Skip to main content

Zeal study TNTET Science உயிரினங்களின் அமைப்பு நிலைகள் online test

உயிரினங்களின் அமைப்பு நிலைகள் Quiz

உயிரினங்களின் அமைப்பு நிலைகள் - 15 முக்கிய வினாக்கள்

1. இந்தியக் கால்நடை அட்டையின் (Indian Cattle Leech) விலங்கியல் பெயர் என்ன?

விடை: ஹிருடினேரியா கிரானுலோசா

2. அட்டையின் உடலில் காணப்படும் மொத்த கண்டங்களின் எண்ணிக்கை எத்தனை?

விடை: 33 கண்டங்கள் (சோமைட்டுகள்)

3. இரத்தத்தை உறிஞ்சும் அட்டையின் உமிழ்நீரில் உள்ள இரத்தம் உறைவதைத் தடுக்கும் பொருள் எது?

விடை: ஹிருடின் (Hirudin)

4. அட்டையில் கழிவு நீக்க மண்டலம் எதன் மூலம் நடைபெறுகிறது?

விடை: 17 இணை நெப்ரிடியாக்கள் மூலம் நடைபெறுகிறது.

5. முயலின் வெட்டும் பற்களுக்கும், முன் கடைவாய் பற்களுக்கும் இடையேயான இடைவெளிப்பகுதி எது?

விடை: டயாஸ்டீமா (Diastema)

6. பாலூட்டிகளின் உடலில் மார்பறையையும் வயிற்றறையையும் பிரிக்கும் தசை எது?

விடை: உதரவிதானம் (Diaphragm)

7. முயலின் இதயம் எதனால் சூழப்பட்டுள்ளது?

விடை: பெரிகார்டியம் (Pericardium)

8. முயலின் பல் வாய்ப்பாடு (Dental Formula) எது?

விடை: 2033 / 1023

9. அட்டையின் உடலின் முதல் ஐந்து கண்டங்களில் எத்தனை இணை கண்கள் உள்ளன?

விடை: ஐந்து இணை கண்கள்.

10. அட்டையின் உடலில் இனப்பெருக்க காலத்தில் கக்கூன் (Cocoon) உருவாகும் கண்டங்கள் எவை?

விடை: 9, 10 மற்றும் 11-வது கண்டங்கள்.

11. அட்டையின் உமிழ்நீரில் இருந்து பிரித்தெடுக்கப்படும் வேதிப்பொருட்கள் எதற்குப் பயன்படுகின்றன?

விடை: உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மருந்துகள் தயாரிக்கப் பயன்படுகின்றன.

12. முயலின் மூளையைச் சூழ்ந்துள்ள மூன்று சவ்வுகளில் இடைச்சவ்வு எது?

விடை: அரக்னாய்டு உறை (Arachnoid membrane)

13. முயலின் சிறுநீரகங்கள் எந்த வடிவம் கொண்டவை?

விடை: கருஞ்சிவப்பு நிற அவரை விதை வடிவம்.

14. அட்டை ஒரு சாங்கிவோரஸ் (Sanguivorous) உயிரி. இதன் பொருள் என்ன?

விடை: இரத்தத்தை உணவாக உறிஞ்சும் உயிரிகள்.

15. முயலின் நுரையீரல்களைச் சூழ்ந்துள்ள இரட்டைச் சவ்வினாலான உறையின் பெயர் என்ன?

விடை: ப்ளூரா (Pleura)

Comments

Post a Comment

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

Followers