Zeal study official school morning prayer activities
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.11.2025
திருக்குறள்:
குறள் 401:
அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய நூலின்றிக் கோட்டி கொளல்.
விளக்க உரை:
அறிவு வளர்ச்சிக்கு ஏற்ற நூல்களைக் கல்லாதவர், கற்றவர் அவையில் பேசுவது, கட்டம் போடாமல் தாயம் உருட்டுவது போலாம்.
பழமொழி :
A minute today saves an hour tomorrow.
இன்றைய ஒரு நிமிடம் நாளைய ஒரு மணி நேரத்தை காப்பாற்றும்.
இரண்டொழுக்க பண்புகள் :
1.கடமை தவறாமல் உதிக்கும் சூரியன் போல நானும் எனது கடமையை தவறாமல் செய்வேன்.
2.கனி தரும் மரங்கள் போல நானும் பலன் எதிர்பாராமல் மற்றவருக்கு உதவி செய்வேன்.
பொன்மொழி :
புத்தகத்தில் உலகை படித்தால், அறிவு செழிக்கும் .உலகத்தையே புத்தகமாய் படித்தால், அனுபவம் தழைக்கும் - கலைஞர் .மு .கருணாநிதி
பொது அறிவு :
01.சலீம் அலி பறவைகள் சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?
மகாராஷ்டிரா -சத்ரபதி சாம்பாஜி
Maharashtra -Chhatrapati Sambhaji
02. பூமி தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
ஏப்ரல் 22 - April 22
English words :
encourage-inspire
end-terminate
தமிழ் இலக்கணம்:
தகராறுக்கு முதலில் எந்த ‘ர’ போடவேண்டும் என்பதை நினைவில் கொள்ள தகராறு எப்பவும் சிறியதா ஆரம்பிச்சு பிறகுதான் பெரியதா முடியும். அதனால் முதலில் சின்ன ‘ர’ போடுங்க , அப்பறம் பெரிய ‘ற ‘ போடுங்க!
அறிவியல் களஞ்சியம் :
பெண்கள் கருத்தரிக்கும் பொழுது, கர்ப்பப்பையானது, அதன் சாதாரண நிலையை விட 500 முறை விரிவடைகிறது.
மனித உடலில் உள்ள கல்லீரானது 500 விதமான வேலைகளை செய்கிறது.
நவம்பர் 04
வில்ஃபிரட் ஓவன் (Wilfred Owen, பி. மார்ச் 18, 1893 - இ. நவம்பர் 4, 1918) ஒரு ஆங்கிலக் கவிஞர் மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் படைவீரர். இவர் முதலாம் உலகப் போரின் முக்கியமான கவிஞர்களுள் ஒருவராக கருதப்படுகிறார். போர் நடந்த காலகட்டத்தில் போரையும் அதன் பின்னணி அரசியலையும் ஆதரித்து பரப்புரைக் கவிதைகளே வெளியாகிக் கொண்டிருந்த காலகட்டத்தில், போர் முனையிலிருந்து கொண்டே போரின் கடுமையினையும் உண்மையையும் பிரதிபலிக்கும் வண்ணம் ஓவன் எழுதிய கவிதைகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. ஓவனின் நண்பரும் சக கவிஞருமான சிக்ஃபிரைட் சாசூன் சாதாரண போர் வீரனாக இருந்த ஓவனைக் கவிதை எழுதத் தூண்டினார். பதுங்கு குழி போர் முறையின் கொடூரங்களையும், நச்சுப்புகை தாக்குதல்களின் அவலங்களையும் ஓவனின் கவிதைகள் துல்லியமாக படம்பிடித்துக் காட்டின. 1918ல் போர் முடிவதற்கு ஒரு வாரம் முன்னர் போர்க்களத்தில் ஓவன் கொல்லப்பட்டார். 1919ல் அவரது கவிதைகள் அடங்கிய தொகுப்பு வெளியானது. வெளியாகி சுமார் நூறாண்டுகள் கடந்த பின்னரும், போர்க் கவிதை மரபில் ஓவன் அழியாத இடம் பெற்றிருக்கிறார். அவரது கவிதைகள் உலகெங்கும் பல கல்லூரிகள் மற்றும் பள்ளிகளின் பாடத்திட்டங்களில் இடம் பெற்று வருகின்றன.
நீதிக்கதை
ஒரு காட்டில் எறும்புகள் கூட்டம் கூட்டமாக வாழந்து வந்தன. அதில் ஒரு செவ்வெறும்பும் கட்டெறும்பும் நண்பர்களாக இருந்தன. இரை தேட போகும் போது இருவரும் ஒன்றாகவே செல்வார்கள்.
செவ்வெறும்புக்கு உணவு கிடைக்காத நாளில் கட்டெறும்பு தனக்கு கிடைத்த உணவை கொடுத்து உதவும். அது போலவே பதிலுக்கு செவ்வெறும்பும் கட்டெறும்புக்கு உதவும்.
ஒரு நாள் இருவரும் இரை தேடி அலைந்து கொண்டிருந்தனர். எங்கேயும் உணவு கிடைக்கவில்லை. கடைசியாக ஒரு குளத்தின் கரையில் இருந்த மாமரத்தைப் பார்த்தன. அதில் நிறைய மாம்பழங்கள் பழுத்து தொங்கி கொண்டிருந்தன.
இரண்டு எறும்புகளும் பசியாக இருந்ததால் மாமரத்தில் ஏறி ஒரு மாம்பழத்தின் மீது அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தன. திடிரென்று ஒரு பெருங்காற்று வீச அந்த மாம்பழம் குளத்தில் விழுந்தது. இரண்டு எறும்புகளும் தண்ணீரில் தத்தளிக்க ஆரம்பித்தன. ‘ நண்பா இப்படி வந்து தண்ணீரில் விழந்துட்டோமே. இப்ப என்ன பண்றது’ என்றது செவ்வெறும்பு.
‘நிச்சயம்; எதாவது உதவி கிடைக்கும். அது வரை நீந்திட்டே இருப்போம்’ என்றது கட்டெறும்பு.
நேரமாகிக் கொண்டே இருந்தது. எந்த உதவியும் கிடைக்கவில்லை. இரண்டு எறும்புகளும் நீந்தி நீந்தி சோர்ந்து போயின. ‘நண்பா இவ்வளவு நேரம் நீந்தியதில் கை, கால்கலெல்லாம் சக்தியில்லாம போய்விட்டது. இதற்கு மேல் என்னால் நீந்த முடியாது. தண்ணீரில மூழ்கி இறக்கத்தான் போகிறேன்'’ என்றது செவ்வெறும்பு.
‘இல்லை இல்லை அப்படி சொல்லாதே. இன்னும் கொஞ்ச நேரம் போராடு நிச்சயம்; எதாவது உதவி கிடைக்கும்’ என்றது கட்டெறும்பு.
‘இனி எந்த உதவியும் கிடைக்க போவதில்லை. நான் சாக தான் போகிறோம் என்று தண்ணீரில் மூழ்கி உயிரை விட்டது’ செவ்வெறும்பு.
எதாவது உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் போரடிக் கொண்டே இருந்தது கட்டெறும்பு. ஒரு கட்டத்தில் கை, கால்கள் பயங்கரமாக வலிக்க ஆரம்பித்தது. இனி நம்மால் முடியாது. செத்து போய் விடுவோமோ என்று தோன்றியது.
‘செத்து போவதுக்காகவா பிறந்தாய். வாழ்க்கைனாலே பிரச்சனைகள் நிறஞ்சது தான். அதுக்கு பயந்தா வாழ முடியாது. அதனால துணிச்சலோடு போராடு’ என்று சொன்னது உள்மனசு.
கட்டெறும்பு துணிச்சலோடு போரட தொடங்கியது. சிறிது நேரம் கழித்து காற்று அடிக்க மரத்திலிந்து ஒரு இலை கட்டெறும்பு பக்கதில் விழுந்தது. உடனே கட்டெறும்பு இலையில் ஏறி அமர்ந்து அதை படகாக பயன்படுத்தி கரையேறியது.
இதை பார்த்த குளத்தில் இருந்த மீன் கட்டெறும்பை பார்த்து சொன்னது
‘நீ துணிச்சலோடு விடாமல் போரடினாய் அதனால் வென்றாய். வாழ்த்துக்கள் நண்பா’.
இன்றைய செய்திகள்
04.11.2025
⭐வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை- தேர்தல் ஆணையம்
⭐ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: உயிரிழப்பு 20 ஆக அதிகரிப்பு-320 பேர் காயம்
⭐45 பாலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்தது இஸ்ரேல்
🏀 விளையாட்டுச் செய்திகள்
🏀இந்திய வேகப்பந்து வீச்சு வீராங்கனை கிராந்தி கௌட்டுக்கு ரூ.1 கோடி பரிசு அறிவித்த மத்திய பிரதேச அரசு
Today's Headlines
⭐No one need to worry about the revision of the voter list said by Election Commission
⭐Afghanistan earthquake , Death toll rises to 20 and 320 injured
⭐Israel hands over bodies of 45 Palestinians
*SPORTS NEWS*
🏀The Madhya Pradesh government has announced a prize of Rs. 1 crore for Indian fast bowler Kranti Gaud.
Covai women ICT_போதிமரம்
Comments
Post a Comment