Skip to main content

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.04.2025

 Zeal study official school morning prayer activities

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.04.2025



 



திருக்குறள்:

பால்: பொருட்பால்

இயல்:குடியியல்

குறள் எண்:1003

அதிகாரம்:நன்றிஇச் செல்வம்
ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்கும் பொறை.

பொருள்:
சேர்த்த பொருளை இறுக்கி வைத்துக் கொண்டு, ஈகை புகழில்லாத ஆடவர் பூமிக்கு பாரமாவர்.

பழமொழி :
செயல்கள் தேவை; சொற்களல்ல.

Wanted deeds only, not words.

இரண்டொழுக்க பண்புகள் :

1. 'தர்மம் தலைகாக்கும்' என்பதை அறிவேன், எனவே, என்னால் இயன்ற அளவு தான தர்மம் செய்வேன். 

2. வசதி வாய்ப்புகள் பெருகுவதால் கர்வம் கொள்ள மாட்டேன்.

பொன்மொழி :

என்னிடம் எதை வேண்டுமானாலும் கேள்; ஆனால்,  என் நேரத்தை மட்டும் கேட்காதே!---நெப்போலியன்  ஹில்

பொது அறிவு :

1. தண்ணீரில் போட்டால் மிதக்கும் கோள் எது?

விடை : சனி.      

2. மணல் குன்றுகளால் ஆன மிகப்பெரிய பாலைவனம் எது?

விடை: சகாரா பாலைவனம்

English words & meanings :

Ointment.      -   களிம்பு மருந்து

Powder.     -       பொடி

வேளாண்மையும் வாழ்வும் :

ஷவரின் துளைகள் சிறிய அளவில் இருக்குமாறு அமைத்துக் குளிக்கும் போது அதிக நீர் செலவாவதைக் கட்டுப்படுத்த முடியும்.

ஏப்ரல் 02

கவிக்குயில் சரோஜினி அவர்களின் நினைவுநாள்

சரோஜினி நாயுடு அல்லது சரோஜினி சட்டோபத்யாயா (பிப்ரவரி 13,1879, ஹைதராபாத் - மார்ச் 2,1949, லக்னோ) அவர் இந்தியாவின் நைட்டிங்கேல் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் ஒரு பிரபலமான சிறுமுது அறிஞர், கவிஞர், எழுத்தாளர் ,சுதந்திரப் போராளி மற்றும் சமூக ஆர்வலர் ஆவார். இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது பெண் தலைவரும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல் பெண் ஆளுனரும் ஆவார்.அவரது பிறந்த நாள் இந்தியாவில் மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது.

1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 15 ஆம் நாள் இந்தியா சுதந்திரம் பெற்றதற்குப் பிறகு அவர் யுனைட்டட் ப்ரொவின்சஸ் (தற்போது உத்தரப்பிரதேசம் என்று அழைக்கப்படுகிறது) ன் ஆளுநராக பதவியேற்றார். இதன் வழியாக இந்தியாவின் முதல் பெண் ஆளுநரானார். மார்ச் 2, 1949 அன்று மாரடைப்பால் அவர் மரணமடைந்தார்.
நீதிக்கதை

நன்றி மறந்த சிங்கம் |

முல்லை மலர் என்ற காட்டில் விறகு வெட்டுவதற்காக சென்று கொண்டிருந்தான் மனிதன் ஒருவன்.அப்போது காட்டில் எங்கிருந்தோ சிங்கத்தின் கர்ஜினை கேட்டது. பயத்துடன் ஓடத் தொடங்கினான் மனிதன்.

“மனிதனே பயப்படாதே! இங்கே வா! நான் உன்னை ஒன்றும் செய்யமாட்டேன்,” என்ற குரல் கேட்டது.தயக்கத்துடன் குரல் வந்த திசையை நோக்கிச் சென்றான் மனிதன்.

அங்கு ஒரு கூண்டில் சிங்கம் அடைப்பட்டு இருந்தது. வேட்டைக்காரர்கள் சிலர் சிங்கத்தை உயிருடன் பிடிப்பதற்காக ஒரு கூண்டு செய்து அதற்குள் ஓர் ஆட்டை விட்டு வைத்திருந்தனர். ஆட்டிற்கு ஆசைப்பட்ட சிங்கம் கூண்டிற்குள் மாட்டிக் கொண்டது.

மனிதனைப் பார்த்த சிங்கம், “மனிதனே, என்னை இந்தக் கூண்டிலிருந்து விடுவித்து விடு… நான் உனக்குப் பல உதவிகளைச் செய்வேன்,” என்றது.“நீயோ மனிதர்களைக் கொன்று தின்பவன். உன்னை எப்படி

நான் விடுவிக்க முடியும்?” என்றான் மனிதன்.

“மனிதர்களைக் கொல்லும் சுபாவம் எங்களுக்கு உண்டு தான். அதற்காக உயிர்காக்கும் உன்னைக் கூடவா அடித்துக் கொன்றுவிடுவேன். அவ்வளவு நன்றியில்லாதவனா நான்? பயப்படாமல் கூண்டின் கதவைத்திற. உன்னை ஒன்றும் செய்யமாட்டேன்,” என்று

நைசாகப் பேசியது சிங்கம்.

சிங்கத்தின் வார்த்தையை உண்மையென்று நம்பிவிட்டான் மனிதன். கூண்டின் கதவைத் திறந்தான். அவ்வளவுதான்! நன்றி கெட்ட சிங்கம் மனிதன் மேல் பாய்வதற்கு தயாராயிற்று.

இதனைக் கண்ட மனிதன், “சிங்கமே, நீ செய்வது உனக்கே நியாயமா? உன் பேச்சை நம்பி உன்னைக் கூண்டிலிருந்து விடுவித்தேனே… அதற்கு இதுதானா நீ காட்டும் நன்றி,” என்றான்.

“என் உயிரைக் காத்துக் கொள்வதற்காக நான் ஆயிரம் பொய் சொல்லுவேன். அதை நீ எவ்வாறு நம்பலாம்?  என்றது சிங்கம்.

“கடவுள் உன்னை தண்டிப்பார். உன் உயிரை காப்பாற்றிய என்னையே சாப்பிடுவது நியாயமா?” உன்னை விடுவித்ததற்கு இம்மாதிரி நடந்து கொள்வது முறையல்ல,” என்றான் மனிதன்.

அவ்வழியாக ஒரு நரி வந்தது.

“இதனிடம் நியாயம் கேட்போம்,” என்று கூறிய மனிதன் நடந்த கதையனைத்தையும் நரியிடம் கூறினான்.அனைத்தையும்

கேட்ட நரி ஒன்றும் புரியாததைப் போல் பாவனை செய்தது.

“நீங்கள் இந்த மாதிரி சொன்னால் எனக்கு ஒன்றுமே புரியல. ஆரம்பத்திலிருந்து சொல்லுங்கள்,” என்றது நரி.

உடனே சிங்கம் சொல்லத் தொடங்கியது.“நான் அந்தக் கூண்டிற்குள் அடைந்து கிடந்தேன்.“எந்தக் கூண்டிற்குள்?” என்றது நரி.

“அதோ இருக்கிறதே அந்தக் கூண்டிற்குள்,” என்றது சிங்கம்.

“எப்படி அடைந்து கிடந்தீர்கள்?” என்றது நரி.

சிங்கம் விடுவிடுவென்று கூண்டிற்குள் சென்றது. இதுதான் சமயம் என்று கருதிய நரி சட்டென்று கூண்டுக் கதவை இழுத்து மூடியது.

“நரியாரே! இது என்ன அயோக்கியத்தனம்! நியாயம் கூறுவதாகக் கூறி என்னை மறுபடியும் கூண்டில் அடைத்துவிட்டீரே!” என்று கத்தியது சிங்கம்.

“நீங்கள் பேசாமல் கூண்டிற்குள்ளேயே இருங்கள்.  முதலில் மனிதனை அடித்துக் கொல்வீர்கள். பிறகு என்னையே அடித்துக் கொன்று விடுவீர்கள். அதனால் தான் உங்களைக் கூண்டிற்குள் செல்லுமாறு செய்து கதவைப் பூட்டி விட்டேன்,” என்றது நரி.

நன்றி மறந்த சிங்கம் தன் நிலையை நினைத்து நொந்து போனது.

நீதி :ஒருவர் செய்த நன்றியை எப்போதும் மறக்க கூடாது. மறந்தால் தீமை நமக்கே.

இன்றைய செய்திகள்

02.04.2025

* மும்பையில் காடுகளின் நடுவே மரத்தினால் ஆன நடைபாதை திறப்பு!மும்பை மலபார் ஹில் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள வன நடைபாதை நேற்று திறக்கப்பட்டது.

* இதுவரை அரசு


பள்ளிகளில் 1,17,310 மாணவர்கள் சேர்க்கை' - கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பெருமிதம்.

* கும்பகோணம் வெற்றிலை, குமரி தோவாளை மாணிக்க மாலைக்குப் புவிசார் குறியீடு கிடைத்திருப்பதாக அறிவு சார் சொத்துரிமை சிறப்பு வழக்கறிஞர் சஞ்சய் காந்தி தெரிவித்தார்.

* கடுமையான நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு; 3 லட்சம் பேருக்கு ஆபத்து: ஜப்பான் வெளியிட்ட அறிவிப்பு

* தொடர் தோல்வி எதிரொலி: டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் டாப் 10 இடத்தை இழந்தார் மெத்வதேவ்.

* இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மன்சூர் அலிகான் பட்டோடி பெயரில் பரிசுக்கோப்பை வழங்கப்பட்டு வந்தது. இந்த கோப்பைக்கு ஓய்வு கொடுக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

Today's Headlines

* A wooden bridge is  opened in the middle of the forest in Mumbai!


The newly built forest corridor in Malabar Hill, Mumbai, opened yesterday.

* So far
Admission of 1,17,310 students in government schools - Education Minister Anbil Mahesh is proud.

* Sanjay Gandhi, special lawyer, said that Kumbakonam Beetal, Kumari Thovalai's maanika malai which is made of flowers to give to temple had got a geographical code

* The possibility of a severe earthquake; 3 lakhs of people in danger: Announcement of Japan

* Series Failure Echo: Medvedev lost the top 10 in the tennis rankings.

* In the name of former India captain Mansoor Alikan awards were given. Now the England Cricket Board planned to stop this trophy.

Covai women ICT_போதிமரம்

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

Zeal study (Lo based )-கற்றல் விளைவு அடிப்படையிலான பாடக்குறிப்பு 6th Tamil -கல்வியை போற்று

 Zeal study is an educational where you can find study materials, lesson plan, Individual class wise- unit wise- lesson wise Solutions, book back answer keys, Unit wise Fa (a) activities collections, FA(b)  question bank collections .

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 27.07.26

 Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 27.07.26

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -10.08.2026

 Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -10.08.2026

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 21.07.26

 Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 21.07.26

Followers