Skip to main content

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.03.2026

 Zeal study official school morning prayer activities

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.03.2026



 






திருக்குறள்:

குறள் 618:

பொறியின்மை யார்க்கும் பழியன் றறிவறிந்
தாள்வினை இன்மை பழி.
      
விளக்க உரை:

நன்மை விளைவிக்கும் ஊழ் இல்லாதிருத்தல் யார்க்கும் பழி அன்று, அறிய வேண்டியவற்றை அறிந்து முயற்சி செய்யாதிருத்தலே பழி.

பழமொழி :
A closed mouth catches no flies. 

நுணலும் தன் வாயால் கெடும்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1.   திட்டமிட்டு செயல் பட்டால் வெற்றி நிச்சயம்.

2.எனவே  ஒரு செயலை தொடங்கும் முன், எவ்வாறு செய்து முடிக்க போகிறோம் என்று திட்டமிட்டு செயல் பட வேண்டும்.

பொன்மொழி :

பேச்சினில் தீமை கலந்து விட்டால் மனதிலும் தீமை கலந்து விடும் - செனெகா

பொது அறிவு :

01.எந்த விலங்கின் பால் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்?

      நீர்யானை - Hippopotamus

02.உலகில் முட்டை உற்பத்தியில்  முதலிடத்தில் வகிக்கும் நாடு எது?

             சீனா -China

English words :

Ancestral-related to

Bifurcated-divided into two parts

தமிழ் இலக்கணம்:

று, டு ஆகிய எழுத்துக்கள் உடன் வேற்றுமை உருபு அல்லது மற்ற சொற்கள் சேர்ந்து வரும் போது இந்த எழுத்துகளுக்கு முன்னாடியும் வல்லினம் மிகுந்து வரும்

எ.கா

1.அடையாறில் போக்குவரத்து நெரிசல் அதிகம்.

தவறு

அடையாறு + இல் = அடையாற்றில்

அடையாறில் போக்குவரத்து நெரிசல் அதிகம்....சரி

2.கயிரைப் பிடித்து கரை ஏறினர். தவறு

கயிற்றைப் பிடித்து கரை ஏறினர்....சரி

நீதிக்கதை

சிட்டுக்குருவியின் பேராசை

இரண்டு தூக்கணாங்குருவிகள் ஒரு கூடு கட்டி, அதில் வசித்து வந்தன. ஒருநாள், இரை தேட அவை இரண்டும் வெளியே போயிருந்த சமயத்தில், ஒரு சிட்டுக்குருவி பறந்து வந்து தூக்கணாங்குருவியின் கூட்டுக்குள் நுழைந்துகொண்டது.

சிறிது நேரத்துக்கெல்லாம் ஒரு தூக்கணாங்குருவி பறந்து வந்தது. கூட்டுக்குள் தலையை நுழைத்தது. கூட்டுக்குள் சிட்டுக்குருவி இருப்பதைப் பார்த்துவிட்டு, “குருவி அக்கா. எங்கள் வீட்டில் நுழைந்து எனக்கு இடமில்லாமல் பண்ணிவிட்டாயே. தயவுசெய்து வெளியே போய்விடு” என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டது.

“போடி போ. உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள். இனிமேல் இது என் வீடு. நான் இதை விட்டுப் போகமாட்டேன்” என்று குருவி மறுத்து விட்டது.

தூக்கணாங்குருவி அங்கிருந்து வருத்தத்துடனும், யோசனையுடனும் பறந்து போனது. சிட்டுக்குருவி, கூட்டில் ஹாயாக உட்கார்ந்து “அப்படிப்போடு………..அப்படிப்போடு” என்று ஜாலியாகக் பாடிக் கொண்டிருந்தது.

திடீரென்று தூக்கணாங்குருவிகளின் கூட்டம் பறந்து வந்தது. ஒவ்வொன்றும் ஈரமண்னை அலகில் கொத்தி வந்து, கூட்டின் வாசலைக் கொஞ்சம் கொஞ்சமாக அடைத்து பூசின. கூட்டின் வாசல் குறுகிக் கொண்டே போனது.

முதலில் சிட்டுக்குருவியின் கழுத்து, அப்புறம் தலைமட்டும், கடைசியாக அலகு என்று தெரிந்துகொண்டே வந்து, கடைசியில் ஒன்றுமே தெரியவில்லை. தூக்கணாங்குருவிகள், சிட்டுக்குருவியை கூட்டுக்குள் வைத்து ஒரேயடியாக அடைத்துப் பூசிவிட்டுப் பறந்து போயின.

அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டால் இதுதான் கதி என்று தாமதமாக உணர்ந்த சிட்டுக்குருவி, அந்தக் கூட்டுக்குள்ளேயே மூச்சடைத்து இறந்து போனது.

இன்றைய செய்திகள்

12.03.2026

⭐ தமிழகத்தில் நாளை முதல் வெப்பநிலை அதிகரிக்கும்- வானிலை ஆய்வு மையம் தகவல்

⭐பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கான 5 புதிய ரெயில் சேவைகளை தொடங்கி வைத்தார்.

⭐ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறந்து, எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தை பாதுகாப்பதற்காக பிரான்ஸ் தலைமையில் ஒரு பிரம்மாண்டமான கடற்படையை
உருவாக்க உலக நாடுகள் முன் வந்துள்ளன.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀ICC Rankings /
முதல் இரண்டு
இடங்களை பிடித்து அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் சாதனை

🏀ஐ.பி.எல். தொடர் வருகிற 28-ந் தேதி முதல் மே 31-ந் தேதி வரை நடைபெறுகிறது.

Today's Headlines

⭐ The Meteorological Department has informed that the temperature will increase in Tamil Nadu from tomorrow.

⭐ PM Narendra Modi has inaugurated 5 new train services for Tamilnadu.

⭐ Countries around the world have come forward to form a massive naval force under the leadership of France to reopen the Strait of Hormuz and ensure the safety of oil and gas supplies.

*SPORTS NEWS*

🏀 In the International Cricket Council (ICC) rankings Abhishek Sharma and Ishan Kishan have achieved the milestone of securing the top two positions.

🏀 The Indian Premier League (IPL)will be held from March 28 to May 31.

Covai women ICT_போதிமரம்

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

TNTET 2026: தமிழ் முழுமையான மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) online full test - 1

TNTET 2025 - தமிழ் முழு மாதிரித் தேர்வு - Zeal Study TNTET 2025: தமிழ் மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) இயல் 3: அறிவியல் ஆத்திச்சூடி | எந்திர மனிதன் | ஒளி பிறந்தது | இலக்கணம் 1. புதிய ஆத்திச்சூடி எழுதியவர் யார்? ஔவையார் பாரதியார் கவிமணி நெல்லை சு. முத்து விடை விடை: B. பாரதியார் 2. 'தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்' என அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப்பெற்றவர்? விக்ரம் சாராபாய் மயில்சாமி அண்ணாதுரை நெல்லை சு. முத்து சிவன் விடை விடை: C. நெல்லை சு. முத்து 3. 'ஔடதம்' என்பதன் பொருள் யாது? உணவு நீர் காற்று மருந்து விடை விடை: D. மருந்து 4. 'இயன்றவரை' என்ற சொல்லின் பொருள்? ...

Zeal study TNTET 2026: குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - மாதிரி தேர்வு -1

TNTET 2026 உளவியல் மாதிரித் தேர்வு Zeal study TET 2026: குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - 1 மீண்டும் தேர்வு எழுதவும்

Zeal study TET / TRB Psychology உளவியல் (அறிவுப்புல வளர்ச்சி) online test

TET 2025 - உளவியல் அலகு 3 ஆன்லைன் தேர்வு - Zeal Study உளவியல் அலகு 3: அறிவுப்புல வளர்ச்சி TET / TRB / TNPSC - முக்கிய வினாக்கள் (15 Questions) 1. கவனித்தலின் முதல் அடிப்படை நிலை எது? புலன் காட்சியறிதல் சிந்தித்தல் கற்பனை செய்தல் விடையைக் காட்டு விடை: புலன் காட்சியறிதல். 2. கவனித்தலை தீர்மானிக்கும் அகக்காரணி எது? நாட்டங்கள் புதுமை அளவு விடையைக் காட்டு விடை: நாட்டங்கள். 3. கவன வீச்சை அளவிடப் பயன்படும் கருவி எது? டச்சிடாஸ்கோப் எர்கோகிராப் ஆடியோமீட்டர் விடையைக் காட்டு விடை: டச்சிடாஸ்கோப் (Tachistoscope). ...

TNTET 2026: தமிழ் - பகுதி 1 முக்கியக் குறிப்புகள் (Study Materials) - இன்பத்தமிழ், தமிழ்க்கும்மி மற்றும் வளர்தமிழ்

  TNTET 2026: தமிழ் - பகுதி 1 முக்கியக் குறிப்புகள் (Study Materials) இந்தக் குறிப்புகள் இன்பத்தமிழ் , தமிழ்க்கும்மி மற்றும் வளர்தமிழ் ஆகிய பாடங்களை எளிதாக மீள்பார்வை (Revision) செய்ய உதவும்.

Zeal study LO Based Lesson plan For -6th Tamil - Term 3 பாதம்

நமது Zeal study  வழக்கம் போல் இந்த பருவத்திற்கான பாடக்குறிப்பை வாரந்தோறும் வழங்கும். அந்த வகையில் இந்த வார பாடக்குறிப்பை இந்த பதிவில் வழங்கியுள்ளோம். இது உங்களுக்கு உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தி உங்கள் கற்பித்தல் பணி பாதிக்காதவாறு உங்களின்

Followers