Skip to main content

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13.01.2026

 Zeal study official school morning prayer activities

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13.01.2026












திருக்குறள்:

குறள் 136:
ஒழுக்கத்தி னொல்கார் உரவோர் இழுக்கத்தின் ஏதம் படுபாக் கறிந்து.                
உரை:

ஒழுக்கம் தவறுதலால் குற்றம் உண்டாவதை அறிந்து, மனவலிமை உடைய சான்றோர் ஒழுக்கத்தில் தவறாமல் காத்துக் கொள்வர்.

பழமொழி :
Actions speak louder than words.     

சொற்களை விட செயல்களே அதிகமாக பேசும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. படுத்தே இருந்தால் படுக்கையும் பகையாகும்.

2. எழுந்து முயற்சி செய் உலகே உனது வசமாகும்.

பொன்மொழி :

இயற்கை ,காலம், பொறுமை இவை மூன்றும் பெரும் மருத்துவர்கள். பல்வேறு பிரச்சினைகளை தீர்ப்பவர்கள் -ஹெச் ஜி பான்

பொது அறிவு :

01.சர்வதேச அளவில்,  ""சட்டத்தின் தந்தை"" என்று அழைக்கப்படுபவர் யார்?

    ஜான் ஆஸ்டின் (John Austin)

02. உலக நுகர்வோர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

       மார்ச் 15- March 15

English words :

Devour -consume

Whet-sharpen

தமிழ் இலக்கணம்:

சென்னைப்பட்டினம்
சென்னைப்பட்டணம்
எது சரி?
பட்டினம் என்பது கடற்கரை ஒட்டிய நகரத்தை குறிக்கும்
பட்டணம் என்பது பெரிய நகரத்தை குறிக்கும்.
எனவே இரண்டு பெயர்களும் சரியே

அறிவியல் களஞ்சியம் :

சூரியனில் வெடிப்பு ஏற்படும் போது கிளம்பும் வெப்ப ஆற்றலை தான் சோலார் ஃபிளேர் என்பார்கள். அந்த ஆற்றலானது 100 மெகாடன் அணு குண்டுகளை ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறுவதற்கு சமமாகும். இந்த கொடூரமான கதிர்வீச்சு ஆபத்தில் இருந்து நம்மை பாதுகாக்கும் பூமியின் வளிமண்டலத்திற்கு கோடான கோடி நன்றிகள்!

நீதிக்கதை

எறும்பும் வெட்டுக்கிளியும்

வெட்டுக்கிளி ஒன்று மதிய நேரத்தில் இங்கும் அங்கும் தாவி தாவிக் குதித்து பாட்டுப்பாடி ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தது. அப்போது அந்த வழியே வந்த எறும்பு அரிசி ஒன்றை எடுத்துக் கொண்டு தன் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தது. அதைப் பார்த்த அந்த வெட்டுக்கிளி எறும்பிடம் என்னைப் போல நீயும் என்னுடன் சிறிது நேரம் விளையாடலாமே என்றது.

அதற்கு எறும்பு இன்னும் சில நாட்களில் மழைக்காலம் தொடங்க இருக்கிறது. மழைக்காலத்தில் யாரும் வெளியே செல்ல முடியாது. அதனால் அந்த நேரத்திற்குத் தேவையான உணவை இப்போது இருந்தே நான் என் வீட்டில் சேகரித்து வைத்துக் கொள்கிறேன் என்றது. வெட்டுக்கிளி, எறும்பிடம் மழைக்காலம் வர இன்னும் நாட்கள் இருக்கிறது என்று சொல்லிவிட்டு நான் விளையாட செல்கிறேன் என்று சிரித்துக்கொண்டே நடனமாடிச் சென்றது.

நாட்கள் கடந்தன, மழைக்காலமும் வந்தது. அப்போது வெட்டுக்கிளிக்கு பசி ஏற்பட்டது. எறும்பு உணவு சேமித்து வைத்திருக்கும் அதனிடம் போய்க் கேட்டுபார்க்கலாம் என்று நினைத்த வெட்டுக்கிளி எறும்பின் வீட்டிற்குச் சென்றது. எறும்பின் வீட்டுக்குச் சென்று எறும்பிடம் எனக்கு மிகவும் பசிக்கிறது. ஏதாவது உணவு கிடைக்குமா? என்று கேட்டது. தான் சேமித்த உணவில் இருந்து சிறிதளவை வெட்டுக்கிளியிடம் கொடுத்தது எறும்பு.

பிறகு எறும்பு வெட்டுக்கிளியைப் பார்த்து, அன்று என்னைப் பார்த்து சிரித்தாயே. இப்போது நான் சேகரித்த உணவு தான் இன்று நம் இருவருக்கும் உதவியுள்ளது. எனவே இனிமேலாவது நீ சோம்பலில்லாமல் வெயில் காலத்தில் மழைக்காலத்திற்கு வேண்டியதை சேமித்து வைத்துக்கொள் என்றது. எறும்பானது கால நேரம் பாராது உழைத்தால் வாழ்வு என்றும் பிரகாசமாக இருக்கும் என்று வெட்டுக்கிளிக்கு உணர்த்தியது.

நீதி :

எதிர்காலத்திற்குத் தேவையானதை நிகழ்காலத்தில் சேமித்து வைக்க வேண்டும்.

இன்றைய செய்திகள்

13.01.2026

⭐45 சவரன் நகைகள் ஒப்படைப்பு.தூய்மை பணியாளர் பத்மாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.1 லட்சம் பரிசு!
நகை யாருடையது என விசாரித்து போலீசார் அதனை உரியவரிடம் ஒப்படைத்தனர்.

⭐16செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.

* 'கெஸ்ட்ரல் இனிஷியல் டெமான்ஸ்ட்ரேட்டர்' என்ற ஒரு சிறிய சோதனை கருவியும் பொருத்தப்பட்டுள்ளது.

⭐சென்னையில் டபுள் டக்கர் பேருந்துகள் சேவைகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்.

* முக்கிய சுற்றுலாத்தலங்களுக்கு டபுள் டக்கர் பஸ் சேவையை தொடங்க சுற்றுலாத்துறை முடிவு செய்துள்ளது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடர் பிக் பாஷ் லீக். இந்தத் தொடரின் 15-வது சீசன் நடந்து வருகிறது. இதில் மெல்போர்ன் ரெனெகேட்ஸ்- சிட்னி தண்டர் அணிகள் மோதின.

Today's Headlines

⭐45 sovereigns of jewellery handed over.   Chief Minister M.K. Stalin awards Rs. 1 lakh to the sanitation worker Padma.  The police enquired about the identity of the jewellery owner and handed it over .

⭐PSLV C-62 rocket with 16 satellites launched. A small test device called 'Kestrel Initial Demonstrator' is also attached.

⭐Chief Minister launches double decker bus services in Chennai. The tourism department has decided to launch double decker bus services to major tourist destinations.

*SPORTS NEWS*

🏀 Big Bash League is a domestic T20 series held in Australia. The 15th season of this series is underway. In this, Melbourne Renegades and Sydney Thunder clashed.

Covai women ICT_போதிமரம்

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

Zeal study Lesson plan For -6th Tamil - _பாரதம் அன்றைய நாற்றங்கால்

வணக்கம் . முதலில் நமது குழுவின் சார்பாக அனைவருக்கு புது வருட வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். இந்த கல்வியாண்டில் மேன்மேலும் பல வளர்ச்சிகளையும், சாதனைகளையும் பெற வாழ்த்துக்கள்.

Zeal study Lesson plan For -7th Tamil - கவிதைப்பேழை | விருந்தோம்பல் | பருவம் 3

வணக்கம் . முதலில் நமது குழுவின் சார்பாக அனைவருக்கு புது வருட வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். இந்த கல்வியாண்டில் மேன்மேலும் பல வளர்ச்சிகளையும், சாதனைகளையும் பெற வாழ்த்துக்கள்.

Followers