Skip to main content

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.03.2025

  Zeal study official school morning prayer activities

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.03.2025





 



திருக்குறள்:

பால்:பொருட்பால்

அதிகாரம்: சான்றாண்மை

குறள் எண்:986

சால்பிற்குக் கட்டளை யாதெனில் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல்.

பொருள்:
தோல்வியை தாழ்ந்தவரிடத்திலும் ஒத்துக்கொள்வது நிறை குணத்தின் உரைகல் எனப்படும்.

பழமொழி :
The bearer knows the burden.

சுமப்பவனுக்கு தான் பாரம் தெரியும்.

இரண்டொழுக்க பண்புகள் :

*  பசியுடன் இருப்பவர்களின் வேதனையை அறிவேன். எனவே உணவை வீணாக்காமல் உண்பேன்.

* பசியோடு இருப்பவர்களுக்கு என்னால் இயன்ற அளவு உணவு தருவேன்.

பொன்மொழி :

உள்ளத்தில் நேர்மையும், தைரியமும் இருந்தால் நடக்கும் பாதையும் நேரானதாகவே இருக்கும். ---பாரதியார்

பொது அறிவு :

1.  நம் மாநிலத்தின் முக்கிய எண்ணெய் வித்து எது?

விடை: நிலக்கடலை.        

2. நீரில் மூழ்காத விலங்கு எது?

விடை :முள்ளம்பன்றி

English words & meanings :

Author.    -    எழுத்தாளர்,

Cook.   -     சமையல்காரர்

வேளாண்மையும் வாழ்வும் :

மக்கள்தொகை வளர்ச்சி மற்றும் பொருளாதார வளர்ச்சியுடன்  வளத்திற்கான தேவை அதிகரிக்கிறது, அதனால்தான் நீர் மேலாண்மை முக்கியமானது.

மார்ச் 11

சர் அலெக்ஸாண்டர் ஃபிளெமிங் அவர்களின் நினைவுநாள்

சர் அலெக்ஸாண்டர் ஃபிளெமிங் (Sir Alexander Fleming) (ஆகஸ்ட் 6, 1881 – மார்ச் 11, 1955) நுண்ணுயிர் கொல்லியான சிதைநொதியைக் கண்டுபிடித்தவர். மேலும், நுண்ணுயிர் கொல்லியான பெனிசிலினை பெனிசிலியம் நொடேடம் (Penicillium notatum) என்ற பூஞ்சையிலிருந்து பிரித்தெடுத்தார்.

உலகம் அறிந்துள்ள மருத்துவ முன்னேற்றங்களுள் பெனிசிலின் கண்டுபிடிப்பு தனிச்சிறப்பு வாய்ந்தது. பெனிசிலின் காலத்திற்கு முன் பிரசவத்தில் பெண்கள் இறப்பதும், பிறந்தபின் குழந்தைகள் இறப்பதும் சர்வ சாதாரணம். லேசான சிராய்ப்புகளும் கீறல்களும் கூட மரணத்திற்கு இட்டுச் சென்றன. ஒரு நுண்ணுயிரை வைத்து இன்னொன்றைக் கொல்லமுடிகிற பெனிஸிலின் போன்ற நச்சுமுறி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் பல நோய்களிலிருந்து மனிதர்களைக் காப்பாற்ற முடிந்தது. பெனிசிலினைக் கண்டு பிடித்து நவீன நச்சுமுறி மருந்துகள் யுகத்தைத் தொடங்கிவைத்த பெருமைக்குரிய விஞ்ஞானிதான் அலெக்ஸாண்டர் ஃப்பௌமிங். பெனிசிலின் உலகெங்கிலும் உள்ள 20 கோடி மக்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளது என்கிறது ஒரு மதிப்பீடு.
நீதிக்கதை

எளியவர்களாலும் உதவ முடியும்

செடி, கொடி, மரங்கள் அடர்ந்த பெரிய காடு. அங்கு ஆண் சிங்கம் ஒன்று அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தது

அப்போது  சுண்டெலி ஒன்று, தூங்கிக் கொண்டிருந்த சிங்கத்தின் மேல் ஏறி விளையாடியது.

அதனால் சிங்கத்தின் தூக்கம் கலைந்தது. சினம் பொங்கியது, கண்கள் சிவந்தன. சுண்டெலியைக் கடுமையாகப் பார்த்தது.

சுண்டெலி அஞ்சி நடுங்கியது. சிங்கத்தின் காலடியில் வீழ்ந்து

“வனராஜனே! என்னை மன்னித்து விடு, எப்போதாவது நன்றி மறவாமல், உனக்கு உதவி செய்வேன்” என்று மன்றாடியது.

சிங்கம் ஏளனமாகச் சிரித்து, “நீயா எனக்கு உதவி செய்யப் போகிறாய்? ஓடிப்போ” என்று கூறி, சுண்டெலியை மன்னித்தது. பல நாட்களுக்குப் பிறகு, வேடர்கள் விரித்த வலையில் அந்தச் சிங்கம் அகப்பட்டுக் கொண்டது. தப்பிக்க வழி இல்லாமல் தவித்தது. அந்தக் காடே அதிரும்படி முழுக்கமிட்டது.

இதர மிருகங்கள் எல்லாம் பயந்து ஓடி மறைந்தன. சிங்கத்தின் குரலைக் கேட்ட சுண்டெலி ஒடி வந்து பார்த்தது. சிங்கத்தின் பரிதாப நிலையைக் கண்டு வருந்தியது.

“வனராஜனே! முன்பு நீ மன்னித்ததை நான் மறக்கவில்லை; என்னுடைய பற்களால் சிறுகச் சிறுகக் கடித்து, வலையைத் துண்டித்து விடுகிறேன்.

நீ உடனே வலையிலிருந்து வெளியேறி விடலாம்” என்று கூறி, வலையைக் கடித்து, துண்டித்து விட்டது சுண்டெலி.

சுண்டெலி தனக்கு உதவி செய்து, உயிர் பிழைக்கச் செய்ததை சிங்கம், நன்றிப் பெருக்கோடு சுண்டெலியைப் பாராட்டியது. முன்பு, ஏளனமாக நினைத்ததை எண்ணி வருந்தியது.

நீதி: சிறு துரும்பும் பல் குத்த உதவும்.

இன்றைய செய்திகள்

11.03.2025

* தமிழகத்தில் அரசு பணிகளில் சேர தமிழில் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

* தமிழகத்தில் கடந்த 2023-24-ம் ஆண்டில் காற்றாலை நிறுவு திறன் 9,015 மெகா வாட்டாகவும், சூரியசக்தி மின்நிறுவு திறன் 1,261 மெகாவாட்டாகவும் அதிகரித்துள்ளது.

* இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனம் உருவாக்கிய விண்வெளியை கண்காணிக்கும் உலகின் முதல் வர்த்தக செயற்கைகோள் ‘ஸ்காட்-1’ தென் அமெரிக்காவை படம் பிடித்து அனுப்பி தனது செயல்பாட்டை தொடங்கியுள்ளது.

* கனடா புதிய பிரதமரானார் மார்க் கார்னி: அமெரிக்க பரஸ்பர வரி விதிப்புக்கு பணிய மாட்டோம் என பேச்சு.

* தேசிய சீனியர் மகளிர் ஹாக்கி போட்டி: காலிறுதியில் ஜார்கண்ட், மராட்டியம், மிசோரம், அரியானா அணிகள் வெற்றி.

* இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் போட்டி: ஜெசிகா பெகுலா 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்.

Today's Headlines

* High Court judges have suggested that people who wanted join in Tamilnadu government jobs should know how to speak and write in Tamil in Tamil Nadu.

* In Tamil Nadu, in 2023-24, wind power installation increased by 9,015 MW and solar power capacity increased to 1,261 MW.

* Scott-1 is the world's first trading satellite to monitor the space created by Indian Start-up.It has taken the picture of South America and sent it by this it


started its operation.

* Mark Carni became the new Prime Minister of Canada: Saying  "we won't surrender ourselves for the  US mutual taxation".

* National Senior Women's Hockey Tournament: Jharkhand, Maratham, Mizoram and Haryana teams win in the quarter -finals.

* Indianwells Tennis Tournament: Progress to Jessica Begula 4th round.

Covai women ICT_போதிமரம்

Comments

  1. Information is available on the website and the information you will need to make a booking for the event please contact our office.

    ReplyDelete

Post a Comment

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

Zeal study Whatsapp groups links

CLiCK The below groups name to join the group Zeal study Class wise groups links  kindly join in any one groups in these groups class suitable messages will be shared  Join our Zeal study Official Telegram channel for all latest updates https://t.me/zealstudyofficial Follow our Whatsapp channel  https://whatsapp.com/channel/0029Va9B0NY5q08hCHKk8A19 for classes 1-5 materials Zeal study primary WhatsApp  groups links   Zeal study primary group 6 https://chat.whatsapp.com/JsUkig72NCbEfK0GtsoNg3 Zeal study primary group 1 https://chat.whatsapp.com/I5zmYprrqzh0hQHrRkqO6R Zeal study primary group 2 https://chat.whatsapp.com/Gs5xFU3kgzdIaQ8xExUrp4 Zeal study primary group 3 https://chat.whatsapp.com/KPoGHVgwlmkKCoUcX8J5yY Zeal study primary group 4 https://chat.whatsapp.com/KughukPr6yN4prnKWWNgB3 Zeal study primary group 5 https://chat.whatsapp.com/LYKowdSHZnT7vTM797PmLu For classes 6-8 Zeal study 6-8   WhatsApp  groups links For 6 ,7&8 handling...

Zeal Study Lesson Plan 6,7,8,9,10 Collection 2024-25 Learning Out Comes Based Lesson Plan

Zeal study lesson plan colllection   6,7,8,9.10 Tamil Lesson plan 6,7,8,9.10 English Lesson plan 6,7,8,9.10 Maths Lesson plan   6,7,8,9.10 Science Lesson plan 6,7,8,9.10 Social science Lesson plan Join our Whatsapp groups click here

PDF Answer keys for 9,8,7&6 th std all subjects Bridge course worksheets updated by Zeal study

6th Standard Bridge  course  answer keys All subjects pdf download  click here  7th Standard Bridge  course  answer keys All subjects pdf download  click here 8th Standard Bridge  course  answer keys All subjects pdf download  click here  9th Standard Bridge  course  answer keys All subjects pdf download  click here 9th Tamil worksheet 1 answer key pdf download click here 9th Tamil worksheet 2 answer key pdf download click here 9th Tamil worksheet 3 answer key pdf download click here 9th Tamil worksheet 4 answer key pdf download click here 9th Tamil worksheet 5 answer key pdf download click here 9th Tamil worksheet 6 answer key pdf download click here 9th Tamil worksheet 7 answer key pdf download click here 9th Tamil worksheet 8 answer key pdf download click here 9 th Tamil worksheet 9 answer key pdf click here 9 th Tamil worksheet 10 answer key pdf click here 9 th Tamil worksheet 11 answer key pdf click here ...

Followers