Skip to main content

Zeal study TNTET Science விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் online test

விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் - வினாடி வினா

விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்

முக்கிய வினா-விடை தொகுப்பு (15 வினாக்கள்)

1. ஓர் உயிரினத்தின் அடிப்படை அலகு எது?
விடை: செல்
2. உயிரினத்தின் உடலினை ஒரு மாறா நிலையில் அல்லது சமச்சீர் நிலையில் பராமரிக்கும் நிலை எது?
விடை: ஹோமியோஸ்டேடிக்
3. மனிதர்களின் நிரந்தர பற்களின் எண்ணிக்கை எவ்வளவு?
விடை: 32
4. உமிழ்நீரில் காணப்படும் பாக்டீரியாவை எதிர்க்கும் நொதி எது?
விடை: லைசோசைம்
5. உணவுக்குழலின் நீளம் சுமார் எவ்வளவு?
விடை: 22 செ.மீ
6. இரைப்பை சார் உடற் செயலியலின் தந்தை எனப்படுபவர் யார்?
விடை: வில்லியம் பியூமாண்ட்
7. உடலில் காணப்படும் மிகப் பெரிய செரிமானச் சுரப்பி எது?
விடை: கல்லீரல்
8. மனிதனின் பிரதான கழிவுநீக்கப் பொருள் எது?
விடை: யூரியா
9. சிறுநீரகத்தின் அடிப்படைச் செயல் அலகு எது?
விடை: நெஃப்ரான்
10. சிறுநீரகங்கள் ஒரு நாளைக்கு சுமார் எத்தனை லிட்டர் ரத்தத்தை வடிகட்டுகின்றன?
விடை: 170-180 லிட்டர்
11. மனித உடலில் காணப்படும் மிகச் சிறிய செல் எது?
விடை: விந்து செல்
12. மிகப்பெரிய மனித செல் எது?
விடை: கருமுட்டை (அண்டம்)
13. இரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன் எது?
விடை: இன்சுலின்
14. செரிமான மண்டலத்தின் மிக நீளமான பகுதி எது?
விடை: சிறுகுடல் (5-7 மீட்டர்)
15. சிறுநீரகங்கள் செயலிழக்கும்போது ரத்தத்தை சுத்திகரிக்கப் பயன்படும் முறை?
விடை: கூழ்மப்பிரிப்பு (Dialysis)

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

Followers