Skip to main content

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 15.09.2025

 Zeal study official school morning prayer activities

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 15.09.2025


pdf link


Zeal study official school morning prayer activities  பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 15.09.2025






திருக்குறள்:

குறள் 545:

இயல்புளிக் கோலோச்சு மன்னவ னாட்ட
பெயலும் விளையுளுந் தொக்கு.

விளக்க உரை:

நீதி முறைப்படி செங்கோல் செலுத்தும் அரசனுடைய நாட்டில் பருவ மழையும் நிறைந்த விளைவும் ஒருசேர ஏற்படுவனவாகும்.

பழமொழி :
Learning is a treasure that follows its owner everywhere.

கற்றல் என்பது எங்கு சென்றாலும் உரிமையாளருடன் செல்லும் பொக்கிஷம்.

இரண்டொழுக்க பண்புகள் :

1.அமைதி நம் அறிவை வளர்ப்பது மட்டும் அல்லாது நாம் ஆழ்ந்து சிந்திக்கவும் தூண்டுவது.]

2. எனவே தேவையில்லாத பேச்சைக் குறைத்து அமைதி காக்க முயல்வேன்.

பொன்மொழி :

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் . இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் - அறிஞர் அண்ணா

பொது அறிவு :

01.சுருக்கெழுத்து முறையை கண்டுபிடித்தவர் யார்?

         சர் ஐசக் பிட்மேன்

Sir  Isaac pitman

02. இந்தியாவின் முதல் முதலில் கப்பல் கட்டும் தொழிற்சாலை எங்கு அமைக்கப்பட்டது?

            விசாகப்பட்டினம்

Vishakhapattanam

English words :

shut down - turn off, close.பணிநிறுத்தம், மூடல், அல்லது இயக்க நிறுத்தம்.

Grammar Tips:

"i before the letter e except before c"
ie makes e sound in words like
Ex: Thief, believe, Chief
But in words like receive, deceive, ceiling, receipt the same'e' sound but 'ie' becomes 'ei'
Reason
Whenever there is 'c' we have to write 'ei' only
அறிவியல் களஞ்சியம் :

பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த மரபுசாரா எரிபொருள் உற்பத்தி நிறுவனமான 'இகோட்ரிசிட்டி,' சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத 'ஈகோஜெட்' விமானத்தை இயக்க திட்டமிட்டுள்ளது. ஹைட்ரஜன் வாயுவிலிருந்து மின்சாரம் தயாரித்து இதை இயக்க உள்ளனர். 2025ம் ஆண்டு இது பயன்பாட்டுக்கு வரும். விமானத்தின் உள்ளேயும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத உணவு, தொழிலாளர் உடைகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்பது கூடுதல் சிறப்பு.

செப்டம்பர் 15

அனைத்துலக சனநாயக நாள்

அனைத்துலக சனநாயக நாள் செப்டெம்பர் 15 அன்று அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. நவம்பர் 8, 2007 இல் நடந்த ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்சபைக் கூட்டத்தில் இது பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

சனநாயகத்தினை ஊக்குவிக்கும் முகமாகவும் அபிவிருத்தி செய்யவும், மனித உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரம் போன்றவற்றிற்குரிய கௌரவத்தை கொடுக்கும் முகமாக ஐநா இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இப்பொதுத் தீர்மானத்தை 192 உறுப்பு நாடுகள் அனுமதித்துள்ளன.
நீதிக்கதை

கிடைத்ததில் சம பங்கு

ஒருநாள் கிருஷ்ணதேவர் அரண்மனையில் கிருஷ்ண லீலா நாடக நாட்டியம் நடைபெற ஏற்பாடு செய்திருந்தார். தெனாலிராமனைத் தவிர மற்ற எல்லா முக்கியப்பிரமுகர்களும் வந்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் அரசியும் மற்றும் சில பெண்களும் கலந்து கொள்வதால், தெனாலிராமன் இருந்தால் நிகழ்ச்சி நடைபெறாமல் போய்விடுமோ, என எண்ணி தெனாலிராமனை மட்டும் உள்ளே விட வேண்டாமென்று வாயிற்காவலளியிடம் கண்டிப்புடன் சொல்லிவிட்டார்.

ஆனால் தெனாலிராமன் எப்படியாவது உள்ளே சென்று விடவேண்டும். என தீர்மானித்துக் கொண்டான். உள்ளே செல்ல முற்பட்ட தெனாலிராமனை, வாயிற்காவலளி தடுத்து நிறுத்தி விட்டான். இந்நிலையில் தெனாலிராமன் ஐயா, என்னை உள்ளே செல்ல அனுமதித்தால் என் திறமையால் ஏராளமான பரிசு கிடைக்கும். அதில் பாதியை உனக்குத் தருகிறேன் என்றான். இதைக் காவலாளி முதலில் சம்மதிக்காவிட்டாலும், பிறகு சம்மதித்துவிட்டான். இதைப் போல் இன்னொரு வாயிற் காப்போனும் சம்மதித்துவிட்டான்.

பிறகு தெனாலிராமன் ஒருவருக்கும் தெரியாமல் உள்ளே சென்று ஓர் மூலையில் அமர்ந்து கொண்டான். அப்போது கிருஷ்ணன் வெண்ணை திருடி கோபிகைகளிடம் அடி வாங்கும் காட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

உடனே தெனாலிராமன் பெண் வேடம் அணிந்து மேடையில் தோன்றி கிருஷ்ணன் வேடம் அணிந்தவனை கொம்பால் அடித்தான். இதைப்பார்த்த மன்னர் பெண் வேடமிட்டுள்ள தெனாலிராமனை ஏன் இவ்வாறு செய்தாய் என்றார்.

அதற்குத் தெனாலிராமன் கிருஷ்ணன் கோபிகைகளிடம் எத்தனையோ மத்தடி பட்டிருக்கிறான் இப்படியா இவன் போல் அவன் அலறினான் என்றான். இதைக் கேட்ட மன்னர், தெனாலிராமன் மீது கடும்கோபம் கொண்டு 30 கசையடி தருமாறு உத்தரவிட்டார்.

இதைக் கேட்ட தெனாலிராமன் அரசே இப்பரிசை எனக்கு தர வேண்டாம். எனக்குக் தர வேண்டியப் பரிசை ஆளுக்குப் பாதியாக, தருகிறேன், என்று நம் இரண்டு வயிற்காப்போன்களிடம் வாக்கு கொடுத்துவிட்டேன் என்றான்.

அதனால் இந்த பரிசை, அவர்கள் இருவருக்கும் சமமாக பங்கிட்டுத் தாருங்கள் என்றான். உடனே மன்னர் அவ்விருவரையும் அழைத்து இது குறித்து விசாரித்தார். அவ்விருவரும் உண்மையை ஒத்துக் கொண்டாதால் அவர்கள் இருவருக்கும் தலா 15 கசையடி தருமாறு உத்தரவிட்டார். மேலும் தெனாலிராமனின் தந்திரத்தை பாராட்டி அவருக்கு பரிசு வழங்கினார்.

இன்றைய செய்திகள்

15.09.2025

⭐22-ந்தேதி முதல் அமல்..!-கடைகளில் ஜி.எஸ்.டி. வரி குறைப்பு பட்டியல் வைக்க வேண்டும் என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

⭐அசாமில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.. நில அதிர்வால் மக்கள் அச்சம்

⭐நேபாளத்தில் இடைக்கால பிரதமராக அந்நாட்டு உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுசிலா கார்கி (73) பதவியேற்றார்.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா தங்கம் வென்றார்.

🏀 துபாயில் நடக்கும் 6-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

Today's Headlines

⭐Implementation from 22nd GST reduction list should be kept in shops, said minister Nirmala Sitharaman.

⭐ 5.8 magnitude earthquake in Assam.,so that  people were get  fear due to earthquake.

⭐ Former Chief Justice of the country's Supreme Court, Sushila Karki (73), was sworn in as the interim Prime Minister of Nepal.

*SPORTS NEWS*

🏀World Boxing Championship: Indian athlete Jasmine Lamboria won gold.

🏀 India and Pakistan will clash in the 6th league match in Dubai.

Covai women ICT_போதிமரம்

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

KALVI TV | TRB_TET | EDUCATONAL PSYCHOLOGY - PART - 01 கல்வி உளவியல் - பகுதி 1

 வணக்கம் நமது கல்வி குழுவின் சார்பாக கல்வி தொலைக்காட்சி பாடங்களில் வாயிலாக நமது அரசு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதும்

TNTET 2026: தமிழ் முழுமையான மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) online full test - 1

TNTET 2025 - தமிழ் முழு மாதிரித் தேர்வு - Zeal Study TNTET 2025: தமிழ் மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) இயல் 3: அறிவியல் ஆத்திச்சூடி | எந்திர மனிதன் | ஒளி பிறந்தது | இலக்கணம் 1. புதிய ஆத்திச்சூடி எழுதியவர் யார்? ஔவையார் பாரதியார் கவிமணி நெல்லை சு. முத்து விடை விடை: B. பாரதியார் 2. 'தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்' என அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப்பெற்றவர்? விக்ரம் சாராபாய் மயில்சாமி அண்ணாதுரை நெல்லை சு. முத்து சிவன் விடை விடை: C. நெல்லை சு. முத்து 3. 'ஔடதம்' என்பதன் பொருள் யாது? உணவு நீர் காற்று மருந்து விடை விடை: D. மருந்து 4. 'இயன்றவரை' என்ற சொல்லின் பொருள்? ...

Zeal Study TNTET 2026 Tamil Quiz - Test 38

TNTET 2026 Tamil Quiz - Test 38 | Zeal Study TNTET 2026 - தமிழ் மாதிரித் தேர்வு 38 Zeal Study CHECK ANSWER / விடையைச் சரிபார் NEXT QUESTION / அடுத்த கேள்வி தேர்வு முடிந்தது! (Quiz Completed!) 0/50 RESTART / மீண்டும் தொடங்க

Zeal Study TNTET 2026 KALVI TV Psychology Quiz - Part 10 - கல்வி உளவியல் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம்

kALVI TV TNTET 2026 Psychology Quiz - Part 10 | Zeal Study TNTET 2026 - கல்வி உளவியல் (உயர்மட்ட வினாடி வினா) வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் | Zeal Study CHECK ANSWER / விடையைச் சரிபார் NEXT QUESTION / அடுத்த கேள்வி தேர்வு முடிந்தது! (Quiz Completed!) 0/30 RESTART / மீண்டும் தொடங்க

TNTET 2026: ZEAL STUDY மாதிரித் தேர்வு - 3 குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் (55 வினாக்கள்) PSYCHOLOGY

TNTET 2025 Psychology Quiz TNTET 2026: உளவியல் மாதிரித் தேர்வு - 3 குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் [Excel Academy] விடைகளைச் சரிபார்க்கவும்

TNTET 2026: Educational Psychology / கல்வி உளவியல் வினாடி வினா

TNTET Psychology Quiz - 30 Questions TNTET 2026: Educational Psychology கல்வி உளவியல் வினாடி வினா Next Question / அடுத்த கேள்வி Test Completed! / தேர்வு முடிந்தது! Your Final Score / உங்கள் மொத்த மதிப்பெண்: Retake Test / மீண்டும் முயற்சி செய்

Followers