Skip to main content

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.01.2026

 Zeal study official school morning prayer activities

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.01.2026






திருக்குறள்:

குறள் 444:

தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை.

விளக்க உரை:

தம்மைவிட (அறிவு முதலியவற்றால் ) பெரியவர் தமக்குச் சுற்றத்தராகுமாறு நடத்தல், வல்லமை எல்லாவற்றிலும் சிறந்ததாகும்.

பழமொழி :
Mistakes are lessons in disguise.

தவறுகள் அனைத்தும் மறைந்துள்ள பாடங்கள்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. கண்காணிக்க எவரும் இல்லாத போதும் கடைபிடிக்கப்படும் நேர்மையே உண்மையான ஒழுக்கம்.


2. எனவே எப்பொழுதும் ஒழுக்கத்தை கடைபிடிப்பேன்.

பொன்மொழி :

சிந்தனையைவிட செயலால்தான் எல்லோரையும் மாற்றி அமைக்க முடியும்.

   - வில்லியம் வேர்ஸ்ட்வொர்த்

பொது அறிவு :

01.தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்று அழைக்கப்படும் இடம் எது?

பாளையங்கோட்டை -
Palayamkottai

02.உலகிலேயே மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த (Venomous) மீன் எது?

ஸ்டோன்ஃபிஷ்
Stonefish(Synanceia)
English words :

Struggle, scuffle   -   இழுபறி

Vagrant, vagabond  -  நாடோடி

தமிழ் இலக்கணம்:

சரியான முறையில் எண்களை தமிழில் எழுதுவது எப்படி பாகம் 2
இருபத்தி, முப்பத்தி, ஐம்பத்தி என்று எழுத கூடாது என்று பார்த்தோம்.
இருபத்து மூன்று, முப்பத்து நான்கு இவற்றில் மூன்று, நான்கு என்பவை உயிர் மெய் எழுத்துகள் எனவே அவற்றை பிரித்து எழுதலாம். ஆனால் ஐம்பத்து ஆறு என்பதில் ஆ உயிர் எழுத்து எனவே சேர்த்து எழுதுவது சிறப்பு.
ஐம்பத்தாறு, எழுபத்தியேழு, எண்பத்தொன்பது முதலியன.
ஜனவரி 28

லாலா லஜபதி ராய் அவர்களின் பிறந்தநாள்

லாலா லஜபதி ராய் ஒரு எழுத்தாளரும் அரசியல் தலைவரும் ஆவார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் இவரது பங்குக்காக இவர் பெரிதும் மதிக்கப்படுகிறார். இவரை மக்கள் பஞ்சாப் சிங்கம் எனவும் அழைப்பதுண்டு. லால்-பால்-பால் என்று அழைக்கப்படும் மூன்று முக்கியத் தலைவர்களுள் இவரும் ஒருவராவார். மற்ற இருவர் பால கங்காதர திலகர் மற்றும் பிபின் சந்திர பால் ஆவர். 'லாலா லஜபத் ராய்' பஞ்சாப் தேசிய வங்கி மற்றும் "லட்சுமி காப்புறுதி கம்பெனி" ஆகியவற்றை நிறுவியவரும் ஆவார்

நீதிக்கதை

நாயும் அதன் நிழலும்

ஒரு இறைச்சிக் கடையில் இருந்த மாமிசத்துண்டு ஒன்றை திருடிய நாய் ஒன்று அதனை தன் வாயில் கவ்விக் கொண்டு தன் இருப்பிடம் நோக்கிச் சென்றது. தன் இருப்பிடத்திற்குச் செல்லும் வழியில் நாய் ஒரு ஓடையைக் கடக்க முயன்ற போது அதன் உருவமும், அது தன் வாயில் வைத்திருந்த மாமிசத்துண்டும் தண்ணீரில் தெரிந்தது. அதைக் கண்ட நாய் அந்த உருவம் தன்னுடையது என்று அறியாமல் தண்ணீரில் தெரிந்த மாமிசத்துண்டினையும் கவ்வ எண்ணி லொள், லொள் எனக் குரைத்து கொண்டே தண்ணீரில் தெரிந்த நாயின் மீது பாய்ந்தது. அப்போது அதன் வாயில் இருந்த மாமிசம் தண்ணீரில் விழுந்தது. மாமிசத்தைத் தேடிச் சென்ற நாய் தண்ணீரில் தத்தளித்து. ஆற்றிலிருந்து தன் உயிரைக் காப்பாற்றிக் கொண்டால் போதும் என்று நினைத்துக் கரையேறியது.

நீதி :

ஒருவனிடம் இருப்பதையும் இல்லாமல் போகச் செய்வது பேராசை

இன்றைய செய்திகள்

28.01.2026

⭐தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் கட்டணத்தை முறைப்படுத்தவும், பெற்றோர்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கவும் வகை செய்யும் “தமிழ்நாடு பள்ளிகள் திருத்தச் சட்டம்- 2026 தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறை வேற்றியுள்ளது.

⭐சென்னையில் பெண்கள் மட்டுமே பயணிக்க 10 'பிங்க்' பஸ்
சேவைகள்- முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

⭐ஐரோப்பிய ஒன்றியம் உடனான வர்த்தக ஒப்பந்தத்தால் இந்தியாவிற்கு ஜவுளி மற்றும் ஆடைகள் மீதான வரி 12% லிருந்து 0% ஆகக் குறையும். ரயில்வே, கப்பல் தயாரிப்புகள் மீதான வரி 7% லிருந்து 0% ஆகக் குறையும்.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀நடப்பு ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது.
இந்தத் தொடர் பிப்ரவரி 1-ம் தேதி வரை நடக்கிறது.

🏀 இந்தியா - நியூசிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் 3 போட்டிகள் முடிவில் 3-0 கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றியது.

Today's Headlines

⭐TheTamilnadu Schools Act-2026 - Amendment, which will regulate the fees of private schools in Tamilnadu and provide more power to parents, has been unanimously passed in the Tamilnadu Legislative Assembly.

⭐ Tamil Nadu Chief Minister inaugurated 10 Pink bus services for women only in Chennai.

⭐The trade agreement with the European Union will see India's tariffs on textiles and clothing reduced from 12% to 0%. And tariffs on railway and shipping products will be reduced from 7% to 0%.

SPORTS NEWS

🏀The Australian Open, the first Grand Slam of the year, is underway in Melbourne. The tournament runs until February 1.

🏀 India and New Zealand are playing a 5-match T20 series. India won the series 3-0 after the first 3 matches.

Covai women ICT_போதிமரம்

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.01.2026

 Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.01.2026

Zeal study Lesson plan For -6th Tamil - _பாரதம் அன்றைய நாற்றங்கால்

வணக்கம் . முதலில் நமது குழுவின் சார்பாக அனைவருக்கு புது வருட வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். இந்த கல்வியாண்டில் மேன்மேலும் பல வளர்ச்சிகளையும், சாதனைகளையும் பெற வாழ்த்துக்கள்.

Zeal study Lesson Plan 6th Tamil LO Based Lesson plan Topic: பாஞ்சை வளம்

 Zeal study Shares you Lesson plan for the sake of the Tamilnadu teachers to save their Time and write their notes of lesson with proper steps using various activities.

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.01.2026

 Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.01.2026

Zeal study Lesson plan For -7th Tamil - கவிதைப்பேழை | விருந்தோம்பல் | பருவம் 3

வணக்கம் . முதலில் நமது குழுவின் சார்பாக அனைவருக்கு புது வருட வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். இந்த கல்வியாண்டில் மேன்மேலும் பல வளர்ச்சிகளையும், சாதனைகளையும் பெற வாழ்த்துக்கள்.

Followers