Skip to main content

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.02.2026

 Zeal study official school morning prayer activities

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.02.2026












திருக்குறள்:

குறள் 303:

மறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய
பிறத்தல் அதனான் வரும்.    

விளக்க உரை:

யாரிடத்திலும் சினம் கொள்ளாமல் அதை மறந்து விட வேண்டும், தீமையான விளைவுகள் அச் சினத்தாலேயே ஏற்படும்.

பழமொழி :
Time respect those who value it.       

நேரத்தை மதிப்பவர்களை நேரமும் மதிக்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. உலகில் உயர்வானது அனைத்து உயிர்களிடமும் நாம் காட்டும் அன்பும் பரிவும் தான்.

2. எனவே அனைத்து உயிர்களிடமும் அன்பு காட்டுவோம்.

பொன்மொழி :

கடுமையான உழைப்பைத் தவிர வெற்றிக்கு இரகசியம் வேறு இல்லை -  டர்னர்

பொது அறிவு :

01. தலையில் இதயம் கொண்ட விலங்கு எது?

           இறால் -Shrimp

02. உலகின் மிக நீளமான கடற்கரையாக கருதப்படுகிறது,

  பிரயா டோ காசினோ-பிரேசில்

  Praia do Cassino-Brazil

English words :

surge –a  sudden strong movement of people or things in a particular direction.

பெரும் எண்ணிக்கையிலான ஆட்களின் அல்லது பொருள்களின் குறிப்பிட்ட திசையிலான இயக்கம்

தமிழ் இலக்கணம்:

நாம் எழுதும்போது கமா, முற்றுப் புள்ளி, கால் புள்ளி, அரைப் புள்ளி போன்றவற்றை அவ்வப்போது பயன்படுத்துவது உண்டு. இதை நிறுத்தக்குறிகள் / நிறுத்தற்குறிகள் என்று நாம் அழைப்பது உண்டு. இன்று 
நிறுத்தக்குறிகள் / நிறுத்தற்குறிகள்
இவற்றில் எது சரி ? என்று
பார்ப்போம் வாருங்கள்

நிறுத்தக்குறிகள் = நிறுத்தம் + குறிகள்
என்று பிரிக்கலாம். நிறுத்தம் என்றால் சென்று கொண்டிருக்கும் ஒன்றை நிறுத்துவது ஆகும்

நிறுத்தற்குறிகள் = நிறுத்தல் + குறிகள் என்று பிரிக்கலாம்
நிறுத்தல் என்றால் ஒரு பொருளை நிறுப்பது என்று பொருள் படும்.
எனவே நிறுத்தக்குறிகள் என்பதே சரியானது.

அறிவியல் களஞ்சியம் :

பார்சனின் நோய் (Parkinson's disease) பரவலில் குடலில் உள்ள நோய் எதிர்ப்பு செல்களின் பங்கு முக்கியமானது என கண்டறியப்பட்டுள்ளது. மேலும், பல் எனாமலை மீண்டும் உருவாக்கும் புதிய ஜெல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 12

டார்வின் நாள் - darwin day

டார்வின் நாள் (Darwin Day) என்பது ஒவ்வோர் ஆண்டும் பெப்ரவரி 12 ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளிலேயே 1809 ஆம் ஆண்டில் பரிணாமத் தத்துவத்தை உலகுக்கு அளித்த சார்ல்ஸ் டார்வின் பிறந்தார். அறிவியலையும் அறிவியலை மேம்படுத்தவும் உதவிய டார்வினின் பணிகளை இந்நாளில் நினைவு கூaருகிறார்கள்.
நீதிக்கதை

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்

ஒரு நாள் ஓநாய் ஒன்று அதிகமான தாகத்துடனும், பசியுடனும் தவித்துக் கொண்டு இருந்தது. அதனால் அது தண்ணீர் குடிக்க ஒரு ஓடைக்குச் சென்றது. சிறிது தூரத்தில் ஒரு ஆட்டுக்குட்டி தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தது. அதனை கண்டு ஓநாய்க்கு கோபம் வந்தது. அது ஆட்டுக் குட்டியைப் பார்த்து டேய் முட்டாள்! நான் தண்ணீர் குடித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கவில்லையா! ஓடையைக் கலக்குகிறாயே என்றது. ஆட்டுக்குட்டி மிகுந்த பயத்துடன் நான் உங்களுக்குக் கீழ்ப் பாகத்தில் உள்ள தண்ணீர்ரைக் குடிக்கிறேன். நீங்களோ மேல் பாகத்தில் உள்ள தண்ணீர்ரைக் குடிக்கிறீர்கள். அப்படியிருக்க தண்ணீர் எப்படி கலங்கும் என்றது.

ஆறு மாதத்திற்கு முன்னால் உன் தந்தை இப்படித்தான் என்னிடம் வாயாடினார். வாயாடியதற்காக அவருடைய தோல் அன்று உரிக்கப்பட்டது. அது போல் உன் தோலையும் உரித்தால் தான் நீ வாயாடுவதை நிறுத்துவாய் என்று கோபமாகச் சொல்லியது ஓநாய். ஆட்டுக்குட்டியோ மிகவும் பயந்தது. ஐயா! நான் சொல்வதை நம்புங்கள். நான் பிறந்து இன்னும் ஆறு மாதம் கூட ஆகவில்லை என்று மிகப் பணிவாகச் சொல்லியது.

ஓநாய் கோபமாகப் பற்களைக் கடித்துக் கொண்டு எங்கள் இனத்தாரிடம் விரோதம் காட்டுவதே உங்கள் இனத்தாருக்கு வழக்கமாகி விட்டது. இப்போது நீ உன் முன்னோர்கள் செய்த கொடுமைகளுக்கு எல்லாம் சேர்த்து தண்டனை அடைந்தே தீர வேண்டும் என்று சொல்லிக் கொண்டே ஆட்டுக் குட்டியின் மீது பாய்ந்து ஆட்டுக்குட்டியைக் கொன்றுத் தின்றது ஓநாய்.

நீதி :

கெட்டவர்களிடம் பேசாமல் இருப்பது தான் நல்லது.

இன்றைய செய்திகள்

12.02.2026

⭐ஊழலை ஒழிப்பதில் பிற நாடுகளை விட இந்தியா மிக பின்தங்கியுள்ளதாக குளோபல் டிரான்ஸ்பரன்சி வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.

⭐பிப்ரவரி 22 ல் TNPSC குரூப்-  2 க்கான ஹால் டிக்கெட் தகவல் வெளியிடப்படும்.

⭐ஈரானில் விலைவாசி உயர்வு மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக அரசுக்கும் மக்களுக்கும் இடையே கடும் மோதல் நிலவுகிறது

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀10-வது டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் கடந்த 7-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில்  24 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 18 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வி அடைந்தது.

🏀இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) வெளியிட்ட 2025-26ஆம் ஆண்டிற்கான வீரர்களின் வருடாந்திர ஒப்பந்தப் பட்டியலில், முகமது ஷமி மற்றும் இஷான் கிஷன் உள்ளிட்ட 5 முக்கிய வீரர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

Today's Headlines

⭐A report released by Global Transparency has revealed that India lags far behind other countries in eradicating corruption.

⭐Hall ticket information for TNPSC Group-2 will be released on February 22.

⭐In Iran, there is a sharp conflict between the government and the people due to rising prices and economic crisis.

*SPORTS NEWS*

🏀The 10th T20 World Cup series is being played in India and Sri Lanka starting from the 7th. Chasing a target of 24 runs, Afghanistan lost by just 18 runs.

🏀In the annual contract list of players for 2025-26 released by the Board of Control for Cricket in India (BCCI), 5 key players, including Mohammed Shami and Ishan Kishan, have been abruptly removed.

Covai women ICT_போதிமரம்

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

KALVI TV | TRB_TET | EDUCATONAL PSYCHOLOGY - PART - 01 கல்வி உளவியல் - பகுதி 1

 வணக்கம் நமது கல்வி குழுவின் சார்பாக கல்வி தொலைக்காட்சி பாடங்களில் வாயிலாக நமது அரசு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதும்

TNTET 2026: தமிழ் முழுமையான மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) online full test - 1

TNTET 2025 - தமிழ் முழு மாதிரித் தேர்வு - Zeal Study TNTET 2025: தமிழ் மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) இயல் 3: அறிவியல் ஆத்திச்சூடி | எந்திர மனிதன் | ஒளி பிறந்தது | இலக்கணம் 1. புதிய ஆத்திச்சூடி எழுதியவர் யார்? ஔவையார் பாரதியார் கவிமணி நெல்லை சு. முத்து விடை விடை: B. பாரதியார் 2. 'தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்' என அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப்பெற்றவர்? விக்ரம் சாராபாய் மயில்சாமி அண்ணாதுரை நெல்லை சு. முத்து சிவன் விடை விடை: C. நெல்லை சு. முத்து 3. 'ஔடதம்' என்பதன் பொருள் யாது? உணவு நீர் காற்று மருந்து விடை விடை: D. மருந்து 4. 'இயன்றவரை' என்ற சொல்லின் பொருள்? ...

Zeal study TNTET 2026: Tamil Quiz - Model Test 16 தமிழ் மாதிரித் தேர்வு - 16 (பழமொழி, திருநெல்வேலி & இலக்கணம்)

 இதில் பழமொழி நானூறு, திருநெல்வேலி வரலாறு, சிற்றிலக்கியங்கள் மற்றும் இலக்கணப் பகுதியான அணிகள் தொடர்பான அனைத்து வினாக்களும் இடம்பெற்றுள்ளன.தேர்வு முடித்த பின் விடைகளை மேலே scroll பண்ணி பார்க்கவும்.நன்றி 

Zeal study TET / TRB Psychology உளவியல் (அறிவுப்புல வளர்ச்சி) online test

TET 2025 - உளவியல் அலகு 3 ஆன்லைன் தேர்வு - Zeal Study உளவியல் அலகு 3: அறிவுப்புல வளர்ச்சி TET / TRB / TNPSC - முக்கிய வினாக்கள் (15 Questions) 1. கவனித்தலின் முதல் அடிப்படை நிலை எது? புலன் காட்சியறிதல் சிந்தித்தல் கற்பனை செய்தல் விடையைக் காட்டு விடை: புலன் காட்சியறிதல். 2. கவனித்தலை தீர்மானிக்கும் அகக்காரணி எது? நாட்டங்கள் புதுமை அளவு விடையைக் காட்டு விடை: நாட்டங்கள். 3. கவன வீச்சை அளவிடப் பயன்படும் கருவி எது? டச்சிடாஸ்கோப் எர்கோகிராப் ஆடியோமீட்டர் விடையைக் காட்டு விடை: டச்சிடாஸ்கோப் (Tachistoscope). ...

Zeal study TNTET 2026: குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - மாதிரி தேர்வு -1

TNTET 2026 உளவியல் மாதிரித் தேர்வு Zeal study TET 2026: குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - 1 மீண்டும் தேர்வு எழுதவும்

Followers