Skip to main content

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.02.2025

 

Zeal study official school morning prayer activities
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.02.2025


 







திருக்குறள்:

பால்: பொருட்பால்

அதிகாரம்: மானம்

குறள் எண்:966.      

புகழ்இன்றால்; புத்தேள்நாட்டு உய்யாதால்; என்மற்று
இகழ்வார்பின் சென்று நிலை?

பொருள்:
அவமதிப்பார் பின், மானம் விட்டு நிற்பதால் என்ன பயன்? புகழும் வாராது; மறுமையில் விண்ணுலகும் கிட்டாது.

பழமொழி :
The finest lawn soonest stains.

காய்ந்த  மரமே கல்லடி படும்

இரண்டொழுக்க பண்புகள் :  

* ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு  தனித்திறமை இருக்கும். யாருடைய திறமையையும் குறைவாக எண்ணமாட்டேன். ‌

*தேர்வுகள் மூலம் எனது கற்றலை மதிப்பிட முடியும். எனவே தைரியமாக தேர்வுகளை எழுதுவேன்.

பொன்மொழி :

தேவையற்ற பொருட்களை வாங்கும் வழக்கம் தேவையான பொருட்களை விற்கும் நிலைக்கு கொண்டு வந்துவிடும்.


--------பொருளாதார நிபுணர்

பொது அறிவு :

1. இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி 2024____________

விடை: திரு. டி. ஒய். சந்திரசூட்.  

2. இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் 2024____________

விடை:   திரு. சக்தி காந்ததாஸ்

English words & meanings :


Riverbank.    -     ஆற்றங்கரை

Road.     -      சாலை
நீதிக்கதை

பேராசை மனநிம்மதியைக் கெடுக்கும்



ஓர் ஊரில் விறகு வெட்டி ஒருவன் இருந்தான். நாள்தோறும் அவன் காட்டுக்குச் சென்று விறகு வெட்டி, அவற்றை மக்களிடம் விற்று, அதனால் கிடைக்கும் வருமானத்தில் வாழ்ந்து வந்தான். இதில் அவனுக்குத் குறைந்த வருமானமே கிடைத்தது. என்றாலும், மனநிம்மதியோடு வாழ்ந்து வந்தான்.

ஒருநாள் அவன் வழக்கம் போல் காட்டில் விறகு வெட்டிக் கொண்டிருக்கும்போது ஓர் அரசமரத்தின் பக்கமிருந்து, “உனக்கு ஏழு ஜாடி தங்கம் வேண்டுமா?” என்று குரல் கேட்டது.

விறகுவெட்டி அந்த மரத்தின் அருகில் சென்றான். “நான் இந்த மரத்தில் வசிக்கும் அரக்கன். இந்த அரசமரத்தின் கீழே ஏழு ஜாடி நிறைய தங்கம் இருக்கிறது. உனக்குத் தேவையானால் தோண்டி எடுத்துக்கொள்” என்றது அந்தக் குரல்.



விறகு வெட்டி, “ஏழு ஜாடி தங்கம்” என்றதும் மிகவும் மகிழ்ந்தான். அவசர அவசரமாக அந்த மரத்தின் கீழே பள்ளம் தோண்டினான். அரக்கன் சொன்னது போலவே, பூமிக்குள் ஏழு ஜாடிகள் இருந்தன. விறகு வெட்டி எல்லா ஜாடிகளையும் திறந்து பார்த்தான். அவற்றின் உள்ளே தங்கம் இருந்தது.

ஆனால், ஒரே ஒரு ஜாடியில் மட்டும் பாதியளவுதான் தங்கம் இருந்தது. “பாதிதானே குறைகிறது… இதை எப்படியும் நாம் நிரப்பி விடலாம்” என்று எண்ணி, ஏழு ஜாடிகளையும் தனது வீட்டுக்குக் கொண்டு வந்தான் விறகு வெட்டி. வீட்டுக்கு வந்ததும், ஏற்கெனவே தன்னிடமிருந்த தங்க நகைகளைப் பாதியளவு இருந்த ஜாடியில் போட்டான். பிறகு ஜாடி நிறையத் தங்கம் சேர்க்க வேண்டும் என்பதற்காக முன்பை விடக் கடினமாக உழைத்துப் பணம் சம்பாதித்தான். அதனைத் தங்கமாக்கி அந்தச் ஜாடிக்குள் போட்டான்.

அவன் எவ்வளவு தங்கத்தைச் ஜாடியில் போட்டாலும் ஜாடி நிரம்பவே இல்லை. விறகு வெட்டியும் விடவில்லை, எப்படியாவது அந்த ஜாடி நிரம்பத் தங்கத்தைச் சேர்த்துவிட வேண்டும் என்று இரவு பகலாக உழைத்தான். இதனால் அவன் நிம்மதி போயிற்று, தூக்கம் போயிற்று. உணவு உண்ணவும் மறந்தான்.

இறுதியில் அவன் துரும்பாக இளைத்து விட்டான். இவ்வாறே தொடர்ந்து செய்து வந்தான். ஒருநாள் அவன் நண்பன் ஒருவனைப் பார்த்தான். அவன் விறகு வெட்டியின் நிலைமையைப் பார்த்து பரிதாபப்பட்டான். அவனுடைய நிலைமைக்குக் காரணம் என்னவென்று கேட்டான். விறகு வெட்டி நடந்த கதை அனைத்தையும் கூறினான்.

அதற்கு அவன், தங்கத்திற்கு ஆசைப்பட்டு உன் மனநிம்மதியைக் கெடுத்துக் கொண்டயே என்றான்.”  அப்படியானால் நான் இப்பொழுது என்ன செய்வது? என்று கேட்டான் விறகு வெட்டி. இந்த ஜாடிகளை எடுத்துச் சென்று முன்பிருந்த இடத்திலேயே புதைத்து விட்டு, “பேராசையைத் தூண்டி விட்டு மன நிம்மதியைக் கெடுக்கும் உன் ஏழு ஜாடி தங்கத்தை நீயே வைத்துக்கொள்” என்று அரக்கனிடம் கூறிவிட்டு வந்துவிடு என்றான், விறகு வெட்டியின் நண்பன்.

விறகு வெட்டியும் மறுநாள் தன் நண்பன் கூறியபடியே ஏழு ஜாடிகளையும் எடுத்துச் சென்று அரச மரத்தடியில் புதைத்து விட்டு நண்பன் தன்னிடம் கூறியபடியே அரக்கனிடம் கூறிவிட்டு தன் வீட்டிற்கு வந்தான். அதற்கு பிறகு விறகு வெட்டியின் பேராசை முழுவதும் தணிந்திருந்தது. அவன் மனநிம்மதியுடன் வாழ்ந்தான்.

நீதி: ஏதாவதொரு பொருளின் மீது நாம் பேராசை பட்டால் நமது மனநிம்மதிதான் கெடும். எனவே, ஆசையை அளவோடு வைத்துக்கொண்டு வாழப் பழக வேண்டும்.

இன்றைய செய்திகள்

10.02.2025

* மதுரை அருகே மலைச்சரிவில் 800 ஆண்டுகள் தொன்மையான, பாண்டியர் கால கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

* வரும் கல்வியாண்டில் 35.12 லட்சம் மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

* ககன்யான் திட்டத்துக்கு பயன்படுத்தப்படும் சிஇ20 என்ற கிரையோஜெனிக் இன்ஜின் பரிசோதனையை மகேந்திரிகிரியில் உள்ள பரிசோதனை மையத்தில் இஸ்ரோ வெற்றிகரமாக மேற்கொண்டது.

* ஐ.எஸ்.எல். கால்பந்து: ஈஸ்ட் பெங்காலை வீழ்த்தி வெற்றி பெற்றது சென்னையின் எப்.சி அணி.

* தேசிய விளையாட்டுப் போட்டி:  போல்வால்ட் போட்டியில் தங்கம் வென்றார் தமிழக வீராங்கனை பவித்ரா.

Today's Headlines

* 800 years old,  inscriptions have been discovered at the hill station near Madurai from the period of Pandiyar.

* Transport officials have said that the bus pass will be taken to 35.12 lakh students in the coming academic year.

* ISRO successfully carried out the CE20 Cyogenic engine test used for the Gayanan project at the test center in Mahendirigiri.

* ISL Football: East Bengal beat the FC team in Chennai.

* National Games: Pavithra won gold in Bolwald.

Covai women ICT_போதிமரம்

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

Zeal study Whatsapp groups links

CLiCK The below groups name to join the group Zeal study Class wise groups links  kindly join in any one groups in these groups class suitable messages will be shared  Join our Zeal study Official Telegram channel for all latest updates https://t.me/zealstudyofficial Follow our Whatsapp channel  https://whatsapp.com/channel/0029Va9B0NY5q08hCHKk8A19 for classes 1-5 materials Zeal study primary WhatsApp  groups links   Zeal study primary group 6 https://chat.whatsapp.com/JsUkig72NCbEfK0GtsoNg3 Zeal study primary group 1 https://chat.whatsapp.com/I5zmYprrqzh0hQHrRkqO6R Zeal study primary group 2 https://chat.whatsapp.com/Gs5xFU3kgzdIaQ8xExUrp4 Zeal study primary group 3 https://chat.whatsapp.com/KPoGHVgwlmkKCoUcX8J5yY Zeal study primary group 4 https://chat.whatsapp.com/KughukPr6yN4prnKWWNgB3 Zeal study primary group 5 https://chat.whatsapp.com/LYKowdSHZnT7vTM797PmLu For classes 6-8 Zeal study 6-8   WhatsApp  groups links For 6 ,7&8 handling...

Zeal Study Lesson Plan 6,7,8,9,10 Collection 2024-25 Learning Out Comes Based Lesson Plan

Zeal study lesson plan colllection   6,7,8,9.10 Tamil Lesson plan 6,7,8,9.10 English Lesson plan 6,7,8,9.10 Maths Lesson plan   6,7,8,9.10 Science Lesson plan 6,7,8,9.10 Social science Lesson plan Join our Whatsapp groups click here

PDF Answer keys for 9,8,7&6 th std all subjects Bridge course worksheets updated by Zeal study

6th Standard Bridge  course  answer keys All subjects pdf download  click here  7th Standard Bridge  course  answer keys All subjects pdf download  click here 8th Standard Bridge  course  answer keys All subjects pdf download  click here  9th Standard Bridge  course  answer keys All subjects pdf download  click here 9th Tamil worksheet 1 answer key pdf download click here 9th Tamil worksheet 2 answer key pdf download click here 9th Tamil worksheet 3 answer key pdf download click here 9th Tamil worksheet 4 answer key pdf download click here 9th Tamil worksheet 5 answer key pdf download click here 9th Tamil worksheet 6 answer key pdf download click here 9th Tamil worksheet 7 answer key pdf download click here 9th Tamil worksheet 8 answer key pdf download click here 9 th Tamil worksheet 9 answer key pdf click here 9 th Tamil worksheet 10 answer key pdf click here 9 th Tamil worksheet 11 answer key pdf click here ...

Followers