Skip to main content

Zeal study TET / TRB Psychology உளவியல் மனநலம் மற்றும் மனநலவியல்) online test

TET 2025 - உளவியல் அலகு 9 ஆன்லைன் தேர்வு - Zeal Study

உளவியல் அலகு 9: மனநலம் மற்றும் மனநலவியல்

TET / TRB / TNPSC Preparation (15 Questions)

1. ஒருவன் தன்னைச் சூழவுள்ள உலகத்தோடு மிகச் சிறந்த முறையில் பொருத்தப்பாட்டுடன் விளங்குவது ________ எனப்படும்.
விடை: மனநலம்.
2. மனநலம் என்பது ஒருவனது ஆளுமையின் முழுமையான மற்றும் இசைவான செயல்பாடு எனக் கூறியவர்?
விடை: ஹேட்பீல்டு.
3. ஒரு செயலைச் செய்யவிடாமல் தடுக்கும்போது அல்லது செய்யாத நிலையில் உண்டாகும் மனநிலை எது?
விடை: மனமுறிவு.
4. மனக்கவலைகளைத் தவிர்க்கும் நோக்கில் தன்னையறியாது வெளிப்படும் மனச்செயல் எது?
விடை: தற்காப்பு நடத்தைகள்.
5. பள்ளி மாணவர்களிடம் பொதுவாகக் காணப்படும் நெறிபிறழ் நடத்தை எது?
விடை: திருட்டு.
6. மனநலம் இல்லாத மாணவரிடம் காணப்படும் பண்பு எது?
விடை: குறிக்கோளின்மை.
7. மாணவரிடமுள்ள இசைவின்மைப் பழக்கத்தை எச்செயல் மூலம் அறியலாம்?
விடை: நகம் கடித்தல், விரல் சூப்புதல் மற்றும் பொருள்களை உடைத்தல்.
8. நெறிபிறழ்வு (Delinquency) என்பது எதனுடைய தீவிர விளைவாகும்?
விடை: முரண்பட்ட மனவெழுச்சிப் போராட்டங்கள்.
9. மாணவரிடம் உணர்வுச் சமநிலையைத் தோற்றுவிக்கும் காரணி எது?
விடை: மகிழ்ச்சியான கற்றல் சூழல்.
10. வாழ்க்கைத் தேவைகள் மிகுந்து சிக்கல் நிறைந்ததாக மாறியதால் பாதிக்கப்படுவது எது?
விடை: மனநலம்.
11. சூழ்நிலையில் பொருத்தப்பாடும், மனவெழுச்சி முதிர்ச்சியும் பெற்று மனப்போராட்டங்களிலிருந்து விலகி வாழ்வோர் ________ ஆவார்.
விடை: மனநலமிக்கவர்.
12. மாணவரின் மனநலம் காக்கும் ஆசிரியரிடம் இருக்க வேண்டிய பண்பு எது?
விடை: மாணவரின் பிரச்சினையைத் தீர்க்கும் திறன் மற்றும் கற்றலை எளிமைப்படுத்தும் திறன்.
13. ஒரு குழந்தையின் மனநலம் பாதிக்கப்பட முக்கிய காரணமாக அமைவது எது?
விடை: மோசமான வீட்டுச் சூழல், ஏழ்மை மற்றும் சமூக அழுத்தங்கள்.
14. பிரச்சனை நடத்தைகளால் மாணவர்களுக்கு ஏற்படும் விளைவு என்ன?
விடை: நடத்தைக் கோளாறுகள், உடல்நலக் கோளாறுகள் மற்றும் மனநலம் பாதிப்பு.
15. மனநிறைவு என்பது எதனுடன் தொடர்புடையது?
விடை: மனநலம்.

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

6ஆம் வகுப்பு தமிழ் கற்றல் விளைவு அடிப்படையிலான பாடத்திட்டம் - இன்பத்தமிழ்

 Zeal study is an educational where you can find study materials, lesson plan, Individual class wise- unit wise- lesson wise Solutions, book back answer keys, Unit wise Fa (a) activities collections, FA(b)  question bank collections .

6ஆம் வகுப்பு சமூக அறிவியல் கற்றல் விளைவு அடிப்படையிலான பாடத்திட்டம் - வரலாறு என்றால் என்ன?

 Zeal study is an educational where you can find study materials, lesson plan, Individual class wise- unit wise- lesson wise Solutions, book back answer keys, Unit wise Fa (a) activities collections, FA(b)  question bank collections .

Followers