Skip to main content

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 15.04.2025

 Zeal study official school morning prayer activities

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 15.04.2025










திருக்குறள்:

பால்: பொருட்பால்

இயல் :குடியியல்

அதிகாரம்: நன்றிஇச் செல்வம்

குறள் எண்:1010

சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி வறம்கூர்ந் தனையது உடைத்து.

பொருள்:
கொடையாளர்கள் சில காலம் வறுமையுறுதல், மேகம் வறுமையுற்றது போலாகும்.

பழமொழி :
செயல் வார்த்தைக்கு மிகுந்து பேசும்.

Action speaks louder than words.

இரண்டொழுக்க பண்புகள் :

*வீண் விளையாட்டு வினையாகும் என்ற பழமொழியை அறிவேன் எனவே விளையாடும் இடங்களிலும், விளையாடும் விதங்களிலும் மிகவும் கவனமாக இருப்பேன்.

* பெற்றோருக்கு தெரியாமல் யாருடைய வாகனங்களிலும் ஏறி செல்ல மாட்டேன். விடுமுறை காலங்களில் ஆபத்து நிறைந்த ஆறு, குளம்,  குட்டைகளில் பெரியவர்கள் துணையின்றி குளிக்க செல்ல மாட்டேன்.

பொன்மொழி :

இன்று கை கொடுக்க யாருமில்லை  என்று  வருந்தாதே, நாளை  கை  தட்ட உலகமே காத்திருக்கும்  நீ  ""முயற்சி"" செய்தால்.

பொது அறிவு :

1. மனித உடலில் உள்ள மிகச் சிறிய எலும்பு எது?

விடை :  காது எலும்பு.      

2. சமுதாய பூச்சி என அழைக்கப்படுவது எது?

விடை : தேனீக்கள்

English words & meanings :

Vehicle.   -   வண்டி/வாகனம்

Wheel.      -     சக்கரம்

வேளாண்மையும் வாழ்வும் :

பலநாடுகளில்  சுத்தமான பாத்திரங்களை வைத்து, மழைநீரை சேகரித்து அதை கொதிக்கவைத்து குடிக்கின்றனர்.

ஏப்ரல் 15

உலகக் கலை நாள்

உலகக் கலை நாள் (World Art Day) என்பது நுண்கலைகளின் ஒரு பன்னாட்டுக் கொண்டாட்ட நாள் ஆகும், இது பன்னாட்டுக் கலைச் சங்கத்தால் (IAA) உலகம் முழுவதும் ஆக்கபூர்வமான கலைச் செயல்பாடு குறித்த விழிப்புணர்வை மேம்படுத்துவதற்காக அறிவிக்கப்பட்டது.
லியொனார்டோ டா வின்சியின் பிறந்தநாளை முன்னிட்டு இந்நிகழ்விற்கான நாள் முடிவு செய்யப்பட்டது. உலக அமைதி, கருத்துச் சுதந்திரம், சகிப்புத்தன்மை, சகோதரத்துவம், பல்லினப்பண்பாடு மற்றும் கலையின் முக்கியத்துவத்தின் சின்னமாக டாவின்சி தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][4]

உலகக் கலைக் கலை நாள் இணைய வழியிலும், முக்கியமாக கூகுள் கலைச் செயல்திட்டம் போன்றவை மூலம், முன்னெடுக்கப்படுகிறது.

லியொனார்டோ டா வின்சியின் பிறந்தநாள்

லியொனார்டோ டா வின்சி (Leonardo da Vinci) அல்லது இலியனார்தோ தா வின்சி (ஏப்ரல் 15, 1452 - மே 2, 1519) ஒரு புகழ் பெற்ற இத்தாலிய மறுமலர்ச்சிக் கட்டிடக்கலைஞரும், கண்டுபிடிப்பாளரும், பொறியியலாளரும், சிற்பியும், ஓவியரும் ஆவார். ஒரு பல்துறை மேதையாகக் கருதப்பட்டவர். குறிப்பாக இவரது, சிறப்பான ஒவியங்களுக்காகப் பரவலாக அறியப்பட்டவர். "கடைசி விருந்து" (The Last Supper), "மோன லிசா" (Mona Lisa) போன்ற ஒவியங்கள் உலகப் புகழ் பெற்றவை. உரிய காலத்துக்கு மிக முன்னதாகவே செய்யப்பட்ட பல கண்டுபிடிப்புக்கள் தொடர்பிலும் இவர் பெயர் பெற்றவர். எனினும் இவரது காலத்தில் இவை எதுவும் வெளியிடப்படவில்லை. அத்துடன் இவர், உடற்கூற்றியல், வானியல், குடிசார் பொறியியல் ஆகிய துறைகளின் வளர்ச்சியிலும் பெரும்பங்கு ஆற்றியுள்ளார். இவர் தணியாத ஆர்வம் கொண்டவராகவும் தீவிர கற்பனை வளம் கொண்டவராகவும் இருந்துள்ளார் [1] உலகில் இது வரை வாழ்ந்த மிகச்சிறந்த ஒவியர்களில் ஒருவராகவும், பண்முக ஆற்றல் கொண்டவராகவும் இருந்துள்ளார்
நீதிக்கதை

ஒரு பூவும் வண்டும்

      ஒரு காட்டில் செடி ஒன்று இருந்தது. அதில்   சிறிதும் பெரிதுமாக நிறையப் பூக்கள் இருந்தன. வண்டு ஒன்று தேனுக்காக அந்தச் செடியைச் சுற்றிவந்தது.

அப்போது, பூ ஒன்று மிகுந்த வாட்டத்துடன் இருப்பதைப் பார்த்ததும், “நீ ஏன் வாட்டமா இருக்கே?” என்று கேட்டது.

அதற்கு அந்தப் பூ, “பூக்களின் தோற்றம் வளர்ச்சியில் ஏழு நிலைகள் உண்டு. அதை நீ தெரிஞ்சுக்கிட்டா என் வாட்டத்துக்கான காரணத்தைப் புரிஞ்சுக்க முடியும்!” என்றது.

“பூக்களின் வளர்ச்சில் ஏழு நிலைகளா? சொல்லு... சொல்லு” என ஆர்வமானது வண்டு.

‘`ஒரு பூ முதன்முதலா செடியில் உருவாகும்போது ‘அரும்பு’ எனச் சொல்வாங்க. அப்படி நான் உருவானபோது, ரொம்பச் சந்தோஷமா இருந்துச்சு. தாய்ச்செடி என்கிட்ட ரொம்ப வாஞ்சையா இருந்துச்சு. என் சகோதரிகள், பிரியமா நடந்துக்கிட்டாங்க. மழை, வெயில், காற்று, பனியினால் எனக்குக் கெடுதல் வந்துடக் கூடாதுனு, இலைகளால் மூடிப் பாதுகாக்கப்பட்டேன். அரும்புதான் என் மழலைப் பருவம். மிகவும் இனிமையான பருவம்!” என்றது பூ.

‘`ஆஹா அருமை. பூக்களின் இரண்டாம் நிலை?’’ - கேட்டது வண்டு.

`பூக்களின் இரண்டாம் நிலை ‘மொட்டு’. இந்த நிலையில் பூவின் இதழ்கள் வளர ஆரம்பிச்சாலும், குவிஞ்ச நிலையில்தான் இருக்கும்.அப்போ, சிறிசும் பெருசுமா நிறைய மொட்டுகள் இருந்தோம். நாங்க எல்லாரும் கூடிப் பேசுவோம். எங்க எல்லாருக்கும் பல கனவுகள் இருந்துச்சு. ‘மொட்டு’ எனது உற்சாகமான சிறார் பருவம்!” என்றது பூ.

“உன் கதையைக் கேட்கவே சுவராஸ்யமா இருக்கு. உன் அடுத்த நிலை என்ன?” என ரீங்காரமிட்டது வண்டு.

“பூக்களின் மூன்றாம் நிலை ‘முகில்’. ஒரு மொட்டின் இதழ்கள் முதன்முதலா அவிழ்ந்து விடுபடுவதைத்தான் முகிழ் அல்லது முகிழ்த்தல் எனச் சொல்வாங்க. இந்த நிலையில் எனக்குத் தாய்ச் செடியின் பராமரிப்பு அதிகம் தேவைப்படலை. நான் தன்னம்பிக்கையோடு இருந்தேன். நெக்டார் எனப்படும் தேன், என்னிடம் உருவாக ஆரம்பிச்சது. முகிழ்ப் பருவத்தை இளமையின் ஆரம்பநிலைனு சொல்லலாம்!” என்றது பூ. 

வண்டு வியப்புடன் பார்க்க, பூ தொடர்ந்து பேசியது. “பூக்களின் நான்காம் நிலை ‘மலர்’. இந்த நிலையில் எனது இதழ்கள் மேலும் பெருசா வளர்ந்துச்சு. என் நிறம், அடர்த்தியான நீலத்துக்கு மாறி, பார்க்கிறவங்க மனசைக் கவர்ந்தது. தினமும் காலையில் சூரிய உதயத்தின்போது மலர்வேன். அந்திசாயும் வேளையில் இதழ்கள் குவிவேன். உன்னை மாதிரி வண்டுகளும் பட்டாம்பூச்சிகளும் தேனுக்காக வரும். மலர் ஒரு பூவின் துடிப்பான இளமைப் பருவம்!”

குறுக்கிட்ட வண்டு, “மொட்டுகளா இருந்தப்போ பலருக்கும் பல கனவுகள் இருந்ததா சொன்னியே, அது என்ன?” எனக் கேட்டது.

“வளர்ந்த மொட்டுகளைத் தங்கள் தேவைக்காக மனுஷங்க கொய்து எடுத்துட்டுப் போவாங்க. சில மொட்டுகளுக்குத் தாங்கள் அழகான மாலையாகத் தொடுக்கப்படணும்னு ஆசை இருந்துச்சு. சில மொட்டுகள் இறைவனுக்கு அர்ச்சனை செய்யப்படும் பாதமலரா இருக்கணும்னு ஆசைப்பட்டாங்க!”

“ஓகோ... நினைச்சது நடந்துச்சா?”

“எண்ணம்தானே வாழ்க்கை. எல்லா மொட்டுகளுக்கும் அவங்க நினைச்சதே நடந்துச்சு. பூக்களின் ஐந்தாம் நிலை ‘அலர்’. ஒரு பூ எப்போதும் மலர்ந்த நிலையிலேயே இருப்பது அலர்!” என்றது பூ.

“ஒரு சந்தேகம்... அலருக்கும் மலருக்கும் என்ன வித்தியாசம்?” எனக் கேட்டது கருவண்டு.

“அலர்ந்த நிலையில் ஒரு பூ தன் இதழ்கள் குவிந்து விரியும் தன்மையை இழந்துரும். மலர் இளமைப் பருவம்னா, அலர் முதுமையின் ஆரம்பம்னு சொல்லலாம். அலர்ந்த நிலையில் ஒரு பூவுக்குப் பனிக்காற்று, வெயில், மழையிலிருந்து பாதுகாப்பு கிடைக்காது. இதனால், பூ வாடத் தொடங்கும். மகரந்தத்தாள் காய ஆரம்பிக்கும். ஓர் அலர்ந்த பூ வாடும் நிலைதான் ஆறாம் நிலை!” என்றது பூ.

“புரியுது புரியுது! அப்போ, ஏழாம் நிலை என்ன?”

“பூக்களின் ஏழாம் நிலை, ‘செம்மல்’. வாடிய பூ வதங்கும் நிலை. பூக்களின் இதழ்கள் சுருங்கும். மகரந்தத்தாளும் முழுசா வாடிரும். இப்போ, நான் வதங்கியிருக்கேன். இது எனது ஏழாம் அதாவது கடைசி நிலை. இப்போ, இந்தச் செடியில் பெயரளவுக்குத்தான் ஒட்டிக்கிட்டுருக்கேன். ஒரு சின்னக் காற்று அடிச்சாலும் உதிர்ந்திருவேன். நீ என் பக்கத்துல வந்து உன் இறக்கைகளைப் படபடத்துவிட்டுப் போ!” என்றது பூ.

பூ கேட்டுக்கொண்டபடி வண்டு செடியின் அருகில் வந்து படபடத்தது. அதன் அதிர்வில் பூ காம்பிலிருந்து உதிர்ந்து ஓசையின்றித் தரையில் வீழ்ந்தது. விழுந்த பூவின் அருகே வண்டு சென்றது. “மொட்டா இருந்தப்போ, நீ என்ன ஆசைப்பட்டே?” எனக் கேட்டது வண்டு.

“என் ஏழு நிலைகளையும் தாய்ச் செடியிலேயே கழிக்கணும். அதன் காலடியில் விழுந்து சருகாக வேண்டும் என ஆசைப்பட்டேன். நான் நினைச்சதே நடந்தது!” சிரித்தபடி சொன்னது பூ.

‘’ஆனால், யாருக்கும் பயனில்லாமல் போய்ட்டோமோ என்ற வருத்தம் இல்லியா?’’ எனக் கேட்டது வண்டு.

‘’யார் சொன்னது பயனில்லாமல் போனதாக? உன்னைப்போலப் பலருக்கும் பசியாற்றினேன். என் தாய்ச் செடிக்கே நான் உரமாகிறேன். என்னை இத்தனை தூரம் வளர்த்த மண்ணுக்கு நன்றி சொல்றேன்’’ - என்றது பூ.

வண்டு அமைதியாகத் தலைவணங்கி, அந்தப் பூவைச் சுற்றி வந்து, ரீங்காரமிட்டபடி பறந்துசென்றது.

இன்றைய செய்திகள்

15.04.2025

* நான் முதல்வன், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்களால் உயர்கல்வியில் இணையும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 3 ஆண்டுகளில் 30% அதிகரித்துள்ளது.

* விதிமீறல் வாகனங்களை படம் பிடிக்க சென்னை சாலைகளில் 200 இடங்களில் ஏஐ தொழில்நுட்ப கேமராக்கள்.

* எதிரிநாட்டு போர் விமானங்கள், ஏவுகணைகள், ட்ரோன்களை நடுவானில் சுட்டு வீழ்த்தும் லேசர் அடிப்படையிலான ‘டி.இ.டபிள்யூ’ என்ற ஆயுத சோதனை டிஆர்டிஓ வெற்றிகரமாக மேற்கொண்டது. இதன்மூலம் இத்தகைய ஆயுதங்கள் வைத்திருக்கும் ஒரு சில நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பிடித்தது.

* அமெரிக்காவில் 30 நாட்களுக்கு மேல் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் அரசாங்கத்தில் பதிவு செய்ய வேண்டும், இதற்கு இணங்க மறுத்தால் அபராதமும் சிறைதண்டனையும் விதிக்கப்படும் என்று அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

* பக்ரைன் பார்முலா1 கார்பந்தயம்: ஆஸ்திரேலிய வீரர் பியாஸ்ட்ரி முதலிடம்.

* மாண்டி கார்லோ டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் அல்காரஸ்.

Today's Headlines

* The number of government school students enrolling in higher education has increased by 30% in the last three years, due to schemes like "Naan Mudhalvan," "Pudhumai Penn," and "Tamil Pudhalvan."



   * AI (Artificial Intelligence) technology cameras have been installed in 200 locations on Chennai roads to capture traffic violations.

   * DRDO has successfully tested a laser-based weapon called 'DEW' (Directed Energy Weapon) that can shoot down enemy warplanes, missiles, and drones mid-air. With this, India has joined the list of a few countries possessing such weapons.

   * The Trump administration has announced that foreigners staying in the US for more than 30 days must register with the government. Failure to comply will result in fines and imprisonment.

   * Australian driver Piastri won first place in the Bahrain Formula 1 car race.

   * Alcaraz won the champion title in Monte Carlo Tennis.

Covai women ICT_போதிமரம்

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

Zeal study Whatsapp groups links

CLiCK The below groups name to join the group Zeal study Class wise groups links  kindly join in any one groups in these groups class suitable messages will be shared  Join our Zeal study Official Telegram channel for all latest updates https://t.me/zealstudyofficial Follow our Whatsapp channel  https://whatsapp.com/channel/0029Va9B0NY5q08hCHKk8A19 for classes 1-5 materials Zeal study primary WhatsApp  groups links   Zeal study primary group 6 https://chat.whatsapp.com/JsUkig72NCbEfK0GtsoNg3 Zeal study primary group 1 https://chat.whatsapp.com/I5zmYprrqzh0hQHrRkqO6R Zeal study primary group 2 https://chat.whatsapp.com/Gs5xFU3kgzdIaQ8xExUrp4 Zeal study primary group 3 https://chat.whatsapp.com/KPoGHVgwlmkKCoUcX8J5yY Zeal study primary group 4 https://chat.whatsapp.com/KughukPr6yN4prnKWWNgB3 Zeal study primary group 5 https://chat.whatsapp.com/LYKowdSHZnT7vTM797PmLu For classes 6-8 Zeal study 6-8   WhatsApp  groups links For 6 ,7&8 handling...

Zeal Study Lesson Plan 6,7,8,9,10 Collection 2024-25 Learning Out Comes Based Lesson Plan

Zeal study lesson plan colllection   6,7,8,9.10 Tamil Lesson plan 6,7,8,9.10 English Lesson plan 6,7,8,9.10 Maths Lesson plan   6,7,8,9.10 Science Lesson plan 6,7,8,9.10 Social science Lesson plan Join our Whatsapp groups click here

PDF Answer keys for 9,8,7&6 th std all subjects Bridge course worksheets updated by Zeal study

6th Standard Bridge  course  answer keys All subjects pdf download  click here  7th Standard Bridge  course  answer keys All subjects pdf download  click here 8th Standard Bridge  course  answer keys All subjects pdf download  click here  9th Standard Bridge  course  answer keys All subjects pdf download  click here 9th Tamil worksheet 1 answer key pdf download click here 9th Tamil worksheet 2 answer key pdf download click here 9th Tamil worksheet 3 answer key pdf download click here 9th Tamil worksheet 4 answer key pdf download click here 9th Tamil worksheet 5 answer key pdf download click here 9th Tamil worksheet 6 answer key pdf download click here 9th Tamil worksheet 7 answer key pdf download click here 9th Tamil worksheet 8 answer key pdf download click here 9 th Tamil worksheet 9 answer key pdf click here 9 th Tamil worksheet 10 answer key pdf click here 9 th Tamil worksheet 11 answer key pdf click here ...

Followers