Skip to main content

Zeal study TNTET Science இயக்கம் online test

இயக்கம் வினாடி வினா - Zeal Study

அறிவியல்: இயக்கம் (Motion)

பயிற்சி வினாடி-வினா (15 வினாக்கள்)

1. ஒரு பொருளின் சுற்றுப்புறத்தைப் பொறுத்து அதன் நிலையில் ஏற்படும் மாற்றம்?
விடை: இயக்கம்
2. இயக்கம் மற்றும் ஓய்வு என்பது ஒரு ______ நிகழ்வு.
விடை: சார்பியல்
3. கடந்த பாதையின் மொத்த நீளம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை: தொலைவு
4. ஒரு குறிப்பிட்ட திசையில் பொருளின் நிலையில் ஏற்படும் மாற்றம்?
விடை: இடப்பெயர்ச்சி
5. தொலைவு மாறுபாட்டு வீதம் ______ எனப்படும்.
விடை: வேகம்
6. இடப்பெயர்ச்சி மாறுபாட்டு வீதம் ______ எனப்படும்.
விடை: திசைவேகம்
7. திசைவேகம் மாறுபடும் வீதம் ______ எனப்படும்.
விடை: முடுக்கம்
8. முடுக்கத்தின் SI அலகு என்ன?
விடை: மீ / வி^2 (m/s^2)
9. திசைவேகம் காலத்தைப் பொறுத்து குறையுமானால் அது ______ .
விடை: எதிர் முடுக்கம் (Retardation)
10. நேர்க்கோட்டில் செல்லும் ஒரு பொருளின் இயக்கம்?
விடை: நேரான இயக்கம்
11. வட்டப்பாதையில் செல்லும் ஒரு பொருளின் இயக்கம்?
விடை: வட்ட இயக்கம்
12. சீரான வட்ட இயக்கத்தில் எது மாறாமல் இருக்கும்?
விடை: வேகம் (திசை மாறுவதால் திசைவேகம் மாறும்)
13. தூரம் - காலம் வரைபடத்தில் நேர்க்கோடு எதனைக் குறிக்கிறது?
விடை: சீரான வேகம்
14. மையநோக்கு முடுக்கத்தின் திசை எதை நோக்கி இருக்கும்?
விடை: மையத்தை நோக்கி
15. ஒரு தடகள வீரர் வட்டப்பாதையில் ஓடும்போது எதனை மாற்றுகிறார்?
விடை: திசை (ஒவ்வொரு புள்ளியிலும் திசை மாறுகிறது)

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Followers