Skip to main content

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -- 09.12.2024

 Zeal study official school morning prayer activities

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -- 09.12.2024



  







திருக்குறள்:

பால் :பொருட்பால்

அதிகாரம்: புல்லறிவாண்மை

குறள் எண்:850
உலகத்தார் உண்டுஎன்பது இல்என்பான் வையத்து
அலகையா வைக்கப் படும்.

பொருள்:உலகத்தார் உண்டு என்று சொல்வதை இல்லை என்று கூறுகின்ற ஒருவன், உலகத்தில் காணப்படும் ஒரு பேயாகக் கருதி விலக்கப்படுவான்.

பழமொழி :
Time stoops to no man's cure.

காலம் யார் கணிப்புக்கும் அடிபணியாது

இரண்டொழுக்க பண்புகள் : 

*நான் எந்த உயிரினத்தையும் துன்புறுத்த மாட்டேன்.

*என்னால் இயன்ற அளவு எனது வீட்டிலும் பள்ளியிலும் செடிகள் வளர்ப்பேன்.

பொன்மொழி :

மனிதன் தோல்வியின் மூலமே புத்திசாலி ஆகிறான் ---சுவாமி விவேகானந்தர்

பொது அறிவு :

1. இந்திய மாநிலங்கள் எதன் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன?



விடை: மொழி

2. தென்னிந்தியாவின் ஏதென்ஸ் எது?


விடை: மதுரை
English words & meanings :

Shock       -     அதிர்ச்சி,

Shy           -      கூச்சம்

வேளாண்மையும் வாழ்வும் :

யூரோப்பியன் யூனியன் போன்ற சில அரசாங்கங்கள், கரிம வேளாண்மைக்கு பெரும் அளவில் மானியம் வழங்குகின்றன

டிசம்பர் 09

ஐடா ஸோஃபியா ஸ்கட்டர் அவர்களின் பிறந்தநாள்

ஐடா ஸோஃபியா ஸ்கட்டர் (Ida Sophia Scudder, டிசம்பர் 9, 1870 – மே 23, 1960) என்பவர் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண் மருத்தவராவார். இவர் வேலூரில் உள்ள கிருத்தவ மருத்துவக் கல்லூரியை நிறுவியதற்காக அறியப்படுகிறார்.

1914 இல் நெடு விடுப்பில் ஐடா அமெரிக்காவுக்குச் சென்றார். அதேநேரம் முதல் உலகப் போர் மூண்டது. 1915 இல் கடுமையான போர்ச் சூழலில் இந்தியா திரும்பிவந்தார், மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான பணியைத் விரைவுப்படுத்தினார் இதையணுத்து 1918 இல் பட்டைய மருத்துவப் படிப்புடன் பெண்களுக்கான மருத்துவப் பள்ளி நடத்துவதற்கான அனுமதியானது, சென்னை மாகாண மருத்துவத் துறை தலைவர் கர்னல் பிரைசனிடமிருந்து பெற்றார். 1918 ஆகத்து 12 இல் ஒன்றழய மறைப்பணி பள்ளியை சென்னை மாகாண கவர்னர் பென்ட்லண்ட் பிரபு தொடங்கி வைத்தார். 1948 இல் யூனியன் மருத்துவப் பள்ளி, கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போதுதான், பெண்களுடன் ஆண்களும் மருத்துவம் படிக்கத் தொடங்கினர்.

நீதிக்கதை

கண்ணாடி

ஒரு நாள் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள், தகவல் பலகையில் ஏதோ எழுதி இருக்கிறது என்று பார்க்கச் சென்றனர்.

அதில்," உங்கள் வளர்ச்சிக்கு தடையாக இருந்த நபரை நான் பெட்டிக்குள் அடைத்து விட்டேன். அந்தப் பெட்டி அடுத்த கட்டிடத்தின் மேல் தளத்தில் உள்ளது. அனைவரும் வந்து பார்த்துச் செல்லவும்" என்று எழுதியிருந்தது.

நம் வளர்ச்சிக்கு தடையாக இருந்த நபரா,அது யாராக இருக்கும்? என்று அனைவர் மனதினுள் ஒரு கேள்வி எழுந்தது. அந்தக் கேள்விக்கு பதில் காணும் ஆர்வத்தில் அனைவரும் அடுத்த கட்டிடத்தின் மேல் தளத்திற்கு சென்றனர். அங்கே ஒரு பெட்டி வைக்கப்பட்டிருந்தது.

அனைவரும் அந்த பெட்டியின் உள்ளே  பார்த்தபின் அதிர்ச்சி அடைந்தனர். ஏனெனில் அந்தப் பெட்டினுள் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி மட்டுமே இருந்தது. எவர் பார்த்தாலும் அவர்களது முகமே அதில் தெரிந்தது.

அந்த கண்ணாடியின் அருகில், "உங்கள் வளர்ச்சிக்கு  நீங்கள் தான் காரணம்.நீங்கள் வளர வேண்டும் என்றால் அது உங்கள் கையில் தான் உள்ளது உங்கள் வளர்ச்சியை உங்களைத் தவிர வேறு யாராலும்  தடுத்து நிறுத்த முடியாது" என்ற வாசகம் எழுதப்பட்டு இருந்தது

நீதி :  உங்கள் வாழ்க்கையை உங்கள் முதலாளியால் மாற்ற முடியாது.உங்கள் வாழ்க்கையை உங்கள் நண்பனால் மாற்ற முடியாத. நீ நினைத்தால் மட்டுமே உங்களது வாழ்வை மாற்ற முடியும்.

இன்றைய செய்திகள்

09.12.2024

* கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை- விவேகானந்தர் மண்டபம் இடையே கண்ணாடி பாலத்திற்கான உத்திரங்கள் பொருத்தும் பணி நிறைவடைந்ததையடுத்து ரம்மியமாக காட்சி அளிக்கிறது.

* படைவீரர் கொடி நாள் நிதி வசூலில் சென்னை மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.

* வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: டிசம்பர் 10 முதல் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்.

* ரஷ்யாவில் அதிநவீன முறையில் கட்டப்பட்ட போர்க் கப்பல்: ஐஎன்எஸ் துஷில் இன்று கடற்படையில் சேர்ப்பு.

* உலக செஸ் சாம்பியன்ஷிப்: 10-வது சுற்றும் டிரா.

* இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றது. இரண்டரை நாட்களில் முடிந்த போட்டி மூலம் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் 1-1 என்ற நிலையில் சமநிலை வகிக்கின்றன.

Today's Headlines

* The glass bridge between Thiruvalluvar Statue and Vivekananda Mandapam in Kanyakumari has been installed.

* Chennai district has topped the collection of funds for Veterans' Flag Day.

* A new low-pressure area has formed in the Bay of Bengal. According to the Meteorological Department, Heavy rains are likely from December 10.

* Russian-built warship: INS Tushil to be inducted into the Navy today.

* World Chess Championship: 10th round draw.

* Australia won the second Test match against India. India and Australia are tied 1-1 after the match ended in two and a half days.

Covai women ICT_போதிமரம்



Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

Zeal study Whatsapp groups links

CLiCK The below groups name to join the group Zeal study Class wise groups links  kindly join in any one groups in these groups class suitable messages will be shared  Join our Zeal study Official Telegram channel for all latest updates https://t.me/zealstudyofficial Follow our Whatsapp channel  https://whatsapp.com/channel/0029Va9B0NY5q08hCHKk8A19 for classes 1-5 materials Zeal study primary WhatsApp  groups links   Zeal study primary group 6 https://chat.whatsapp.com/JsUkig72NCbEfK0GtsoNg3 Zeal study primary group 1 https://chat.whatsapp.com/I5zmYprrqzh0hQHrRkqO6R Zeal study primary group 2 https://chat.whatsapp.com/Gs5xFU3kgzdIaQ8xExUrp4 Zeal study primary group 3 https://chat.whatsapp.com/KPoGHVgwlmkKCoUcX8J5yY Zeal study primary group 4 https://chat.whatsapp.com/KughukPr6yN4prnKWWNgB3 Zeal study primary group 5 https://chat.whatsapp.com/LYKowdSHZnT7vTM797PmLu For classes 6-8 Zeal study 6-8   WhatsApp  groups links For 6 ,7&8 handling...

Zeal Study Lesson Plan 6,7,8,9,10 Collection 2024-25 Learning Out Comes Based Lesson Plan

Zeal study lesson plan colllection   6,7,8,9.10 Tamil Lesson plan 6,7,8,9.10 English Lesson plan 6,7,8,9.10 Maths Lesson plan   6,7,8,9.10 Science Lesson plan 6,7,8,9.10 Social science Lesson plan Join our Whatsapp groups click here

PDF Answer keys for 9,8,7&6 th std all subjects Bridge course worksheets updated by Zeal study

6th Standard Bridge  course  answer keys All subjects pdf download  click here  7th Standard Bridge  course  answer keys All subjects pdf download  click here 8th Standard Bridge  course  answer keys All subjects pdf download  click here  9th Standard Bridge  course  answer keys All subjects pdf download  click here 9th Tamil worksheet 1 answer key pdf download click here 9th Tamil worksheet 2 answer key pdf download click here 9th Tamil worksheet 3 answer key pdf download click here 9th Tamil worksheet 4 answer key pdf download click here 9th Tamil worksheet 5 answer key pdf download click here 9th Tamil worksheet 6 answer key pdf download click here 9th Tamil worksheet 7 answer key pdf download click here 9th Tamil worksheet 8 answer key pdf download click here 9 th Tamil worksheet 9 answer key pdf click here 9 th Tamil worksheet 10 answer key pdf click here 9 th Tamil worksheet 11 answer key pdf click here ...

Followers