Skip to main content

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 16.03.2026

 Zeal study official school morning prayer activities

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 16.03.2026



அழ. வள்ளியப்பா








திருக்குறள்:

குறள் 815:

செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று.

விளக்க உரை:

காவல் செய்து வைத்தாலும் காவல் ஆகாத கீழ்மக்களின் தீய நட்பு, ஒருவனுக்கு ஏற்படுவதை விட ஏற்படாமலிருப்பதே நன்மையாகும்.

பழமொழி :
Accept if the counsel is good, no matter who gave it.

அறிவுரை நல்லதாய் இருப்பின் யார் கூறினாலும் கேள்

இரண்டொழுக்க பண்புகள் :.

1. எனது நோட்டில் உள்ள காகிதத்தை கிழிக்க மாட்டேன்.

2 காகிதம் கிழிப்பதால் எனது இருப்பிடம் அசுத்தம் ஆவது மட்டும் அல்லாமல் மரங்களை அழிக்கவும் அது மறைமுகமாக ஏதுவாகி விடும்.

பொன்மொழி :

ஒரு லட்சியத்தை மேற்கொள்ளுங்கள். அதை அடைவதற்காக விடாமுயற்சியுடன் முன்னேறுங்கள் - டாக்டர் அம்பேத்கர்

பொது அறிவு :

01.அரசியல் தத்துவத்தின் தந்தை (Father of Political Philosophy) என்று அழைக்கப்படுபவர் யார்?

கிரேக்க தத்துவஞானி
பிளேட்டோ- Plato

02. 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் எப்போது நடைபெற உள்ளது?

ஏப்ரல் 23,2026
English words :

Brittle - breakable;உடையக்கூடிய
Baffle - Astound;குழப்பம்
தமிழ் இலக்கணம்:

கேளிர், கேளீர்

இரண்டு சொற்களும் ஒரே பொருளைத் தருமா இல்லாவிட்டால் வேறு வேறு பொருளைத் தருமா? வாருங்கள் பார்ப்போம்

இரண்டும் வேறு வேறு சொற்கள் தான்.

கேளிர் என்பது உறவினரைக் குறிக்கும்.

எ. கா - யாதும் ஊரே யாவரும் கேளிர்

கேளீர் என்பது கேளுங்கள் என்பதைக் குறிக்கும்.

எ. கா - நான் சொல்வதைக் கேளீர்

அறிவியல் களஞ்சியம் :

நமது சூரிய குடும்பத்தில் உள்ள நட்சத்திரங்களை விட பூமியில் உள்ள மரங்களின் எண்ணிக்கை அதிகம்.

மார்ச் 16

அழ. வள்ளியப்பா அவர்களின் நினைவு நாள்

அழ. வள்ளியப்பா (நவம்பர் 7, 1922- மார்ச் 16, 1989) குழந்தை இலக்கியங்கள் படைத்த மிக முக்கியமான கவிஞர். 2,000 க்கும் மேலான குழந்தைகளுக்கான பாடல்கள் எழுதியுள்ளார். குழந்தை எழுத்தாளர்கள் பலரைத் திரட்டி 1950 -ல் குழந்தை எழுத்தாளர்கள் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினார். சக்தி வை.கோவிந்தன் இச்சங்கத்தின் முதல் தலைவராக இருந்தார். அவரைத் தொடர்ந்து வள்ளியப்பா இந்த அமைப்பின் காரியதரிசியாகவும், தலைவராகவும், வழிகாட்டியாகவும் பல பொறுப்புகளை ஏற்றுச் செயல்பட்டார். காரைக்குடி குழந்தை எழுத்தாளர் சங்கத் தலைவராகப் பொறுப்புவகித்தார்.

அழ. வள்ளியப்பா 11 பாடல் தொகுதிகள், 12 புதினங்கள், 9 கட்டுரை நூல்கள், 1 நாடகம், 1 ஆய்வு நூல், 2 மொழிபெயர்ப்பு நூல்கள், 1 தொகுப்பு நூல் ஆகியவற்றை வெளியிட்டுள்ளார். இவற்றில், 2 நூல்கள் இந்திய நடுவண் அரசின் பரிசும், 6 நூல்கள் தமிழக அரசின் பரிசும் பெற்றன.
நீதிக்கதை

கைமேல் பலன் கிடைத்தது

அரசன் ஒருவன் சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவனாக இருந்தான். அரண்மணை ஜோதிடர் இந்த நம்பிக்கை மேல் குளிர்க்காய்ந்து கொண்டிருந்தார். ஒரு நாள் ஜோதிடர் அரசே, அதிகாலை எழுந்தவுடன் இரண்டு காக்கைகளை ஒன்றாகப் பார்த்தால் நாள் சிறக்கும் என்றார். மன்னன் சேவகனை அழைத்து காலையில் எங்கேயாவது இரண்டு காக்கைகள் தென்பட்டால் சொல் என்று கட்டளையிட்டான். சேவகன் தினமும் பொழுது விடியும் முன்பே தெருவிற்கு சென்றுவிடுவான்.

ஒரு நாள் அரண்மனைக்குப் பக்கத்துத் தெருவில் இரண்டு காக்கைகள் ஒன்றாக அமர்ந்திருப்பதைக் கண்டான். அடடா! நல்ல சகுனம், இன்று மன்னர் நமக்கு நிச்சயம் பதவி உயர்வு கொடுப்பார் என்று மகிழ்ச்சியுடன் மன்னரிடம் சென்று விபரம் சொன்னான். இதைக் கேட்ட மன்னன் சேவகனுடன் அந்த இடத்திற்கு சென்றான். அதற்குள் ஒரு காக்கை போய்விட்டது. மன்னனுக்கு மூக்கின் மேல் கோபம் வந்து விட்டது. தளபதியை அழைத்து இந்தப் பொறுப்பற்ற சேவகனுக்குப் பத்து கசையடி கொடு என்று உத்தரவிட்டான்.

சேவகன் சிரிக்க ஆரம்பித்தான். மன்னனுக்கு கோபம் அதிகமானது. ஏன் சிரிக்கிறாய் என்று சொல்லாவிட்டால் இன்னமும் பத்து கசையடி என்று உறுமினான். சேவகன் சொன்னான். மகா மன்னரே! இன்று நான் மட்டும்தான் அதிகாலையில் இரட்டைக் காக்கைகளைப் பார்த்தேன். கை மேல் பலன் கிடைத்து விட்டது அல்லவா? என்றான். மன்னருக்கு அப்போதுதான் சகுனம் பார்ப்பது தவறு என்று உரைத்தது.

இன்றைய செய்திகள்

16.03.2026

⭐தமிழகத்திற்கு ஒரேகட்டமாக ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு

⭐ மாணவர்கள், கப்பல் மாலுமிகள், தொழில் வல்லுநர்கள், வணிகர்கள் என சுமார் 9,000 இந்தியர்கள் தற்போது ஈரானில் பாதுகாப்பாக இருப்பதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

⭐ மேகாலயாவின் கரோ ஹில்ஸ் மாவட்டத்தில் பழங்குடிகள் மற்றும் இதர பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலால் மேகாலயாவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

⭐ ஈரானின் தொடர் தாக்குதல்களால் அமெரிக்காவின் நட்பு நாடுகளாக உள்ள அரபு நாடுகள் பாதிக்கப்பட்டு உள்ளன.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀ஓய்வு முடிவை அறிவித்தார் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சர்பராஸ் அகமது. இவர் பாகிஸ்தான் அணிக்காக 54 டெஸ்ட், 117 ஒருநாள் மற்றும் 61 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

Today's Headlines

⭐ Voting for Tamil Nadu will be held in a single phase on  April 23

⭐ India’s Ministry of External Affairs has confirmed that about 9,000 Indians, including students, ship sailors, professionals, and businesspeople, are currently safe in Iran

⭐ Tension has arisen in Meghalaya after clashes between tribal groups and other communities in the Garo Hills district

⭐ Due to continuous attacks by Iran, several Arab countries that are allies of the United States have been affected.

SPORTS NEWS

🏀 Former Pakistan captain Sarfraz Ahmed has announced his retirement
He played 54 Test matches, 117 One-Day Internationals, and 61 T-20 matches for the Pakistan national cricket team.

Covai women ICT_போதிமரம்

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

TNTET 2026: தமிழ் முழுமையான மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) online full test - 1

TNTET 2025 - தமிழ் முழு மாதிரித் தேர்வு - Zeal Study TNTET 2025: தமிழ் மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) இயல் 3: அறிவியல் ஆத்திச்சூடி | எந்திர மனிதன் | ஒளி பிறந்தது | இலக்கணம் 1. புதிய ஆத்திச்சூடி எழுதியவர் யார்? ஔவையார் பாரதியார் கவிமணி நெல்லை சு. முத்து விடை விடை: B. பாரதியார் 2. 'தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்' என அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப்பெற்றவர்? விக்ரம் சாராபாய் மயில்சாமி அண்ணாதுரை நெல்லை சு. முத்து சிவன் விடை விடை: C. நெல்லை சு. முத்து 3. 'ஔடதம்' என்பதன் பொருள் யாது? உணவு நீர் காற்று மருந்து விடை விடை: D. மருந்து 4. 'இயன்றவரை' என்ற சொல்லின் பொருள்? ...

Zeal study TNTET 2026: குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - மாதிரி தேர்வு -1

TNTET 2026 உளவியல் மாதிரித் தேர்வு Zeal study TET 2026: குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - 1 மீண்டும் தேர்வு எழுதவும்

Zeal study TET / TRB Psychology உளவியல் (அறிவுப்புல வளர்ச்சி) online test

TET 2025 - உளவியல் அலகு 3 ஆன்லைன் தேர்வு - Zeal Study உளவியல் அலகு 3: அறிவுப்புல வளர்ச்சி TET / TRB / TNPSC - முக்கிய வினாக்கள் (15 Questions) 1. கவனித்தலின் முதல் அடிப்படை நிலை எது? புலன் காட்சியறிதல் சிந்தித்தல் கற்பனை செய்தல் விடையைக் காட்டு விடை: புலன் காட்சியறிதல். 2. கவனித்தலை தீர்மானிக்கும் அகக்காரணி எது? நாட்டங்கள் புதுமை அளவு விடையைக் காட்டு விடை: நாட்டங்கள். 3. கவன வீச்சை அளவிடப் பயன்படும் கருவி எது? டச்சிடாஸ்கோப் எர்கோகிராப் ஆடியோமீட்டர் விடையைக் காட்டு விடை: டச்சிடாஸ்கோப் (Tachistoscope). ...

TNTET 2026: தமிழ் - பகுதி 1 முக்கியக் குறிப்புகள் (Study Materials) - இன்பத்தமிழ், தமிழ்க்கும்மி மற்றும் வளர்தமிழ்

  TNTET 2026: தமிழ் - பகுதி 1 முக்கியக் குறிப்புகள் (Study Materials) இந்தக் குறிப்புகள் இன்பத்தமிழ் , தமிழ்க்கும்மி மற்றும் வளர்தமிழ் ஆகிய பாடங்களை எளிதாக மீள்பார்வை (Revision) செய்ய உதவும்.

Zeal study LO Based Lesson plan For -6th Tamil - Term 3 பாதம்

நமது Zeal study  வழக்கம் போல் இந்த பருவத்திற்கான பாடக்குறிப்பை வாரந்தோறும் வழங்கும். அந்த வகையில் இந்த வார பாடக்குறிப்பை இந்த பதிவில் வழங்கியுள்ளோம். இது உங்களுக்கு உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தி உங்கள் கற்பித்தல் பணி பாதிக்காதவாறு உங்களின்

Followers