டெட் தேர்ச்சி சிறுபான்மை பள்ளிகளில் 470 ஆசிரியர்களுக்கு விலக்கு
ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெறுவதிலிருந்து சிறுபான்மை பள்ளிகளைச் சேர்ந்த 470 ஆசிரியர்களுக்கு விலக்கு அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பி.சந்தர மோகன் வெளியிட்ட அரசாணை:
அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் பள்ளி நிர்வாகங்களால் நியமிக்கப்பட்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் பணிபுரிந்து வரும் 470 ஆசிரியர்களுக்கு கல்வித் தகுதி உள் ளிட்ட இதர விவரங்களின் உண்மைத் தன்மை உறுதி செய்த பின்னர், தொடர்புடைய அதிகாரம் பெற்ற அலுவலர்களால் நியமன ஏற்பு வழங்க ஒப்புதல் அளிக்கப்படுகிறது.
உச்சநீதிமன்றம் வழங்கிய ஆணையைக் கருத்தில் கொண்டும், மாநில அரசின் தலைமை வழக்குரைஞரிடமிருந்து பெறப்பட்ட சட்டக் கருத் தின் அடிப்படையிலும் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குபடுத் தும் விதிகள் 2023 நடைமுறைப்படுத்தப்பட்ட 13.12.2023-க்கு முன் னர் அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மைப் பள்ளிகளில் ஆசிரியர் தகு தித்தேர்வு தேர்ச்சி பெறாமல் பணிபுரிந்துவருபவர்களுக்கு நியமன ஒப் புதல் அளிக்க கோரும் பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருவை ஏற்று இந்த ஆணை வெளியிடப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அரசாணை மூலம் சிறுபான்மை பள்ளிகளைச் சேர்ந்த 316 பட்டதாரி ஆசிரியர்களுக்கும், தொடக்கக் கல்வி இயக்ககத் தின் கட்டுப்பாட்டில் உள்ள 154 ஆசிரியர்களுக்கும் என 470 ஆசி ரியர்களுக்கு டெட் தேர்ச்சியிலிருந்து விலக்களிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment