Skip to main content

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 26.02.25

 Zeal study official school morning prayer activities

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 26.02.25




  



திருக்குறள்:

பால்: பொருட்பால்

அதிகாரம்: பெருமை

குறள் எண்:977

இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்பும்தான் சீரல் லவர்கண் படின்.

பொருள்:
கல்வி, செல்வம், சிறப்புகள் சிறுயாரைச் சேருமாயின் தவறான
செயல்களையே செய்விக்கும்.

பழமொழி :
அஞ்சி வாழ்வதை விட ஆபத்தை எதிர்கொள்

Face the danger boldly than live in fear.

இரண்டொழுக்க பண்புகள் :  

* வெயில் காலத்தில் செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதைத் தவிர்ப்பேன். 

  *மோர், இளநீர், கம்பு, கேழ்வரகு கூழ் போன்ற இயற்கை குளிர்பானங்கள் குடித்து வெப்பத்தின் தாக்கத்தை தணிப்பேன்.

பொன்மொழி :

இதயத்தை சுத்தபடுத்தி விட்டு இறைவனை கூப்பிடு. நிச்சயம் வருவார்.

---பைபிள்---

பொது அறிவு :

1. இரைப்பையில் சுரக்கப்படும் நொதியங்கள். _______, ___________

விடை: பெப்சின், ரெனின்.      

2. ஆணின் உடலில் உள்ள இதயத்தின் எடை எவ்வளவு?

விடை: 230-280 கிராம்

English words & meanings :

Jail.    -        சிறைச்சாலை

Market.     -    சந்தை

வேளாண்மையும் வாழ்வும் :

இந்த பனைமரங்களை வெட்ட வெட்ட ஒவ்வொரு நதியாக வறண்டு கொண்டே வரும் என்பது மட்டும் உண்மை...

நீதிக்கதை

முதல் வழக்கில் வெற்றி!

ஒருநாள் சக்கரவர்த்தி அக்பர்

தர்பாரில், வாயிற்காவலன்

உள்ளே நுழைந்து,“பிரபு!

ஒரு கிழவரும், இளைஞரும்

நியாயம் கேட்டு

வந்திருக்கிறார்கள்” என்றான். “அவர்களை வரச்சொல்!”

என்றார் அக்பர்.

உடனே, தர்பாரில் ஒரு

கிழவரும், ஓர் இளைஞனும்

உள்ளே நுழைந்து

சக்கரவர்த்தியை வணங்கினர். “என்ன விஷயம்? உங்களில்

யாருக்கு என்ன குறை?”

என்று கேட்டார் அக்பர்.



“பிரபு! என் பெயர் ரகுமான்”

என்று தன்னை

அறிமுகப்படுத்திக்

கொண்ட கிழவர் தொடர்ந்து, “நான் ஒரு சட்ட நிபுணன்!

மாணவர்களுக்கு சட்டத்தின்

நுணுக்கங்களையும், வழக்கு

விசாரணைகளைப் பற்றியும்

கற்பிக்கிறேன்".



இதோ நிற்கிறானே மணி!

இவன் என் மாணவனாக

இருந்தவன்! இவன் மீது

நான் குற்றம் சாட்ட

வந்துள்ளேன்” என்றார்.

அந்த இளைஞன் செய்த

குற்றம் குறித்து அக்பர் கேட்டார்.

“பிரபு! இவன் என்னிடம்

மாணவனாக சேர விரும்பிய

போது, நான் மாதம் மூன்று

பொற்காசு வீதம் குரு

தட்சிணை தர வேண்டுமென்றும், ஓராண்டு காலம் சட்டம் படிக்க

வேண்டும் என்றும் கூறினேன்.

ஆனால் இவன் தான் பரம

ஏழை என்றும், தட்சிணை

கொடுக்க இயலாது என்றும்

கூறினான். படிப்பு முடிந்ததும்

வழக்கறிஞனாகி முதல்

வழக்கில் வெற்றி பெற்றவுடன்,

முப்பத்தாறு பொற்காசுகள்

சேர்த்து தருவதாகவும்

வாக்களித்தான். அதை

நம்பி இவனுக்கு ஓராண்டு

காலம் கற்பித்தேன்.

இவன் மிகவும் கெட்டிக்கார

மாணவன் என்பதால்

ஓராண்டிலேயே மிகச்

சிறப்பாக சட்ட

நுணுக்கங்களைக் கற்றுக்

கொண்டு விட்டான். நானும்

இவன் வழக்கறிஞனாகி,

முதல் வழக்கிலேயே வெற்றி

பெறுவான் என்றும்,

தட்சிணையை மொத்தமாகக்

கொடுப்பான் என்றும்

நம்பினேன்” என்று சொல்லி

நிறுத்தினார் கிழவர். “இப்போது பணம் தராமல்

ஏமாற்றுகிறானா?” என்று

அக்பர் கேட்டார்.



“இல்லை பிரபு! இவன் திடீரென

வழக்கறிஞனாகப் பணி புரியும் யோசனையை கை விட்டு

விட்டான். அந்தத் தொழிலில்

ஈடுபடப் போவதில்லையாம்!”

என்றார். உடனே அக்பர்

அந்த இளைஞனை நோக்கி, “எதற்காக உன்னுடைய

உத்தேசத்தை நீ மாற்றிக்

கொண்டாய்?” என்று கேட்டார்.



“பிரபு! நான் சட்டம் பயின்று

முடித்ததும் வழக்கறிஞர்

தொழிலில் ஈடுபடுவதாகத் தான் இருந்தேன். ஆனால்

என் சித்தப்பா திடீரென

இறந்து போனார். அவர்

தன்னுடைய உயிலில்

அவருடைய அனைத்து

சொத்துகளுக்கும் என்னை

வாரிசாக்கி விட்டார். இப்போது

நான் லட்சாதிபதி. அதனால்

எந்த வேலையும் செய்யத்

தேவையில்லை,” என்றான்.



“அப்படியானால் இவருடைய

தட்சிணை என்ன ஆவது?”

என்று கேட்டார் அக்பர். “நான் கொடுத்த வாக்கைக்

காப்பாற்றுவேன். எனக்கு

என்று வழக்கறிஞனாக

ஆக வேண்டும் என்று

தோன்றுகிறதோ, அப்போது

தான் தட்சிணையும் தர முடியும்”

என்றான்.



மணி கூறுவது சரியே

என்று நினைத்த அக்பர்.

இருவரையும் நோக்கி, “இரு தரப்பினரின் வாதத்தையும் கூர்ந்து கவனித்தேன்.

என்னைப் பொறுத்தவரை

இந்த வழக்கில் மணியின்  பக்கமே நியாயம் இருக்கிறது. கொடுத்த வாக்கைக்

காப்பாற்றுவேன் என்று

இந்த தர்பாரில் அவன்

உறுதி அளித்துள்ளான்.



அவன் சொல்லை ஏற்றுக்

கொண்டு, அவனுக்கு என்று

வழக்கறிஞராக வேண்டும்

என்று தோன்றுகிறதோ, அன்று

அந்தத் தொழிலில் ஈடுபட்டு

குருவின் தட்சிணையைத்

திருப்பித் தரலாம். அதுவரை

குரு காத்திருக்க வேண்டும்.

இதுவே என் தீர்ப்பு!” என்றார்

அக்பர். தர்பாரில் அனைவரும்

இந்தத் தீர்ப்பைப் பாராட்டினர்.

இதை எதிர்பார்க்காத கிழவர்

ஏமாற்றத்தினாலும்,

வருத்தத்தினாலும் உடல்

குறுகிப் போனார்.

ஆனால் பீர்பால் மட்டும்

தீர்ப்பைப் பாராட்டாமல்

மிகவும் மௌனமாக

இருந்ததை கவனித்த அக்பர்,

இந்தத் தீர்ப்பை மறுஆய்வு

செய்யுமாறு பீர்பாலிடம்

கூறினார்.அதைக்கேட்டதுமே

கிழவரின் முகம் மலர்ந்தது.

மிகவும் புத்திசாலியான

பீர்பால் சரியான தீர்ப்பு

வழங்குவார் என்று அவர்

உறுதியாக  நம்பினார்.



பீர்பால் இளைஞனை

நோக்கி,“நீ கொடுத்த வாக்கில்

உறுதியாக இருக்கிறாய்

அல்லவா?” என்றார். “அதில் என்ன சந்தேகம்?

கண்டிப்பாக அப்போது

அதில் கிடைக்கும்

வருமானத்திலிருந்து என்

குருநாதருக்கு சேர வேண்டிய

தட்சிணையைக் கட்டாயம்

தந்து விடுவேன்” என்றான்

இளைஞன்.



பிறகு கிழவரை நோக்கி, “மணியின் நிபந்தனையை

நீங்கள் ஆரம்பத்திலேயே

ஒப்புக் கொண்டீர்கள் அல்லவா?” என்று கேட்டார் பீர்பால்

“ஆம் ஐயா!” என்றார் கிழவர்.



“அப்படியானால் சட்டப்படி

இளைஞனின் தரப்பில்தான்

நியாயம் உள்ளது. அவன்

வழக்கில் வெற்றி பெற்று

தட்சிணை தரும் வரை நீங்கள்

காத்திருக்க வேண்டியதுதான்”

என்றார் பீர்பால். பீர்பாலையும்,

அக்பரையும் வணங்கிவிட்டு

அவர் தள்ளாடித் தள்ளாடி

வெளியேற, இளைஞன்

வெற்றிப் பெருமிதத்துடன்

வெளியேறினான்.



திடீரென மணியை அழைத்து, “மணி ! இதுதான்

சக்கரவர்த்தியின்

நீதிமன்றத்தில் உன்னுடைய

முதல் வழக்கு! உன்னுடைய

வழக்கை விசாரிக்க வேறு

வழக்கறிஞரை நியமிக்காமல்

நீயே உன் தரப்பு நியாயத்தை

வெகு அழகாக எடுத்துக்

கூறினாய்” என்றார் பீர்பால்.

மணி  மகிழ்ச்சியுடன், “நன்றி ஐயா!” என்றான்.



பீர்பால் தொடர்ந்து, “அதாவது உன்னுடைய

முதல் வழக்கில் நீயே

வழக்கறிஞராக இருந்து

வாதாடி அதில் வெற்றி

பெற்று விட்டாய். இல்லையா?”

என்று பீர்பால் கேட்டார். “ஆம் ஐயா!” என்றான்

மணி  மகிழ்ச்சியுடன்.

“அப்படியானால் நீ

வழக்கறிஞராக இருந்து

வெற்றி பெற்ற முதல் வழக்கு

இது! நீ வாக்களித்தபடியே,

குருதட்சிணையை உன்

குருவிற்கு இப்போதே இங்கேயே கொடுத்து விடு!” என்றார்.

ஒருகணம் திகைத்துப்

போன அனைவரும்,

மறுகணமே கைதட்டி

ஆர்ப்பரித்தனர். கிழவர்

பீர்பாலுக்கு மனமார நன்றி

கூற, அக்பர் பீர்பாலை மிகுந்த

மகிழ்ச்சியுடன் தழுவிக்

கொண்டார்.

இன்றைய செய்திகள்

26.02.2025

* மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்பு பொருட்கள் ரூ.194.67 கோடிக்கு விற்பனையாகி உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

* பொதுமக்களுக்கு குறைந்த விலையில் தரமான மருந்துகளை வழங்கும் வகையில் கூட்டுறவு துறை சார்பில் தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

* இந்தியாவில் 5 புற்றுநோயாளிகளில் 3 பேர்aa உயிரிழக்கின்றனர் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

* உக்ரைனிலிருந்து ரஷ்ய படைகளை திரும்பப்பெற வலியுறுத்தி ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இந்தியா புறக்கணித்துள்ளது. 193 நாடுகள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில் 93 நாடுகள் ஆதரவாகவும், 18 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. இந்திய உள்பட 65 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன.

* ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டி இன்று தொடக்கம். விதர்பா - கேரளா அணிகள் மோதல்.

Today's Headlines

- *Women's Self-Help Groups*: The Tamil Nadu government has announced that products made by women's self-help groups have been sold for ₹194.67 crore.

- *Chief Minister's Pharmacies*: Chief Minister M.K. Stalin has inaugurated 1,000 pharmacies across Tamil Nadu, providing quality medicines at affordable prices to the public.

- *Cancer Treatment*: According to the Indian Council of Medical Research, three out of five cancer patients in India die due to inadequate treatment.

- *UN Resolution*: India has abstained from voting on a UN resolution demanding Russia's withdrawal from Ukraine. 93 countries voted in favour, 18 against, and 65 abstained.

- *Ranji Trophy Finals*: The Ranji Trophy finals begin today, with Vidarbha facing Kerala.

Covai women ICT_போதிமரம்

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

Zeal study Whatsapp groups links

CLiCK The below groups name to join the group Zeal study Class wise groups links  kindly join in any one groups in these groups class suitable messages will be shared  Join our Zeal study Official Telegram channel for all latest updates https://t.me/zealstudyofficial Follow our Whatsapp channel  https://whatsapp.com/channel/0029Va9B0NY5q08hCHKk8A19 for classes 1-5 materials Zeal study primary WhatsApp  groups links   Zeal study primary group 6 https://chat.whatsapp.com/JsUkig72NCbEfK0GtsoNg3 Zeal study primary group 1 https://chat.whatsapp.com/I5zmYprrqzh0hQHrRkqO6R Zeal study primary group 2 https://chat.whatsapp.com/Gs5xFU3kgzdIaQ8xExUrp4 Zeal study primary group 3 https://chat.whatsapp.com/KPoGHVgwlmkKCoUcX8J5yY Zeal study primary group 4 https://chat.whatsapp.com/KughukPr6yN4prnKWWNgB3 Zeal study primary group 5 https://chat.whatsapp.com/LYKowdSHZnT7vTM797PmLu For classes 6-8 Zeal study 6-8   WhatsApp  groups links For 6 ,7&8 handling...

Zeal Study Lesson Plan 6,7,8,9,10 Collection 2024-25 Learning Out Comes Based Lesson Plan

Zeal study lesson plan colllection   6,7,8,9.10 Tamil Lesson plan 6,7,8,9.10 English Lesson plan 6,7,8,9.10 Maths Lesson plan   6,7,8,9.10 Science Lesson plan 6,7,8,9.10 Social science Lesson plan Join our Whatsapp groups click here

PDF Answer keys for 9,8,7&6 th std all subjects Bridge course worksheets updated by Zeal study

6th Standard Bridge  course  answer keys All subjects pdf download  click here  7th Standard Bridge  course  answer keys All subjects pdf download  click here 8th Standard Bridge  course  answer keys All subjects pdf download  click here  9th Standard Bridge  course  answer keys All subjects pdf download  click here 9th Tamil worksheet 1 answer key pdf download click here 9th Tamil worksheet 2 answer key pdf download click here 9th Tamil worksheet 3 answer key pdf download click here 9th Tamil worksheet 4 answer key pdf download click here 9th Tamil worksheet 5 answer key pdf download click here 9th Tamil worksheet 6 answer key pdf download click here 9th Tamil worksheet 7 answer key pdf download click here 9th Tamil worksheet 8 answer key pdf download click here 9 th Tamil worksheet 9 answer key pdf click here 9 th Tamil worksheet 10 answer key pdf click here 9 th Tamil worksheet 11 answer key pdf click here ...

Followers