Skip to main content

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 29.01.2025

 Zeal study official school morning prayer activities

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 29.01.2025



  






திருக்குறள்:

பால்: பொருட்பால்

அதிகாரம்: குடிமை

குறள் எண் :958

நலத்தின்கண் நார்இன்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும்.

பொருள்:
குடிநலனில் விருப்பமில்லாதிருப்பின், அவன் குலப் பிறப்பைப் பற்றி உலகத்தார் ஐயப்படுவார்.

பழமொழி :
சென்ற காரியத்தைப் பார்த்து வரும் காரியத்தை அறி. 

Learning the future by looking at things past.

இரண்டொழுக்க பண்புகள் :  

*எனது பெற்றோர் பெருமைப்படக்கூடிய வகையில் நான் நன்கு படிப்பேன்.

*எனது பெற்றோரும் ஆசிரியரர்களும் தரக்கூடிய ஆலோசனைகளை கேட்டு நடப்பேன்.

பொன்மொழி :

கலங்காத உள்ளம் படைத்தவர்களே இறுதி வெற்றிக்கு உரியவர்கள் --சுபாஷ் சந்திரபோஸ்

பொது அறிவு :

1. முதல் உலகக்கோப்பை கால்பந்து போட்டி எங்கு நடைபெற்றது?

விடை : உருகுவே        

  2. மனித உடலில் வியர்க்காத பகுதி எது?

விடை :உதடு

English words & meanings :

Field.    -     வயல்

Forest.   -     காடு
வேளாண்மையும் வாழ்வும் :

  நீர் பற்றாக்குறை தீர நீர் வளங்கள் மற்றும் பயன்பாடுகளின் அடிப்படையில் முறையான நீர் மேலாண்மை, முக்கியமாக அனைத்து பயன்பாடுகளுக்கும் நீர் பாதுகாப்பை உறுதி செய்கிறது.

நீதிக்கதை

அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து

ஊருக்கு ஒதுக்குப் புறமாக ஒரு கொடிய விஷமுள்ள பாம்பு வாழ்ந்து வந்தது. ஊர் மக்கள் யாராவது அதன் புற்றின் பக்கம் போனால் சீறி வந்து கொத்தி விடும்.பாம்புப் புற்று இருந்த பாதை அந்த ஊருக்கும் பக்கத்து சந்தைக்கும் குறுக்கு வழி. பாம்புக்கு பயந்தே ஊர் மக்கள் பல தொலைவு சுற்றி அந்த சந்தைக்குப் போய் வந்துகொண்டிருந்தார்கள். வேறு வழியில்லாததால் சலிப்புடனேயே வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தனர்.

ஒரு நாள் அந்த ஊருக்கு ஒரு யோகி வந்தார். அவர் மிருகங்களிடம் பேசக் கூடிய வரம் பெற்றவர். ஊர் மக்கள் தங்கள் குறையை அவரிடம் முறையிட்டனர். அவர் பாம்பிடம் பேசி அதற்கு ஊர் மக்களை கடிக்கக் கூடாது என்றுகட்டளை இட்டு விட்டு பக்கத்து ஊருக்குச் சென்று விட்டார். பாம்பும் அவர் கட்டளைக்குக் கட்டுப்பட்டு நடந்தது.

ஆனால் ஊர் மக்கள் சும்மாயில்லை. வழியே போகும் சிறுவனுக்குக் கூட பாம்பிடம் இருந்த பயம் போய் விட்டது. பாம்பைக் கண்டால் அதைக் கல்லால் அடிப்பது, துன்புறுத்துவது, விரட்டியடிப்பது என்று அதன் வாழ்க்கையை நிம்மதியில்லாமல் செய்து கொண்டிருந்தனர். உடம்பில் பல காயங்களுடன் குற்றுயிரும் குலையுயிருமாகி விட்டது பாம்பு.

யோகி ஒரு நாள் பாம்புப்புற்று இருந்த வழியாக ஊருக்குள் திரும்ப வரும் போது பாம்பின் பரிதாபமான நிலையைக் கண்டு அதனை விசாரித்தார். பாம்பும் நடந்த கதையையெல்லாம் கூறி அழுதது.

யோகி பாம்பைப் பார்த்து "அட முட்டாள் பாம்பே! உன்னை மக்களைக் கடிக்கவேண்டாம் என்றுதானே கூறிச் சென்றேன். பக்கத்தில் வருபவனைப் பார்த்து சீறாதே என்று ஒரு போதும் சொல்லவில்லையே" என்று கேட்டார். இதற்குபின் பாம்பும் பிழைத்துக் கொண்டது.

இன்றைய செய்திகள்

29.01.2025

* பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை வழங்கும் சட்டம் ஜனவரி 25 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்ததாக தமிழ்நாடு அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.

* இஸ்ரோ , ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 100வது ராக்கெட்டை செலுத்த தயாராக இருக்கிறது. இது மேப் உள்ளிட்ட சேவைகளை வழங்கும் NavIC-ன் 2வது தலைமுறை செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும், முக்கியத்துவமான பணியை நாளை மேற்கொள்ள உள்ளது.

* இந்திய அயலகப் பணி அலுவலர்கள் ஏழு பேர் கொண்ட குழுவினர் தமிழ்நாடு வந்து கீழடி முதலான தொல்லியல் அகாழய்வு மையங்கள் எனப் பல்வேறு பெருமைக்குரிய சின்னங்களை பார்வையிட உள்ளனர்.

* ஊட்டி: பாரம்பரிய படுகர் இன மக்களின் வண்ணக் குடை ஊர்வலத்துடன்களைகட்டிய ஈஸ்வரன் கோவில் திருவிழா. 600 படிக்கட்டுகள் நடந்து பக்தர்கள் திருவிழா கொண்டாடினர்

* நம் நாட்டின் மின்சார வாகனங்களுக்கான தேவையைப் பூர்த்தி செய்ய, வின்ஃபாஸ்ட் அதி நவீன தொழில்நுட்பம் கொண்ட கார் தொழிற்சாலையை தூத்துக்குடியில் நிர்மாணிக்க வருகிறது.

* மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஸ்காட்லாந்தை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.சதம் விளாசி வரலாறு படைத்த கொங்கடி த்ரிஷா.

Today's Headlines

* The Tamil Nadu government has announced that the law providing strict punishment for crimes against women will come into effect from January 25.

* ISRO is ready to launch its 100th rocket from Sriharikota in Andhra Pradesh. It will carry out the important mission of launching NavIC's 2nd generation satellite, which will provide services including maps, tomorrow.

* A seven-member team of Indian Foreign Service officers will visit Tamil Nadu and visit various landmarks including archaeological sites and archaeological sites.

* Ooty: The traditional Padukar people's colorful umbrella procession during the Easwaran temple festival. Devotees celebrated the festival by walking 600 steps

* To meet the demand for electric vehicles in our country, Winfast is building a state-of-the-art car factory in Thoothukudi.

* India beat Scotland by 150 runs in Women's T20 World Cup. Trisha creates history with century

Covai women ICT_போதிமரம்

Comments

Post a Comment

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

KALVI TV | TRB_TET | EDUCATONAL PSYCHOLOGY - PART - 01 கல்வி உளவியல் - பகுதி 1

 வணக்கம் நமது கல்வி குழுவின் சார்பாக கல்வி தொலைக்காட்சி பாடங்களில் வாயிலாக நமது அரசு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதும்

TNTET 2026: தமிழ் முழுமையான மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) online full test - 1

TNTET 2025 - தமிழ் முழு மாதிரித் தேர்வு - Zeal Study TNTET 2025: தமிழ் மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) இயல் 3: அறிவியல் ஆத்திச்சூடி | எந்திர மனிதன் | ஒளி பிறந்தது | இலக்கணம் 1. புதிய ஆத்திச்சூடி எழுதியவர் யார்? ஔவையார் பாரதியார் கவிமணி நெல்லை சு. முத்து விடை விடை: B. பாரதியார் 2. 'தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்' என அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப்பெற்றவர்? விக்ரம் சாராபாய் மயில்சாமி அண்ணாதுரை நெல்லை சு. முத்து சிவன் விடை விடை: C. நெல்லை சு. முத்து 3. 'ஔடதம்' என்பதன் பொருள் யாது? உணவு நீர் காற்று மருந்து விடை விடை: D. மருந்து 4. 'இயன்றவரை' என்ற சொல்லின் பொருள்? ...

Zeal Study TNTET 2026 KALVI TV Psychology Quiz - Part 10 - கல்வி உளவியல் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம்

kALVI TV TNTET 2026 Psychology Quiz - Part 10 | Zeal Study TNTET 2026 - கல்வி உளவியல் (உயர்மட்ட வினாடி வினா) வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் | Zeal Study CHECK ANSWER / விடையைச் சரிபார் NEXT QUESTION / அடுத்த கேள்வி தேர்வு முடிந்தது! (Quiz Completed!) 0/30 RESTART / மீண்டும் தொடங்க

TNTET 2026: ZEAL STUDY மாதிரித் தேர்வு - 3 குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் (55 வினாக்கள்) PSYCHOLOGY

TNTET 2025 Psychology Quiz TNTET 2026: உளவியல் மாதிரித் தேர்வு - 3 குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் [Excel Academy] விடைகளைச் சரிபார்க்கவும்

TNTET 2026: Educational Psychology / கல்வி உளவியல் வினாடி வினா

TNTET Psychology Quiz - 30 Questions TNTET 2026: Educational Psychology கல்வி உளவியல் வினாடி வினா Next Question / அடுத்த கேள்வி Test Completed! / தேர்வு முடிந்தது! Your Final Score / உங்கள் மொத்த மதிப்பெண்: Retake Test / மீண்டும் முயற்சி செய்

Zeal Study TNTET - ஆறாம் வகுப்பு தமிழ் - இரண்டாம் பருவம் முழு அலகு வினாடி வினா

6th Tamil Term 2 Quiz | Zeal Study TNTET ஆறாம் வகுப்பு தமிழ் - இரண்டாம் பருவம் முழு அலகு வினாடி வினா - Zeal Study CHECK ANSWER / விடையைச் சரிபார் NEXT QUESTION / அடுத்த கேள்வி தேர்வு முடிந்தது! (Quiz Completed!) 0/30 RESTART / மீண்டும் தொடங்க

Followers