Skip to main content

Zeal study TNTET Science இயக்க விதிகள் - வினாடி வினா

Zeal study இயக்க விதிகள் - வினாடி வினா

அறிவியல்: இயக்க விதிகள் (Laws of Motion)

பயிற்சி வினாடி-வினா (15 வினாக்கள்)

1. இழுத்தல் அல்லது தள்ளுதல் என்பது எதனைப் பொருள் கொள்கிறது?
விடை: விசை
2. விசையின் செயல்பாட்டால் ஓய்வு நிலையிலுள்ள பொருள் மீது ஏற்படும் விளைவுகளைப் பற்றி அறிவது எது?
விடை: நிலையியல்
3. பொருட்கள் தனது ஓய்வு நிலையையோ அல்லது சீரான இயக்க நிலையையோ மாற்றிக் கொள்ள விருப்பமில்லாத பண்பு எது?
விடை: நிலைமம்
4. நிலைமம் எத்தனை வகைப்படும்?
விடை: 3 (ஓய்வில் நிலைமம், இயக்கத்தில் நிலைமம், திசையில் நிலைமம்)
5. நீளம் தாண்டுபவர் தாண்டுவதற்கு முன் சிறிது தூரம் ஓடுவதற்கான காரணம் என்ன?
விடை: இயக்கத்தில் நிலைமம்
6. உந்தத்தின் அலகு (SI அலகு) என்ன?
விடை: கிகி மீ/வி (kg m/s)
7. நியூட்டனின் முதல் விதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை: நிலைம விதி
8. விசையின் எண்மதிப்பை அளவிட உதவும் விதி எது?
விடை: நியூட்டனின் இரண்டாம் விதி (விசை விதி)
9. விசையின் அலகு (SI அலகு) என்ன?
விடை: நியூட்டன் (N)
10. 1 நியூட்டன் என்பது எத்தனை டைன் (dyne) க்கு சமம்?
விடை: 10⁵ டைன்
11. கணத்தாக்கு விசை (Impulse) என்பது எதைக் குறிக்கிறது?
விடை: மிகக் குறைந்த நேரத்தில் செயல்படும் மிகப்பெரிய விசை (J = F x t)
12. ஒவ்வொரு விசைக்கும் சமமான மற்றும் எதிர் விசை உண்டு என்று கூறுவது எது?
விடை: நியூட்டனின் மூன்றாம் விதி
13. ராக்கெட் ஏவுதலில் பயன்படும் விதி எது?
விடை: இவை இரண்டும் (நேர்க்கோட்டு உந்த அழிவின்மை விதி மற்றும் நியூட்டனின் மூன்றாம் விதி)
14. புவியீர்ப்பு முடுக்கத்தின் (g) சராசரி மதிப்பு என்ன?
விடை: 9.8 மீவி⁻²
15. ஒரு கிலோகிராம் நிறையுள்ள பொருளை 1 மீவி⁻² அளவிற்கு முடுக்குவிக்க தேவைப்படும் விசை?
விடை: 1 நியூட்டன்

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

Followers