Skip to main content

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.10.2025

 Zeal study official school morning prayer activities

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.10.2025






திருக்குறள்:

குறள் 682:

அன்பறி வாராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்
கின்றி யமையாத மூன்று

விளக்க உரை:

அன்பு, அறிவு, ஆராய்ந்து சொல்கின்ற சொல் வன்மை ஆகிய இவை மூன்றும் தூது உரைப்பவர்க்கு இன்றியமையாத மூன்று பண்புகளாகும்.

பழமொழி :
Wisdom is the light of the mind.

ஞானம் என்பது மனதின் ஒளி.

இரண்டொழுக்க பண்புகள் :

1.மின்சாரம் போன்ற எரி பொருட்கள் வீணாக்காமல் சிக்கனமாக உபயோகிப்பேன்.

2.சூரிய சக்தியை பயன்படுத்த முயற்சிப்பேன்.

பொன்மொழி :

உழைப்பின் சக்தியே உலகில் மிகவும் உன்னதமானது அதை வெற்றி கொள்ளும் ஆற்றல் வேறு எந்த சக்திக்கும் கிடையாது - ஆபிரகாம் லிங்கன்

பொது அறிவு :

01.அப்பர் எனப் போற்றப்படுபவர் யார்?

திருநாவுக்கரசர்( Thirunavukkarasar)

02. இந்தியாவில் அதிக நூலகங்கள் உள்ள மாநிலம் எது?

மகாராஷ்டிரா(Maharashtra)

English words :

talk over – discuss, கலந்து உரையாடுதல்

தமிழ் இலக்கணம் :

நிலைமொழியில் ய, ர, ழ: 'ய', 'ர', 'ழ' ஆகிய மெய்களின் முன்னரும் வல்லினம் மிகுந்து வரும்.
எ.கா: மயில் + கொண்டை = மயில்க்கொண்டை
அறிவியல் களஞ்சியம் :

ஆஸ்திரேலியாவின் குவின்ஸ்லாந்து பல்கலையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் 'மெகாலோபிகி ஓபெர்குலாரிஸ்' எனும் ஒருவகை புழுவின் முடியிலிருந்து எடுக்கப்படும் சில மூலக்கூறுகளுக்குப் புற்றுநோய் செல்களை அழிக்கும் ஆற்றல் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். விரைவில் இதிலிருந்து புற்றுநோய்க்கான மருந்து தயாரிக்கபடும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்

அக்டோபர் 07

நீல்ஸ்போர் அவர்களின் பிறந்தநாள்

நீல்ஸ் என்றிக் டேவிட் போர் ( அக்டோபர் 7, 1885 - நவம்பர் 18, 1962) இயற்பியல் துறையில், குறிப்பாக அணுவியலில், அடிப்படை கருத்தாக்கங்கள் தந்த புகழ்மிக்க டென்மார்க் அறிவியலாளர்.அணுவில் எலக்ட்ரான்களின் இயக்கங்களை, அதன் தன்மைகளைக் கண்டறிந்து அணுவின் அமைப்புக்கு முழு வடிவம் கொடுத்தவர். இவர் இயற்பியலுக்காக 1922 இல் நோபல் பரிசு பெற்றார். 20 ஆம் நூற்றாண்டின் புகழ்மிக்க பல இயற்பியல் அறிஞர்களுக்கு வழிகாட்டியாகவும் மற்றும் பல அறிஞர்களோடு தான் வாழ்ந்த டென்மார்க்கின் கோப்பனாஃகனில் அறிவியல் கூட்டாய்வாளராக இருந்தார். ஐன்ஸ்டைனுடன் இவர் நிகழ்த்திய குவாண்ட்டம் கருத்தியம் பற்றிய கருத்துப்போர் புகழ்பெற்றது. 20 ஆம் நூற்றாண்டில் பெரும் தாக்கம் ஏற்படுத்திய மாபெரும் அறிவியலாளர்களில் ஒருவராக இவர் அறியப்படுகின்றார்.
நீதிக்கதை

தவளைகளின் சரியான முடிவு

ஒரு காட்டில் இரு தவளைகள் வாழ்ந்து வந்தன. எந்த ஒரு கவலையும் இல்லாமல் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் அவர்கள் இருவரும் தங்கள் வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். சில நாட்களுக்கு பிறகு வெயில் அதிகமானதால் காட்டில் வெப்பம் அதிகமானது.

அதோடு கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் வாழ்ந்து வந்த குளத்திலும் தண்ணீர் வற்ற ஆரம்பித்தது. அப்போது ஒரு தவளை சொன்னது அக்கா, “வெப்பத்தினால் குளத்திலிருந்த எல்லாத் தண்ணீரும் வற்றிவிட்டது. நாம் இருவரும் உயிரோடு இருக்க வேண்டுமென்றால் தண்ணீர் இருக்கும் இன்னொரு இடத்திற்கு சென்று தான் ஆக வேண்டும் இல்லை என்றால் நாம் இருவரும் இறந்து விடுவோம்” என்றது.

மற்றொரு தவளையும், “ஆம் நீ சொல்வது சரிதான் நாம் தண்ணீர் இருக்கும் இன்னொரு இடத்திற்கு செல்ல வேண்டும்” என்றது. அவர்கள் இருவரும் வேறு இடத்தை தேடி பயணித்தார்கள். செல்லும் வழியில் ஒரு தவளை அங்கே ஒரு கிணறு இருப்பதைக் கண்டு சந்தோஷப்பட்டது. “இங்க பாருங்க அக்கா நம்ம ஒரு தண்ணீர் இருக்கும் கிணற்றை கண்டுபிடித்து விட்டோம்” என்றது.

அந்தக் கிணறு மிகவும் ஆழமாக இருந்தது. அப்போது அந்தத் தவளை மற்றொரு தவளையிடம், “என்ன பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள்? நாம் தண்ணீர் இருக்கும் பெரிய கிணற்றை கண்டுபிடித்து உள்ளோம். இருவரும் அந்த கிணற்றுக்குள்ளே குதிக்கலாம்” என்றது.

அதற்கு மற்றொரு தவளை, “இல்லை நாம் அவசரப்படவேண்டாம் இந்த கிணறு மிகவும் ஆழமாக உள்ளது. நாம் வாழ்ந்து கொண்டிருந்த அவ்வளவு பெரிய குளமே வெப்பத்தில் வற்றி உள்ளது .இந்த ஆழமான கிணறு வற்றி விட்டால் நம்மால் அதில் இருந்து வெளியே வர முடியாது, எனவே சிறிது தூரம் பயணிக்கலாம் கண்டிப்பாக இன்னொரு குளத்தை நம்மால் கண்டுபிடிக்க இயலும்” என்றது.

அவர்கள் இருவரும் மீண்டும் தங்கள் பயணத்தைத் தொடங்கினர். சிறிது தூரம் சென்ற பிறகு ஒரு அழகான பெரிய குளத்தை கண்டனர். இருவரும் மகிழ்ச்சியில் அந்த குளத்திற்குள் குதித்தனர், சந்தோஷமாக பாடி மகிழ்ந்தனர். இருவரும் அந்த குளத்தை தங்கள் வீடாக நினைத்து வாழ ஆரம்பித்தனர்.

சில நாட்களுக்கு பிறகு அங்கே ஒரு மான் அந்த குளத்திற்கு தண்ணீர் குடிக்க வந்தது. அப்போது அது வருத்தத்துடன் சொல்லிக் கொண்டிருந்தது “எல்லா இடத்திலும் தண்ணீர் வற்றி விட்டன அருகிலுள்ள பெரிய கிணற்றில் இருந்த தண்ணீர் கூட வற்றி விட்டது” என்றது.

இதைக் கேட்ட தவளைகள் நல்லவேளை நாம் அந்தக் கிணற்றுக்குள் குதிக்காமல் விட்டோம். குதித்து இருந்தோமென்றால் நாம் அங்கேயே இறந்திருப்போம் என்றனர்.

நீதி: எப்போதும் யோசித்து செயல்பட வேண்டும் பார்த்து அல்ல

இன்றைய செய்திகள்

07.10.2025

⭐இன்றைய செய்திகள்

⭐தீபாவளிக்கு 20,378 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்: அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு

⭐வன்முறையால் பதற்றம்: ஒடிசாவின் கட்டாக்கில் ஊரடங்கு உத்தரவு - இணைய சேவை முடக்கம்

⭐மலைச்சரிவுகளில் பனிப்புயல்: எவரெஸ்ட் சிகரத்தில் சிக்கி 1,000 பேர் தவிப்பு

⭐காசாவின் கட்டுப்பாட்டை விட்டுக்கொடுக்க மறுத்தால் ஹமாஸ் அழிக்கப்படும் - டிரம்ப் கடும் எச்சரிக்கை

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார் துருக்கி துப்பாக்கிச் சுடுதல் வீரர் யூசுப் டிகெக்!

Today's Headlines

⭐Minister Sivashankar announced 20,378 special buses to be operated for the Diwali festival.

⭐ There is tension due to violence in Odisha's Cuttack. This led to curfew. Internet services have also been suspended.

⭐1,000 stranded on Mount Everest due to a blizzard in the mountains.

⭐Trump has issued a stark warning that Hamas will be destroyed if it refuses to give up control of Gaza.

SPORTS NEWS

🏀Turkish shooter Yusuf Dicek wins gold at European Championships.

Covai women ICT_போதிமரம்

Comments

Post a Comment

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

Zeal study Whatsapp groups links

CLiCK The below groups name to join the group Zeal study Class wise groups links  kindly join in any one groups in these groups class suitable messages will be shared  Join our Zeal study Official Telegram channel for all latest updates https://t.me/zealstudyofficial Follow our Whatsapp channel  https://whatsapp.com/channel/0029Va9B0NY5q08hCHKk8A19 for classes 1-5 materials Zeal study primary WhatsApp  groups links   Zeal study primary group 6 https://chat.whatsapp.com/JsUkig72NCbEfK0GtsoNg3 Zeal study primary group 1 https://chat.whatsapp.com/I5zmYprrqzh0hQHrRkqO6R Zeal study primary group 2 https://chat.whatsapp.com/Gs5xFU3kgzdIaQ8xExUrp4 Zeal study primary group 3 https://chat.whatsapp.com/KPoGHVgwlmkKCoUcX8J5yY Zeal study primary group 4 https://chat.whatsapp.com/KughukPr6yN4prnKWWNgB3 Zeal study primary group 5 https://chat.whatsapp.com/LYKowdSHZnT7vTM797PmLu For classes 6-8 Zeal study 6-8   WhatsApp  groups links For 6 ,7&8 handling...

Zeal Study Lesson Plan 6,7,8,9,10 Collection 2024-25 Learning Out Comes Based Lesson Plan

Zeal study lesson plan colllection   6,7,8,9.10 Tamil Lesson plan 6,7,8,9.10 English Lesson plan 6,7,8,9.10 Maths Lesson plan   6,7,8,9.10 Science Lesson plan 6,7,8,9.10 Social science Lesson plan Join our Whatsapp groups click here

PDF Answer keys for 9,8,7&6 th std all subjects Bridge course worksheets updated by Zeal study

6th Standard Bridge  course  answer keys All subjects pdf download  click here  7th Standard Bridge  course  answer keys All subjects pdf download  click here 8th Standard Bridge  course  answer keys All subjects pdf download  click here  9th Standard Bridge  course  answer keys All subjects pdf download  click here 9th Tamil worksheet 1 answer key pdf download click here 9th Tamil worksheet 2 answer key pdf download click here 9th Tamil worksheet 3 answer key pdf download click here 9th Tamil worksheet 4 answer key pdf download click here 9th Tamil worksheet 5 answer key pdf download click here 9th Tamil worksheet 6 answer key pdf download click here 9th Tamil worksheet 7 answer key pdf download click here 9th Tamil worksheet 8 answer key pdf download click here 9 th Tamil worksheet 9 answer key pdf click here 9 th Tamil worksheet 10 answer key pdf click here 9 th Tamil worksheet 11 answer key pdf click here ...

Followers