத்துவும் பாலுவும் அப்பாவின் வருத்தத்தைப் புரிந்து கொள்ளாமல் பள்ளி விடுமுறை நாட்களில் காற்றாடி விடுவதைக் கடமையாக்கிக் கொண்டனர்.

ஒரு ஞாயிற்றுக்கிழமையில் வெளியூரில் வேலை முடித்து தனது ஊருக்கு, மோட்டார் வண்டியில் வந்து கொண்டிருந்தது ஓர் இளங்கரடி.

உயரமான குன்றின் மீது பல குட்டிக் குரங்குகளுடன் காற்றாடி பறக்கவிட்டு உற்சாகமாக சத்தம் போட்டுக் கொண்டிருந்தனர் முத்துவும் பாலுவும்.

முத்துவின் காற்றாடிக்கு பாலு தன் காற்றாடி மூலம் விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தான். ஒருவரை ஒருவர் வெற்றி பெறுவதற்கான விளையாட்டு அது. அதற்காக அவர்கள் அந்நூலில் வஞ்சிர கோந்து, கண்ணாடிச் சில்லு தூள்கள், பாட்டரி கரி என பலவற்றைச் சேர்த்து, கத்தி போன்று கடினமாக்கி வைத்திருந்தனர். எதிர்பாராதவிதமாக முத்துவின் காற்றாடி அறுந்தது.

காற்றில் அசைந்து அசைந்து காற்றாடி நூல் வண்டியில் வந்து கொண்டிருந்த இளங்கரடியின் கழுத்தை அறுத்துவிட்டது.

அய்யோ! என்று அலறியது இளங்கரடி. ரத்தம் வேகமாக வெளியேறியது. அருகில் இருந்தவர்களின் உதவியோடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது கரடி.

பயத்தில் செய்வதறியாது திகைத்துக் கொண்டிருந்தனர் பாலுவும் முத்துவும். அவர்களின் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது.

மறுநாள் செய்தித்தாளில் காற்றாடி நூலால் இளங்கரடி கழுத்து அறுபட்ட செய்தியும், அதற்குக் காரணமான முத்து, பாலுவின் படங்களும் வெளியாகியிருந்தன.

தனது தவறை உணர்ந்த குட்டிக் குரங்குகள் காவல் நிலையத்தில் தலைகவிழ்ந்து நின்றனர். தந்தையும் தாயும் வந்து காவலரிடம் மன்னிப்புக் கேட்டனர். இனி, பெற்றோரின் பேச்சை மீறுவதில்லை, பூமிக்கும் தீங்கு விளைவிப்பது இல்லை என்றும் வாக்கு அளித்தனர்.

நானும், இனி கடைகளுக்குச் செல்லும் போது துணிப்பைகளையே கொண்டு செல்வேன் என முத்துவின் தாயார் கூறினார்.

இன்றைய செய்திகள்

09.04.2026

⭐ சென்னை மற்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மின்தடை அதிகரித்து வருகிறது.

⭐ ஈரானை குறிவைத்து வளைகுடா நாடுகளில் உள்ள ராணுவ தளங்களில் அதி நவீன ஏவுகணைகளை அமெரிக்கா குவித்து வருகிறது.

⭐ஈரானுக்கு ராணுவ ஆயுதங்களை வழங்கும் அனைத்து நாடுகள் மீதும் 50% இறக்குமதி வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀மும்பை மற்றும் ராஜஸ்தான் இடையே  ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது ராஜஸ்தான் அணி.

Today's Headlines

⭐ Power outages are increasing in Chennai and the districts of Chengalpattu, Kanchipuram, and Tiruvallur.

⭐ The United States is deploying advanced missiles at military bases in Gulf countries targeting Iran.

⭐ Donald Trump has announced that a 50% import tariff will be imposed on all countries supplying military weapons to Iran.

SPORTS NEWS

🏀 In the Indian Premier League match between the Mumbai Indians and the Rajasthan Royals, Rajasthan won by 27 runs. With this, the Rajasthan Royals have secured the top position in the points table with 3 wins in 3 matches.

Covai women ICT_போதிமரம்

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

KALVI TV | TRB_TET | EDUCATONAL PSYCHOLOGY - PART - 01 கல்வி உளவியல் - பகுதி 1

 வணக்கம் நமது கல்வி குழுவின் சார்பாக கல்வி தொலைக்காட்சி பாடங்களில் வாயிலாக நமது அரசு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதும்

TNTET 2026: தமிழ் முழுமையான மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) online full test - 1

TNTET 2025 - தமிழ் முழு மாதிரித் தேர்வு - Zeal Study TNTET 2025: தமிழ் மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) இயல் 3: அறிவியல் ஆத்திச்சூடி | எந்திர மனிதன் | ஒளி பிறந்தது | இலக்கணம் 1. புதிய ஆத்திச்சூடி எழுதியவர் யார்? ஔவையார் பாரதியார் கவிமணி நெல்லை சு. முத்து விடை விடை: B. பாரதியார் 2. 'தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்' என அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப்பெற்றவர்? விக்ரம் சாராபாய் மயில்சாமி அண்ணாதுரை நெல்லை சு. முத்து சிவன் விடை விடை: C. நெல்லை சு. முத்து 3. 'ஔடதம்' என்பதன் பொருள் யாது? உணவு நீர் காற்று மருந்து விடை விடை: D. மருந்து 4. 'இயன்றவரை' என்ற சொல்லின் பொருள்? ...

Zeal study TNTET 2026: Tamil Quiz - Model Test 16 தமிழ் மாதிரித் தேர்வு - 16 (பழமொழி, திருநெல்வேலி & இலக்கணம்)

 இதில் பழமொழி நானூறு, திருநெல்வேலி வரலாறு, சிற்றிலக்கியங்கள் மற்றும் இலக்கணப் பகுதியான அணிகள் தொடர்பான அனைத்து வினாக்களும் இடம்பெற்றுள்ளன.தேர்வு முடித்த பின் விடைகளை மேலே scroll பண்ணி பார்க்கவும்.நன்றி 

Zeal study TNTET 2026: குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - மாதிரி தேர்வு -1

TNTET 2026 உளவியல் மாதிரித் தேர்வு Zeal study TET 2026: குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - 1 மீண்டும் தேர்வு எழுதவும்

Zeal study TET / TRB Psychology உளவியல் (அறிவுப்புல வளர்ச்சி) online test

TET 2025 - உளவியல் அலகு 3 ஆன்லைன் தேர்வு - Zeal Study உளவியல் அலகு 3: அறிவுப்புல வளர்ச்சி TET / TRB / TNPSC - முக்கிய வினாக்கள் (15 Questions) 1. கவனித்தலின் முதல் அடிப்படை நிலை எது? புலன் காட்சியறிதல் சிந்தித்தல் கற்பனை செய்தல் விடையைக் காட்டு விடை: புலன் காட்சியறிதல். 2. கவனித்தலை தீர்மானிக்கும் அகக்காரணி எது? நாட்டங்கள் புதுமை அளவு விடையைக் காட்டு விடை: நாட்டங்கள். 3. கவன வீச்சை அளவிடப் பயன்படும் கருவி எது? டச்சிடாஸ்கோப் எர்கோகிராப் ஆடியோமீட்டர் விடையைக் காட்டு விடை: டச்சிடாஸ்கோப் (Tachistoscope). ...

Followers