Skip to main content

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.12.2025

 Zeal study official school morning prayer activities

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.12.2025

ஐடா ஸோஃபியா ஸ்கட்டர்

  






திருக்குறள்:

குறள் 424:

எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் நுண்பொருள் காண்ப தறிவு.
             
விளக்க உரை:

தான் சொல்லுவன எளிய பொருளையுடையனவாகப் பதியுமாறு சொல்லி, தான் பிறரிடம் கேட்பவற்றின் நுட்பமானப் பொருளையும் ஆராய்ந்து காண்பது அறிவாகும்.

பழமொழி :
Dark days teach the best lessons.       

இருண்ட நாட்கள் சிறந்த பாடங்களை கற்றுக்  கொடுக்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. எனது நோட்டு அல்லது புத்தகத்தில் உள்ள காகிதத்தைக் கிழிக்க மாட்டேன்.

2 காகிதம் கிழித்தால் எனது இருப்பிடம் அசுத்தம் ஆவது மட்டும் அல்ல மரங்களை அழிக்கவும் அது மறைமுக காரணமாகிவிடும்.

பொன்மொழி :

வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கமே மனிதனின் மகத்தான சக்தியாகும் - ஜேம்ஸ் ஆலன்

பொது அறிவு :

01.உலகில் மிக நீண்ட காலம் வாழும் விலங்கு எது?

         கிரீன்லாந்து சுறா

Greenland Shark

02.  மிகப்பெரிய தமிழ்த்தாய் சிலை  எங்கு நிறுவப்பட உள்ளது?

           மதுரை -Madurai

English words :

fill-put something into your space, fill out-complete a form by writing information

தமிழ் இலக்கணம்:

1. சொல்லின் இறுதியில் உயிரெழுத்துகள் தனித்து வராது.

2. சொல்லின் இறுதியில் ஆயுத எழுத்து வராது.


3. க்,ங்,ச்,ட்,த், ப்,ற் ஆகிய ஏழு மெய்யெழுத்துகளும் சொல்லின் இறுதியில் வராது.


4. எ கர வரிசையில் கெ முதல் னெ வரை எந்த உயிர்மெய் எழுத்துக்களும் இறுதியில் வராது.

அறிவியல் களஞ்சியம் :

ஆவாரம் பூ: ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் தாவர மூலிகைகள் எல்லாம் நமக்கு எளிமையாக கிடைக்க கூடியவை. அதில் ஒன்று ஆவாரம்பூ.

ஆவாரம்பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி வைத்து சாப்பிடலாம். இந்த பூவை கொதிக்க வைத்து தேநீராக்கி குடிக்கலாம்.

டிசம்பர் 09

ஐடா ஸோஃபியா ஸ்கட்டர் அவர்களின் பிறந்தநாள்

ஐடா ஸோஃபியா ஸ்கட்டர் (Ida Sophia Scudder, டிசம்பர் 9, 1870 – மே 23, 1960) என்பவர் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண் மருத்தவராவார். இவர் வேலூரில் உள்ள கிருத்தவ மருத்துவக் கல்லூரியை நிறுவியதற்காக அறியப்படுகிறார்.

1914 இல் நெடு விடுப்பில் ஐடா அமெரிக்காவுக்குச் சென்றார். அதேநேரம் முதல் உலகப் போர் மூண்டது. 1915 இல் கடுமையான போர்ச் சூழலில் இந்தியா திரும்பிவந்தார், மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான பணியைத் விரைவுப்படுத்தினார் இதையணுத்து 1918 இல் பட்டைய மருத்துவப் படிப்புடன் பெண்களுக்கான மருத்துவப் பள்ளி நடத்துவதற்கான அனுமதியானது, சென்னை மாகாண மருத்துவத் துறை தலைவர் கர்னல் பிரைசனிடமிருந்து பெற்றார். 1918 ஆகத்து 12 இல் ஒன்றழய மறைப்பணி பள்ளியை சென்னை மாகாண கவர்னர் பென்ட்லண்ட் பிரபு தொடங்கி வைத்தார். 1948 இல் யூனியன் மருத்துவப் பள்ளி, கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போதுதான், பெண்களுடன் ஆண்களும் மருத்துவம் படிக்கத் தொடங்கினர்.
நீதிக்கதை

எண்ணம் போல் வாழ்வு

ஒரு ஊரில் குமாரசாமி என்ற பெயருடைய மனிதர் ஒருவர் இருந்தார். அவரை எல்லோரும் முட்டாள் என்றும், பிழைக்கத் தெரியாதவர் என்றும் கேலி செய்து வந்தனர். இதைக் கேட்டுக்கேட்டு அந்த மனிதருக்கு வெட்கமாகிப் போய்விட்டது. அந்த ஊரின் எல்லையில் ஒரு முனிவர் இருந்தார். அவரிடம் சென்று அந்த மனிதர் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு கேட்டார்.

கடவுளை நினைத்து தவம் செய். உனக்கு வேண்டிய வரத்தைக் கொடுப்பார் என்று அந்த முனிவர் கூறினார். குமாரசாமி கடுமையாகத் தவம் இருந்தார். பல நாட்கள் சென்ற பிறகு, கடவுள் அவர் எதிரில் தோன்றினார். பக்தனே, உனக்கு என்ன வரம் வேண்டும்? கடவுள் கேட்டார். தவம் செய்தால் கடவுள் வந்து வரம் கொடுப்பார்னு அந்த முனிவர் சொன்னார். மன்னார்சாமி, என்ன வரம் வேண்டும், கேள் என்றார் கடவுள். அதான் கேட்டேனே வரம்... அதை கொடு... என்றார் மன்னார்சாமி.

இப்போது கடவுளுக்கே குழப்பம் வந்து விட்டது. கடவுள் பிரத்யட்சம் செய்துவிட்டால் யாருக்காவது வரம் கொடுத்தே ஆக வேண்டும். அதுவும் தவம் செய்தவருக்குத் தவறாமல் வரம் கொடுத்தே ஆக வேண்டும். என்ன செய்யலாம்? கடவுள் யோசித்தார். பக்தா, இப்போது நீ என்ன நினைக்கிறாயோ, அதையே வரமாகக் கொடுக்கின்றேன் பெற்றுக்கொள். அய்...யய்ய....யோ... நான் ஒன்றும் நினைக்கவே இல்லையே! அதான்... என்று சொல்லிவிட்டுக் கடவுள் மறைந்து விட்டார். இதிலிருந்து என்ன தெரிகிறது? பலனை நோக்கிய உழைப்புதான் உயர்வைத் தரும்! எண்ணம் போல் வாழ்வும் கூட, மனதில் நல்லதை நினைப்போம் நல்வழி செல்வோம்.

இன்றைய செய்திகள்

09.12.2025

⭐இந்தியாவில் 2023-ம் ஆண்டில் 2.12 லட்சம் பெண்களும், இந்த ஆண்டில் அக்டோபர் 2025
வரை 2,52,108 பெண்களும் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.

⭐போதைப்பொரு ளுக்கு எதிரான சென்னை போதைப்பொருள் தடுப்பு காவல் குழுவினரின் நடவடிக்கையில் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த 26 நபர்களும், கேமரூன் நாட்டைச் சேர்ந்த ஒருவரும், சூடான் நாட்டைச் சேர்ந்த இருவர் என 29 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

⭐ ரஷ்யா நடத்திய தாக்குதலில் உக்ரேனில் உள்ள செர்னேபில் அனு உலையின் பாதுகாப்பு கவசம் சேதமடைந்துள்ளது.

🏀விளையாட்டுச் செய்திகள்

🏀 நியூசிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பரபரப்பாக சென்ற முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆனது.

Today's Headlines

⭐The Indian Council of Medical Research has reported that 2.12 lakh women in India were affected by breast cancer in 2023 and 2,52,108 women this year till October 2025.

⭐55 foreigners arrested in anti-drug operation by Chennai Narcotics Control Team.

⭐ The protective shield of the Chernobyl nuclear power plant in Ukraine has been damaged in a Russian attack.

*SPORTS NEWS*

🏀 New Zealand and West Indies are playing a 3-match Test series. The exciting first Test ended in a draw.

Covai women ICT_போதிமரம்

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

TNTET 2026: தமிழ் முழுமையான மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) online full test - 1

TNTET 2025 - தமிழ் முழு மாதிரித் தேர்வு - Zeal Study TNTET 2025: தமிழ் மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) இயல் 3: அறிவியல் ஆத்திச்சூடி | எந்திர மனிதன் | ஒளி பிறந்தது | இலக்கணம் 1. புதிய ஆத்திச்சூடி எழுதியவர் யார்? ஔவையார் பாரதியார் கவிமணி நெல்லை சு. முத்து விடை விடை: B. பாரதியார் 2. 'தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்' என அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப்பெற்றவர்? விக்ரம் சாராபாய் மயில்சாமி அண்ணாதுரை நெல்லை சு. முத்து சிவன் விடை விடை: C. நெல்லை சு. முத்து 3. 'ஔடதம்' என்பதன் பொருள் யாது? உணவு நீர் காற்று மருந்து விடை விடை: D. மருந்து 4. 'இயன்றவரை' என்ற சொல்லின் பொருள்? ...

Zeal study TNTET 2026: குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - மாதிரி தேர்வு -1

TNTET 2026 உளவியல் மாதிரித் தேர்வு Zeal study TET 2026: குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - 1 மீண்டும் தேர்வு எழுதவும்

Zeal study TET / TRB Psychology உளவியல் (அறிவுப்புல வளர்ச்சி) online test

TET 2025 - உளவியல் அலகு 3 ஆன்லைன் தேர்வு - Zeal Study உளவியல் அலகு 3: அறிவுப்புல வளர்ச்சி TET / TRB / TNPSC - முக்கிய வினாக்கள் (15 Questions) 1. கவனித்தலின் முதல் அடிப்படை நிலை எது? புலன் காட்சியறிதல் சிந்தித்தல் கற்பனை செய்தல் விடையைக் காட்டு விடை: புலன் காட்சியறிதல். 2. கவனித்தலை தீர்மானிக்கும் அகக்காரணி எது? நாட்டங்கள் புதுமை அளவு விடையைக் காட்டு விடை: நாட்டங்கள். 3. கவன வீச்சை அளவிடப் பயன்படும் கருவி எது? டச்சிடாஸ்கோப் எர்கோகிராப் ஆடியோமீட்டர் விடையைக் காட்டு விடை: டச்சிடாஸ்கோப் (Tachistoscope). ...

TNTET 2026: தமிழ் - பகுதி 1 முக்கியக் குறிப்புகள் (Study Materials) - இன்பத்தமிழ், தமிழ்க்கும்மி மற்றும் வளர்தமிழ்

  TNTET 2026: தமிழ் - பகுதி 1 முக்கியக் குறிப்புகள் (Study Materials) இந்தக் குறிப்புகள் இன்பத்தமிழ் , தமிழ்க்கும்மி மற்றும் வளர்தமிழ் ஆகிய பாடங்களை எளிதாக மீள்பார்வை (Revision) செய்ய உதவும்.

Zeal study LO Based Lesson plan For -6th Tamil - Term 3 பாதம்

நமது Zeal study  வழக்கம் போல் இந்த பருவத்திற்கான பாடக்குறிப்பை வாரந்தோறும் வழங்கும். அந்த வகையில் இந்த வார பாடக்குறிப்பை இந்த பதிவில் வழங்கியுள்ளோம். இது உங்களுக்கு உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தி உங்கள் கற்பித்தல் பணி பாதிக்காதவாறு உங்களின்

Followers