Skip to main content

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.02.2026

 Zeal study official school morning prayer activities

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.02.2026



கிறிஸ்டியானோ ரொனால்டோ

  






திருக்குறள்:

குறள் 417:

பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர்.       

விளக்க உரை:

நுட்பமாக உணர்ந்து நிறைந்த கேள்வியறிவை உடையவர், ( ஒரு கால் பொருள்களைத்) தவறாக உணர்ந்திருந்தாலும் பேதைமையானவற்றைச் சொல்லார்.

பழமொழி :
Effort is the key to success.

முயற்சியே வெற்றியின் சாவி.

இரண்டொழுக்க பண்புகள் :

1. பணத்தை விட அறிவே உயர்ந்தது

2. எனவே அறிவைப் பெருக்க அனைத்தும் படிப்போம்.

பொன்மொழி :

பிறரிடம் உள்ள நல்ல விஷசயங்களை கற்றுக் கொள்ள மறுப்பவன் இறந்தவனுக்கு சமம்.

       - விவேகானந்தர்.

பொது அறிவு :

01. எந்த நாட்டின் பாராளுமன்றம் அமைதிக்கான நோபல்  பரிசை தேர்வு செய்து பரிந்துரைக்கிறது?

நார்வே பாராளுமன்றம்

The Norwegian Parliament

02.பலூனில் முதல்முறையாக  உலகைச் சுற்றிப் பறந்த முதல் அமெரிக்கர் யார்?

ஸ்டீவ் ஃபோசெட் -Steve Fossett

English words :

haunting-sad and unforgettable

piblings-aunt and uncle

தமிழ் இலக்கணம்:

அது, இது, அஃது, இஃது
உயிர் மெய் எழுத்துக்கு முன் அது, இது வரும்
எ. கா. அது மாலாவின் புத்தகம்
இது பாரதியின் வீடு
ஆனால் உயிர் எழுத்துக்கு முன்னால் அஃது, இஃது தான் வரும்
அஃது
** ன்னுடைய வீடா?
இஃது
** வரின் கவிதை
அறிவியல் களஞ்சியம் :

இந்த பாலைவனம் நீண்ட காலமாக 'இருண்ட மண்டலம்' என வகைப்படுத்தப்பட்டுள்ளது. பல தசாப்தங்களாக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், இந்த நிகழ்விற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. அமெரிக்க ஆய்வுக்குப் பிறகு, மெக்சிகோ அரசு சிஹுவாஹுவா பாலைவனத்தில் ஒரு பெரிய ஆய்வகத்தை நிறுவியது. இது 'தி ஜோன்' என அறியப்படுகிறது.

பிப்ரவரி 05

கிறிஸ்டியானோ ரொனால்டோ அவர்களின் பிறந்தநாள்

கிறிஸ்டியானோ ரொனால்டோ டோசு சாண்டோசு அவேரோ (பிறப்பு: 5 பிப்ரவரி 1985 ) ஒரு போர்த்துகீசிய கால்பந்து வீரர் ஆவார். இவர் சவுதி புரோ லீக்கில் அல் நாசர் அணிக்காகவும், போர்ச்சுகல் தேசிய அணிக்காகவும் விளையாடுகிறார். ஒரு முன்கள வீரரான இவர் தான் விளையாடும் அணிகளின் தலைவராகவும் உள்ளார். ரொனால்டோ ஐந்து பாலோன் தி'ஓர் விருதுகளையும், மூன்று யுஇஎஃப்ஏ ஆண்டின் சிறந்த வீரர் விருதுகளையும், நான்கு ஐரோப்பிய தங்க காலணி விருதுகளையும் வென்றுள்ளார். இவர் ஏழு லீக் பட்டங்கள், ஐந்து யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு, யூஈஎஃப்ஏ ஐரோப்பிய கோப்பை மற்றும் யூஈஎஃப்ஏ பன்னாட்டு கூட்டிணைவு உட்பட 33 கோப்பைகளை வென்றுள்ளார்.
நீதிக்கதை

ஒரு ஊரில் ஒரு குட்டிப்பறவை இருந்தது. அது பல இடங்களுக்கும் உணவு தேடி பறந்தது. ஓரிடத்தில், ஒரே ஒரு புழு சுற்றிக்கொண்டிருந்தது. பறவை அதைக் கொத்த முயன்ற போது, புழு பறவையிடம், என்னை மட்டும் சாப்பிட்டு விட்டால், உன் பசி தீர்ந்து விடுமா? சற்று தூரத்தில் நாற்பது, ஐம்பது புழுக்கள் இருக்கின்றன. கொஞ்ச தூரம் பறந்து சென்றால் அவற்றையும் சேர்த்து சாப்பிடலாம், என்றது. இரக்கமில்லாத அந்தப் பறவை, எப்போதோ கிடைக்கப் போகும் நாற்பது, ஐம்பது புழுக்களுக்காக, உன்னையும் விட்டு விட்டால் என்னாகும்? இப்போது, உன்னைத் தின்று பசியாறிக் கொள்கிறேன். பிறகு என் வழியில் நான் செல்கிறேன், என்று சொல்லி, புழுவை விழுங்கி விட்டது.

கொஞ்ச தூரம் பறந்து சென்று ஓரிடத்தில் அமர்ந்தது. அது அமர்ந்த இடம் ஒரு வலை. அதில் இருந்து மீள முடியவில்லை. வேடன் அதை தூக்க வந்தான். பறவை அவனிடம், வேடனே! நான் சாதாரண குஞ்சுப்பறவை. என்னிடம் என்ன இறைச்சி இருக்கும்! என்னுடன் வா! என் இருப்பிடத்தில் பல கொழுத்த பறவைகள் உள்ளன. அவற்றைப் பிடித்துச் சென்றால், உனக்கு நிறைய இறைச்சி கிடைக்கும் என்று சொல்லி தப்பிக்கப் பார்த்தது. அட பறவையே! நாளை கிடைக்கப்போகும் பலாக்காய்க்காக, இன்று கிடைக்கும் கிளாக்காயை எவனாவது விடுவானா? ஹூம்... இன்றைய உணவையே நான் பார்க்கிறேன், நாளைக்குரியதை, அந்த நாராயணன் பார்த்துக் கொள்வான், என்றவன், பறவையின் கழுத்தை திருகி விட்டான்.

நீதி: நாம் பிறருக்கு துன்பம் விளைவிக்கும்போது  நமக்கும் இன்னல் வரும்.

இன்றைய செய்திகள்

05.02.2026

⭐'என் கனவு என் எதிர்காலம்' திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

⭐தமிழகத்தில் ஆதிதிராவிடர் முன்னேற்றத் திட்டத்தின் கீழ் 2025-26 நிதியாண்டில் ரூ.66.37 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் மேலும் 1,514 ஆதிதிராவிடர் பயனாளிகளுக்கு ரூ.14.35 கோடி சிறு வணிக கடன் வழங்கப்பட்டுள்ளது.

⭐மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை வாபஸ் பெறுவதாக உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀16-வது இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஜிம்பாப்வே மற்றும் நமிபியாவில் நடந்து வருகிறது.

Today's Headlines

⭐Chief Minister M.K. Stalin launched the project "My Dream My Future"

⭐In Tamil Nadu, Rs. 66.37 crore has been allocated under the Adi Dravidar Munnetra Kazhagam (ADMP) in the financial year 2025-26, and Rs. 14.35 crore of small business loans have been provided to 1,514 Adi Dravidar beneficiaries.

⭐Home Ministry of  India announced withdrawal of President's rule in Manipur.

*SPORTS NEWS*

🏀The 16th Under-19 Cricket World Cup is going on in Zimbabwe and Namibia.

Covai women ICT_போதிமரம்

Comments

Post a Comment

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

TNTET 2026: தமிழ் முழுமையான மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) online full test - 1

TNTET 2025 - தமிழ் முழு மாதிரித் தேர்வு - Zeal Study TNTET 2025: தமிழ் மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) இயல் 3: அறிவியல் ஆத்திச்சூடி | எந்திர மனிதன் | ஒளி பிறந்தது | இலக்கணம் 1. புதிய ஆத்திச்சூடி எழுதியவர் யார்? ஔவையார் பாரதியார் கவிமணி நெல்லை சு. முத்து விடை விடை: B. பாரதியார் 2. 'தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்' என அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப்பெற்றவர்? விக்ரம் சாராபாய் மயில்சாமி அண்ணாதுரை நெல்லை சு. முத்து சிவன் விடை விடை: C. நெல்லை சு. முத்து 3. 'ஔடதம்' என்பதன் பொருள் யாது? உணவு நீர் காற்று மருந்து விடை விடை: D. மருந்து 4. 'இயன்றவரை' என்ற சொல்லின் பொருள்? ...

Zeal study TNTET 2026: குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - மாதிரி தேர்வு -1

TNTET 2026 உளவியல் மாதிரித் தேர்வு Zeal study TET 2026: குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - 1 மீண்டும் தேர்வு எழுதவும்

Zeal study TET / TRB Psychology உளவியல் (அறிவுப்புல வளர்ச்சி) online test

TET 2025 - உளவியல் அலகு 3 ஆன்லைன் தேர்வு - Zeal Study உளவியல் அலகு 3: அறிவுப்புல வளர்ச்சி TET / TRB / TNPSC - முக்கிய வினாக்கள் (15 Questions) 1. கவனித்தலின் முதல் அடிப்படை நிலை எது? புலன் காட்சியறிதல் சிந்தித்தல் கற்பனை செய்தல் விடையைக் காட்டு விடை: புலன் காட்சியறிதல். 2. கவனித்தலை தீர்மானிக்கும் அகக்காரணி எது? நாட்டங்கள் புதுமை அளவு விடையைக் காட்டு விடை: நாட்டங்கள். 3. கவன வீச்சை அளவிடப் பயன்படும் கருவி எது? டச்சிடாஸ்கோப் எர்கோகிராப் ஆடியோமீட்டர் விடையைக் காட்டு விடை: டச்சிடாஸ்கோப் (Tachistoscope). ...

TNTET 2026: தமிழ் - பகுதி 1 முக்கியக் குறிப்புகள் (Study Materials) - இன்பத்தமிழ், தமிழ்க்கும்மி மற்றும் வளர்தமிழ்

  TNTET 2026: தமிழ் - பகுதி 1 முக்கியக் குறிப்புகள் (Study Materials) இந்தக் குறிப்புகள் இன்பத்தமிழ் , தமிழ்க்கும்மி மற்றும் வளர்தமிழ் ஆகிய பாடங்களை எளிதாக மீள்பார்வை (Revision) செய்ய உதவும்.

Zeal study LO Based Lesson plan For -6th Tamil - Term 3 பாதம்

நமது Zeal study  வழக்கம் போல் இந்த பருவத்திற்கான பாடக்குறிப்பை வாரந்தோறும் வழங்கும். அந்த வகையில் இந்த வார பாடக்குறிப்பை இந்த பதிவில் வழங்கியுள்ளோம். இது உங்களுக்கு உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தி உங்கள் கற்பித்தல் பணி பாதிக்காதவாறு உங்களின்

Followers