Skip to main content

Zeal study TNTET Science அணுக்கரு இயற்பியல் online test

Zeal study TNTET Science அணுக்கரு இயற்பியல் வினாடி வினா

அறிவியல்: அணுக்கரு இயற்பியல்

பயிற்சி வினாடி-வினா (15 வினாக்கள்)

1. அணுவின் உட்கருவைக் கண்டறிந்தவர் யார்?
விடை: எர்னஸ்ட் ரூதர்போர்டு
2. மின்சுமையற்ற நியூட்ரான்களை 1932 இல் கண்டறிந்தவர் யார்?
விடை: ஜேம்ஸ் சாட்விக்
3. கதிரியக்கத்தின் பன்னாட்டு (SI) அலகு எது?
விடை: பெக்கரோல்
4. தன்னிச்சையான கதிரியக்கத்தை வெளியிடும் தனிமங்களின் அணு எண் பொதுவாக எதை விட அதிகம்?
விடை: 82
5. ஆல்பா சிதைவின் போது நிறை எண்ணில் ஏற்படும் மாற்றம் என்ன?
விடை: 4 குறையும்
6. ஒளியின் திசைவேகத்தில் செல்லக்கூடிய கதிர் எது?
விடை: காமா கதிர்
7. அணுகுண்டு செயல்படும் தத்துவம் எது?
விடை: கட்டுப்பாடற்ற தொடர்வினை
8. சூரியனில் நடைபெறும் ஆற்றல் உருவாக்கும் வினை எது?
விடை: அணுக்கரு இணைவு
9. பூமியின் வயது தோராயமாக எவ்வளவு?
விடை: 4.54 x 10^9 ஆண்டுகள்
10. புற்றுநோய் சிகிச்சையில் பயன்படும் கதிரியக்க ஐசோடோப்பு எது?
விடை: கோபால்ட்-60
11. அணுக்கரு உலையில் நியூட்ரான்களின் வேகத்தைக் குறைக்கப் பயன்படுவது எது?
விடை: தணிப்பான் (Moderator)
12. இந்தியாவில் முதன்முதலில் கட்டப்பட்ட அணுக்கரு உலை எது?
விடை: அப்சரா
13. கதிரியக்கப் பாதிப்பின் அளவினைக் கண்டறியும் சாதனம் எது?
விடை: டோசிமீட்டர்
14. ஆசியாவிலேயே முதன்முதலில் அணுக்கரு உலை எங்கு கட்டப்பட்டது?
விடை: இந்தியா
15. கதிரியக்க இடம்பெயர்வு விதியை முன்மொழிந்தவர்கள் யார்?
விடை: சாடி மற்றும் ஃபஜன்

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

Followers