Skip to main content

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.11.2025

 Zeal study official school morning prayer activities

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.11.2025



உலக சுனாமி விழிப்புணர்வு நாள் (World Tsunami Awareness Day)






திருக்குறள்:

குறள் 408:

நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு.

விளக்க உரை:

கல்லாதவனிடம் சேர்ந்துள்ள செல்வமானது, கற்றறிந்த நல்லவரிடம் உள்ள வறுமையைவிட மிகத்துன்பம் செய்வதாகும்.

பழமொழி :
Curiosity is the spark of knowledge.

ஆர்வமே அறிவின் தீப்பொறி.

இரண்டொழுக்க பண்புகள் :

1.கடமை தவறாமல் உதிக்கும் சூரியன் போல நானும் எனது கடமையை தவறாமல் செய்வேன்.

2.கனி தரும் மரங்கள் போல நானும் பலன் எதிர்பாராமல் மற்றவருக்கு உதவி செய்வேன்.

பொன்மொழி :

உனக்குத் தேவையான எல்லா வலிமையும் உதவியும் உனக்குள்ளேயே உள்ளன - சுவாமி விவேகானந்தர்.

பொது அறிவு :

01.மனித சிரிப்பு போன்ற ஒலியை எழுப்பும்பறவை எது?

கூக்காபுரா- kookaburr

02.உலகிலேயே மிகப்பெரிய வளைகுடா எது?

மெக்சிகோ வளைகுடா
Gulf of Mexico
English words :

Drenched-completely socked

candid-honest and straightforward

தமிழ் இலக்கணம்:

வல்லினம் மிகா இடங்கள்.

1. அது, இது, அவை, எவை என்னும் சுட்டுச் சொற்களின் பின்னும், எது, எவை என்னும் வினாச்சொற்களின் பின்னும் வல்லினம் மிகாது.

அது + பறந்தது = அது பறந்தது.
அவை + பறந்தன = அவை பறந்தன.
எது + தங்கம் = எது தங்கம்
எவை + சென்றன = எவை சென்றன.
நவம்பர் 05

விராட்கோலி அவர்களின் பிறந்தநாள்

விராட் கோலி (பிறப்பு: நவம்பர் 5, 1988) ஓர் இந்தியத் துடுப்பாட்டவீரர் ஆவார். இந்திய அணியின்,ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளின் முன்னாள் தலைவருமாவார்.வலது கை மட்டையாளரான இவர் சர்வதேச சிறந்த துடுப்பாட வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். விராட் கோலி பல விருதுகளைப் பெற்றுள்ளார். குறிப்பாக 2017 ஆம் ஆண்டு சோபர்ஸ் விருது , 2012 ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட வீரர் விருது, 2016மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் சிறந்த வீரராக விசுடன் விருது . இவரின் சிறப்பான பங்களிப்பிற்காக இந்திய அரசு இவருக்கு அர்ஜுனா விருது வழங்கியது. 2017 ஆம் ஆண்டில் விளையாட்டுத் துறை பிரிவில் பத்மஶ்ரீ விருது வழங்கியது.. துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடுவது மட்டுமல்லாது இந்தியன் சூப்பர் லீக் போட்டித் தொடரில் எஃப்சி கோவா அணி,சர்வதேச டென்னிசு பிரீமியர் லீக் தொடரில் ஐக்கிய அரபு ராயல்ஸ் மற்றும் இந்திய மற்போர் போட்டித் தொடரில் பெங்களூரு யோதாஸ் அணிகளை இணைந்து விலைக்கு வாங்கியுள்ளார். மிகப் பிரபலமான விளையாட்டு வீரர்களில் ஒருவராக இவரை ஈஎஸ்பிஎன்அறிவித்தது. மேலும் மதிப்புமிக்க தடகள வீரர்களில் ஒருவராக இவரை போர்ப்ஸ் இதழ் அறிவித்தது. 2018 ஆம் ஆண்டில் டைம் இதழ் சக்தி வாய்ந்த 100 நபர்களில் ஒருவராக இவரை அறிவித்தது.[]ஏப்ரல் 22, 2021இல் ஐபிஎல் போட்டிகளில் 6,000 ஓட்டங்களை எடுத்த முதல் வீரர் எனும் சாதனை படைத்தார்.
உலக சுனாமி விழிப்புணர்வு நாள் (World Tsunami Awareness Day)

உலக சுனாமி விழிப்புணர்வு நாள் (World Tsunami Awareness Day) ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதம் 5 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது. சுனாமியின் அபாயகரமான விளைவுகள், சுனாமி முன்னெச்சரிக்கை மற்றும் சுனாமியின் முக்கியத்துவத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்நிகழ்வு நடத்தப்படுகிறது.சுனாமி பாதிப்புகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் அது குறித்த பாதிப்பை பெருமளவில் குறைக்க முடியும் என்பதே இதன் நோக்கமாகும்.

நீதிக்கதை

ஒரு அழகான காடு இருந்தது. அந்த காட்டில் பல விதமான பறவைகளும் விலங்குகளும் வசித்து வந்தன. ஆனால் மனிதர்கள் காட்டை வெட்டி வெட்டி அதை அழித்து விட்டதால் மழை பெய்வது குறைந்துவிட்டது. ஒரு குறிப்பிட்ட காலத்திலே  காடு பாலைவனமாக மாறிவிட்டது. எனவே எல்லா விலங்குகளும் பறவைகளும் அந்த இடத்தை விட்டு சென்று விட்டன.

ஒரே ஒரு குருவி மட்டும் அந்த பாலைவனத்திலே விடாமல் இருந்து வந்தது. ஆனால் அந்த குருவிக்கு உணவு கிடைக்கவில்லை அதிக வெயில் அதிக வெப்பம் தண்ணீர் கூட இல்லாத நிலையிலே அந்த குருவிக்கு ஒதுங்குவதற்கு பாறைகள் தான் இருந்தது. உணவும் இல்லாமல் தண்ணீரும் இல்லாமல் அந்த குருவி மிகுந்த கஷ்டத்தை அனுபவித்து வந்தது. பெலவீனம் ஆகி விட்டது. இப்பொழுது அதனால் பறந்து செல்லவும் முடியவில்லை. இவ்வாறு அனுதினமும் கஷ்டத்தை அடைந்து வந்தது.

அப்பொழுது ஒரு நாள் ஒரு புறா அதைக் கடந்து சென்றது இப்பொழுது குருவி மிகுந்த மெல்லிய குரலிலே “புறா அண்ணா புறா அண்ணா” என்று கூப்பிட்டது.  புறாவிற்கு அந்த சத்தம் காதிலே விழுந்தது. அது மேலிருந்து கீழே இறங்கி அந்த குருவியின் அருகில் வந்து அமர்ந்து, குருவியிடம் “என்ன குருவி உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டது .  “புறா அண்ணா என்னுடைய நிலையை பாருங்கள். நான் மிகுந்த வெயிலும் மிகுந்த வறண்ட இடத்தில் இருப்பதினால் எனக்கு உணவு இல்லை, நீரில்லை. அதனால் என்னுடைய உடலும் பலவீனம் அடைந்து விட்டது.  எனக்கு என்ன செய்ய என்று தெரியவில்லை தாங்கள் எங்கு செல்கிறீர்கள்?” என்று கேட்டது.

அப்பொழுது புறா “நான் வானுலகத்திற்கு செல்கிறேன்” என்று சொன்னது. அப்பொழுது இந்த குருவி தாங்கள் தயவு கூர்ந்து அங்குள்ள தேவதைகளிடம் “எனக்கு என்ன நடக்கும் என்று கேட்டு சொல்லுங்கள் “ என்று கூறியது. புறாவும் தான் கண்டிப்பாக கேட்டு வந்து செல்வதாக சொன்னது. இப்போது புறா வான் உலகம் சென்றது.

அங்கு உள்ள தேவதைகளிடம் இந்த குருவியின் நிலையை எடுத்துக் கூறியது. இப்பொழுது ஒரு தேவதை சொன்னது “அதற்கு மிகவும் கடினமான வாழ்க்கை தான், ஆனால் இந்த கடின வாழ்க்கையில் இருந்து மீண்டு வருவதற்கு ஒரு விஷயம் உண்டு. அது என்னவென்றால்  என்ன நடந்தாலும் "கடவுளே உங்களுக்கு நன்றி என்று கூற வேண்டும்” என்று கூறியது.

புறாவும் சிறிது நாட்கள்  வானுலகில் இருந்து விட்டு இந்த பாலைவனத்தை கடந்து தன் இருப்பிடத்திற்கு சென்றது. செல்லும் வழியில் பாலைவனத்தில் இறங்கி குருவியை பார்த்து “உன்னுடைய நிலைமையை சொன்னேன் தேவதைகள் சொன்னார்கள் என்ன நடந்தாலும் நீ  கடவுளே நன்றி என்று கூற வேண்டும்" என்று கூறியுள்ளார்கள். எனவே நீ நன்றி கடவுளே என்று கூறு” என்று சொல்லி அறிவுரை சொல்லிவிட்டு பறந்து சென்றது.

இப்பொழுது குருவி நான் எப்படி நன்றி கூறுவேன் என்னுடைய வாழ்வில் எதுவுமே சரியாக இல்லை என்று நினைத்தது. ஆனாலும் தேவதைகளின் வார்த்தைக்கு கீழ்ப்படிய நினைத்தது. அதிகம் சோர்ந்து போயிருந்தது அதனால் நடக்க கூட முடியவில்லை அப்படியே ஒரு பாறைக்கு அடியில் படுத்து கிடந்து “நன்றி ஆண்டவரே இந்த பாலைவனத்திற்கு நன்றி. இந்த வெயிலுக்கு நன்றி இந்த பாறைக்கு நன்றி என்று நன்றி நன்றி” என்று கூறிக் கொண்டே இருந்தது.

இப்படியாக இரண்டு மூன்று நாட்கள் கடந்து சென்றது. ஒரு நாள் திடீரென்று அதனுடைய இறக்கையிலும் உடம்பிலும் ஒரு புது பலன் வந்தது போல் இருந்தது. மேலும் மேகங்கள் வந்து நன்கு மழையை பொழிந்தது. மழை பொழிந்ததினால் அந்த இடத்திலே புற்களும் சிறு சிறு செடிகளும் வளர ஆரம்பித்தன.

செடிகளிலிருந்து சிறுசிறு தானியங்களும் அதற்கு கிடைக்க ஆரம்பித்தது. சிறு சிறு செடிகளில் கூட  சிறு சிறு பழங்கள் வந்தது. அதன் பிறகு அங்கொன்றும் இங்கொன்றுமாக மரங்கள் கூட வளர ஆரம்பித்தது.

ஒரு மாதம் கழித்து அந்தப் பக்கமாக வந்த புறா ஆச்சரியப்பட்டு அதிசயப்பட்டு போனது. செழிப்பான பாலைவனம் அருமையான அழகான குருவி. இதற்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள் வேறு ஒன்றும் இல்லை நன்றி உள்ள இருதயம் எப்பொழுதும் செழுமையும் வளமையையும் நம்முடைய வாழ்விலே கொண்டு வரும்.

இன்றைய செய்திகள்

05.11.2025

⭐குடியேற்றம் தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளை கனடா அரசு கொண்டு வந்துள்ளது. இதில் சர்வதேச மாணவர்களுக்கு வழங்கப்படும் விசா எண்ணிக்கையை குறைத்துள்ளது.

⭐பீகார் சட்டசபை தேர்தல்:
முதல்கட்டமாக 121 தொகுதிகளில் பிரசாரம் நிறைவு

⭐சத்தீஸ்கரில் சரக்கு ரெயில்மீது பயணிகள் ரெயில் மோதல்: 6 பேர் பலி

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀ஐசிசி தரவரிசை: தென்ஆப்பிரிக்கா கேப்டன் லாரா வால்வார்த் முதலிடம் பிடித்தார்.

Today's Headlines

⭐ The Canadian government has introduced various immigration restrictions, including reducing the number of visas issued to international students.

⭐Bihar Assembly Elections: First phase of campaigning ends in 121 constituencies

⭐Passenger train collides with freight train in Chhattisgarh: 6 killed.

SPORTS NEWS

🏀ICC Rankings: South Africa captain Laura Walworth remains at number one.

Covai women ICT_போதிமரம்

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

Zeal study Whatsapp groups links

CLiCK The below groups name to join the group Zeal study Class wise groups links  kindly join in any one groups in these groups class suitable messages will be shared  Join our Zeal study Official Telegram channel for all latest updates https://t.me/zealstudyofficial Follow our Whatsapp channel  https://whatsapp.com/channel/0029Va9B0NY5q08hCHKk8A19 for classes 1-5 materials Zeal study primary WhatsApp  groups links   Zeal study primary group 6 https://chat.whatsapp.com/JsUkig72NCbEfK0GtsoNg3 Zeal study primary group 1 https://chat.whatsapp.com/I5zmYprrqzh0hQHrRkqO6R Zeal study primary group 2 https://chat.whatsapp.com/Gs5xFU3kgzdIaQ8xExUrp4 Zeal study primary group 3 https://chat.whatsapp.com/KPoGHVgwlmkKCoUcX8J5yY Zeal study primary group 4 https://chat.whatsapp.com/KughukPr6yN4prnKWWNgB3 Zeal study primary group 5 https://chat.whatsapp.com/LYKowdSHZnT7vTM797PmLu For classes 6-8 Zeal study 6-8   WhatsApp  groups links For 6 ,7&8 handling...

Zeal Study Lesson Plan 6,7,8,9,10 Collection 2024-25 Learning Out Comes Based Lesson Plan

Zeal study lesson plan colllection   6,7,8,9.10 Tamil Lesson plan 6,7,8,9.10 English Lesson plan 6,7,8,9.10 Maths Lesson plan   6,7,8,9.10 Science Lesson plan 6,7,8,9.10 Social science Lesson plan Join our Whatsapp groups click here

PDF Answer keys for 9,8,7&6 th std all subjects Bridge course worksheets updated by Zeal study

6th Standard Bridge  course  answer keys All subjects pdf download  click here  7th Standard Bridge  course  answer keys All subjects pdf download  click here 8th Standard Bridge  course  answer keys All subjects pdf download  click here  9th Standard Bridge  course  answer keys All subjects pdf download  click here 9th Tamil worksheet 1 answer key pdf download click here 9th Tamil worksheet 2 answer key pdf download click here 9th Tamil worksheet 3 answer key pdf download click here 9th Tamil worksheet 4 answer key pdf download click here 9th Tamil worksheet 5 answer key pdf download click here 9th Tamil worksheet 6 answer key pdf download click here 9th Tamil worksheet 7 answer key pdf download click here 9th Tamil worksheet 8 answer key pdf download click here 9 th Tamil worksheet 9 answer key pdf click here 9 th Tamil worksheet 10 answer key pdf click here 9 th Tamil worksheet 11 answer key pdf click here ...

Followers