Skip to main content

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 06.02.2026

 Zeal study official school morning prayer activities

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 06.02.2026














திருக்குறள்:

குறள் 283:

களவினா லாகிய ஆக்கம் அளவிறந்
தாவது போலக் கெடும்.    

விளக்க உரை:

களவு செய்து பொருள் கொள்வதால் உண்டாகிய ஆக்கம் பெருகுவது போல் தோன்றி இயல்பாக இருக்க வேண்டிய அளவையும் கடந்து கெட்டு விடும்.

பழமொழி :
Work hard in silence ; let success make the noise.

அமைதியாக உழை; வெற்றி உன் பெயரை பேசட்டும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. பணத்தை விட அறிவே உயர்ந்தது

2. எனவே அறிவைப் பெருக்க அனைத்தும் படிப்போம்.

பொன்மொழி :

படித்த ஜாதி, படிக்காத ஜாதி என்றொரு ஜாதி உண்டாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

  - காமராஜர்

பொது அறிவு :

01.இந்திய சினிமா துறையில் வாழ்நாள் பங்களிப்பிற்காக இந்திய அரசால் வழங்கப்படும் மிக உயர்ந்த தேசிய விருது எது?

தாதாசாகேப் பால்கே விருது  Dadasaheb Phalke Award

02.நவீன "தமிழ் உரைநடையின் தந்தை" எனப் போற்றப்படுபவர்யார்?
ஆறுமுக நாவலர்
Arumuga Navalar
English words :

strangle-choke

cranky-easily irritable

தமிழ் இலக்கணம்:

சுடு தண்ணீர்
இது தவறு.
சுடு என்றால் சூடான
தண்ணீர் பிரித்தால் தன்மை+நீர் என்று வரும். தன்மை என்றால் குளிர்ந்த என்று பொருள்
இப்போ சுடு தண்ணீர் என்பதன் பொருள் சூடான குளிர்ந்த நீர் என்று ஆகி விடும். இது தவறு எனவே சுடு நீர் அல்லது வெந்நீர் என்றே சொல்ல வேண்டும்

அறிவியல் களஞ்சியம் :

பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, இப்பகுதி 'தெதிஸ் கடல்' என்று அழைக்கப்பட்ட கடலாக இருந்தது என்று ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது. இந்த பாலைவனத்தின் தற்போதைய மேற்பரப்பு, பண்டைய கடற்பரப்பின் ஒரு பகுதியாக இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

உள்ளூர்வாசிகள் இந்த பாலைவனத்தில் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகள் அல்லது ஏலியன்கள் இருப்பதாகக் கூறுகின்றனர்.

பிப்ரவரி 06

பெண் பிறப்புறுப்பு சிதைவுக்கான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை நாள் (FGM), ஆண்டுதோறும் பிப்ரவரி 6 அன்று அனுசரிக்கப்படுகிறது, இது முன்னேற்றத்தை முன்னிலைப்படுத்தவும் இந்த தீங்கு விளைவிக்கும் நடைமுறையை முடிவுக்குக் கொண்டுவர விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
நீதிக்கதை

சிங்கத்தின் வீரம்

ஒரு காட்டில் சிங்கம் ஒன்று இருந்தது. அந்த சிங்கத்தின் பிடரி ரோமங்களுக்கிடையே ஒரு ஈ வாழ்ந்து வந்தது. அந்த ஈ, நான் சிங்கத்தின் பிடரி ரோமங்களுக்கிடையே வாழ்ந்திருப்பதால்தான், சிங்கம் இவ்வளவு வீரமாக இருக்கிறது. நான் இருப்பதால்தான் சிங்கம் நன்றாக வேட்டையாடி பசி இல்லாமல் இருக்கிறது.

இந்த சிங்கத்தின் வாழ்விற்கே நான்தான் காரணம். நான் இல்லாவிட்டால், சிங்கத்தால் எதுவுமே செய்யமுடியாது என்று நினைத்துக் கொண்டிருந்தது. ஒரு நாள், தலை அரித்ததால் ஒரு சிறு மரத்தில் தலையை உரசிக்கொண்டது சிங்கம். ஈ இதை எதிர்பார்க்காததால், மரத்திற்கும் சிங்கத்தின் தலைக்குமிடையே சிக்கி சற்று அழுந்திவிட்டது. மிகவும் கோபம் வந்துவிட்டது ஈ க்கு. அது பறந்து சிங்கத்தின் முன்னால் வந்து கேட்டது.

ஏய்.... சிங்கமே! உனக்கு என்ன அறிவு கெட்டுப் போய்விட்டதா? ஏன் தலையை மரத்தில் உரசி, உன் பிடரியில் வசிக்கும் எனக்குத் தொந்தரவு செய்கிறாய்? இதோ, நான் உன்னைவிட்டு இப்போதே போகிறேன்! என்னை இழந்து நீ துன்பப்பட்டால்தான் உனக்கு என் அருமை புரியும். சிங்கத்திற்கு ஒன்றுமே புரியவில்லை. அது மீண்டும் மரத்தில் தலையை உரசியது. அப்போது, மரம் அசைந்து சருகுகள் உதிர்ந்தன.

இதைப் பார்த்துக் கத்தியது ஈ அட... முட்டாள் சிங்கமே, பார்! நான் உன்னைவிட்டுப் போகிறேன் என்று சொன்னவுடனே, காற்றடித்து சருகுகள் உன் மீது உதிர்கின்றன. இனி வரக்கூடிய துன்பங்களையெல்லாம் நன்றாக அனுபவி! இனிமேல் நான் உனக்கு உதவி செய்யமாட்டேன். பிறகு ஈ பறந்து சென்றது. இந்த ஈ இவ்வளவு காலம் என் பிடரியில் இருந்தது என்று இப்போதுதான் எனக்குத் தெரிகிறது என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டது சிங்கம். தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது என்று அகம்பாவம் கொள்பவர்கள் இந்த ஈக்களைப் போன்றவர்கள்தான். எத்தனையோ அறிஞர்களும், மகான்களும், பேராற்றல் மிக்கவர்களும் வந்து சென்ற இடம் இந்த உலகம். அந்த நினைவும், பணிவும் நமக்கு வேண்டும்.

இன்றைய செய்திகள்

06.02.2026

⭐ரூ.1,267 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

⭐தமிழகத்தில் வெப்பநிலை உயரக்கூடும்- வானிலை ஆய்வு மையம் தகவல்

⭐ இந்தியாவின் தலைநகர் டெல்லியில் 2026-ஆம் ஆண்டின் முதல் 15 நாட்களில் மட்டும் 807 பேர் காணாமல்போயி ருப்பதாக டெல்லி காவல்துறை வெளியிட்டுள்ளது.

⭐ இந்தியாவின் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO), "திட எரிபொருள் ராம்ஜெட்" என்ற மிக நீண்ட தூரம் சென்று வான் இலக்குகளைத் தாக்கும் ஏவுகணைத் தொழில்நுட்பத்தை செயல்படுத்துகிறது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 7-ந்தேதி தொடங்குகிறது.
நடப்பு சாம்பியனான இந்திய அணி மூன்றாவது முறை சாம்பியன் ஆக வாய்ப்பு உள்ளது.

🏀டிராபி. 2025-26 ரஞ்சி டிராபி தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.  காலிறுதி போட்டிகள் நாளை முதல் தொடங்க உள்ளது.

Today's Headlines

⭐Chief Minister M.K. Stalin laid the foundation stone for new projects worth Rs. 1,267 crore.

⭐ The Meteorological Department warned that temperatures may rise in Tamil Nadu.

⭐ Delhi Police has revealed that 807 people went missing in the first 15 days of 2026 alone in the Indian capital Delhi.

⭐The Defence Research and Development Organisation (DRDO) is implementing a "solid fuel ramjet" missile technology that can hit air targets from a very long distance.

SPORTS NEWS

🏀The 10th T20 World Cup begins on the 7th. The defending champions, India, have a chance to be the champions for the third time.

🏀Trophy. The 2025-26 Ranji Trophy is currently underway. The quarter-finals are set to begin tomorrow.

Covai women ICT_போதிமரம்

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

TNTET 2026: தமிழ் முழுமையான மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) online full test - 1

TNTET 2025 - தமிழ் முழு மாதிரித் தேர்வு - Zeal Study TNTET 2025: தமிழ் மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) இயல் 3: அறிவியல் ஆத்திச்சூடி | எந்திர மனிதன் | ஒளி பிறந்தது | இலக்கணம் 1. புதிய ஆத்திச்சூடி எழுதியவர் யார்? ஔவையார் பாரதியார் கவிமணி நெல்லை சு. முத்து விடை விடை: B. பாரதியார் 2. 'தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்' என அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப்பெற்றவர்? விக்ரம் சாராபாய் மயில்சாமி அண்ணாதுரை நெல்லை சு. முத்து சிவன் விடை விடை: C. நெல்லை சு. முத்து 3. 'ஔடதம்' என்பதன் பொருள் யாது? உணவு நீர் காற்று மருந்து விடை விடை: D. மருந்து 4. 'இயன்றவரை' என்ற சொல்லின் பொருள்? ...

Zeal study TNTET 2026: குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - மாதிரி தேர்வு -1

TNTET 2026 உளவியல் மாதிரித் தேர்வு Zeal study TET 2026: குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - 1 மீண்டும் தேர்வு எழுதவும்

Zeal study TET / TRB Psychology உளவியல் (அறிவுப்புல வளர்ச்சி) online test

TET 2025 - உளவியல் அலகு 3 ஆன்லைன் தேர்வு - Zeal Study உளவியல் அலகு 3: அறிவுப்புல வளர்ச்சி TET / TRB / TNPSC - முக்கிய வினாக்கள் (15 Questions) 1. கவனித்தலின் முதல் அடிப்படை நிலை எது? புலன் காட்சியறிதல் சிந்தித்தல் கற்பனை செய்தல் விடையைக் காட்டு விடை: புலன் காட்சியறிதல். 2. கவனித்தலை தீர்மானிக்கும் அகக்காரணி எது? நாட்டங்கள் புதுமை அளவு விடையைக் காட்டு விடை: நாட்டங்கள். 3. கவன வீச்சை அளவிடப் பயன்படும் கருவி எது? டச்சிடாஸ்கோப் எர்கோகிராப் ஆடியோமீட்டர் விடையைக் காட்டு விடை: டச்சிடாஸ்கோப் (Tachistoscope). ...

TNTET 2026: தமிழ் - பகுதி 1 முக்கியக் குறிப்புகள் (Study Materials) - இன்பத்தமிழ், தமிழ்க்கும்மி மற்றும் வளர்தமிழ்

  TNTET 2026: தமிழ் - பகுதி 1 முக்கியக் குறிப்புகள் (Study Materials) இந்தக் குறிப்புகள் இன்பத்தமிழ் , தமிழ்க்கும்மி மற்றும் வளர்தமிழ் ஆகிய பாடங்களை எளிதாக மீள்பார்வை (Revision) செய்ய உதவும்.

Zeal study LO Based Lesson plan For -6th Tamil - Term 3 பாதம்

நமது Zeal study  வழக்கம் போல் இந்த பருவத்திற்கான பாடக்குறிப்பை வாரந்தோறும் வழங்கும். அந்த வகையில் இந்த வார பாடக்குறிப்பை இந்த பதிவில் வழங்கியுள்ளோம். இது உங்களுக்கு உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தி உங்கள் கற்பித்தல் பணி பாதிக்காதவாறு உங்களின்

Followers