Skip to main content

Zeal study TNTET Social Science சமூக அறிவியல்: நிலக்கோளம் - புவி அகச்செயல்பாடுகள் online test

நிலக்கோளம் வினாடி வினா - Zeal Study

சமூக அறிவியல்: நிலக்கோளம் - புவி அகச்செயல்பாடுகள்

பயிற்சி வினாடி-வினா (15 வினாக்கள்)

1. புவியின் திடமான மேற்பரப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை: நிலக்கோளம் (Lithosphere)
2. புவியின் உள்ளமைப்பில் மிக மெல்லிய அடுக்கு எது?
விடை: புவி மேலோடு (Crust)
3. கண்ட மேலோட்டில் அதிக அளவில் காணப்படும் தாதுக்கள் யாவை?
விடை: சிலிக்கா மற்றும் அலுமினியம் (SIAL)
4. புவியின் மொத்தப் பருமனில் கவசம் (Mantle) எத்தனை சதவீதம் கொண்டுள்ளது?
விடை: 83%
5. புவியின் மையப்பகுதியான கருவத்தில் (Core) முதன்மையாக உள்ள தாதுக்கள்?
விடை: நிக்கல் மற்றும் இரும்பு (NIFE)
6. புவி மேலோட்டிற்கும் கவசத்திற்கும் இடையில் உள்ள எல்லை எது?
விடை: மோஹோரோவிசிக் எல்லை
7. உலகின் மிக உயரமான மலைத்தொடர்கள் உருவாகக் காரணமான செயல் எது?
விடை: கண்டத்தட்டுக்கள் நகர்வு
8. புவி அதிர்வு அலைகளைப் பதிவு செய்யும் கருவியின் பெயர் என்ன?
விடை: சீஸ்மோகிராப் (Seismograph)
9. புவி அதிர்வின் தீவிரத்தை அளக்கப் பயன்படும் அளவுக்கோல் எது?
விடை: ரிக்டர் அளவுக்கோல் (0 முதல் 9 வரை)
10. 'சுனாமி' (Tsunami) என்பது எந்த மொழிச் சொல்?
விடை: ஜப்பானிய மொழி (துறைமுக அலை எனப் பொருள்)
11. புவியின் உட்பகுதியிலிருந்து வெளியேறும் உருகிய பாறைக்குழம்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை: லாவா (புவிக்கு வெளியே வரும்போது லாவா எனப்படுகிறது)
12. பசிபிக் நெருப்பு வளையம் (Pacific Ring of Fire) எதனுடன் தொடர்புடையது?
விடை: எரிமலை மற்றும் நிலநடுக்கங்கள் (உலகின் 2/3 பங்கு எரிமலைகள் இங்கு உள்ளன)
13. எந்த எரிமலை 'மத்திய தரைக்கடலின் கலங்கரை விளக்கம்' என்று அழைக்கப்படுகிறது?
விடை: ஸ்ட்ராம்போலி (Stromboli)
14. இந்தியாவில் உள்ள ஒரே ஒரு செயல்படும் எரிமலை எங்குள்ளது?
விடை: அந்தமான் - பாரன் தீவு
15. நிலநடுக்கங்கள் உருவாகும் புள்ளி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை: நிலநடுக்க மையம் (Focus)

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -10.08.2026

 Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -10.08.2026

Followers