Zeal study official school morning prayer activities
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.09.2025
திருக்குறள்:
குறள் 541:
ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை.
விளக்க உரை:
யாரிடத்திலும் (குற்றம் இன்னதென்று) ஆராய்ந்து, கண்ணோட்டம் செய்யாமல் நடுவுநிலைமைப் பொருந்தி (செய்யத்தக்கதை) ஆராய்ந்து செய்வதே நீதிமுறையாகும்.
பழமொழி :
Hope is the anchor of the soul.
நம்பிக்கையை ஆன்மாவின் நங்கூரம்.
இரண்டொழுக்க பண்புகள் :
1 என்னால் இயன்ற அளவு மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பேன்.
2 இயற்கை சமநிலை காப்பேன்.
பொன்மொழி :
தொல்லைகளும்,பிரச்சனைகளும் இல்லை என்றால் உழைப்பும் வெற்றியும் நம்மை நெருங்காது...
டாக்டர். கலாம்
பொது அறிவு :
01.எந்த ஆண்டு சென்னை மாகாணம் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது?
1969
02. பாலைவனம் இல்லாத கண்டம் எது?
ஐரோப்பா- Europe
English words :
set up - arrange, establish,அமைத்தல், நிறுவுதல், அல்லது கட்டமைப்பு
Grammar Tips:
A modal verb is an auxiliary (or "helping") verb that adds meaning to another verb in a sentence
Ex: I CAN play.
Here can and play both are verbs. Can is the modal verb.
After a modal verb, the main verb stays in the basic form; it does not change with subject or time.
அறிவியல் களஞ்சியம் :
வெப்பநிலை உயர்வால் கடல் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. மனிதர்களின் நடவடிக்கையால் 2050க்குள் இது இரண்டு மடங்காக அதிகரிக்கும் என ஆய்வு எச்சரித்துள்ளது. 90 சதவீத உலக வர்த்தகம் கடல் வழியாகவே நடைபெறுகிறது. கடலில் மீன்வளம் குறைவு, கடல் மட்ட உயர்வு, அமிலமயமாக்கல், மாசுபாடு குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். இதில் குறையும் பவளப்பாறைகள், நன்னீர் - கடல் நீர் சமநிலையின்மை, இனப்பெருக்க இடங்களின் இழப்பு, அழியும் சதுப்புநிலங்கள் ஆகிய பாதிப்பால் கடல்வாழ் உயிரினங்களுக்கு அச்சுறுத்தல் உருவாகியுள்ளது.
செப்டம்பர் 11
மகாகவி பாரதியின் நினைவுநாள்
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர்.
பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீன தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். எட்டப்ப நாயக்கர் மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சி, கலைமகள் எனப் பாெருள்படும் பாரதி என்ற பட்டம் வழங்கினார்.பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949-ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமை ஆக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும். இவரை சிந்துக்குத் தந்தை, செந்தமிழ்த் தேனீ, புதிய அறம் பாட வந்த அறிஞர், மறம் பாட வந்த மறவன் என்றெல்லாம் பாரதிதாசன் இவரைப் புகழ்ந்துள்ளார். இவர் இந்தியா, விஜயா முதலான இதழ்களை நடத்தி, விடுதலைப் போருக்கு வித்திட்டவர்.
உலக வர்த்தக மையம் தாக்குதல்
2001 – செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள்: நியூயார்க் நகரின் உலக வர்த்தக மையம் மற்றும் பெண்டகன் மீது அல் காயிதா தீவிரவாதிகளினால் நடத்தப்பட்ட வான் தாக்குதல்களில் மொத்தம் 2,974 பேர் கொல்லப்பட்டனர்
நீதிக்கதை
ஜெகனின் புதுசட்டை
பிரபு என்பவன் ஆறாம் வகுப்பு படித்து வந்தான். அவனுக்கு கொஞ்சம் முரட்டு சுபாவம். கோபம் அதிகம் உள்ளவன். யாராவது ஒருவரிடம் வம்பு செய்துகொண்டே இருப்பான். அவன் ஆசிரியர் ரவி. பிரபுவை பெஞ்சின் மீது ஏறி நிற்கச் சொன்னார். பிரபு முணுமுணுத்துக் கொண்டே நின்றான்.
ஜெகன் என்பவன் கிளாஸ் லீடர். அவன்தான் என்னைப் பற்றி ஆசிரியரிடம் சொல்லியிருப்பான் என்று அவன்மீது கோபமாக இருந்தான்.
பள்ளிக் கூடம் விட்டதும் வெளியே வந்த ஜெகனிடம் டேய் வாத்தியார் கிட்ட என்னைப்பத்தி என்னா சொன்ன என்று கோபமாய் கேட்டு அவன் சட்டையைப் பிடித்து ஓங்கி அவன் முகத்தில் ஒரு குத்து விட்டான். ஜெகன் கீழே விழுந்தான். மீண்டும் அவனைத் தாக்க முயன்றான்.
ஜெகனின் எண்ணம் எல்லாம் கிழிந்து போன தனது ஒரே சட்டையைப் பற்றியே இருந்தது. ஜெகன் செத்துப்போன தனது அப்பாவையும், கட்டிட வேலைக்குப் போய் சம்பாதித்து தன்னை படிக்க வைக்கும் தனது அம்மாவையும் நினைத்தான்.
ஜெகன் வெற்று உடம்போடு புத்தகமும் கையுமாய் நடந்து போனது பிரபு மனசுக்கு என்னவோ போல் இருந்தது.
ஜெகன் ஒருவாரம் பள்ளிக்கு வரவே இல்லை. ஒரு சின்ன குடிசையில் ஜெகனும், அவன் அம்மாவும் வசித்து வந்தனர். அன்று மாலை பிரபு பள்ளியிலிருந்து வீட்டுக்கு செல்லும் வழியில் ஜெகன் கட்டிட வேலைக்கு செங்கல் துக்கி செல்வதைப் பார்த்தான். மெதுவாக அந்த இடத்திற்குச் சென்றான் பிரபு.
என்னடா ராஜா பள்ளிக்கூடம் போகலையா..... ? வேலைக்கு வந்திட்டே... என்று அங்கு வேலை செய்யும் ஒருவர் கேட்டார். போட்டுக்கறதுக்கு சட்டை இல்லை. புதுசா எடுக்கணும். பணம் வேணும். என்றான் ஜெகன்.
ஓஹோ புது சட்டைய போட்டுக்கிட்டு அப்புறம் பள்ளிக்கூடம் போகப் போறீயா? என்று சிரித்தபடி போனார் அவர். இருந்த ஒரே சட்டையையும் நான் கிழித்து விட்டேன். அவன் எப்படி பள்ளிக்கு வருவான்? என்று மனதுக்குள் நினைத்தான் பிரபு.
அவனது கோபம். அவனுக்கே பிடிக்காமல் போனது. பிரபு தனது பிறந்த நாளுக்காக அப்பா வாங்கி வைத்திருந்த சட்டையை எடுத்துக்கொண்டு ஜெகன் வீட்டிற்குச் சென்றான்.
உள்ள வாடா என்று அன்புடன் அவனை வரவேற்றான் ஜெகன். என் மீது உனக்கு கோபம் இல்லையா என்றான் பிரபு. வீட்டிற்கு வந்தவர்களிடம் யாராவது கோபப்படுவார்களா? என்றான் ஜெகன்.
கோபத்தில் நான் தவறு செய்துவிட்டேன். என்னை மன்னித்துவிடு என்று சொல்லி தனது பிறந்தநாள் சட்டையை அவனிடம் கொடுத்தான்.
எனக்கு புதுச்சட்டை ரெடியாகிவிட்டது. உன் அன்புக்கு நன்றி என்றான். பிரபு எவ்வளவோ வற்புறுத்தியும் ஜெகன் வாங்கவில்லை. அடுத்தநாள் புதுச்சட்டையுடன் பள்ளிக்கு வந்த ஜெகனை வைத்த கண் வாங்காமல் பார்த்தான் பிரபு.
நீதி :
முட்டாள்தனமான கோபம் ஆபத்தானது.
இன்றைய செய்திகள்
11.09.2025
⭐கொலோன் பல்கலைக்கழகம் வழங்கிய பழங்கால ஓலைச்சுவடிகளை நூலகத்திற்கு வழங்கினார் மு.க.ஸ்டாலின்
⭐பள்ளி மற்றும் கல்லூரி கட்டணங்களுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.போட்டித் தேர்வு, நுழைவுத் தேர்வு பயிற்சி நிறுவன கட்டணங்களுக்கு 18% வரி விதிக்கப்பட்டுள்ளது.
⭐மியான்மரில் நடந்து வரும் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடிய 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். 14,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
🏀விளையாட்டுச் செய்திகள்
🏀2025 ஆசிய கோப்பை T20| தொடர் இந்தியாவின் தொடக்க போட்டியாக, இந்திய அணியும் யூ.ஏ.இ அணியும் எதிர்கொள்கின்றன.
🏀பெண்களுக்கான ஆசிய கோப்பை ஹாக்கி: சூப்பர் 4 சுற்றில் கொரியாவை 4-2 என வீழ்த்தியது இந்தியா
Today's Headlines
⭐M.K. Stalin presented ancient manuscripts donated by the University of Cologne to the library.
⭐School and college fees are exempted from GST. Competitive exam and entrance exam coaching institute fees are taxed at 18%.
⭐More than 2,000 people have died in Myanmar while protesting against the ongoing military rule, and 14,000 have been arrested.
SPORTS NEWS
🏀2025 Asia Cup T20| India will face the UAE in the opening match of the series.
🏀Women's Asia Cup Hockey, India beat Korea 4-2 in the Super 4 round.
Covai women ICT_போதிமரம்
𝓩𝓮𝓪𝓵
ReplyDeletePonmozhi tamil aringar kuriyathu mattum kudunga pls
ReplyDelete