Skip to main content

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.03.2026

 Zeal study official school morning prayer activities

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.03.2026




திருக்குறள்:

குறள் 912:

பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்
நயன்தூக்கி நள்ளா விடல்

உரை:

கிடைக்க கூடிய பயனை அளந்து பார்த்து, அதற்கு ஏற்றவாறு இனிய சொல் கூறுகின்ற பண்பற்ற பொது மகளிரின் இன்பத்தை ஆராய்ந்து பொருந்தாமல் விட வேண்டும்.

பழமொழி :
Measure thrice before you cut once.  

ஒரு செயலை செய்யும் முன் பலமுறை சிந்திக்கவும்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. எனது நடை, உடை மற்றும் ஒழுக்கத்தின் மூலம் நான் ஒரு மதிப்பு மிகு மாணவன் என்பதை மற்றவர்க்கு உணர்த்துவேன்.

2. ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரிடம் மரியாதை மற்றும் கீழ் படிதல் உடன் நடந்து கொள்வேன்.

பொன்மொழி :

மனிதர்களின் முழு திறமையின் வெளிப்பாடே உண்மையான கல்வி

   மகாத்மா காந்தி அடிகள்

பொது அறிவு :

01. காந்திஜியின் 125 வது பிறந்தநாளை ஒட்டி இந்தியா உருவாக்கிய மிக உயர்ந்த விருதின் பெயர் என்ன?

காந்தி அமைதி பரிசு

Gandhi Peace Prize. 

02. விண்கலங்கள் அதிக முறை சென்று ஆராய்ச்சி செய்த முதல் வால் நட்சத்திரம் எது?

ஹாலி வால் நட்சத்திரம்

Halley's Comet

English words :

Attentive- taking heed. உன்னிப்பாகக் கவனித்தல்

exotic - unusual or interesting

வழக்கத்திற்கு மாறாக இருக்கிற. விசித்திரமான.

தமிழ் இலக்கணம்:

கற்போம் தமிழ்

கருப்பு, கறுப்பு எது சரி?

இடையின ர கரமா வல்லின ற கரமா?

இது அநேகருக்கு குழப்பத்தை உண்டாக்கும் ஒரு வார்த்தை.

ஆனால் இரண்டுமே சரி தான்.

எப்படி என்று பார்ப்போம்.

நிலையான நிறத்தை குறிக்கும் போது கருப்பு என்று எழுத வேண்டும்

எ.கா - காகம் கருப்பு

கருப்பு குயில்

தாரின் நிறம் கருப்பு.

மாறும் நிறம் வரும் போது கறுப்பு என்று எழுத வேண்டும்.

வெள்ளி கறுத்து விட்டது

மேகம் கறுத்து வருகிறது.

வெள்ளி, மேகம் இரண்டின் நிறமும் வேறு வேறு ஆனால் வெள்ளி கறுப்பாக மாறும்

மேகம் நிறமும் கறுப்பு அல்ல அது மழை வரும் போது மாறும்.

அறிவியல் களஞ்சியம் :

"சுத்தமான தண்ணீரில் அவ்வளவாக மின்சாரம்பாயாது, காரணம் சுத்தமான நீரில் தாதுக்கள் (Impurities and Minerals) இல்லாதிருப்பதால் மின்சாரம் பாய்வதில்லை.

மார்ச் 30

வின்செண்ட் வான்கா  அவர்களின் பிறந்தநாள்

வின்சென்ட் வில்லியம் வான் கோ அல்லது வின்செண்ட் வான்கா (இடச்சு: [ˈvɪnsɛnt ˈʋɪləm vɑn ˈɣɔx]); (Vincent Van Gogh, மார்ச் 30, 1853 - சூலை 29|, 1890) ஒரு டச்சு பின்-உணர்வுப்பதிவுவாத ஓவியர். இவரது ஓவியங்களில் சில உலகின் மிகவும் அறியப்பட்டவையும் புகழ் பெற்றவையும் அதிகம் விலையுள்ளவையுமான ஓவியங்களுள் அடங்கும். ஒரு தசாப்தத்தில் 860 எண்ணெய் ஓவியங்கள் உட்பட, வெறும் 2,100 கலைப்படைப்புகளை உருவாக்கியவர். பிரான்சில் வாழ்ந்த கடைசி இரண்டு ஆண்டுகளில் அவர் இறந்துவிட்டார். வறுமை மனநோய் போன்றவற்றால் துன்புற்று அவரது வாழ்வு 37 வயதில் தற்கொலையில் முடிந்தது..

இவரது பெரும்பாலான ஓவியங்கள் இவரது வாணாளின் கடைசி இரு ஆண்டுகளில் வரையப்பட்டவையே. இவர் உயிருடன் இருந்த காலத்தில் இவரின் கலையை யாரும் மதிக்கவில்லை. தான் வாழ்ந்த காலத்தில் இவரால் தனது ஓவியங்களுள் ஒன்றை மட்டுமெ விற்க முடிந்தது. இன்றோ நவீன ஓவியத்தின் செல்வாக்கு வாய்ந்தவராக இவர் கருதப்படுகிறார். வான்கா 30 வயது வரை எந்த ஓவியமும் வரைந்ததில்லை.
நீதிக்கதை

அழகிய ரோஜா செடியும் அற்புத கள்ளிச் செடியும்

அது ஒரு வசந்த காலம். பூங்காவில் எண்ணற்ற மரம் செடி கொடிகள் இருந்தன. அதில் ஒரு ரோஜாச் செடியும், கள்ளிச்செடியும், சவுக்கு மரமும் அருகருகே இருந்தன. வசந்த கால காலை நேரம். அந்த ரோஜாச்செடி அழகாகப் பூத்திருந்தது. அதைக் கடந்து சென்ற அனைவரும் ஒரு நொடி நின்று பார்த்து சென்றனர். அந்தச் சவுக்கு மரம் ரோஜாச் செடியிடம் நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய். பூங்காவிற்கு வரும் அனைவரும் உன்னைப் பார்த்து மகிழ்ந்து செல்கின்றனர் என்றது. ரோஜாச் செடி வெட்கத்தில் நாணி அதன் இதழ்கள் மேலும் சிவந்தன. கர்வமும் தலைக்கு ஏற தொடங்கியது.

அருகே இருந்த கள்ளிச்செடியை பார்த்து இவ்வளவு கோரமான தோற்றத்தைக் கொண்ட நீ என்னருகே இருப்பது எனக்கு அவமானமாக உள்ளது என்று கூறி தள்ளிப்போக முயன்றது. ஆனால் ரோஜா செடியால் தள்ளிப்போக முடியவில்லை. இவ்வாறு தினசரி அந்த கள்ளிச்செடியை குறை கூறிக்கொண்டே இருந்தது ரோஜா செடி. ஆனால் இதற்கு அந்த கள்ளிச்செடி எந்த முக சுளிப்பும் கோவமும் படாமல் இருந்தது.

நாட்கள் ஓடின. கோடைக்காலம் சுட்டெரிக்க தொடங்கியது. கோடைக்காலத்தில் வெட்பத்தினால் பூங்காவில் பார்வையாளர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. தண்ணீர் பற்றாக்குறையும் வந்தது. பூங்கா நிறுவனத்தினரால் ஒழுங்காகத் தண்ணீர் ஊற்றிப் பராமரிக்க முடியவில்லை. ரோஜா செடியும் வாட தொடங்கியது. ஆனால் கள்ளிச்செடி எப்போதும் போல இருந்தது. குருவிகள் பல வந்து கள்ளிச்செடி மீது அமர்ந்து அதைக் கொற்றி நீர் குடித்தன. இதைக்கண்ட ரோஜா செடி சவுக்கு மரத்திடம் குருவிகள் கொற்றுவதால் கள்ளிச்செடிக்கு வலிக்காத என்று கேட்டது.

சவுக்கு மரமோ கள்ளிச்செடிக்கு வலிக்கத் தான் செய்யும் இருந்தாலும் அதைத் தாங்கி கொண்டு தாகத்தில் தவிக்கும் குருவிகளுக்கு தண்ணீர் கொடுப்பது தனக்குக் கிடைத்த வரமாகக் கருதுகிறது. நீயும் கேட்டுப்பார். கள்ளிச்செடி சம்மதித்தால் குருவிகளின் உதவியினால் உனக்குத் தண்ணீர் கிடைக்க வாய்ப்புள்ளது என்று கூறியது. கேட்க முகமில்லாமல் ஆனால் உயிர் வாழ நீர் இல்லாததால் அந்த ரோஜா செடி. கள்ளிச்செடியிடம் நீர் கேட்டது. கள்ளிச்செடியும் குருவியின் உதவியால் ரோஜா செடிக்கு நீர் கொடுத்து உதவியது.

நீதி:

தோற்றத்தை வைத்து யாரையும் மதிப்பிடக்கூடாது என ரோஜா செடி புரிந்துகொண்டது.

இன்றைய செய்திகள்

30.03.2026

⭐ வணிக சிலிண்டர்களின் விநியோகத்தை மாநிலங்களுக்கு 70% ஆக உயர்த்துவதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.

⭐தற்போது ஒமைக்ரான் வகையைச் சேர்ந்த BA.3.2 எனப்படும் 'சிக்காடா' கொரோனா வைரஸ் ஐரோப்பா & அமெரிக்காவில் வேகமாகப் பரவி வருகிறது.

⭐பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை ஏற்றத்தை தடுக்கும் நோக்கில் எண்ணெய் நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் கலால் வரியை இந்திய அரசு குறைத்துள்ளது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி, கடந்த 13 சீசன்களாக முதல் போட்டியில் வெற்றி பெற முடியாமல் தவித்து வருகிறது. மொத்தம் 18 சீசன்களில் 14 முறை தொடக்க ஆட்டத்தில் தோல்வி அடைந்துள்ளது.

🏀பாகிஸ்தான் வீரருடன் இணைந்து ஆடப் போகும் அஸ்வின். அமெரிக்காவின் MLC டி20 தொடரில் பங்கேற்க ஒப்பந்தம்.

Today's Headlines

*TODAY’S HEADLINES*

⭐ The Government of India has announced that the distribution of commercial LPG cylinders to states will be increased to 70%.

⭐ A new Omicron variant called BA.3.2, nicknamed “Cicada,” is reportedly spreading rapidly in Europe and the United States.

⭐ To control the rising prices of petrol, diesel, and other fuels, the Government of India has reduced the excise duty imposed on oil companies.

*SPORTS NEWS*

🏀 The Mumbai team, which has won the championship 5 times, has been struggling to win its opening match for the past 13 seasons. Out of 18 seasons, it has lost the first match 14 times.

🏀 Ravichandran Ashwin is set to play alongside a Pakistani player, having signed up to participate in the USA’s Major League Cricket (MLC) T20 tournament.

Covai women ICT_போதிமரம்

Comments

Post a Comment

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

TNTET 2026: தமிழ் முழுமையான மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) online full test - 1

TNTET 2025 - தமிழ் முழு மாதிரித் தேர்வு - Zeal Study TNTET 2025: தமிழ் மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) இயல் 3: அறிவியல் ஆத்திச்சூடி | எந்திர மனிதன் | ஒளி பிறந்தது | இலக்கணம் 1. புதிய ஆத்திச்சூடி எழுதியவர் யார்? ஔவையார் பாரதியார் கவிமணி நெல்லை சு. முத்து விடை விடை: B. பாரதியார் 2. 'தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்' என அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப்பெற்றவர்? விக்ரம் சாராபாய் மயில்சாமி அண்ணாதுரை நெல்லை சு. முத்து சிவன் விடை விடை: C. நெல்லை சு. முத்து 3. 'ஔடதம்' என்பதன் பொருள் யாது? உணவு நீர் காற்று மருந்து விடை விடை: D. மருந்து 4. 'இயன்றவரை' என்ற சொல்லின் பொருள்? ...

Zeal study TNTET 2026: குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - மாதிரி தேர்வு -1

TNTET 2026 உளவியல் மாதிரித் தேர்வு Zeal study TET 2026: குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - 1 மீண்டும் தேர்வு எழுதவும்

Zeal study TNTET 2026: தமிழ் மாதிரித் தேர்வு - 3 இயல் 1 - 3 (50 வினாக்கள்) online test

TNTET 2026 Tamil Quiz - Model Test 3 TNTET 2026: தமிழ் மாதிரித் தேர்வு - 3 இயல் 1 - 3 (50 வினாக்கள்) [Zeal study ] விடைகளைச் சரிபார்க்கவும்

Zeal study TET / TRB Psychology உளவியல் (அறிவுப்புல வளர்ச்சி) online test

TET 2025 - உளவியல் அலகு 3 ஆன்லைன் தேர்வு - Zeal Study உளவியல் அலகு 3: அறிவுப்புல வளர்ச்சி TET / TRB / TNPSC - முக்கிய வினாக்கள் (15 Questions) 1. கவனித்தலின் முதல் அடிப்படை நிலை எது? புலன் காட்சியறிதல் சிந்தித்தல் கற்பனை செய்தல் விடையைக் காட்டு விடை: புலன் காட்சியறிதல். 2. கவனித்தலை தீர்மானிக்கும் அகக்காரணி எது? நாட்டங்கள் புதுமை அளவு விடையைக் காட்டு விடை: நாட்டங்கள். 3. கவன வீச்சை அளவிடப் பயன்படும் கருவி எது? டச்சிடாஸ்கோப் எர்கோகிராப் ஆடியோமீட்டர் விடையைக் காட்டு விடை: டச்சிடாஸ்கோப் (Tachistoscope). ...

TNTET 2026: தமிழ் - பகுதி 1 முக்கியக் குறிப்புகள் (Study Materials) - இன்பத்தமிழ், தமிழ்க்கும்மி மற்றும் வளர்தமிழ்

  TNTET 2026: தமிழ் - பகுதி 1 முக்கியக் குறிப்புகள் (Study Materials) இந்தக் குறிப்புகள் இன்பத்தமிழ் , தமிழ்க்கும்மி மற்றும் வளர்தமிழ் ஆகிய பாடங்களை எளிதாக மீள்பார்வை (Revision) செய்ய உதவும்.

Followers