Skip to main content

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13 .02.2026

 Zeal study official school morning prayer activities

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13 .02.2026


திருக்குறள்:


குறள் 442:


உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்


விளக்க உரை:


வந்துள்ள துன்பத்தை நீக்கி, இனித் துன்பம் வராதபடி முன்னதாகவே காக்கவல்ல தன்மையுடையவரைப் போற்றி நட்புக் கொள்ள வேண்டும்.


பழமொழி :

Small steps build big journeys.

சிறிய படிகளே பெரிய பயணத்தை உருவாக்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :




1. உலகில் உயர்வானது அனைத்து உயிர்களிடமும் நாம் காட்டும் அன்பும் பரிவும் தான்.

2. எனவே அனைத்து உயிர்களிடமும் அன்பு காட்டுவோம்.

பொன்மொழி :

மோசமான தோல்வியை எதிர்கொள்ளும் தைரியம் உடையவர்களே வாழ்வில் மிகப் பெரிய வெற்றியைப் பெற முடியும் - கென்னடி

பொது அறிவு :

1. Which Indian city became a UNESCO Creative City of Gastronomy?

யுனெஸ்கோவின் கிரியேட்டிவ் சிட்டி ஆஃப் காஸ்ட்ரோனமியாக எந்த இந்திய நகரமாக மாறி உள்ளது?

Mumbai - மும்பை













2. Who controls monetary policy in India?

இந்தியாவில் பணவியல் கொள்கையை யார் கட்டுப்படுத்துகிறார்கள்?



Reserve Bank of India (RBI). - இந்திய ரிசர்வ் வங்கி (RBI).

English words :

Monetary - பணவியல்

Mechanics - இயக்கவியல்

தமிழ் இலக்கணம்:
இன்று சும்மா என்ற சொல்லை குறித்து சற்று பார்ப்போம்.
சும்மா என்ற சொல்லை ஒரு நாளில் நாம் ஒரு முறையாவது உபயோகப் படுத்துவது உண்டு. ஆனால் இதற்கு அகராதியில் பொருள் இல்லை. ஏனென்றால் இது இடத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொண்டு பொருள் தரும். வாருங்கள் சில எடுத்துக் காட்டுகள் பார்ப்போம்
1. சும்மா கிடந்த சங்கை எடுத்து
பொருள் –பயன்படாமல் கிடந்த
2. நான் சும்மா சொன்னேன்
பொருள் –நான் பொய் சொன்னேன்
3. இதை நீ சும்மா எடுத்துக்கோ
பொருள் – இலவசமாக எடுத்துக் கொள்
ஆக இந்த மூன்று வாக்கியங்களிலும் மூன்று சும்மாவும் மூன்று பொருள் தருகிறது அல்லவா.
இன்னும் தொடரும்



அறிவியல் களஞ்சியம் :

அண்டார்டிகா என்றாலே நம் நினைவுக்கு வருவது மைல் கணக்கில் பரந்து விரிந்திருக்கும் வெண்மையான பனிப்பாறைகள் தான். ஆனால், அந்த உறைந்த அமைதிக்கு அடியில் "நெருப்பு உலகம்" ஒளிந்திருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா? சீன விஞ்ஞானிகள் தலைமையிலான சர்வதேசக் குழு, அண்டார்டிகாவின் பனிக்கு அடியில் புதைந்து கிடக்கும் 207 ராட்சத எரிமலைகளை கண்டறிந்து உலகையே அதிரவைத்துள்ளது.

பிப்ரவரி 13
உலக வானொலி நாள்


உலக வானொலி நாள் (World Radio Day) என்பது ஆண்டு தோறும் பெப்ரவரி 13 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளை ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பு (யுனெசுக்கோ) 2011 நவம்பர் 3 ஆம் நாள் உலக வானொலி நாளாக அறிவித்தது. வானொலி ஒலிபரப்புச் சேவையைக் கொண்டாடவும், பன்னாட்டு வானொலியாளர்களுக்கிடையே கூட்டுறவை ஏற்படுத்தவும், முடிவெடுப்பவர்களை வானொலி, மற்றும் சமூக வானொலிகள் மூலமாக தகவல்கள் பரிமாற ஊக்குவிக்கவும் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.




கவிக்குயில் சரோஜினி அவர்களின் பிறந்தநாள்




சரோஜினி நாயுடு அல்லது சரோஜினி சட்டோபத்யாயா (பிப்ரவரி 13,1879, ஹைதராபாத் - மார்ச் 2,1949, லக்னோ) அவர் பாரத்திய கோகிலா (இந்தியாவின் நைட்டிங்கேல்) என்றும் அழைக்கப்படுகிறார். இவர் ஒரு பிரபலமான சிறுமுது அறிஞர், கவிஞர், எழுத்தாளர் ,சுதந்திரப் போராளி மற்றும் சமூக ஆர்வலர் ஆவார். இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது பெண் தலைவரும். உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல் பெண் ஆளுநரும் ஆவார்.அவரது பிறந்த நாள் இந்தியாவில் மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது.

நீதிக்கதை

பசி




ஒரு நாட்டில் ஒரு இளவரசன் இருந்தான். அவன் சிறந்த போர் வீரன். அவனுடைய வாள் வீச்சிற்கு அந்த நாடே ஈடு கொடுக்க முடியாது. அந்த அளவிற்குச் சிறந்த வீரன். அவன் ஒருமுறை அரண்மனையில் வாள் வீசி பயிற்சி செய்துக் கொண்டிருக்கையில், ஒரு எலி குறுக்கே ஓடியது. உடனே அதன் மீது வாளை வீசினான். அந்த எலி தப்பித்துச் சென்றது. பிறகு மீண்டும் அதனைத் துரத்தி வாளை வீசினான், மீண்டும் தப்பித்து வளைக்குள் புகுந்துகொண்டது. உடனே மனம் உடைந்து போனான்.

அப்போது வந்த அரசர், ஏன் சோகமாக இருக்கிறாய்? என கேட்டார். அதற்கு இளவரசன், இந்த நாடே எனது வாள் வீசும் திறமைக்கு ஈடு கொடுக்க முடியாதபோது, இந்த சாதாரண எலியை என்னால் கொல்ல முடியவில்லையே! என விவரித்தான் இளவரசன். மன்னர் சிரித்துவிட்டு எலியைக் கொள்ள வாள் பயிற்சி எதற்கு? அரண்மனைப் பூனையைக் கொண்டு வந்தாலே போதுமே! என்றார். உடனே அரண்மனை பூனை வரவழைக்கப்பட்டது.

அந்தப் பூனையும் எலியை வேட்டையாட முயன்றது. ஆனாலும் அந்த எலி எளிதாக அதனிடம் இருந்து தப்பித்து, தப்பித்துச் சென்றது. மீண்டும் இளவரசருடன் அரசரும் சோகமானார். அப்போது மந்திரி வந்தார். என்ன அரசே.. நீங்களும் இளவரசரும் சோகமாக இருக்கிறீர்கள்? என்றார். அதற்கு அரசர் நடந்ததை கூறினார். நம் நாட்டு பூனைகள் எதற்கு உதவாது. ஜப்பான், பாரசீகம் போன்ற நாடுகளில் உள்ள பூனைகள் புலி உயரம் உள்ளன. எனவே அங்கிருந்து வரவழைப்போம் என்றார் மந்திரி. அதேபோல் அந்நாடுகளில் இருந்து பூனைகள் வரவழைக்கப்பட்டன.

ஆனால் அவற்றிடமிருந்தும் அந்த எலி சாமர்த்தியமாகத் தப்பித்துச் சென்று வளைக்குள் புகுந்தது. எலிக்கு இவ்வளவு திறமையா! என அனைவரும் வியந்து கொண்டிருக்கையில், அங்கே இருந்த அரண்மனைக் காவலன் இளவரசே! இந்த எலிக்குப் போய் ஜப்பான், பாரசீகப் பூனையெல்லாம் எதுக்கு? எங்க வீட்டுப் பூனையே போதும் என்றான். மன்னருக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. என்ன.. அரண்மனையில் வளர்ந்து வரும் பூனையால் முடியாதது சாதாரண பூனையால் முடியுமா? என்றார்.

உடனே இளவரசர் மறித்து சரி... எடுத்து வா உனது பூனையை என்றார். வீட்டிற்குச் சென்று தனது பூனையைக் கொண்டு வந்தான் காவலன். அந்தப் பூனை அந்த எலியை ஒரே தாவலில் லபக் என்று கவ்விச்சென்றது. இதனைப் பார்த்த இளவரசருக்குப் பெருத்த ஆச்சரியம். என்ன இது அதியசம்! ஜப்பான், பாரசீக, அரண்மனையில் வளர்ந்த பூனைகளிடம் இல்லாத திறமை எப்படி இந்தச் சாதாரண பூனைக்கு ஏற்பட்டது? எப்படி சாத்தியம்? என்ன பயிற்சி கொடுத்துப் பூனையை வளர்க்கிறீர்கள்? என்று வியந்தவாறே கேள்விகளை கேட்க தொடங்கினார். அதற்குக் காவலாளி பெரிதாக என் பூனைக்குத் திறமையோ, பயிற்சிகளோ எதுவும் இல்லை இளவரசே...என் பூனைக்கு ரொம்பப் பசி அவ்வளவுதான் என்றான்.

உடனே இளவரசருக்கு சுரீர் என்றது. அரண்மனைக்குள் பூனைகள் நன்கு தின்று கொழுத்திருப்பதால் அவற்றுக்கு பசி என்பதே என்னவென்று தெரிய வாய்பில்லை, எனவே அவற்றால் எலியை எப்படி பிடிக்கமுடியும்? ஆக எந்த ஒரு வேலையையும் வெற்றிகரமாகச் செய்து முடிக்க வேண்டுமென்றால், முதலில் அதனைப் பற்றிய பசி அல்லது தேவை இருக்க வேண்டும். அப்போதுதான் அந்தக் காரியத்தை கச்சிதமாக செய்து முடிக்க முடியும்


இன்றைய செய்திகள்
13.02.2026




⭐தொழில் வளர்ச்சியில் தமிழகம் முன்னிலையில் உள்ளது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


⭐AI தொழில்நுட்பத்தின் தாக்கத்தால்இந்தியாவின் முன்னணி IT நிறுவனங்களின் பங்குகள் கடும் வீழ்ச்சி


⭐வருகிற 15-ந்தேதி உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி... தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு


⭐ எகிப்து நாட்டில் மன்னர்களின் கல்லறைகளில் நடத்தப்பட்ட ஆய்வில், 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழ்-பிராமி கல்வெட்டுக்கள் கண்டுபிடிப்பு.


⭐9801 பேருக்கு பணி நியமன ஆணைகள் - முதலமைச்சர் இன்று வழங்குகிறார்.


🏀 விளையாட்டுச் செய்திகள்


🏀சேப்பாக்கம் மைதானத்தில் 3-வது லீக் ஆட்டம்: நெதர்லாந்து-அமெரிக்கா இன்று மோதல்


Today's Headlines




⭐ Chief Minister M.K. Stalin said that Tamil Nadu is leading in industrial development.


⭐ Shares of India's leading IT companies have fallen sharply due to the impact of AI technologies


⭐The Meteorological Department has announced that there is a possibility of moderate rain in Tamil Nadu due to a new low-pressure area forming on February 15th onwards.


⭐ 2000-year-old Tamil-Brahmi inscriptions discovered during a survey conducted in the tombs of kings in Egypt.


⭐ Appointment orders for 9801 people - The Chief Minister to provide today.


SPORTS NEWS


🏀3rd league match at Chepauk Stadium: Netherlands-USA clash today



Covai women ICT_போதிமரம்

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

Zeal study LO Based Lesson plan For -7th Tamil - புதுமை விளக்கு

நமது Zeal study  வழக்கம் போல் இந்த பருவத்திற்கான பாடக்குறிப்பை வாரந்தோறும் வழங்கும். அந்த வகையில் இந்த வார பாடக்குறிப்பை இந்த பதிவில் வழங்கியுள்ளோம். இது உங்களுக்கு உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தி உங்கள் கற்பித்தல் பணி பாதிக்காதவாறு உங்களின்

8th Tamil lesson plan மெய்ஞான ஒளி, ஒன்றே குலம் கற்றல் விளைவு அடிப்படையிலான பாடக்குறிப்பு

Zeal study shares you all weeks lesson plan for all classes for all classes.In this way we share this week lesson plan also. We always wants to reduce your work load and do your work with very happy and Enjoy. Work with out tension and make your work perfect using our websites and share with your friends too.

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 02.02.26

 Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 02.02.26

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.01.2026

 Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.01.2026

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.02.2026

 Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.02.2026

Followers