Skip to main content

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 26.11.2025

 

Zeal study official school morning prayer activities
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 26.11.2025










திருக்குறள்:

குறள் 491:

தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்னல் லது

விளக்க உரை:

முற்றுகை செய்வதற்கு ஏற்ற இடத்தைக் கண்டபின் அல்லாமல் எச் செயலையும் தொடங்கக்கூடாது, பகைவரை இகழவும் கூடாது.

பழமொழி :
The fire that burns you,forges you.

உன்னை எரிக்கும் தீ தான் உன்னை உருவாக்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1.கல்வி கற்பது பணம் சம்பாதிக்க மட்டும் அல்ல, அறிவை வளர்க்கவும் தான்.

2.எனவே படித்து எனது அறிவை வளர்த்துக் கொள்வேன்.

பொன்மொழி :

ஆயிரம் ஆண்டு காலம் அடிமையாக வாழ்வதை விட அரை நிமிடம் சுதந்திர மனிதனாக வாழ்ந்து இறப்பது சிறந்தது

  Dr. அம்பேத்கர்

பொது அறிவு :

01.உலகிலேயே பருப்பு வகைகளை அதிகளவில் உற்பத்தி செய்யும் நாடு எது?

  இந்தியா - India

02.தமிழ்நாடு சட்டப் பேரவையின் தற்போதைய சபாநாயகர்யார்?

  திரு. மு. அப்பாவு-Thiru. M. Appavu

English words :

incessant-constant

Androit-skillful

தமிழ் இலக்கணம்:

1. குறிலைத் தொடர்ந்து இடையின 'ர' கர மெய் வரவே வராது ஆனால் வல்லின 'ற' கரம் வரும்
எ.கா. கர்மம் –தவறு
அர்ச்சனை –தவறு.
கருமம், அருச்சனை என்றே எழுத வேண்டும்
விற்பனை, கற்சிலை, குற்றம், கற்றான்

2. கருப்பு என்பது பஞ்சத்தை குறிக்கும் நிறத்தை அல்ல.


       கறுப்பு என்ற வார்த்தையே நிறத்தை குறிக்கும்
அறிவியல் களஞ்சியம் :

ஆண்களை விட பெண்களால் அதிக நிறங்களை காண முடியும்!

வண்ணங்களை வகைப்படுத்தி காணும் திறன் ஆனது மரபணுக்கள் எக்ஸ் குரோமோசோமில் காணப்படுகின்றன. இவ்வகை எக்ஸ் குரோமோசோம்கள் ஆனது பெண்களுக்கு இரண்டும், ஆண்களுக்கு ஒன்றும் இருக்கிறது. ஆக பெண்களால் ஆண்களை விட அதிக அளவில் வண்ணங்களை பிரித்து பார்க்க முடியும்.

நவம்பர் 26

இந்திய அரசியல் சாசன தினம் அல்லது இந்திய அரசியலமைப்பு நாள் (Constitution Day Of India) அல்லது சட்ட தினம்(Law Day) எனப்படும் இந்நாள், 2015 நவம்பர் 26 ஆம் திகதியன்று முதல் முறையாக  அனுசரிக்கப்பட்டது. மேலும் இந்திய அரசியலமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையிலும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட தினமான நவம்பர் 26 ஆம் நாளை, அரசியலமைப்பு தினமாக, கொண்டாடப்படுவதாக அறியப்படுகிறது.

இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் வரைவுக்குழுவின் தலைவராக செயற்பட்ட டாக்டர் அம்பேத்கர் அவர்களை கௌரவிக்கும் விதமாகவும், நினைவுகூரும் வகையிலும் மற்றும் இந்திய அரசியலமைப்புக்காக அயாரதுழைத்த அனைவருக்கும் மரியாதை செய்யும் விதமாகவும்   இந்திய அரசால் 2015 ஆம் ஆண்டு, நவம்பர் 26 இல் அரசியல் சாசன தினம் துவக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.
நீதிக்கதை

சிறுவனின் தன்னம்பிக்கை

ஒருவரின் விலை உயர்ந்த சீருந்தை (கார்) ஒரு சிறுவன் வியப்புடன் பார்ப்பதை பார்த்தார், அந்த சிறுவனின் ஆசையை அறிந்து கொண்ட அவர் சிறுவனை உக்காரவைத்து கொஞ்ச தூரம் ஓட்டினார்.

உங்களின் வாகனம் மிக அருமையாக இருக்கிறது , என்ன விலை என சிறுவன் கேட்டான். அவரோ தெரியவில்லை, இது என் சகோதரன் எனக்கு பரிசளித்தது என்றார் அந்த மனிதர்.

அப்படியா!! அவர் மிகவும் நல்லவர் என சிறுவன் சொல்ல, நீ என்ன நினைக்கிறாய் என எனக்குத்தெரியும், உனக்கும் என் சகோதரனைப்போல் ஒரு சகோதரன் வேண்டும் என நினைக்கிறாய் அல்லவா? என்றார்.

சிறுவன் சொன்னான். இல்லை, நான் அந்த உங்களின் சகோதரனைப்போல் இருக்கவேண்டும் என நினைக்கிறேன் என்றான்.

இன்றைய செய்திகள்

26.11.2025

⭐கோவையில் செம்மொழி பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

⭐காற்று மாசு அதிகரிப்பு எதிரொலி:
டெல்லியில் அரசு, தனியார் அலுவலகங்களில் 50% வீட்டிலிருந்தே வேலை

⭐பள்ளி, கல்லூரிகளில் அரசியல் அமைப்பு சட்டத்தின் முகப்புரையை வாசிக்க மு.க.ஸ்டாலின் உத்தரவு

⭐16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த (டிசம்பர் 10 முதல்) ஆஸ்திரேலியாவில் தடைவிதிக்கப்ப ட்டுள்ளது போல டென்மார்க் & மலேஷியாவும் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடைவிதிக்க திட்டமிட்டுள்ளன.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀டி20 உலக கோப்பை அட்டவணை வெளியீடு: பிப்ரவரி 15 ஆம் தேதி மோதும் இந்தியா-பாகிஸ்தான். டி20 உலக கோப்பையில் 20 நாடுகள் பங்கேற்கின்றன.

Today's Headlines

⭐Chief Minister M.K. Stalin inaugurated the Semmozhi Park in Coimbatore.

⭐Increasing air pollution in New Delhi,  50% of government and private offices to proceed with their work from home.

⭐M.K. Stalin ordered to read the preamble of the Constitution in schools and colleges.

⭐Denmark & ​​Malaysia are also planning to ban social media use by those under 16 (as of December 10), similar to Australia's ban on social media use by those under the age of 16.

SPORTS NEWS

🏀T20 World Cup schedule released: India-Pakistan to clash on February 15 .
20 countries are participating in the T20 World Cup.

Covai women ICT_போதிமரம்

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

KALVI TV | TRB_TET | EDUCATONAL PSYCHOLOGY - PART - 01 கல்வி உளவியல் - பகுதி 1

 வணக்கம் நமது கல்வி குழுவின் சார்பாக கல்வி தொலைக்காட்சி பாடங்களில் வாயிலாக நமது அரசு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதும்

TNTET 2026: தமிழ் முழுமையான மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) online full test - 1

TNTET 2025 - தமிழ் முழு மாதிரித் தேர்வு - Zeal Study TNTET 2025: தமிழ் மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) இயல் 3: அறிவியல் ஆத்திச்சூடி | எந்திர மனிதன் | ஒளி பிறந்தது | இலக்கணம் 1. புதிய ஆத்திச்சூடி எழுதியவர் யார்? ஔவையார் பாரதியார் கவிமணி நெல்லை சு. முத்து விடை விடை: B. பாரதியார் 2. 'தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்' என அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப்பெற்றவர்? விக்ரம் சாராபாய் மயில்சாமி அண்ணாதுரை நெல்லை சு. முத்து சிவன் விடை விடை: C. நெல்லை சு. முத்து 3. 'ஔடதம்' என்பதன் பொருள் யாது? உணவு நீர் காற்று மருந்து விடை விடை: D. மருந்து 4. 'இயன்றவரை' என்ற சொல்லின் பொருள்? ...

Zeal Study TNTET 2026 Tamil Quiz - Test 38

TNTET 2026 Tamil Quiz - Test 38 | Zeal Study TNTET 2026 - தமிழ் மாதிரித் தேர்வு 38 Zeal Study CHECK ANSWER / விடையைச் சரிபார் NEXT QUESTION / அடுத்த கேள்வி தேர்வு முடிந்தது! (Quiz Completed!) 0/50 RESTART / மீண்டும் தொடங்க

Zeal Study TNTET 2026 KALVI TV Psychology Quiz - Part 10 - கல்வி உளவியல் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம்

kALVI TV TNTET 2026 Psychology Quiz - Part 10 | Zeal Study TNTET 2026 - கல்வி உளவியல் (உயர்மட்ட வினாடி வினா) வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் | Zeal Study CHECK ANSWER / விடையைச் சரிபார் NEXT QUESTION / அடுத்த கேள்வி தேர்வு முடிந்தது! (Quiz Completed!) 0/30 RESTART / மீண்டும் தொடங்க

TNTET 2026: ZEAL STUDY மாதிரித் தேர்வு - 3 குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் (55 வினாக்கள்) PSYCHOLOGY

TNTET 2025 Psychology Quiz TNTET 2026: உளவியல் மாதிரித் தேர்வு - 3 குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் [Excel Academy] விடைகளைச் சரிபார்க்கவும்

TNTET 2026: Educational Psychology / கல்வி உளவியல் வினாடி வினா

TNTET Psychology Quiz - 30 Questions TNTET 2026: Educational Psychology கல்வி உளவியல் வினாடி வினா Next Question / அடுத்த கேள்வி Test Completed! / தேர்வு முடிந்தது! Your Final Score / உங்கள் மொத்த மதிப்பெண்: Retake Test / மீண்டும் முயற்சி செய்

Followers