Skip to main content

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 06.03.2026

 Zeal study official school morning prayer activities

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 06.03.2026


வலந்தீனா தெரெசுக்கோவா







திருக்குறள்:

குறள் 642:

ஆக்கமுங் கேடும் அதனால் வருதலாற்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு

விளக்க உரை:

ஆக்கமும் கேடும் சொல்லுகின்ற சொல்லால் வருவதால் ஒருவன் தன்னுடைய சொல்லிற்க்கு தவறு நேராமல் காத்துக்கொள்ள வேண்டும்.

பழமொழி :
Charity is a double blessing.  

தருமம் தலை காக்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. எனது உணவானது விவசாயி போன்ற பலர் உழைப்பில் வருகிறது.

2. எனவே உணவை வீணாக்க மாட்டேன்.

பொன்மொழி :

வெற்றி என்பது புத்திசாலிகளின் சொத்தல்ல. அது முன்னேற துடிக்கும் உழைப்பாளிகளுக்கும் தன்னம்பிக்கைக்குமே சொந்தம்.- அடால்ப் ஹிட்லர்

பொது அறிவு :

01.மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

ஹிப்போகிரேட்டஸ் (Hippocrates)

02. உலகின் கரும்பு உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?

பிரேசில்-Brazil

English words :

Skirmish-: A small or short fight between small groups of soldiers, usually before a bigger battle.

Combat

: Fighting in a war or battle between armed forces.

அறிவியல் களஞ்சியம் :

காந்த துருவம் (Magnetic Pole): காந்தத்தின் வட அல்லது தென் முனைகள், காந்த வலிமை அதிகமுள்ள இடங்கள்.

காந்த புலம் (Magnetic Field): காந்தப் பொருள்கள் ஈர்க்கப்படும் அல்லது விலக்கப்படும் காந்தத்தைச் சுற்றியுள்ள பகுதி.

மார்ச் 06

வலந்தீனா விளாடிமீரொவ்னா தெரெசுக்கோவா அவர்களின் பிறந்தநாள்

வலந்தீனா விளாடிமீரொவ்னா தெரெசுக்கோவா என்பவர் சோவியத் ஒன்றியத்தின் ஓய்வுபெற்ற விண்வெளி வீராங்கனையும் முதற்தடவையாக விண்வெளிக்குச் சென்ற பெண்ணும் ஆவார். இவர் வசுத்தோக்கு 6 விண்கலத்தில் 1963 சூன் 16 அன்று விண்வெளிக்குச் சென்று அங்கு மூன்று நாள்களுக்குச் சற்றுக் குறைவாகத் தங்கியிருந்து வெற்றிகரமாகத் திரும்பினார்.

1961ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த யூரி ககாரின் மண்ணிலிருந்து விண்ணுக்குச் சென்ற முதல் மாந்தர் என்ற பெருமையைப் பெற்றார். அவருக்கு அடுத்தபடியாகப் பெண் ஒருவரை விண்ணுக்கு அனுப்ப சோவியத்து ஒன்றியம் முடிவு செய்தது. இந்த அறிவிப்பை கேட்டதும் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் குவிந்தன. இறுதிக் கட்டமாக நான்கு பெண்கள் மட்டுமே தெரிவு செய்யப்பட்டனர். மிகக்கடினமான பயிற்சிகளுக்குப் பிறகு 25 வயதான வலண்டீனா தெரெசுக்கோவா தெரிவு செய்யப்பட்டார்.

சூன் 19ஆம் நாள் விண்கலம் பூமிநோக்கிப் பாய்ந்து வந்தபோது, தரையிறங்கும் முன்பே பாராசூட்டில் இருந்து குதித்து, பாதுகாப்பாக இறங்கினார்‘சோவியத் ஒன்றியத்தின் வீராங்கனை’ என்ற பதக்கத்துடன் ‘இலெனின் விருது’என பல்வேறு விருதுகள் குவிந்தன.
நீதிக்கதை

வெங்காயம்

ஒரு வீட்டில தக்காளி வெங்காயம் மற்றும் குச்சி ஐஸ் மூன்றும் நல்ல நண்பர்களா வாழ்ந்து வந்தது.

ஒரு நாள் தக்காளிக்கு வெளிஉலகை சுற்றிபார்க்க ஆசை வந்தது.தக்காளி இப்படிச் சொன்னதும் வெங்காயம் சொல்லுச்சு அய்யோ நாம இங்கிருந்து வெளியே போவது நமக்கு பாதுகாப்பு இல்லை..அதனால நம்ம வீட்டிலேயே இருந்திடலாம்.

வெங்காயம் சொன்னதை தக்காளி கேட்கவே இல்லை.தக்காளி குச்சி ஐஸ் கூட்டி கிட்டு வெளியே கிளம்பிச்சு. வெங்காயம் அவங்கள தனியா போக வேண்டாம்னு சொல்லிட்டு வெங்காயமும் கூடவே போச்சு.

அது டிசம்பர் மாசம் கொஞ்சம் குளிராக இருந்தது.எல்லாரும் ஜாலியா வெளிய போய் விளையாடினாங்க.

இரண்டுமாதங்கள் கழித்து வெயில் காலம் வந்தது.

தக்காளி வெங்காயம் குச்சி ஐஸ் மூன்றுபேரும் எப்பவும் போல விளையாட வெளியே போனாங்க அப்போ வெயில் அதிகமா இருந்தது.வெயிலின் காரணமாக குச்சி ஐஸ் உருகிடுச்சு.

இதைப் பார்த்த தக்காளியும் வெங்காயமும் ரொம்பவே வருத்தப்பட்டார்கள்.

நாம திருப்பி வீட்டுக்கு போயிடலாம் அப்படின்னு சொல்லி போய்க்கிட்டு இருக்கும் போது ஒரு சின்ன பையன் பந்தை வைத்து விளையாடிக் கொண்டு இருந்தான்.

அந்தப் பையன் பந்தை தூக்கி போட்டான் .அந்தப் பந்து தக்காளியை நோக்கி வந்தது. இதைப் பார்த்த வெங்காயம் பந்தை தடுத்து நிறுத்தி தட்டி விட்டது.

பின்பு வீட்டை விட்டு வெளியே வந்தாலே நிறைய ஆபத்துகள் உள்ளன என்று எண்ணி இரண்டும் வீட்டிற்கு விரைந்து சென்று கொண்டு இருந்தது. சாலையை கடக்க தக்காளியும் வெங்காயமும் சென்று கொண்டிருக்கும் பொழுது ஒரு லாரி அங்கு வேகமாக வந்து கொண்டு இருந்தது.

இதை கவனிக்காத தக்காளி சாலையை கடக்கும் பொழுது லாரி தக்காளியின் மேல் ஏறியது..லாரி தக்காளியின் மேல் ஏறியதும் தக்காளி நசுங்கி செத்துப்போச்சு.

தன் நண்பனை காப்பாற்ற முடியலியே அப்படின்னு மிகவும் வருத்தத்தில் வெங்காயம் வீட்டிற்கு வந்தது..வீட்டிற்கு வந்த வெங்காயம் வருத்தத்தில் மிகவும் அழுதது.

அப்போ வெங்காயம் கடவுள் கிட்ட கேட்டு ஓ கடவுளே! என்னோட பிரெண்ட்ஸ்காக நான் அழுதேன்.நான் இல்லாம போனா எனக்காக வருத்தப்பட்டு அழுவதற்கு யாரு இருக்கா?.

அப்போ கடவுள் வெங்காயத்தின் முன்பு தோன்றி வெங்காயமே நீ வருத்தப்படாத.வெங்காயமே உனக்கு ஏதாவது ஆகிடுச்சுனா உன்னை சுற்றி இருப்பவர்கள் அனைவரும் அழுவார்கள்.அதற்கான ஒரு வரத்தை நான் உனக்கு அளிக்கிறேன் என்று கடவுள் கூறினார்.

அதுக்குவெங்காயம்நான் இப்போ தனியாதானே இருக்கிறேன்.அதனால என்னோட ஃப்ரண்ட்ஸ் எல்லாரையும் எனக்கு திருப்பி கொடுங்க.அப்படின்னு சொல்லுச்சு.

உடனே கடவுள் நான் உனக்கு ஒரு புது நண்பனை கொடுக்கிறேன்.அவன் பெயர் மிளகாய்.மக்கள் உங்கள் இரண்டு பேரையும் எப்பொழுதும் சேர்த்துதான் சமையலுக்கு எடுப்பார்கள் என்றுகூறினார்.

தன்னோட புது நண்பனோட வெங்காயம் சந்தோஷமா இருந்துச்சு.

இன்றைய செய்திகள்

06.03.2026

⭐சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி நியமனம்!

⭐போர் சூழல் எதிரொலி: ரஷியாவிடம் இருந்து கூடுதல் கச்சா எண்ணெய் வாங்க இந்தியா திட்டம்

⭐கடலில் வலம் வரும் ஈரானின் போர்க்கப்பல்களை அமெரிக்க படைகள் சுட்டு வீழ்த்தி கடலில் மூழ்கடித்து வருகி ன்றன.தற்போது வரை 17 ஈரானிய போர்க்கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டுள்ளன.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀2026 டி20 உலகக் கோப்பை தொடர் ஒரு பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
சூப்பர் 8 போட்டி முடிவடைந்த நிலையில், இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

🏀மும்பை: ஐசிசி டி20 தரவரிசையில், விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் பேட்டிங் பிரிவில் 25 இடங்களில் முன்னேறியுள்ளார்.

Today's Headlines

⭐ Madras High Court (Chennai High Court) has appointed Sushrut Arvind Dharmadhikari as the Chief Justice.

⭐ Due to the war situation, India is planning to purchase additional crude oil from Russia.

⭐ United States forces are shooting down Iran warships that are moving in the sea and sinking them. So far, 17 Iranian warships have reportedly been sunk.

🏀 Sports News

🏀 The ICC Men's T20 World Cup 2026 tournament has reached an exciting stage.
After the Super 8 round, India national cricket team, England cricket team, South Africa national cricket team, and New Zealand national cricket team have qualified for the semi-finals.

🏀 In International Cricket Council (ICC) T20 rankings, wicketkeeper Sanju Samson has moved up 25 places in the batting rankings

Covai women ICT_போதிமரம்

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

KALVI TV | TRB_TET | EDUCATONAL PSYCHOLOGY - PART - 01 கல்வி உளவியல் - பகுதி 1

 வணக்கம் நமது கல்வி குழுவின் சார்பாக கல்வி தொலைக்காட்சி பாடங்களில் வாயிலாக நமது அரசு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதும்

TNTET 2026: தமிழ் முழுமையான மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) online full test - 1

TNTET 2025 - தமிழ் முழு மாதிரித் தேர்வு - Zeal Study TNTET 2025: தமிழ் மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) இயல் 3: அறிவியல் ஆத்திச்சூடி | எந்திர மனிதன் | ஒளி பிறந்தது | இலக்கணம் 1. புதிய ஆத்திச்சூடி எழுதியவர் யார்? ஔவையார் பாரதியார் கவிமணி நெல்லை சு. முத்து விடை விடை: B. பாரதியார் 2. 'தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்' என அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப்பெற்றவர்? விக்ரம் சாராபாய் மயில்சாமி அண்ணாதுரை நெல்லை சு. முத்து சிவன் விடை விடை: C. நெல்லை சு. முத்து 3. 'ஔடதம்' என்பதன் பொருள் யாது? உணவு நீர் காற்று மருந்து விடை விடை: D. மருந்து 4. 'இயன்றவரை' என்ற சொல்லின் பொருள்? ...

Zeal study TNTET 2026: Tamil Quiz - Model Test 16 தமிழ் மாதிரித் தேர்வு - 16 (பழமொழி, திருநெல்வேலி & இலக்கணம்)

 இதில் பழமொழி நானூறு, திருநெல்வேலி வரலாறு, சிற்றிலக்கியங்கள் மற்றும் இலக்கணப் பகுதியான அணிகள் தொடர்பான அனைத்து வினாக்களும் இடம்பெற்றுள்ளன.தேர்வு முடித்த பின் விடைகளை மேலே scroll பண்ணி பார்க்கவும்.நன்றி 

Zeal study TET / TRB Psychology உளவியல் (அறிவுப்புல வளர்ச்சி) online test

TET 2025 - உளவியல் அலகு 3 ஆன்லைன் தேர்வு - Zeal Study உளவியல் அலகு 3: அறிவுப்புல வளர்ச்சி TET / TRB / TNPSC - முக்கிய வினாக்கள் (15 Questions) 1. கவனித்தலின் முதல் அடிப்படை நிலை எது? புலன் காட்சியறிதல் சிந்தித்தல் கற்பனை செய்தல் விடையைக் காட்டு விடை: புலன் காட்சியறிதல். 2. கவனித்தலை தீர்மானிக்கும் அகக்காரணி எது? நாட்டங்கள் புதுமை அளவு விடையைக் காட்டு விடை: நாட்டங்கள். 3. கவன வீச்சை அளவிடப் பயன்படும் கருவி எது? டச்சிடாஸ்கோப் எர்கோகிராப் ஆடியோமீட்டர் விடையைக் காட்டு விடை: டச்சிடாஸ்கோப் (Tachistoscope). ...

Followers