Skip to main content

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.12.2025

 Zeal study official school morning prayer activities

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.12.2025



மகாகவி சுப்பிரமணிய பாரதி





திருக்குறள்:

குறள் 1031:

சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.

விளக்க உரை:

உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது, அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது.

பழமொழி :
Life is a poetry written by our actions.

நமது செயல்களால் எழுதப்படும் கவிதை தான் வாழ்க்கை.

இரண்டொழுக்க பண்புகள் :

1. எனது நோட்டு அல்லது புத்தகத்தில் உள்ள காகிதத்தைக் கிழிக்க மாட்டேன்.

2 காகிதம் கிழித்தால் எனது இருப்பிடம் அசுத்தம் ஆவது மட்டும் அல்ல மரங்களை அழிக்கவும் அது மறைமுக காரணமாகிவிடும்.

பொன்மொழி :

ஒருவருக்கு ஏற்படும் பயம் நீங்கும் போது ஏற்படும் நம்பிக்கையே அதிக மகிழ்ச்சி அளிக்கும் - ஸ்காட்

பொது அறிவு :

01.இந்தியாவின் முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலின் பெயர் என்ன?

  ஐஎன்எஸ் விக்ராந்த்
INS Vikrant

02.இந்தியாவின் முதல் அனைத்து மகளிர் காவல் நிலையம் எங்கு
தொடங்கப்பட்டது?

கோழிக்கோடு- கேரளா
Kozhikode , Kerala.

English words :

sit tight-stay in your place

isolated - alone or separated

தமிழ் இலக்கணம்:

காற்புள்ளி பயன்படுத்தும் இடங்கள் குறித்து காண்போம் (எடுத்துக்காட்டுகளுடன்):
பட்டியலிடும்போது: தொடர்ச்சியான வார்த்தைகளை அல்லது சொற்றொடர்களைப் பிரிப்பதற்குக் காற்புள்ளி இடுவோம்.
எ.கா.: நான் பழங்கள், காய்கறிகள், மற்றும் தானியங்களை வாங்கினேன். (நான் பழங்கள், காய்கறிகள், தானியங்கள் வாங்கினேன். இப்படியும் எழுதலாம்)
அறிவியல் களஞ்சியம் :

மோனல்

* இந்த பறவை அதிகம் காணப்படும் இடம் இந்தியாவில் இமாச்சலப் பிரதேசம் ஆகும்.


* இது இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களின் மாநில பறவை ஆகவும் நேபாளத்தின் தேசிய பறவை ஆகவும் உள்ளது.


* இது இந்தியா தவிர பாகிஸ்தான் மற்றும் நேபாளத்தில் அதிகம் காணப்படுகிறது.


* ஆண் பறவை அழகிய பல வண்ணங்களிலும் பெண் பறவை வண்ணமற்று சாதாரணமாகவும் காணப்படும்.


* இதன் அழகிய இறகுகளுக்காக வேட்டை ஆட படுவதால் அழியும் நிலையில் உள்ளது.


டிசம்பர் 11

சுப்பிரமணிய பாரதி  அவர்களின் பிறந்தநாள்

சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர்.

பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். எட்டப்ப நாயக்கர் மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சி, கலைமகள் எனப் பாெருள்படும் பாரதி என்ற பட்டம் வழங்கினார். பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949-ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமை ஆக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும்.இவரை சிந்துக்குத் தந்தை, செந்தமிழ்த் தேனீ, புதிய அறம் பாட வந்த அறிஞர், மறம் பாட வந்த மறவன் என்றெல்லாம் பாரதிதாசன் இவரைப் புகழ்ந்துள்ளார். இவர் இந்தியா, விஜயா முதலான இதழ்களை நடத்தி, விடுதலைப் போருக்கு வித்திட்டவர்.

பாரதி, இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். பால கங்காதர திலகர், உ. வே. சாமிநாதையர், வ. உ. சிதம்பரம் பிள்ளை, மகான் அரவிந்தர் முதலியோர் இவரின் சமகாலத்தைய மனிதர்கள் ஆவர். இவர் விவேகானந்தரின் சீடரான, சகோதரி நிவேதிதையைத் தமது குருவாகக் கருதினார்.

பிரணப் குமார் முகர்ஜி அவர்களின் பிறந்தநாள்






பிரணப் குமார் முகர்ஜி (Pranab Mukherjee, வங்காள: প্রণব কুমার মুখার্জী, 11 திசம்பர் 1935 - 31 ஆகத்து 2020) (சுருக்கமாக பிரணாப் முகர்ஜி), இந்திய அரசியல்வாதி. 13 ஆவது இந்தியக் குடியரசுத் தலைவராக 2012 முதல் 2017 வரை பதவி வகித்தவர். மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மூத்த காங்கிரசு அரசியல்வாதியான பிரணப், குடியரசுத் தலைவர் ஆகும் முன்னர் மன்மோகன் சிங் அரசில் நிதி அமைச்சர் ஆக இருந்தார்.2012ஆம் ஆண்டு சூலையில் நடந்த இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் பதியப்பட்ட 10,29,750 வாக்குகளில் 69.3% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சூலை 25, 2012 அன்று இந்தியக் குடியரசின் பதினான்காவது குடியரசுத் தலைவராகப் (பதின்மூன்றாவது நபராக) பொறுப்பேற்றார்.

பன்னாட்டு மலை நாள்

பன்னாட்டு மலை நாள் (International Mountain Day) ஆண்டுதோறும் டிசம்பர் 11 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. பன்னாட்டு மலைகள் நாளை ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு முன்னின்று நடத்து வருகிறது.

மலைகளைப் பாதுகாக்கவும், மலைப்பிரதேசங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தவும், மலையின் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், 2002ஆம் ஆண்டில் மலைகளின் கூட்டாளி என்கிற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு உலகம் முழுவதும் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இவ்வமைப்பின் முயற்சியால் 2002 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அவை டிசம்பர் 11 ஆம் நாளை பன்னாட்டு மலைகள் நாளாக அறிவித்தது.

நீதிக்கதை

அன்னையின் வளர்ப்பு

நோபல் பரிசு பெற்ற ஒரு விஞ்ஞானி இளம் வயதிலேயே சிறந்த அறிவாளியாக விளங்கினார். ஆனால் எந்த வேலையையும் ஒருமைப்பாட்டுடன் செய்யவில்லை. அவரின் போக்கை கண்ட அவரின் தாயார் மிகவும் வருந்தினார். ஒருநாள் அவரை அழைத்து பூதக்கண்ணாடியையும் சில காகிதங்களையும் கொண்டுவரசொல்லி, காகிதங்களை கீழே போட்டு கண்ணாடியை வெயிலில் காட்டினார்.

பூதக்கண்ணாடியை பிடித்த தாயின் கைகள் இங்கும் அங்குமாய் அசைந்து கொண்டிருந்தது. நீண்ட நேரத்திற்கு பிறகு தனது கைகளை பூதக்கண்ணாடியின் ஒளிக்குவியல் காகிதத்தின் மேல்படுமாறு நீட்டினார். ஒளியின் ஒருமுனையில் தீ காகிதத்தை எரித்தது. இதை கவனத்துடன் பார்த்த இந்த விஞ்ஞானி ஆச்சரியப்பட்டார். அப்போது தாயார் கூறினார். ஒருமுகபடுத்திய ஒளிக்கதிர்கள் நெருப்பாகி காகிதத்தை எரிக்கும்.

ஆனால் ஒருமுகபடுத்தாத கதிரின் ஒளியில் நெருப்பு உண்டாகாது. அதுபோல் நீயும் உள்ளத்தை ஒருமுகபடுத்தினால் எந்த வேலையிலும் வெற்றி அடையலாம் என தாயார் அவருக்கு அறிவுரை கூறினார். இந்த விஞ்ஞானி தனது மனதில் தாயாரின் வார்த்தைகளை வைத்துக்கொண்டார். அன்று முதல் மன ஒருமைப்பாட்டுடன் தனது செயல்களை செய்ய தொடங்கினார். பிற்காலத்தில் உலகமே போற்றும் சர். சி. வி இராமன் ஆனார்.

இன்றைய செய்திகள்

11.12.2025

⭐தமிழகத்தில் 40 சிப்காட் தொழில் பூங்காக்கள் உள்ள நிலையில் மேலும் 21 இடங்களில் தொழில் பூங்கா அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

⭐இந்தியாவின் யுபிஐயில் 2024-25 நிதியாண்டில் 12,930 கோடி பரிவர்த்தனைகள் நடந்துள்ளது. இந்தியாவின் யுபிஐ பரிவர்த்தனை முறை உலகளவில் 49% பங்கைக் கொண்டுள்ளது

⭐2025-ல் இதுவரை 85 ஆயிரம் விசாக்கள் ரத்து செய்துள்ளது. வெளிநாட்டினருக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கும் அமெரிக்கா

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀பேட்டிங் தரவரிசையில் இந்திய வீரர் ரோகித் சர்மா (781 புள்ளிகள்) முதலிடத்தில் தொடர்கிறார். விராட் கோலி (773 புள்ளிகள்) இரு இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார்.

🏀3 வடிவ கிரிக்கெட்டிலும் சாதித்த ஒரே இந்திய வீரர்- வரலாறு படைத்த பும்ரா. தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக நேற்றைய ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Today's Headlines

⭐While there are 40 SIPCOT industrial parks in Tamil Nadu,  the Tamil Nadu government is taking steps to set up industrial parks in 21 more locations.

⭐India's UPI transactions reached 12,930 crore in the financial year 2024-25.  India's UPI transaction system has a 49% share globally

⭐85,000 visas have been canceled so far in 2025. The United States imposes strict restrictions on foreigners

SPORTS NEWS

🏀Indian batsman Rohit Sharma (781 points) continues to lead the batsmen rankings. Virat Kohli (773 points) has moved up two places to take second place.

🏀The only Indian player to achieve in all 3 formats of cricket - Bumrah creates history. Jasprit Bumrah took 2 wickets against South Africa yesterday.  He has taken 100 wickets in T20 cricket.

Covai women ICT_போதிமரம்

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

TNTET 2026: தமிழ் முழுமையான மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) online full test - 1

TNTET 2025 - தமிழ் முழு மாதிரித் தேர்வு - Zeal Study TNTET 2025: தமிழ் மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) இயல் 3: அறிவியல் ஆத்திச்சூடி | எந்திர மனிதன் | ஒளி பிறந்தது | இலக்கணம் 1. புதிய ஆத்திச்சூடி எழுதியவர் யார்? ஔவையார் பாரதியார் கவிமணி நெல்லை சு. முத்து விடை விடை: B. பாரதியார் 2. 'தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்' என அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப்பெற்றவர்? விக்ரம் சாராபாய் மயில்சாமி அண்ணாதுரை நெல்லை சு. முத்து சிவன் விடை விடை: C. நெல்லை சு. முத்து 3. 'ஔடதம்' என்பதன் பொருள் யாது? உணவு நீர் காற்று மருந்து விடை விடை: D. மருந்து 4. 'இயன்றவரை' என்ற சொல்லின் பொருள்? ...

Zeal study TNTET 2026: குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - மாதிரி தேர்வு -1

TNTET 2026 உளவியல் மாதிரித் தேர்வு Zeal study TET 2026: குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - 1 மீண்டும் தேர்வு எழுதவும்

Zeal study TET / TRB Psychology உளவியல் (அறிவுப்புல வளர்ச்சி) online test

TET 2025 - உளவியல் அலகு 3 ஆன்லைன் தேர்வு - Zeal Study உளவியல் அலகு 3: அறிவுப்புல வளர்ச்சி TET / TRB / TNPSC - முக்கிய வினாக்கள் (15 Questions) 1. கவனித்தலின் முதல் அடிப்படை நிலை எது? புலன் காட்சியறிதல் சிந்தித்தல் கற்பனை செய்தல் விடையைக் காட்டு விடை: புலன் காட்சியறிதல். 2. கவனித்தலை தீர்மானிக்கும் அகக்காரணி எது? நாட்டங்கள் புதுமை அளவு விடையைக் காட்டு விடை: நாட்டங்கள். 3. கவன வீச்சை அளவிடப் பயன்படும் கருவி எது? டச்சிடாஸ்கோப் எர்கோகிராப் ஆடியோமீட்டர் விடையைக் காட்டு விடை: டச்சிடாஸ்கோப் (Tachistoscope). ...

TNTET 2026: தமிழ் - பகுதி 1 முக்கியக் குறிப்புகள் (Study Materials) - இன்பத்தமிழ், தமிழ்க்கும்மி மற்றும் வளர்தமிழ்

  TNTET 2026: தமிழ் - பகுதி 1 முக்கியக் குறிப்புகள் (Study Materials) இந்தக் குறிப்புகள் இன்பத்தமிழ் , தமிழ்க்கும்மி மற்றும் வளர்தமிழ் ஆகிய பாடங்களை எளிதாக மீள்பார்வை (Revision) செய்ய உதவும்.

Zeal study LO Based Lesson plan For -6th Tamil - Term 3 பாதம்

நமது Zeal study  வழக்கம் போல் இந்த பருவத்திற்கான பாடக்குறிப்பை வாரந்தோறும் வழங்கும். அந்த வகையில் இந்த வார பாடக்குறிப்பை இந்த பதிவில் வழங்கியுள்ளோம். இது உங்களுக்கு உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தி உங்கள் கற்பித்தல் பணி பாதிக்காதவாறு உங்களின்

Followers