Zeal study official school morning prayer activities
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.09.2025
திருக்குறள்:
குறள் 535:
முன்னுறக் காவா திழுக்கியான் தன்பிழை
பின்னூ றிரங்கி விடும்.
விளக்க உரை:
வரும் இடையூறுகளை முன்னே அறிந்துக் காக்காமல் மறந்து சோர்ந்தவன், பின்பு அவை வந்துற்றபோது தன் பிழையை நினைத்து இரங்குவான்.
பழமொழி :
The river cuts rock not by the power, but by persistence.
ஆறு கல்லை உடைப்பது வலிமையால் அல்ல, தொடர்ச்சியால் தான்.
இரண்டொழுக்க பண்புகள் :
1 என்னால் இயன்ற அளவு மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பேன்.
2 இயற்கை சமநிலை காப்பேன்.
பொன்மொழி :
அழகைப் பற்றி கனவு காணாதீர்கள், அது உங்கள் கடமையை பாழாக்கி விடும். உங்கள் கடமையைப் பற்றி கனவு காணுங்கள். அது ,உங்கள் வாழ்க்கையை அழகாக்கி விடும்- டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாம்
பொது அறிவு :
"01.திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து எது?
'ஒள'
02. இந்தியாவின் முதல் பெண் ரயில்வே அமைச்சர் யார்?
மம்தா பானர்ஜி
Mamata Banerjee
"
English words :
Set off - start a journey
பயணம் தொடங்குதல்
Grammar Tips:
4 different spelling patterns of F Sound
as in
1. Friend, Fun and Fish - F Sound
2. When the word has two ff's at the last as in Floss rule
Puff, Cliff, Huff
3. In 'ph' as
Phone, Photo Elephant,
4. Right after au or ou as in Cough, Rough, Laugh, Enough
F, FF, PH, GH these makes F sound
அறிவியல் களஞ்சியம் :
உலகில் கடந்த 30 ஆண்டுகளில் சராசரி கடல் நீர்மட்டம் 2.5 செ.மீ., உயர்ந்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ், சான்டிகோ உள்ளிட்ட கடலோர நகரங்கள், கடல் நீர்மட்ட உயர்வால் பாதிப்பை சந்திக்கும். லட்சக்கணக்கானோர் பாதிக்கப்படுவர் என 'நாசா' ஆய்வு எச்சரித்துள்ளது. 2015 - 2023ல் செயற்கைக்கோள் தரவுகளை ஆய்வு செய்ததில் இது கண்டறியப்பட்டது.
நீதிக்கதை
இரண்டு தேவதைகள்!
நயாகரா நீர்வீழ்ச்சி தொடர்ந்து பாய்ந்து கொண்டிருந்தது. நீர்வீழ்ச்சியின் அழகை, இரண்டு தேவதைகள் ரசித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது, அனீலஸ் என்ற பறவை, அந்த நீர்வீழ்ச்சிக்கு வந்தது. தேவதைகள் இருவரும் அந்தப் பறவையைப் பார்த்து அனீலஸ் பறவை நீர்வீழ்ச்சியில் குளிக்க வந்துள்ளது, பன்னிரண்டு வருடத்திற்கு ஒருமுறை தான் நீராடும் என்று இரு தேவதைகள் பேசிக்கொண்டனர்.
அது நீராடுகிற காட்சியைப் பார்ப்பதற்கு யோகம் செய்தவர்களாக இருக்கிறோம், என்று பெருமைப்பட்டு கொண்டனர்.
அனீலஸ் பறவையோ, தன் அருகே இரண்டு தேவதைகள் இருப்பதைப் பார்த்து நீர்வீழ்ச்சியில் இன்பமாக குளித்தது.
அந்த நேரத்தில், நீர்வீழ்ச்சியின் வேகம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. நீர் வேகமாகத்தை தாங்காமல் அனீலஸ் பறவை, தடுமாறியபடி நீரில் சிக்கிக்கொண்டது. அதைக் கண்ட தேவதைகள் இருவரும் பயந்தனர்.
அதில் ஒரு தேவதை, அனீலஸ் பறவை ஆபத்தில் சிக்கிவிட்டது. நான் சென்று உடனே காப்பாற்றுகிறேன்! என்றாள். உடனே மற்றொரு தேவதை, வேண்டாம். அனீலஸ்ஸை நானே சென்று காப்பாற்றுகிறேன். அந்த பாக்கியம் எனக்கே கிடைக்க வேண்டும் என்றாள். அதைக் கேட்ட மற்றொரு தேவதையோ, நானே அனீலஸ்ஸைக் காப்பாற்றப் போகிறேன். எக்காரணம் கொண்டும் உன்னை அனீலஸ்ஸைக் காப்பாற்றும்படி விட்டுக்கொடுக்க மாட்டேன்! என்று பிடிவாதமாகக் கூறியது.
இப்படியே இரண்டு தேவதையும் வாக்குவாதம் செய்துகொண்டிருந்த நேரத்தில், கீச்... கீச்... என்ற கீச் குரல் கேட்டது. இரண்டு தேவதைகளும் திடுக்கிட்டு பார்த்தன. அவர்கள் பக்கத்தில் அனீலஸ் பறவை நின்று கொண்டிருந்தது.
தேவதைகளே! உங்களுக்குள் சண்டை எதற்கு? நான் உயிர் பிழைத்து விட்டேன். நீங்கள் என்னைக் காப்பாற்றுவீர்கள் என்று நம்பிக் கொண்டிருந்தால், என் உயிரை இழந்திருப்பேன். நானே முயற்சி செய்து உயிர் பிழைத்து உங்கள் முன்னே நின்று கொண்டிருக்கிறேன்! என்றது.
அதைக் கேட்ட இரண்டு தேவதைகளும், வெட்கத்தில் தலை குனிந்தனர். நமக்குள் போட்டியிட்டு தற்பெருமைப்பட்டுக் கொண்டோமே! இந்தப் பறவைக்கு இருக்கிற அறிவு கூட தேவதைகளான நமக்கு இல்லையே! என்று வருத்தப்பட்டனர்.
நீதி :
பிறரை நம்புவதை விட நாம் நம்மை நம்பினால் வாழ்க்கையில் முன்னேரலாம்.
இன்றைய செய்திகள்
10.09.2025
⭐ இந்தியக் குடியரசு துணைத் தலைவராக சி்.பி்.இராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
⭐ சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் செயல்படும் குடிநீர் ஆலைகளில் தர ஆய்வு மேற்கொள்ள உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.
⭐தமிழ்நாட்டில் முதலீடு செய்ய 10 புதிய நிறுவனங்கள் விருப்பம்; ஓசூரில் விரைவில் முதலீட்டாளர்கள் மாநாடு என சென்னை திரும்பிய முதல்வர் அறிவிப்பு.
⭐நேபாள போராட்டம் எதிரொலியாக பிரதமர் சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
பிரதமரை தொடர்ந்து ஜனாதிபதியும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
⭐சியாச்ச்சினில் பனிச்சரிவு: 3 ராணுவ வீரர்கள் மரணம்
🏀 விளையாட்டுச் செய்திகள்
🏀ஆசிய கோப்பை அறிமுகம்:
'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன் அணிகள் இடம்பிடித்தன.
'பி' பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் அணிகள் இடம் பெற்றுள்ளன.
Today's Headlines
⭐ C.P. Radhakrishnan has been elected as the Vice President of the Republic of India.
⭐ The Food Safety Department has ordered a quality inspection of drinking water plants operating in major cities including Chennai.
⭐10 new companies are interested in investing in Tamil Nadu; The Chief Minister, who returned to Chennai, announced that an investors' conference will be held soon in Hosur.
⭐Prime Minister Sharma Oli resigned from his post in response to the Nepali protests. Following the Prime Minister, the President has also resigned from his post.
⭐Avalanche in Siachen: 3 soldiers killed.
*SPORTS NEWS*
🏀Asia Cup Introduction: India, Pakistan, United Arab Emirates, Oman have been drawn in Group 'A'. Sri Lanka, Bangladesh, Afghanistan, and Hong Kong have been drawn in Group 'B'.
Covai women ICT_போதிமரம்
Thanks
ReplyDelete