Skip to main content

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.12.2025

 Zeal study official school morning prayer activities

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.12.2025










திருக்குறள்:

குறள் 999:

நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன் றிருள்

உரை:

பிறரோடு கலந்து பழகி மகிழ முடியாதவர்க்கு, மிகப் பெரிய இந்த உலகம் ஒளியுள்ள பகற் காலத்திலும் இருளில் கிடப்பதாம்.

பழமொழி :
Trust is the root of every strong bond.

நம்பிக்கை தான் ஒவ்வொரு உறவின் வேர்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. உள்ளத்தின் எண்ணங்களே நம்மை உருவாக்கும். எனவே நல்லதே நினைப்பேன்.

2. நம் எண்ணங்களை உருவாக்குவது நல்ல புத்தகங்களும் நல்ல நண்பர்களுமே. எனவே இவற்றை நல்ல விதமாக தேர்ந்தெடுப்பேன்.

பொன்மொழி :

கடவுளைத் தெரிந்து கொள்ள சிறந்த வழி எல்லாவற்றிடமும் அன்பு செலுத்துதலே ஆகும் -வின்சென்ட் வான்காக்

பொது அறிவு :

01."எண்கணித ஏந்தல்" என்று அழைக்கப்படும் இந்திய கணித மேதை யார்?

ஸ்ரீனிவாச ராமானுஜம்
Srinivasa Ramanujam

02.தமிழ்நாட்டின் முதல் மகளிர் பல்கலைக்கழகம் எது?

அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்
Mother Teresa Women's University
English words :

startled-felt sudden shock

vibrant-lively

தமிழ் இலக்கணம்:

சொல்லின் முதலில் வரா எழுத்துகள்

1. மெய்யெழுத்துகள் பதினெட்டும் சொல்லின் முதலில் வரா


2. ஆயுத எழுத்து சொல்லின் முதலில் வராது


3. ஞ, ய, வ வரிசையில் குறிப்பிட்ட மெய்யெழுத்துகள் தவிர வேறு எதுவும் முதலில் வராது

அறிவியல் களஞ்சியம் :

உங்கள் டார்ச் விளக்கிலிருந்து வெளிப்படும் ஒளி சந்திரனை அடைய 238,000 மைல்கள் அல்லது 384,400 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டும். அதற்கும் சந்திரனின் மேற்பரப்புக்கும் இடையில், வளிமண்டலம் என நமக்குத் தெரிந்த ஒன்று உள்ளது, இது அடிப்படையில் பூமியின் மேற்பரப்பை உள்ளடக்கிய காற்றின் ஒரு அடுக்கு ஆகும்.

டிசம்பர் 05

கல்கி அவர்களின் நினைவுநாள்



கல்கி (9 செப்டம்பர் 1899 – 5 திசம்பர் 1954) புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இரா. கிருஷ்ணமூர்த்தி என்ற இயற்பெயர் கொண்ட இவர் 35 சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள், கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். எனினும், மிகச் சிறந்த சமூக மற்றும் வரலாற்றுப் புதினங்களை எழுதியதற்காக பரவலாக அறியப்படுகிறார். இவர் எழுதிய பொன்னியின் செல்வன் புதினம் மிகப் புகழ் பெற்றதாகும். தன் படைப்புகள் மூலம் இந்திய தேசிய விடுதலை போராட்டத்திற்கும் பங்களித்திருக்கிறார். தியாகபூமி புதினம் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது.

நெல்சன் மண்டேலா அவர்களின் நினைவுநாள்

நெல்சன் மண்டேலா (Nelson Rolihlahla Mandela, 18 சூலை 1918 – 5 திசம்பர் 2013), தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் ஆவார். அதற்கு முன்னர் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்தார். தொடக்கத்தில் அறப்போர் (வன்முறையற்ற) வழியில் நம்பிக்கை கொண்டிருந்த இவர், பிறகு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் இராணுவப் பிரிவுக்கு தலைமை தாங்கினார். இவர்கள் மரபுசாரா கொரில்லாப் போர்முறைத் தாக்குதலை நிறவெறி அரசுக்கு எதிராக நடத்தினர். மண்டேலாவின் 27 ஆண்டு சிறைவாசம், நிறவெறிக் கொடுமையின் பரவலாக அறியப்பட்ட சாட்சியமாக விளங்குகிறது. சிறையின் பெரும்பாலான காலத்தை இவர் ராபன் தீவில் சிறிய சிறை அறையில் கழித்தார். 1990 இல் அவரது விடுதலைக்கு பிறகு அமைதியான முறையில் புதிய தென்னாப்பிரிக்கக் குடியரசு மலர்ந்தது. மண்டேலா, உலகில் அதிகம் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவராக விளங்கினார்
நீதிக்கதை

எறும்பின் தன்னம்பிக்கை

மடத்தில் ஜென் துறவி ஒருவர் சீடர்களுக்கு பாடம் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது அவர் சீடர்களுக்கு துன்பம் வந்தால் தன்னம்பிக்கையுடன் மனதை தளராமல் இருக்க வேண்டும் என்ற ஒரு புத்தியை அவர்களுக்கு புகட்டுவதற்கு ஒரு சிறு கதை சொல்லி புரிய வைக்க நினைத்தார். அதனால் அவர் ஒரு எறும்பு கதையை தன் சீடர்களுக்கு சொன்னார்.

அதாவது ஓர் எறும்பு தன் வாயில் சற்று நீளமான உணவுப் பொருளை தூக்கிச் சென்றது. அப்போது அது செல்லும் வழியில் ஒரு விரிசல் தென்பட்டது. அதனால் அந்த எறும்பு அதை தாண்டிச் செல்ல முடியாமல் தவித்தது. சற்று நேரம் கழித்து, அந்த எறும்பு தன் உணவை அந்த விரிசல் மீது வைத்து, அதன் மீது ஊர்ந்து சென்று விரிசலைக் கடந்து, பின் தன் உணவை எடுத்துச் சென்றது என்று கூறினார். பின் அவர்களிடம், அதேப் போல் தான் நாமும் நமக்கு ஏற்படும் துன்பத்தையும் பாலமாக வைத்து, முன்னேற வேண்டும் என்று கூறினார். மேலும் அந்த சிறு எறும்பின் தன்னம்பிக்கை நமக்கு இருந்தாலே நாம் வாழ்வில் எந்த தடையையும் எளிதாக கடந்து செல்ல முடியும், துன்பமும் காணாமல் போய்விடும் என்று கூறி, அன்றைய பாடத்தை முடித்தார்.

இன்றைய செய்திகள்

05.12.2025

⭐கடந்த 15 ஆண்டுகளில் எய்ட்ஸ் நோயால் உயிரிழப்போரின் எண்ணிக்கை 81% குறைந்துள்ளது என்றும், புதிதாக எச்ஐவி நோய்த் தொற்றால் பாதிப்போரின் எண்ணிக்கை 49% குறைந்துள்ளது என்றும் மத்திய சுகாதாரத்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது

⭐தற்போது இந்தியாவில் 57 லட்சம் மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2024-25-ம் ஆண்டில் மின்சார வாகனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது.

⭐ இண்டிகோ விமான நிறுவனம் ஒரே நாளில் முக்கிய 3 நகரங்களில் விமானங்களின் சேவையை ரத்துசெய்தது.
மும்பை விமான நிலையத்தில் 86 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀ஒரு நாள் போட்டியில் இரு இந்திய வீரர்கள் ஒரே இன்னிங்சில் சதம் அடிப்பது இது 44-வது நிகழ்வாகும். விராட் கோலி சதம் அடித்தும் இந்திய அணி தோல்வியை தழுவி இருப்பது இது 8-வது முறையாகும்.

Today's Headlines

⭐A survey conducted by the Union Health Ministry has revealed that the number of deaths from AIDS has decreased by 81% and the number of new HIV infections has decreased by 49% in the last 15 years.

⭐At present, 5.7 million electric vehicles are registered in India. And the sales of electric cars increased in 2024-25.

⭐ IndiGo airline cancels flights to 3 major cities on one single day, and 86 flights are cancelled at Mumbai airport.

SPORTS NEWS

🏀This is the 44th time that two Indian players have scored centuries in the same innings in ODIs. This is the 8th time India has lost despite Virat Kohli scoring a century.

Covai women ICT_போதிமரம்

Comments

Post a Comment

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

TNTET paper 2 Maths and science tentative answer key

TNTET paper 2Maths and science answer key  STET paper 2 answer key _2026 வணக்கம் நமது குருவின் சார்பாக  STET paper 2 answer key _2026  வழங்கியுள்ளோம் இது ஆசிரியர் தகுதி தேர்வு   எழுதியவர்களுக்கு உதவியாக இருக்கும் எனவே இதனை பயன்படுத்தி பெயருக்கு நல்ல முறையில் தயாராக வாழ்த்துக்கள் நன்றி Topic_ STET paper 2 answer key _2026 File type -PDF STET paper key  

Zeal study Whatsapp groups links

CLiCK The below groups name to join the group Zeal study Class wise groups links  kindly join in any one groups in these groups class suitable messages will be shared  Join our Zeal study Official Telegram channel for all latest updates https://t.me/zealstudyofficial Follow our Whatsapp channel  https://whatsapp.com/channel/0029Va9B0NY5q08hCHKk8A19 for classes 1-5 materials Zeal study primary WhatsApp  groups links   Zeal study primary group 6 https://chat.whatsapp.com/JsUkig72NCbEfK0GtsoNg3 Zeal study primary group 1 https://chat.whatsapp.com/I5zmYprrqzh0hQHrRkqO6R Zeal study primary group 2 https://chat.whatsapp.com/Gs5xFU3kgzdIaQ8xExUrp4 Zeal study primary group 3 https://chat.whatsapp.com/KPoGHVgwlmkKCoUcX8J5yY Zeal study primary group 4 https://chat.whatsapp.com/KughukPr6yN4prnKWWNgB3 Zeal study primary group 5 https://chat.whatsapp.com/LYKowdSHZnT7vTM797PmLu For classes 6-8 Zeal study 6-8   WhatsApp  groups links For 6 ,7&8 handling...

6th English - Trees LO Based Lesson Plan By Zeal Study

Zeal study is an educational where you can find study materials, lesson plan, Individual class wise- unit wise- lesson wise Solutions, book back answer keys, Unit wise Fa (a) activities collections, FA(b) question bank collections .

7th English - The Wind On Haunted Hill LO Based Lesson Plan By Zeal Study

 Zeal study is an educational where you can find study materials, lesson plan, Individual class wise- unit wise- lesson wise Solutions, book back answer keys, Unit wise Fa (a) activities collections, FA(b)  question bank collections .

Followers