மென்பொருள் திறன் படிப்புகள்: ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் 1 லட்சம் மாணவர்கள் மற்றும் வேலையில்லாத இளைஞர்களுக்காக, மத்திய அரசால் சான்றளிக்கப்பட்ட மென்பொருள் திறன் படிப்புகளுக்கு தமிழ்நாடு முழுவதிலும் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுதொடர்பாக தேசிய திறன் அகாடமி அறிவித்துள்ளதாவது:
தமிழ்நாட்டை சேர்ந்த 1 லட்சம் மாணவர்கள் மற்றும் வேலையில்லாத இளைஞர்களுக்கு மத்திய அரசால் சான்றளிக்கப்பட்ட 100 கணினி மென்பொருள் திறன் படிப்புகள் வழங்கப்படுகிறது.
இதற்கு தமிழ்நாட்டில் உள்ள 10+2 தேர்ச்சி, பொறியியல், பட்டம், முதுகலை, எம்பிஏ மற்றும் பாலிடெக்னிக் டிப்ளமோ மாணவர்கள் மற்றும் வேலையில்லாத இளைஞர்களிடமிருந்து www.nationalskillacademy.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Comments
Post a Comment