Zeal study official school morning prayer activities
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.03.2026
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதப்போகும் அனைத்து மாணாக்கர்களுக்கும் நல்வாழ்த்துகள்
திருக்குறள்:
குறள் 617:
மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளாள் தாமரையி னாள்.
விளக்க உரை:
ஒருவனுடைய சோம்பலில் கரிய மூதேவி வாழ்கின்றாள், சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியிலே திருமகள் வாழ்கின்றாள்.
பழமொழி :
Live and let live.
வாழு வாழ விடு.
இரண்டொழுக்க பண்புகள் :.
1. திட்டமிட்டு செயல் பட்டால் வெற்றி நிச்சயம்.
2.எனவே ஒரு செயலை தொடங்கும் முன், எவ்வாறு செய்து முடிக்க போகிறோம் என்று திட்டமிட்டு செயல் பட வேண்டும்.
பொன்மொழி :
எல்லோரையும் அன்புடன் அரவணைக்கும் ஒருவரால் எந்த நிலையையும் கடந்து முன்னேற முடியும் .
_____ அன்னை தெரசா
பொது அறிவு :
01.தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் யார்?
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
Dr. Muthulakshmi Reddy
02.இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
டாக்டர் விக்ரம் சாராபாய்
Dr.Vikram Sarabhai
English words :
Skippered -actors a captain of a boat or a ship
Exhausted-completely tired
அறிவியல் களஞ்சியம் :
புவியியல் துருவங்கள் (geographic poles) என்பவை பூமியின் சுழற்சி அச்சில் உறுதியாக நிலைத்திருப்பவை. ஆனால் காந்தத் துருவங்கள் அப்படியல்ல; அவை காலப்போக்கில் மெதுவாகவும், சில சமயங்களில் வேகமாகவும் இடம் மாறிக்கொண்டே இருக்கின்றன.
இந்த நகர்வு, வழிகாட்டல் (navigation), புவியியல் ஆய்வுகள் (geophysical surveys), அறிவியல் ஆராய்ச்சிகள் எனப் பல துறைகளில் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்துகிறது.
மார்ச் 11
சர் அலெக்ஸாண்டர் ஃபிளெமிங் அவர்களின் நினைவுநாள்
சர் அலெக்ஸாண்டர் ஃபிளெமிங் (Sir Alexander Fleming) (ஆகஸ்ட் 6, 1881 – மார்ச் 11, 1955) நுண்ணுயிர் கொல்லியான சிதைநொதியைக் கண்டுபிடித்தவர். மேலும், நுண்ணுயிர் கொல்லியான பெனிசிலினை பெனிசிலியம் நொடேடம் (Penicillium notatum) என்ற பூஞ்சையிலிருந்து பிரித்தெடுத்தார்.
உலகம் அறிந்துள்ள மருத்துவ முன்னேற்றங்களுள் பெனிசிலின் கண்டுபிடிப்பு தனிச்சிறப்பு வாய்ந்தது. பெனிசிலின் காலத்திற்கு முன் பிரசவத்தில் பெண்கள் இறப்பதும், பிறந்தபின் குழந்தைகள் இறப்பதும் சர்வ சாதாரணம். லேசான சிராய்ப்புகளும் கீறல்களும் கூட மரணத்திற்கு இட்டுச் சென்றன. ஒரு நுண்ணுயிரை வைத்து இன்னொன்றைக் கொல்லமுடிகிற பெனிஸிலின் போன்ற நச்சுமுறி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் பல நோய்களிலிருந்து மனிதர்களைக் காப்பாற்ற முடிந்தது. பெனிசிலினைக் கண்டு பிடித்து நவீன நச்சுமுறி மருந்துகள் யுகத்தைத் தொடங்கிவைத்த பெருமைக்குரிய விஞ்ஞானிதான் அலெக்ஸாண்டர் ஃப்பௌமிங். பெனிசிலின் உலகெங்கிலும் உள்ள 20 கோடி மக்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளது என்கிறது ஒரு மதிப்பீடு.
நீதிக்கதை
சிங்கமும் கழுதைப்புலியும்
சிங்கமும் கழுதைப்புலியும் பசுவைப் பிடித்து வைத்திருந்தன. ஒரு நாள் சிஙகம் பசுவைக் கொன்றது. கழுதைப்புலி தன் குட்டியை சிங்கத்திடம் அனுப்பி தன் பங்கைக் கேட்டது. கழுதைப்புலியின் பங்காக பசுவின் குடலை மட்டும் கொடுத்து அனுப்பியது சிங்கம்.
கழுதைப் புலியோ, “நீ ஏன் குடலைக் கொண்டு வந்தாய்? அரைவாசிப் பங்குதானே நமக்கு உரியது?” என்று கேட்டது.
குட்டி கழுதைப்புலி சொல்லியது: “நான் சின்னப்பயல். பெரியவர்கள் கொடுப்பதைத்தான் கொண்டு வர முடியும். நான் எப்படி சிங்கத்தோடு விவாதிக்க முடியும்”.
அதைக்கேட்டு கோபமான கழுதைப்புலி அந்தக் குடலோடு சிங்கத்தைப் பார்க்கப் போனது. சிங்கம் உணவை உண்டு குகைக்குள் ஒய்வெடுத்துக் கோண்டிருந்தது. கழுதைப்புலி வந்ததைக் கண்டு கண்களை அச்சமூட்டும் வகையில் வைத்திருந்தது. “ஏன் இங்கே வந்தாய்?” – கர்ஜித்தபடி சிங்கம் கேட்டது.
பசுவில் பாதி கேட்க வந்த கழுதைப்புலி தற்போது தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டு பேசியது: “ராஜ சிங்கமே! நீங்கள் குடல் அனுப்பியதற்கு மிக்க நன்றி, ஆனால் அதனை உங்களிடமே சேர்க்க முடிவு செய்து விட்டோம்”.
குடலை சிங்கத்திடம் கொடுத்து விட்டு திரும்பிய கழுதைப்புலியிடம் குட்டி கேட்டது: “பசுவில் பாதி கேட்கப்போன நீங்கள் குடலையும் கொடுத்து விட்டு வருகிறீர்களே?”.
“மகனே! சிங்கம் மிகக் கொடுரமாக இருந்தது. அதைக்கண்டு நடுங்கி விட்டேன். எனவே எனது பங்கையும் கொடுத்துவிட்டுப் பாராட்டி விட்டு வந்தேன். எல்லாம் நன்மைக்காக” என்றது தாய் கழுதைப்புலி.
நம்மை விட வலிமையானவர்களைக் கோபப்படுத்துவதை விட அவர்களை சாந்தப்படுத்துவதே பாதுகாப்பானது.
இன்றைய செய்திகள்
11.03.2026
⭐ மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்
⭐ இந்தியாவிற்கு 700 மில்லியன் கியூபிக் மீட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இதில் 85 சதவீதம் உணவு உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. மக்கள் தொகை அதிகரிப்பால் வருங்காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
⭐இந்தியா சுமார் 10 மில்லியன் டன் யூரியா மற்றும் 6.5 மில்லியன் டன் டி.ஏ.பி உரங்களை இறக்குமதி செய்து வருகிறது. இதில் 75% நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது
🏀 விளையாட்டுச் செய்திகள்
🏀 ஐபிஎல் போட்டி அட்டவணை நாளை வெளியீடு..!
ஐபிஎல் அட்டவணை இரண்டு கட்டங்களாக வெளியிடப்படுகிறது.முதல் 20 நாட்களுக்கான அட்டவணை வருகிற 12-ந்தேதி வெளியாக உள்ளது.
Today's Headlines
⭐ Approval from the Union Cabinet to upgrade Madurai Airport into an international airport..
⭐ India requires about 700 million cubic meters of water, out of this, 85% is used for food production ,due to the increasing population, there is a possibility of water shortage in the future.
⭐ India imports around 10 million tons of urea and 6.5 million tons of DAP (Di-Ammonium Phosphate) fertilizers, About 75% of these fertilizers are imported from other countries.
*SPORTS NEWS*
🏀 IPL match schedule to be released tomorrow. The IPL schedulewill be released in two phases and the schedule for the first 20 days will be announced initially.
Covai women ICT_போதிமரம்

Comments
Post a Comment