Skip to main content

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 25.03.2026

 Zeal study official school morning prayer activities

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 25.03.2026

வில்லியம் கோல்கேட்



திருக்குறள்:

குறள் 842:

அறிவிலான் நெஞ்சுவந் தீதல் பிறிதியாதும்
இல்லை பெறுவான் தவம். 

விளக்க உரை:

அறிவில்லாதவவன் மனம் மகிழ்ந்து ஒரு பொருளைக் கொடுத்தலுக்கு காரணம், வேறொன்றும் இல்லை, அப் பொருளைப் பெறுகின்றவனுடைய நல்வினையே ஆகும்.

பழமொழி :
Grasp all lose all.

பேராசை பெரு நஷ்டம்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1.போட்டி நிறைந்த உலகில் போராடத் தேவையான வல்லமையை வளர்த்துக் கொள்வேன்.

2.என் திறமைகளை வளர்த்துக் கொண்டு சாதனைகள் புரிவேன்.

பொன்மொழி :

முடியும் என்று நம்பினால் வாய்ப்புகளை காண்பீர்கள்.

முடியாது என்று நினைத்தால்  தடைகளே கண்களுக்கு தெரியும்.

பொது அறிவு :

01.தமிழில் அச்சிடப்பட்ட முதல் நூல் எது?

தம்பிரான் வணக்கம் -

Thambiran Vanakkam

02.உலகின் இரண்டாவது பெரிய நீதிமன்ற வளாகம் எங்குள்ளது?

இந்தியா- சென்னை உயர் நீதிமன்ற வளாகம்

India- Chennai high court complex

English words :

Canvassing – Asking people for votes

Rally – Public meeting to support a candidate

தமிழ் இலக்கணம்:

கற்போம் தமிழ்

நேற்று காற்று வீசும் திசையின் அடிப்படையில் காற்றின் பெயர்கள் பார்த்தோம். இன்று வேக அடிப்படையில் அதன் பெயர்கள் பார்ப்போம்

0 - 6 கிமீ வேகம் மென்காற்று

6 - 11 கிமீ வேகம்

இளந் தென்றல்

11 - 19 தென்றல்

20 - 29 கிமீ வேகம்

புழுதிக் காற்று

30 - 39 கிமீ வேகம்

ஆடிக் காற்று

40 - 100 கிமீ வேகம்

கடும் காற்று

101 கிமீ மேல் புயல் காற்று

அறிவியல் களஞ்சியம் :

கரப்பான் பூச்சி தலை துண்டிக்கப்பட்டாலும் ஒரு வாரம் வரை உயிர்வாழும்.

மார்ச் 25

வில்லியம் கோல்கேட் அவர்களின் நினைவுநாள்

வில்லியம் கோல்கேட் (William Damian "Will" Colgate: ஜனவரி 25, 1783 – மார்ச்சு 25, 1857) இங்கிலாந்து நாட்டினைச் சேர்ந்த தொழிலதிபர்; அமெரிக்காவைச் சேர்ந்த கோல்கேட் என்ற (தற்போது இது புராக்டர் அன்ட் கேம்பல்) பற்பசைத் தயாரிப்பு நிறுவனத்தை 1806-ல் தொடங்கியவர்.
நீதிக்கதை

இரண்டு நண்பர்கள்

ராமுவும் மாரியும் நண்பர்கள். அவர்கள் இருவருக்கும், தாய், தந்தையர் மற்றும் சுற்றார் கிடையாது. இது போதாதென்று ராமுவுக்குக் கண் தெரியாது. அதேபோல் மாரியால் நடக்க முடியாது. அவர்கள் வாழ்ந்த கிராமத்தில் கிடைத்த வேலையைச் செய்து, கிராமத்தில் உள்ளோர் கொடுப்பதைச் சாப்பிட்டு வாழ்ந்து வந்தனர்.

ஒரு நாள் அவர்களுக்குச் சிறிது தொலைவில் உள்ள மற்றொரு ஊரில் நடக்கும் திருவிழா பற்றித் தெரிய வந்தது. இருவருக்கும் அங்கே போக மிகுந்த ஆசை. அந்த ஊருக்குச் செல்ல மிகுந்த தொலைவு நடக்க வேண்டும். மாரி சலிப்புடன் சொன்னான்” “என்னாலோ நடக்க முடியாது, உன்னாலோ பார்க்க முடியாது. இந்த லட்சணத்தில் நமக்கு ஏன் இந்த ஆசை?”

ராமு சிறிது நேரம் தீவிரமாக யோசித்து விட்டுச் சொன்னான்: “நண்பா! யோசித்துப் பார். உன்னால் நடக்கத்தான் முடியாது. ஆனால் கூர்மையாகப் பார்க்க முடியும். என்னால் பார்க்கத்தான் முடியாது. ஆனால் வெகுதூரம் நடக்க முடியும். நீ என் தோள் மேல் ஏறிக் கொள். எனக்கு வழியைச் சொல்லிக் கொண்டே வா. நாம் இருவரும் திருவிழாவிற்குச் சென்று வர முடியும்”

ராமுவும் மாரியும் திருவிழாவிற்குச் சென்று வந்தார்கள்!!

1. நம் பலங்கள் எவை என்பதை எப்பொழுதும் உணர்ந்திருப்பது அவசியம். அவற்றைத் தகுந்த சமயத்தில் உபயோகிக்கத் தெரிய வேண்டியதும் அவசியம்.

2. ஏன் நம்மால் ஒரு காரியத்தை சாதிக்க முடியாது என்று யோசிப்பதை விட, எப்படி சாதிக்க முடியும் என்று யோசிப்பது அதிகப் பயன் தரும்.

3. அடுத்தவர் பலங்கள் நமக்குப் பயன் தர வேண்டுமானால், அவர்களுக்குத் தேவையான நமது பலங்களின் பயன்களை அவர்களுக்கு அளித்து உதவத் தயங்கக்கூடாது.

4. முயன்றால் முடியாதது எதுவுமில்லை.

இன்றைய செய்திகள்

25.03.2026

⭐கோடை விடுமுறையில் பள்ளி குழந்தைகள் ஜப்பானிய மொழியை கற்பதற்கு வாய்ப்பு: இந்திய - ஜப்பான் தொழில் வர்த்தக சபை ஏற்பாடு

⭐ இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை சமாளிக்க, தற்போது வீடுகளுக்கு வழங்கப்படும் 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டரின் அளவை 10 கிலோவாக குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் பரிந்துரைத்துள்ளன.

⭐ஈரான் மீதான போர் 5நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) ரீயூனியன் விழா  கோலாகலமாக நடை பெற்றது. மைதானத்தில் ஏராளமான சென்னை ரசிகர்கள் உற்சாகத்துடன் நிகழ்ச்சியைக் கண்டுகளித்தனர்.

Today's Headlines

⭐ School children get an opportunity to learn Japanese during the summer holidays: Organized by the Indo-Japan Chamber of Commerce.

⭐ To address the cooking gas shortage in India, oil companies have suggested reducing the size of domestic LPG cylinders from 14.2 kg to 10 kg.

⭐ U.S. President Donald Trump has announced a 5-day pause in the war against Iran.

*SPORTS NEWS*

🏀 The Chennai Super Kings (CSK) reunion event was held grandly at the Chepauk Stadium in Chennai. A large number of CSK fans enthusiastically attended and enjoyed the celebration.

Covai women ICT_போதிமரம்

Comments

Post a Comment

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

Zeal study TNTET 2026: குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - மாதிரி தேர்வு -1

TNTET 2026 உளவியல் மாதிரித் தேர்வு Zeal study TET 2026: குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - 1 மீண்டும் தேர்வு எழுதவும்

TNTET 2026: தமிழ் முழுமையான மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) online full test - 1

TNTET 2025 - தமிழ் முழு மாதிரித் தேர்வு - Zeal Study TNTET 2025: தமிழ் மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) இயல் 3: அறிவியல் ஆத்திச்சூடி | எந்திர மனிதன் | ஒளி பிறந்தது | இலக்கணம் 1. புதிய ஆத்திச்சூடி எழுதியவர் யார்? ஔவையார் பாரதியார் கவிமணி நெல்லை சு. முத்து விடை விடை: B. பாரதியார் 2. 'தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்' என அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப்பெற்றவர்? விக்ரம் சாராபாய் மயில்சாமி அண்ணாதுரை நெல்லை சு. முத்து சிவன் விடை விடை: C. நெல்லை சு. முத்து 3. 'ஔடதம்' என்பதன் பொருள் யாது? உணவு நீர் காற்று மருந்து விடை விடை: D. மருந்து 4. 'இயன்றவரை' என்ற சொல்லின் பொருள்? ...

Zeal study TET / TRB Psychology உளவியல் (அறிவுப்புல வளர்ச்சி) online test

TET 2025 - உளவியல் அலகு 3 ஆன்லைன் தேர்வு - Zeal Study உளவியல் அலகு 3: அறிவுப்புல வளர்ச்சி TET / TRB / TNPSC - முக்கிய வினாக்கள் (15 Questions) 1. கவனித்தலின் முதல் அடிப்படை நிலை எது? புலன் காட்சியறிதல் சிந்தித்தல் கற்பனை செய்தல் விடையைக் காட்டு விடை: புலன் காட்சியறிதல். 2. கவனித்தலை தீர்மானிக்கும் அகக்காரணி எது? நாட்டங்கள் புதுமை அளவு விடையைக் காட்டு விடை: நாட்டங்கள். 3. கவன வீச்சை அளவிடப் பயன்படும் கருவி எது? டச்சிடாஸ்கோப் எர்கோகிராப் ஆடியோமீட்டர் விடையைக் காட்டு விடை: டச்சிடாஸ்கோப் (Tachistoscope). ...

TNTET 2026: தமிழ் - பகுதி 1 முக்கியக் குறிப்புகள் (Study Materials) - இன்பத்தமிழ், தமிழ்க்கும்மி மற்றும் வளர்தமிழ்

  TNTET 2026: தமிழ் - பகுதி 1 முக்கியக் குறிப்புகள் (Study Materials) இந்தக் குறிப்புகள் இன்பத்தமிழ் , தமிழ்க்கும்மி மற்றும் வளர்தமிழ் ஆகிய பாடங்களை எளிதாக மீள்பார்வை (Revision) செய்ய உதவும்.

Zeal study TNTET 2026: தமிழ் மாதிரித் தேர்வு - 3 இயல் 1 - 3 (50 வினாக்கள்) online test

TNTET 2026 Tamil Quiz - Model Test 3 TNTET 2026: தமிழ் மாதிரித் தேர்வு - 3 இயல் 1 - 3 (50 வினாக்கள்) [Zeal study ] விடைகளைச் சரிபார்க்கவும்

Followers