Skip to main content

Zeal study TNTET Social study materials -தமிழ்நாட்டின் பெருங்கற்கால நினைவுச் சின்னங்கள், அகழாய்வு இடங்கள் மற்றும் அசோகர் காலத்துச் செய்திகள்"

தமிழகத்தின் தொல்லியல் ஆய்விடங்கள்
ஆதிச்சநல்லூர் (தூத்துக்குடி): இங்கு முதுமக்கள் தாழிகள், இரும்பாலான கத்திகள், ஈட்டிகள் மற்றும் தங்க ஆபரணங்கள் கண்டறியப்பட்டன.
கீழடி (சிவகங்கை): செங்கற்களால் கட்டப்பட்ட கட்டிடங்கள் மற்றும் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இது ஒரு நகர நாகரிகம்.
கொடுமணல் (ஈரோடு): பதிற்றுப்பத்தில் இடம்பெற்றுள்ள இவ்வூரில் சிவப்பு நிற மணிக்கற்கள் (Carnelian) கண்டறியப்பட்டன.
பையம்பள்ளி (வேலூர்): இங்கு இரும்பு உருக்கப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. இதன் காலம் கி.மு 1000 என கணிக்கப்பட்டுள்ளது.
. பெருங்கற்கால நினைவுச் சின்னங்கள்
முதுமக்கள் தாழிகள்: இறந்தவர்களைப் புதைக்கப் பயன்படுத்தப்பட்ட பெரிய மண்பானைகள்.
கற்திட்டைகள் (Dolmens): இறந்தவர்களைப் புதைத்த இடத்தில் இருபுறமும் கற்பலகைகள் நட்டு, அவற்றின் மேல் மற்றொரு கற்பலகையைப் படுக்கை வசத்தில் வைத்தல்.
நினைவுத் தூண்கள் (Menhirs): ஒரே கல்லிலான தூண்கள் இறந்தோரின் நினைவாகச் செங்குத்தாக நடப்படும்.
நடுகற்கள்: இறந்துபோன வீரனின் நினைவைப் போற்றும் வகையில் நடப்படும் கல்.
. அசோகர் மற்றும் மௌரியப் பேரரசு
தர்மச் சக்கரம்: சாரநாத் அசோகர் தூணில் உள்ள 24 ஆரக்கால்களைக் கொண்ட சக்கரம் இந்தியத் தேசியக் கொடியின் மையத்தில் உள்ளது.
கல்வெட்டு எழுத்துமுறை: சாஞ்சி - பிராமி; காந்தகார் - கிரேக்கம் மற்றும் அராமிக்; வடமேற்குப் பகுதி - கரோஸ்தி.
ஏற்றுமதி: நறுமணப் பொருட்கள், முத்துக்கள், வைரம் மற்றும் பருத்தித் துணிகள்.
தமிழகத்தின் பெருங்கற்காலம் / இரும்புக்காலம்
இறந்தவர்களைப் புதைத்த இடங்களைக் கற்பலகைகளைக் கொண்டு மூடியதால் இக்காலம் பெருங்கற்காலம் எனப்பட்டது. இப்பண்பாட்டின் காலம் கி.மு (பொ.ஆ.மு) 1000 என கணிக்கப்பட்டுள்ளது.
தொல்லியல் ஆய்விடங்கள்
ஆதிச்சநல்லூர்: தூத்துக்குடி மாவட்டம்.
கீழடி: சிவகங்கை மாவட்டம்.
பொருந்தல்: திண்டுக்கல் மாவட்டம்.
பையம்பள்ளி: வேலூர் மாவட்டம் (இங்கு இரும்பு உருக்கப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன).
கொடுமணல்: ஈரோடு மாவட்டம்.
நினைவுச் சின்னங்கள்
முதுமக்கள் தாழிகள்: இறந்தவர்களைப் புதைக்க பயன்படுத்தப்பட்ட பெரிய மண்பானைகள்.
கற்திட்டைகள்: இறந்தவர்களைப் புதைத்த இடத்தில் செங்குத்தாக நடப்பட்ட இரு கற்பலகைகளின் மீது மற்றொரு கற்பலகை படுக்கை வசத்தில் வைக்கப்படுவது.
நினைவு கற்கள்: ஒரே கல்லிலான தூண்கள் இறந்தோரின் நினைவாக செங்குதாக நடப்படும்.
நடுகற்கள்: இறந்துபோன வீரனின் நினைவைப் போற்றும் வகையில் நடப்படும் கல்.
2. அறிவுமலர்ச்சிக் காலம் (கி.மு. 6-ஆம் நூற்றாண்டு)

வரலாற்று அறிஞர் வில் டூராண்ட் இக்காலத்தை "நட்சத்திரங்களின் மழை" என்று வர்ணிக்கிறார்.
சமண மதம்
சமணம் 24 தீர்த்தங்கரர்களை மையமாகக் கொண்டது.
முதல் தீர்த்தங்கரர் - ரிஷபர்; கடைசி தீர்த்தங்கரர் - மகாவீரர்.
மகாவீரர்: இயற்பெயர் வர்த்தமானர். பீகாரின் குந்தகிராமத்தில் பிறந்தார். 12½ ஆண்டு தவத்திற்குப் பின் 'கைவல்ய' நிலையை அடைந்தார்.
திரிரத்தினங்கள்: நன்னம்பிக்கை, நல்லறிவு, நற்செயல்.
பிரிவுகள்: திகம்பரர், சுவேதாம்பரர்.
ஆகம சித்தாந்தம்: மகாவீரரின் போதனைகளைத் தொகுத்தவர் அவரது தலைமைச் சீடர் கௌதமசுவாமி.
பௌத்த மதம்
நிறுவியவர் கௌதம புத்தர் (இயற்பெயர்: சித்தார்த்தர்).
நேபாளத்தின் லும்பினி தோட்டத்தில் பிறந்தார்.
முதல் சொற்பொழிவு: வாரணாசி அருகில் உள்ள சாரநாத் (தர்ம சக்ர பிரவர்த்தனா).
பௌத்த மாநாடுகள்: 1. இராஜகிருகம், 2. வைசாலி, 3. பாடலிபுத்திரம், 4. காஷ்மீர்.
முக்கிய இடங்கள்: சைத்தியம் (கோவில்/தியானக்கூடம்), விகாரைகள் (துறவிகள் வாழ்விடங்கள்), ஸ்தூபி (புத்தர் உடல் எச்சங்கள் மீது கட்டப்பட்டவை).
3. மௌரியப் பேரரசு
இந்தியாவின் முதல் பெரிய பேரரசு இதுவாகும்.
முக்கிய அரசர்கள்
சந்திரகுப்த மௌரியர்: இப்பேரரசை மகதத்தில் நிறுவினார். இவர் சமணத் துறவி பத்ரபாகுவுடன் தென்னிந்தியா வந்து, 'சல்லேகனா' (உண்ணா நோன்பு) இருந்து உயிர் துறந்தார்.
பிந்துசாரர்: கிரேக்கர்கள் இவரை 'அமிர்தகா' (எதிரிகளை அழிப்பவன்) என அழைத்தனர்.
அசோகர்: 'தேவனாம்பிரியர்' என்று அழைக்கப்பட்டார். கி.மு. 261-இல் கலிங்கப் போர் வென்றார். பாடலிபுத்திரத்தில் 3-வது பௌத்த மாநாட்டை கூட்டினார்.
முக்கிய குறிப்புகள்
மெகஸ்தனிஸ்: கிரேக்க தூதுவர்; இவர் எழுதிய நூல் 'இண்டிகா'.
நாளந்தா: "வற்றாத அறிவை அளிப்பவர்" என்று பொருள். இது பிற்காலத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.
தேசிய சின்னம்: சாரநாத்திலுள்ள அசோகருடைய தூணின் சிங்க உருவங்கள் நமது தேசியச் சின்னமாக உள்ளது

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

6ஆம் வகுப்பு தமிழ் கற்றல் விளைவு அடிப்படையிலான பாடத்திட்டம் - இன்பத்தமிழ்

 Zeal study is an educational where you can find study materials, lesson plan, Individual class wise- unit wise- lesson wise Solutions, book back answer keys, Unit wise Fa (a) activities collections, FA(b)  question bank collections .

6ஆம் வகுப்பு சமூக அறிவியல் கற்றல் விளைவு அடிப்படையிலான பாடத்திட்டம் - வரலாறு என்றால் என்ன?

 Zeal study is an educational where you can find study materials, lesson plan, Individual class wise- unit wise- lesson wise Solutions, book back answer keys, Unit wise Fa (a) activities collections, FA(b)  question bank collections .

Followers