Skip to main content

School morning prayer Activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 23.07.2025

 


திருக்குறள்:


குறள் 151:


அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.


விளக்கம்:


தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல், தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான பண்பாகும்.


பழமொழி :

The expert in anything was once a beginner.

ஒவ்வொரு நிபுணரும், ஒரு காலத்தில் புதியவர் தான்.

இரண்டொழுக்க பண்புகள் :

1.எனது பள்ளியின் வளர்ச்சிக்கான பணிகளில் எனது பெற்றோர்களும் ஈடுபட வலியுறுத்துவேன்.

2.ஊர் கூடி செய்யும் செயல்கள் அதிக நன்மை பயக்கும் என்பதால் அனைவரோடு சேர்ந்து எங்கள் பள்ளியின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன்


பொன்மொழி :

நீ நடந்து போக பாதை இல்லையே என்று வருத்தப்படாதே நீ நடந்தால் அதுவே புதிய பாதை- அடால்ஃப் ஹிட்லர்

பொது அறிவு :

01.இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள எல்லைக்கோட்டின் பெயர் என்ன?

ராட்க்ளிஃப் கோடு

( Radcliffe Line )

02. இந்தியாவில் இலக்கியத்திற்கான நோபல் பரிசை முதன் முதலில் பெற்றவர் யார்?

ரவீந்திரநாத் தாகூர்

(Rabindranath Tagore)

English words :

vigilant – careful and looking out for danger.ஆபத்து குறித்து எச்சரிக்கையாயிருக்கிற.

Grammar Tips:
√ How long - used to talk about time.


Example: how long does it take to reach Delhi ?


√ How far - used to talk about distance.


Example : How far is Chennai from Coimbatore?

அறிவியல் களஞ்சியம் :

செல் பேசியிலிருந்து வெளியேறும் மின்காந்த கதிர்வீச்சு செவிமடுக்கும் போதெல்லாம், காதையொட்டி அமைந்துள்ள திசுக்களை நசுக்கிவிடுகிறது. இதனால் கேட்கும் திறனைக் ‘காது’ மெதுவாக இழந்துவிடுகிறது. செல்பேசியும், வானொலி போன்ற ஓர் ஒலிபரப்புச் சாதனமே. இவற்றிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சை கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தைகள் கட்டாயம் தவிர்க்க வேண்டும். பதினாறு வயதுக்குக் குறைந்த சிறுவர்கள் அதிக நேரம் செல்பேசியைப் பயன்படுததும்போது பாதிப்பு பன்மடங்கு பெருகும், படிக்கும் நேரமும் பாதியாய் குறையும்.

ஜூலை 23
பால கங்காதர திலகர் அவர்களின் பிறந்தநாள்
பால கங்காதர திலகர் (Bal Gangadhar Tilak, மராத்தி: बाळ गंगाधर टिळक, பால கங்காதர திலகர்) 23 சூலை 1856 –1 ஆகத்து 1920 (அகவை 64), ஒரு இந்தியத் "தேசியவாதியும்", "சமூக சீர்திருத்தவாதியும்", விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். இந்திய விடுதலை இயக்கத்தின் முதல் மக்கள் ஆதரவு பெற்ற தலைவரும் இவரே. இவரது பெயருடன் கௌரவப் பட்டமான "லோகமான்ய" என்பதையும் சேர்த்து அழைப்பதுண்டு. இந்தியாவுக்கு முதன் முதலில் தன்னாட்சி கோரியவர்களுள் திலகரும் ஒருவர். தன்னாட்சி எனது பிறப்புரிமை அதனை நான் பெறுவேன் என்னும் இவரது புகழ் பெற்ற கூற்று இன்றும் இந்தியாவில் நினைவுகூரப்படுகிறது. முதன் முதலில் மக்களிடையே சுதந்திரம் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியவர் ஆவார். மக்களிடையே அவருக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது.

நீதிக்கதை

ஆந்தையும் அன்னமும்

ஒரு காட்டு பகுதியில நிறைய பறவை கூட்டம் வாழ்ந்துகிட்டு வந்துச்சு,ஒருநாள் ஓடைக்கு பக்கத்துல ஒரு அன்னப்பறவை கூட்டம் வந்துகிட்டு இருந்துச்சு ,அதுங்களோட அரசன் பின்னாடி எல்லா அன்ன பறவைகளும் வரிசையா வந்துகிட்டு இருந்துச்சுங்க

இத தூரத்துல இருந்து ஒரு ஆந்தை பாத்துச்சு ,அடடா இந்த அன்னப்பறவை அரசர் எவ்வளவு கம்பீரமா இருக்காரு ,நம்மளும் ஒரு நாள் நம்ம கூட்டத்துக்கு அரசரா மாறணும்னு நினைச்சது

ஒருநாள் அந்த அன்னப்பறவையோட அரசர் தனிமையில இருந்துச்சு ,அப்ப அங்க வந்த ஆந்தை அவர்கூட பேசுச்சு

நல்லா பேசுன ஆந்தைக்கும் அன்னப்பறவை அரசருக்கும் நட்பு உண்டாச்சு,

அன்னப்பறவை தன்னோட கூட்டத்தை பத்தியும் தன்னோட ஆட்சிய பத்தியும் நிறைய பேசும் ,ஆனா ஆந்தை தன்னோட வாழ்க்க பத்தி எதுவும் சொல்லாது

ஒருநாள் காட்டுக்கு பக்கத்துல ஒரு போர் நடந்துச்சு ,அந்த போர் படைகள் இருக்குற பாசறைக்கு பக்கத்துல பறந்து போச்சு ஆந்தை

அப்பத்தான் அந்த படை எங்கயோ கிளம்ப தயாராகிட்டு இருந்துச்சு ,அப்ப ஆந்தை எதேச்சையா கூவுச்சு ,ஆந்தையோட சத்தத்தை கேட்ட படை வீரர்கள் ,அபச குணமா இருக்குனு படைய நாளைக்கு நகர்த்திக்கிடலாம்னு அங்கேயே தங்கிட்டாங்க

இத பாத்த ஆந்தை அடடா என்னோட குரலுக்கு இவ்வளவு மவுசானு நினைச்சிகிடுச்சு ,மறுநாளும் படை புறப்புடுற நேரத்துல கத்த ஆரம்பிச்சது ,அன்னைக்கும் படையை நகர்த்தாம விட்டுட்டாங்க

இத பாத்த ஆந்தைக்கு ஒரு யோசனை வந்துச்சு ,தன்னோட நண்பரான அன்ன ராஜாகிட்ட தம்பட்டம் அடிக்க ஒரு விஷயம் கிடைச்சுடுச்சுனு நினச்சு அவர்கிட்ட வந்துச்சு.

அரசரே,நானும் இப்ப ஒரு படைக்கு அரசரா மாறிட்டேன் ,என்னால ஒரு படையவே கட்டுப்படுத்த முடியும்னு சொல்லுச்சு ,ஓ அப்படியா ஆந்தையாரேனு ஆச்சார்ய பட்டுச்சு அன்னப்பறவை.

மறுநாள் அன்ன பறவை அரசரை கூட்டிகிட்டு படை இருக்குற இடத்துக்கு வந்துச்சு ஆந்தை ,அங்க வந்த உடனே அன்ன பறவை அரசருக்கு தெரிஞ்சிடுச்சு ,ஆந்தை ஏதோ தப்பு செய்துன்னு.

பாருங்க தயாரா இருக்குற இந்த படை நான் சொன்ன உடனே கலைஞ்சு போயிடும்னு சொல்லிட்டு ,படை இருக்குற பக்கம் பறக்க ஆரம்பிச்சது ஆந்தை ,இன்னைக்கும் ஆந்தை அபசகுனமா கத்திட கூடாதுனு காத்துகிட்டு இருந்த ஒரு போர் வீரன் ஒரு ஈட்டிய எடுத்து ஆந்தை மேல வீசினான்

அந்த ஆந்தை அங்கேயே அடிபட்டு செத்து போச்சு .

நீதி : வீண் பெருமை படு குழியில் தள்ளி விடும்.


இன்றைய செய்திகள்
23.07.2025

⭐சென்னையில் உள்ள 11,760 மழைநீர் வடிகால்களில் 1,034 கி.மீ. பகுதி தூர்வாரப்பட்டுள்ளது. 600 சேதமடைந்த கால்வாய்கள் சீரமைக்கப்பட்டு, 201 குளங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.


⭐இந்தியா முழுவதும் உள்ள 766 மருத்துவ கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிக்க ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 900 பேர் அனுமதிக்க பட்டுள்ளனர்.


⭐வங்காளதேசத்தில் பள்ளி மீது போர் விமானம் விழுந்து விபத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக உயர்வு


🏀 விளையாட்டுச் செய்திகள்


🏀 ஒருநாள் போட்டியில் பேட்டிங் தரவரிசையில் இந்தியாவின் தீப்தி சர்மா 10 இடங்கள் முன்னேறினார்.
இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா முதல் இடத்தில் நீடிக்கிறார்.


Today's Headlines:

⭐In Chennai,Out of 11,760 storm water drainage 1,034 km. of the area has been desilted. 600 damaged canals have been repaired and 201 Pools have been renovated.


⭐One lakh 15 thousand 900 students have been admitted to study MBBS in 766 medical colleges across India.


⭐Toll rises to 27 after fighter jet crashes into school in Bangladesh


*SPORTS NEWS*


🏀 India's Deepti Sharma moves up 10 places in ODI batting rankings.
India's Smriti Mandhana remains at number one.

Covai women ICT_போதிமரம்

Comments

Post a Comment

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

Zeal study Whatsapp groups links

CLiCK The below groups name to join the group Zeal study Class wise groups links  kindly join in any one groups in these groups class suitable messages will be shared  Join our Zeal study Official Telegram channel for all latest updates https://t.me/zealstudyofficial Follow our Whatsapp channel  https://whatsapp.com/channel/0029Va9B0NY5q08hCHKk8A19 for classes 1-5 materials Zeal study primary WhatsApp  groups links   Zeal study primary group 6 https://chat.whatsapp.com/JsUkig72NCbEfK0GtsoNg3 Zeal study primary group 1 https://chat.whatsapp.com/I5zmYprrqzh0hQHrRkqO6R Zeal study primary group 2 https://chat.whatsapp.com/Gs5xFU3kgzdIaQ8xExUrp4 Zeal study primary group 3 https://chat.whatsapp.com/KPoGHVgwlmkKCoUcX8J5yY Zeal study primary group 4 https://chat.whatsapp.com/KughukPr6yN4prnKWWNgB3 Zeal study primary group 5 https://chat.whatsapp.com/LYKowdSHZnT7vTM797PmLu For classes 6-8 Zeal study 6-8   WhatsApp  groups links For 6 ,7&8 handling...

Zeal Study Lesson Plan 6,7,8,9,10 Collection 2024-25 Learning Out Comes Based Lesson Plan

Zeal study lesson plan colllection   6,7,8,9.10 Tamil Lesson plan 6,7,8,9.10 English Lesson plan 6,7,8,9.10 Maths Lesson plan   6,7,8,9.10 Science Lesson plan 6,7,8,9.10 Social science Lesson plan Join our Whatsapp groups click here

PDF Answer keys for 9,8,7&6 th std all subjects Bridge course worksheets updated by Zeal study

6th Standard Bridge  course  answer keys All subjects pdf download  click here  7th Standard Bridge  course  answer keys All subjects pdf download  click here 8th Standard Bridge  course  answer keys All subjects pdf download  click here  9th Standard Bridge  course  answer keys All subjects pdf download  click here 9th Tamil worksheet 1 answer key pdf download click here 9th Tamil worksheet 2 answer key pdf download click here 9th Tamil worksheet 3 answer key pdf download click here 9th Tamil worksheet 4 answer key pdf download click here 9th Tamil worksheet 5 answer key pdf download click here 9th Tamil worksheet 6 answer key pdf download click here 9th Tamil worksheet 7 answer key pdf download click here 9th Tamil worksheet 8 answer key pdf download click here 9 th Tamil worksheet 9 answer key pdf click here 9 th Tamil worksheet 10 answer key pdf click here 9 th Tamil worksheet 11 answer key pdf click here ...

Followers